பார்வையாளர்களின் எண்ணிக்கை

Search This Blog

Powered by Blogger.

Wednesday, 11 June 2025

இன்று பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஐயாவின் நினைவை போற்றும் வாக

  வெற்றிசெல்வன்       Wednesday, 11 June 2025
பாவலரேறு பெருஞ்சித்திரனார்.

இன்று ஐயா அவர்கள் மறைந்து 30 ஆண்டுகள் ஆகின்றன. ஐயாவின் நினைவுகளை ஒவ்வொரு ஈழ விடுதலை இயக்கப் போராளிகளும் நினைவுகூர வேண்டியது முக்கியம்.
1978 ஆண்டுகால ஒன்று பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க தலைவர்கள் தலைமறைவாக தமிழ்நாட்டில் வந்து தங்கி இருந்தபோது பாண்டிச்சேரியிலும் தமிழ் நாட்டிலும், இந்திய மத்திய மாநில அரசுகளுக்கு பயப்படாமல் அவர்களுக்கு உதவி புரிந்தது அய்யா பெருஞ்சித்திரனார் அவர்களும் அவர்தம் குடும்பமும் ஆகும்.
ஐயா தொடர்ச்சியாக அவரது வெளியீடுகளில் தமிழீழப் போராட்டம் பற்றியும் தமிழீழ விடுதலை பற்றியுமே தொடர்ச்சியாக எழுதி வந்தார். தமிழ் நிலம், தென்மொழி இதழ்களில் என எனக்கு நினைவில் இருக்கிறது.
தமிழ்நாட்டில் இலங்கை விடுதலை இயக்கங்களுக்கு எந்தவித பிரதிபலனும் பார்க்காமல் , தாங்கள் வறுமையில் இருந்தாலும் தங்களிடம் இருந்து பணம் பொருள் கொடுத்துஉதவி செய்தவர்கள் ஐயா பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் கொள்கையை பின்பற்றிய பல நல்ல உள்ளங்கள். அவர்களில் பல முன்னாள் இந்தியத் தமிழ் ராணுவத்தினரும் அடங்குவர். அய்யாவின் கொள்கையை பின்பற்றி உதவி செய்தார்கள் யாரும் இலங்கை தமிழ் விடுதலை இயக்கங்களிடம் பணம் பொருள் எதிர்பார்க்கவில்லை.
          பாண்டி பஜார் துப்பாக்கி சூட்டுக்கு பின் சென்னை திருவல்லிக்கேணி இருந்த ஐயாவின் தென்மொழி அச்சகம் மாதத்தில் பல நாட்கள் தமிழக உளவுத் துறையால் சோதனையிடப்பட்டு, பாதிக்கப்பட்டுள்ளது. அய்யா பெருஞ்சித்திரனார் இதைப் பற்றியெல்லாம் கவலைப்பட மாட்டார். நாங்கள் அங்கு போய் அதைப் பார்த்து கவலைப் படுவோம். ஆனால் ஐயா அவர்கள்கவலைப்பட மாட்டார்.

தமிழ்நாட்டில் முதல் முதலாக ஈழவிடுதலைப் போராளிகளுக்கும் போராட்டத்துக்கும், எந்தவித பிரதிபலனும் பாராமல் உதவி செய்தது அய்யா பெருஞ்சித்திரனார் அவர்களும் அவர் குடும்பமும், அய்யாவின் கொள்கைகளை ஏற்றுக்கொண்ட தோழர்களும் தான்.1983ஆண்டு எம்ஜிஆர் அரசு பிரபாகரன் உமா மகேஸ்வரனை இலங்கை அரசிடம் பிடித்து கொடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்துக் கட்சிக் கூட்டம் பெரியார் திடலில் நடந்தது. அங்குஅய்யாவின் குரல் உறுதியுடன் ஒலித்தது மறக்க முடியாதது. தமிழ்நாட்டுத் அரசியல்தலைவர்கள் எல்லோரும் பூசி மெழுகி பேசியபோது அய்யா பெருஞ்சித்திரனார் குரல்மட்டும் மிகவும் உறுதியுடன் ஈழப்போராளி தலைவர்களுக்காக அங்கு ஓங்கி ஒலித்தது குறிப்பிடத்தக்கது.
1983 ஜூலைக் கலவரத்தின் பின்பு தமிழ்நாட்டில் காட்சிகள் மாறின. புதிய புதிய ஈழ ஆதரவு தமிழ்நாட்டுத் தலைவர்கள் தோன்றினார்கள். ஈழ விடுதலை இயக்கங்களும் பணபலம் ஆள்பலம் கொண்டு வளர்ந்தார்கள். அவர்கள் வளர வளர தமிழ்நாட்டில் ஆரம்ப காலத்தில் பிரதிபலன் பாராமல் உதவி செய்த தமிழ் நாட்டு தலைவர்களை மறக்கவும் செய்தார்கள்.
   ஈழ விடுதலை இயக்கத் தலைவர்கள் அய்யா பெருஞ்சித்திரனார் அவர்களை மறந்தாலும் ஐயா மட்டும் உறுதியுடன் ஈழப் போராட்டத்தை ஆதரித்து , ஐயாவின் மறைவு வரைஉறுதியுடன் எழுதிக் கொண்டே வந்தார்.
 நான்1990 ஆண்டு இயக்கத்தை விட்ட பின்பு மாதத்தில் பல நாட்கள் ஐயாவின் தென்மொழி அச்சத்திலேயே ஐயாவுடன் பேசிக்கொண்டிருப்பேன். சில நாட்கள் ஐயா காய்ச்சல் காரணமாக  தரையில் படுத்து தனது எழுத்து வேலைகளை பார்த்துக்கொண்டு இருப்பார். உண்மையில் அப்போது எனக்கு அய்யாவின் முக்கியத்துவம் தெரியவில்லை. ஆனால் அங்கு போகும் போது அய்யா அவர்கள்வாங்க தம்பி என்று அன்போடுஅழைக்கும் ,குரலும், ஒரு நண்பர் போல எனது கவலைகளுக்கு ஆறுதல் கூறுவதாலும் அடிக்கடி அங்கு போய் வருவேன். 
ஐயா மறைவதற்கு 10 நாட்களுக்கு முன்பு வரை ஐயாவை போய் சந்தித்து உள்ளேன்.

அய்யாவின் நினைவுகளை நன்றியுடன் நினைவு கூறுகிறேன்.
logoblog

Thanks for reading இன்று பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஐயாவின் நினைவை போற்றும் வாக

Previous
« Prev Post

No comments:

Post a Comment