பகுதி 17
பயிற்சி எடுத்தால் அவர்கள் எவ்வளவு பேர், ?எல்லோருக்கும் ஒரே விதமான பயிற்சியா ?பயிற்சி அளிக்கும்இடம் ,போன்ற விபரங்களை கவனமாக பார்க்கும்படி தோழர்களிடம் ரகசியமாககூறச் சொல்லி சென்னையில் இருந்து தகவல் வந்தது, நான் நினைக்கிறேன் என்னைப் பார்த்த விஜிய பாலன்என்கிற சின்ன மென்டிஸ் என்னைப் பார்த்துவிட்டு அவர்தான் எமது தோழர்களுக்கு தலைமை தாங்கியவர் என நினைக்கிறேன்,ரயிலிலிருந்து இறங்கி வர நான் முழு விபரங்களையும் கூறிபேசிக்கொண்டிருக்கும் போது. அவர்களோடு வந்த இந்திய ராணுவ அதிகாரிகள் என்னை உடனடியாக திருப்பி அனுப்பிவிட்டு, அதைப்பற்றி மேலிடத்துக்கு தகவல் அனுப்பி உள்ளார்கள். உமா அது சந்தித்தவர் எமது இயக்கத் தோழர் வெற்றிச்செல்வன் தான் என கூற , இனிவரும் காலங்களில் யாரையும் இப்படி சந்திக்க அனுப்ப வேண்டாம் என கூறிவிட்டார் கள்.
டெல்லியில் கொமன்வெல்த் நாடுகளின் சர்வதேச மாநாடு நவம்பர் 23ஆம் தேதி ஆரம்பமாக இருப்பதால், அங்கு வரும் உலக நாட்டுத் தலைவர்களுக்கு கொடுப்பதற்காக சென்னையிலிருந்து இலங்கை அரசின் தமிழின விரோதப் போக்கு பற்றிய ஆங்கிலத்தில் உள்ள துண்டுப்பிரசுரங்கள், இலங்கையில் இனபிரச்சினை பற்றிய சிறு ஆங்கில கையேடு, இலங்கை அரசால் கொலை செய்யப்பட்டவர்களின் படங்கள் பெரும் தொகையாக எனக்கு அனுப்பு பட்டது. இந்த நேரத்தில் அல்லது அதற்குப் பின்போ லண்டனிலிருந்து முதன்முறையாக சக்திதாசன் என்பவர் வந்தார். அப்போது அங்கிருந்த எல் கணேசன் எம்பி அவருடன் பேசிவிட்டு பல் விளக்கி குளிக்க சொன்னார்.
L. கணேசன் எம் பி என்னிடம் சக்தி தாசனுக்கு பிரஷ் பேஸ்ட் கொடுக்கும்படி கூறினார் சக்திதாசன் வேண்டாம் என்று கூறிவிட்டு அவரது பேண்ட் இல் இருந்த பெரிய பெரிய பைகளில் இருந்து சோப், பிரஸ், சின்ன ஷாம்பு, பவுடர், சென்ட், எல்லாவற்றையும் எடுத்துக்காட்டினார் அப்படியே போய் குளித்தும் வந்து விட்டார். அவரையே அன்று எல்லோரும் சுற்றி நின்று வேடிக்கை பார்த்தோம். சக்திதாசன் லண்டனில் இருந்துஇலங்கை அரசுக்கு எதிராக அச்சடிக்கப்பட்ட புத்தகங்கள் கொணர்ந்து கொடுத்ததாக நினைவில் இருக்கிறது.
புது டில்லியில் இருக்கும் அனைத்து எம்பஸ்ஸி களுக்கும், ஹை கமிஷன் களுக்கும் கொடுப்பதற்காக புத்தகங்களை கவர்களில் போட்டு தயார் செய்தோம். அதேநேரம் கொமன்வெல்த் நாடுகளின் தலைவர்களுக்கு கொடுப்பதற்காகவும் அந்தந்த நாடுகளின் ஜனாதிபதி அல்லதுபிரதம மந்திரி பெயர் போட்டு கவர்கள்செய்தோம். எனக்கு இது உதவி செய்த டெல்லி நண்பர்கள் சித்தார்த்தன், சம்பத், மற்றும் ஒரு இந்தியன் வங்கியில் வேலை செய்த நண்பர் அவரின் பெயர் வெற்றிச்செல்வன் மிகவும் உயரமானவர்.
கொமன்வெல்த் மாநாடு நவம்பர் 23ஆம் திகதி ஆரம்பமாக இருந்தது புதுடில்லி முழுவதும் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மாநாட்டுக்கு இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பே தமிழ்நாட்டிலிருந்து அமிர்தலிங்கம் தலைமையில் தமிழர் விடுதலைக் கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர்கள் அவர்களோடு காசி ஆனந்தன் மற்றும் மாவை சேனாதிராஜா டெல்லி வரவழைக்கப்பட்டு டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தார்கள்.
முதன்முதலில் இந்திய அரசின் சார்பாக சிறையில் உமாமகேஸ்வரன் ஐயும்,பிரபாகரனையும் முதன் முதலில் சந்தித்த இந்திய அரசுக்கு ரிப்போர்ட் கொடுத்த IB அதிகாரிகள் இருவரும் இலங்கைப் பிரச்சினை டெல்லியில் தொடங்கி விட்டதால் டெல்லிக்கு மாற்றப்பட்டு, அவர்கள் தமிழ்நாடு இல்லத்தில் அமிர்தலிங்கம் அவர்களின், மற்றவர்களின் கருத்துக்களை அறிந்து கொண்டு இருப்பதை பார்த்தேன். அவர்களை சென்னையில் நான் சந்தித்து இருப்பதால் அவர்களை தெரியும். ஆனால் அவர்கள் அங்கு என்னை தெரிந்த மாதிரி காட்டிக் கொள்ளவில்லை.
தொடரும்......
No comments:
Post a Comment