பார்வையாளர்களின் எண்ணிக்கை

Search This Blog

Powered by Blogger.

Friday, 13 June 2025

இது ஒரு பழைய பதிவு. விடுதலைப்புலிகளால் மாமனிதர் பட்டம் கொடுக்கப்பட்ட எஸ் ஆர் என்று அழைக்கப்பட்ட சிவராம் அவர்கள் புளொட் இயக்கத்தில் இருந்தபோது அவரின் செயல்பாடுகள்

  வெற்றிசெல்வன்       Friday, 13 June 2025
S.R என்று தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தோழர்களால் அறியப்பட்ட தர்மரத்தினம் சிவராம், மட்டக்களப்பில் புளொட் எக்கத்துக்காக வேலை செய்த போது அங்கு கிராமப்புறங்களில் பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தும், அவர்களை எதிர்த்த பெண்களை படுகொலை செய்து புதைத்த சம்பவங்களும் நடந்துள்ளது. இதை 1989 ஆண்டு தர்மரத்தினம் சிவராம் எங்களிடம் கூறி சிரித்தார். அப்போது எங்களுக்கு மிகவும் அருவருப்பாக இருந்தது. அந்த நேரம் அவர் DPLF அரசியல் கட்சியின் பொதுச் செயலாளர். புளொட் இருந்த நேரம் தனிப்பட்ட காரணங்களுக்காக புளொட் இயக்க அகிலன் , செல்வன் என்ற இரு முக்கிய தோழர்களே சுட்டுக் கொன்றார். 
அவருக்கு மதுவும் மாதுவும் முக்கியம். பிற்காலத்தில் தராக்கி என்ற பெயரில் அரசியல் கட்டுரைகள் ராணுவ கட்டுரைகள் எழுதி சர்வதேச புகழ்பெற்றார். இலங்கை ராணுவத்தோடும் இலங்கை அரசோடும் நெருங்கிய நட்புக் கொண்டு, விடுதலைப்புலிகளை உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். இது அவரே கட்டுரைகளில்கூறியது. கருணாவை மட்டக்களப்பு பிரதேசம் வாதம் கூறி கூறி பிரித்தவர். கருணா பிரிந்த பின்பும் விடுதலைப் புலிகளின் பலம் அறிந்து திடீர் பல்டி அடித்து விடுதலைப்புலிகளை ஆதரித்து எழுதத் தொடங்கினார்.
தாராகி சிவ ராம் புலிகளை போற்றி எழுதத் தொடங்கிய பிறகு, கருணா பிரிந்த பிறகு புலிகளின் இமேஜ் சிவராமின் எழுத்துக்களால் உலகம் முழுக்க விடுதலைப்புலிகளின் இமேஜ் வளரத் தொடங்கியது. இதற்காக சிவராமுக்கு விடுதலை புலிகளால் பணமும் கொடுக்கப்பட்டது. சிவராமின் ராஜதந்திரம் இலங்கை அரசுக்காக விடுதலைப் புலிகளை உடைத்ததும் பின்பு அதே விடுதலைப் புலிகளை புகழ்ந்து பணம் பெற்றது ஆகும். விடுதலைப்புலிகள் தங்களை வாழ்த்தி பாடியதால் சிவராமுக்கு மாமனிதர் பட்டம் கொடுத்துள்ளார்கள் வெட்கக்கேடு.
ஆரம்ப காலத்தில் விடுதலை இயக்கங்கள் எல்லாருமே தங்களை புனிதர்கள் விடுதலை இயக்க போராளிகள் என்று நினைத்துக் கொண்டு ஊரில் சாதாரண திருடர்கள் கோழி திருடர்கள் போன்றவர்களைப் பிடித்து சமூக விரோதிகள் என்று கம்பத்தில் கட்டி வைத்து சுட்டுக்கொன்றார்கள். போகப் போக எல்லா இயக்கங்களும் விடுதலைப்புலிகள் உட்பட துப்பாக்கியை காட்டி விடுதலைக்காக என்று கூறி இலட்சக்கணக்கான பணம் நகைகளை கொள்ளை அடித்து வாழ்ந்தார்கள். அன்று வயிற்று பசிக்காக களவெடுத்தவனே கொலை செய்தும், பின்பு விடுதலை என்ற பெயரில் கொலை கொள்ளைகள் செய்தவர்களை பாராட்டும் மனிதர்களும் இன்றும் இருக்கிறார்கள்.
  ஒரு உண்மையான விடுதலைப் போராட்டத்தை நேசித்தவன் மக்களையும் பெண்களையும் குழந்தைகளையும் பாதுகாத்து நேசித்திருப்பான். இன்று கூட கடந்த கால நாங்கள் விட்ட தவறுகளை பற்றி சிந்தித்து நல்ல வழியில் போவதை விட, இன்றும் ஒரு கூட்டம் பெண்களை கற்பழித்து கொலை செய்தவர்களை கொலைகள் செய்து கொள்ளையடித்தவனை தூக்கிப்பிடித்து பாராட்டுவது மிகவும் வருந்தத்தக்கது. தராக்கி சிவராம் எழுத்து உலகில் பிரபல்யமாக இருக்கலாம் அதற்காக தனிமனித ஒழுக்கம் இல்லாத அவரை தூக்கி பிடிப்பது தவறு. நான் வேறொரு பதிவு இதைப்பற்றி கருத்து சொன்னதற்கு சிலர் என்னிடம் சண்டை பிடிக்கிறார்கள்
logoblog

Thanks for reading இது ஒரு பழைய பதிவு. விடுதலைப்புலிகளால் மாமனிதர் பட்டம் கொடுக்கப்பட்ட எஸ் ஆர் என்று அழைக்கப்பட்ட சிவராம் அவர்கள் புளொட் இயக்கத்தில் இருந்தபோது அவரின் செயல்பாடுகள்

Previous
« Prev Post

No comments:

Post a Comment