பகுதி 27
ஆலடி அருணா MP |
1984 ஆண்டு ஆகஸ்ட் மாதமளவில் என நினைக்கிறேன் டெல்லி வந்த கவிஞர்ஜெயபாலன் கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு மேல் டெல்லியில் நின்றார். அவர் தான் செய்த வேலைகள் சம்பந்தமான ரிப்போர்ட்டை எனக்கு கொடுக்க மாட்டார் நேரடியாக உமா மகேஸ்வரனுக்கு தான் அனுப்புவார். அவர் ஒரு மிகப்பெரிய ஆயுத ஆயுதம் வாங்க கூடிய ஒரு தொடர்பை டெல்லியில் பெற்றிருக்கிறார். தொடர்பு பற்றிய விபரங்களை உமா மகேஸ்வரனுக்கு அனுப்ப, அந்த தொடர்பை தான் பார்த்துக் கொள்வதாகக் கூறி , ஜெயபாலனை ஒதுக்கிவிட்டு, ஷெர்லி கந்தப்பா இடம்கொடுத்ததாகவும், கந்தப்பா தவறாகக் கையாண்டு தொடர்பு நமக்கு கிடைக்காமல் போய் விட்டதாகவும் அறிந்தேன். இந்த செய்தி நான் அறிந்தது தான். ஆனால் கந்தப்பா டெல்லி வந்து என்னோடு தங்கி இருந்தது உண்மை.இதுபற்றி ஜெயபாலன் கூறினால் தான் இது உண்மையா பொய்யா என்று தெரியவரும். ஜெயபாலன் கடைசி வரை தமிழீழ மக்கள் விடுதலைக் கழக அங்கத்தவராக இருக்கவில்லை.அவருக்கு விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து எல்லா இயக்கங்களிலும் தலைவர்களிடமும் நல்ல தொடர்பு இருந்தது. இது உமா மகேஸ்வரனுக்கு ம்நன்றாக தெரியும். உமாமகேஸ்வரன் மற்ற இயக்க தலைவர்களின் நிலை கருத்துக்கள் பற்றி ஜெயபாலன் இடம் விவாதிப்பதை , பேசுவதைபல முறை பார்த்திருக்கிறேன்.எங்கள் பல முன்னணி தோழர்கள் மற்ற இயக்கங்களோடு ஜெயபாலன் தொடர்பு வைத்திருப்பதை பற்றி உமாமகேஸ்வரன் இடம் கூறி அவனை நம்ப வேண்டாம், ஜெயபாலன் ஆல்இயக்கத்துக்கு ஆபத்து. பலமுறை கூறியும், உமா பொருட்படுத்தவில்லை. எனக்குத் தெரியக் கூடியதாக ஜெய பாலனின் அறிவும் சிந்தனைகளும் ஒரு கிணற்றுக்குள் அடங்க கூடியதுஅல்ல. அவர் ஒரு காட்டாற்று வெள்ளம் போன்றவர். அன்று அவரோடு நான் எல்லாம் பழகும்போது அவரை விட நான் திறமையானவன் பெரியவன் என்ற நினைப்பு இருந்தது. பிற்காலங்களில் ஜெயபாலனின் கட்டுரைகள் கவிதைகள் படித்த போதும் சில தமிழ்நாட்டு அறிஞர்கள் ஜெயபாலனை பற்றி கூறும்போது தான் அவரைப் பற்றிய மதிப்பு கூடியது அதற்காகத்தான் அவரை பற்றி இந்த அளவுக்கு எழுதுகிறேன்.
நான் டெல்லியில் கழுத்தில் ஆப்ரேஷன் செய்து இருந்தபோது வலதுபக்க உமிழ்நீர் சுரப்பிகள் கட்டியாகி மாணிக்கக்கல் போன்ற தோற்றத்தை கொடுத்தது அதைத்தான் ஆப்ரேஷன் செய்துஎடுத்தார்கள். அதை ஜெயபாலன் வெற்றி கழுத்தில் மாணிக்கக் கற்களை மறைத்து வைத்து கடத்துகிறான் என எல்லோரிடமும் சொல்லி ஏன் இந்தி டாக்டரிடம் கூடி சொல்லி சிரித்ததும் மறக்க முடியாது.
விடுதலைப்புலிபொட்டம்மா னை எமது தோழர்கள் கடத்தி வைத்திருந்த போது, ஜெயபாலன் வந்து எமது கேகே நகர்சென்னை அலுவலகத்தில் வைத்து உமாமகேஸ்வரன் இடம் தவறு செய்கிறீர்கள் பிரச்சினை கூடிவிடும் என்று கூறி சண்டை பிடித்ததாகவும்சென்னை அலுவலகப் பொறுப்பாளர் பொட்டம்மான் கைது பற்றி எனக்கு கூறியபோது கூறினார். உமாமகேஸ்வரன் டெல்லி வரும் போது நானும் ஜெயபாலனை பற்றி குறை கூறி அவரிடம் பேசியபோது உமா அதைஏற்றுக்கொள்ளவில்லை..அவர் என்னிடம் கூறிய வார்த்தைகள் ஜெயபாலன் பார்க்க கதைக்க பைத்தியக்காரன் போல் இருந்தாலும் அவன் சொல்லும் பல விடயங்கள் சரியாகத்தான் இருந்திருக்கின்றன. அவனை பயன்படுத்தலாம் என்றால் அவன் கட்டுப்படுத்தி வைப்பது கஷ்டம் என்றார். சந்ததியாரைநாங்கள் கொலை செய்த பின்பு ஜெயபாலன் கொஞ்சம் கொஞ்சமாக எமது இயக்கத்தைவிட்டு ஒதுங்கி விட்டதாக அறிந்தேன்.
டெல்லியில் நான் |
visiting card |
L. கணேசன் எம்பி ராஜ்யசபா எம்பி பதவி காலம் ஆறு ஆண்டுகள். 86 ஆம் ஆண்டு ஏப்ரல் வரை நாங்கள் எல் கனேசன் எம்பியின் வீட்டை பாவித்தோம்.அது முடிந்த பின்பு 88ஆண்டு கடைசி வரை ஆலடி அருணா எம்பியின் வீட்டைத்தான் பாவித்தோம். அந்த விலாசத்தில் விசிட்டிங் கார்டு அடித்து பயன்படுத்தினோம்.
தொடரும்......
No comments:
Post a Comment