பகுதி 40
|
அத்துலத் முதலி-ஷெர்லி கந்தப்பா |
|
மாணிக்கம் தாசன் |
1985 ஆம் ஆண்டு 86 ஆண்டு ஆரம்பத்தில் என நினைக்கிறேன். மாணிக்கம் தாசன் தனது தம்பி அசோக் டெல்லி அனுப்புவதாகவும் அங்கு சில மாதங்கள் என்னோடு இருக்கட்டும் என்றும் கூறினார். நான் இதுபற்றி செயலதிபர் உமாமகேஸ்வரன் இடம் தொலைபேசி மூலம் கூறியபோது, அவர் மாணிக்கத்தின் தம்பியே டெல்லியில் சில காலங்கள் இருக்கட்டும் என் றார். டெல்லி வந்த மாணிக்கத்தின் தம்பியை வரவேற்று தங்க வைத்தேன் சின்ன பையன். எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் டெல்லியில் இருந்தார் ஆனால் அடிக்கடி சென்னைக்கு போக வேண்டும்என அடம் பிடிப்பார். மாணிக்கம் தாசன் இடம் இதுபற்றி தொலைபேசியில் கூறியபோது அவனை அனுப்ப வேண்டாம் எனக் கூற, நான் என்ன பிரச்சனை என்று கேட்க தாசன் , தனது தம்பிஅடிக்கடி பரந்தன் ராஜன் வீட்டுக்குப்போய் இருக்கிறான். இதனால் தன்னை இயக்கத்தில் சந்தேகப்படுகிறார்கள். அப்போது நான் கேட்டேன் ராஜன் வீட்டுக்கு தானேஇதனால் என்ன பிரச்சனை? அப்போதுதான் தாசன் கூறினார் ராஜனுக்கும் பெருசிக்கும்( உமா மகேஸ்வரனுக்கு) இங்கு சிறு பிரச்சனை நிரஞ்சன் கொலை சம்பந்தமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதனால் தனது தம்பி அங்க போவது மற்றவர்கள் தன்னை யும் சந்தேகப்படுகிறார்கள் என்று கூறினார். எனக்கு அப்போது தான் முதல்முறையாக எமது இயக்கத்தின் குள் மறுபடியும் பிரச்சனை என்று தெரியவந்தது.
|
சித்தார்த்தன் |
சில நாட்களின் பின் மாணிக்கம் தாசன் தம்பி அசோக் சென்னை போய் விட்டார். அவர் தற்போது பிரான்சில் இருக்கிரார். ஆனந்த் பெயர். ஒரு நாள் செயலதிபர் உமா மகேஸ்வரன் தொலைபேசி மூலம் எனக்கு ஒரு பாஸ்போர்ட் ரெடி பண்ண சொன்னார்ஜெர்மன் போவதற்கு என்று. நானும் ஏற்பாடு செய்து வைத்திருந்தேன். திடீரென ஒரு நாள் ஷெர்லி கந்தப்பாவும், திருஞானம் என்றரமேஷ் இருவரும் டெல்லி வருகிறார்கள் அவர்கள் ஜெர்மன் போவதற்கு உதவி செய்யும்படி கூறினார். அவர்களது பயண விவரம் யாருக்கும் தெரியக்கூடாது என்றும் கூறினார். இவர்கள்டெல்லி வந்தபோது, திருஞானம் எனது நல்ல நண்பர் .அவரிடம் என்ன விஷயம் என்று கேட்டேன். அவர் ரகசியமாக மிக ரகசியமாக இலங்கை பாதுகாப்பு அமைச்சர் அதுலத் முதலி செயலதிபர் உமா மகேஸ்வரனை ஜெர்மனியில் ரகசியமாக சந்திக்க விரும்பியதாகவும், எமது இயக்கத்தில் ஏற்பட்டுள்ள இன்றைய குழப்ப நிலையில் செயல் அதிபரால் போக கஷ்டம் என்றும் அதோடு இந்த விஷயம் வெளியில் தெரிந்தால் எங்களுக்கு மிகப்பெரிய அவமானம் என்றும், செயலதிபர் உமாசார்பாக தன்னை அதாவது ரமேஷ் அனுப்புவதாகவும் மிச்சம் எல்லாவற்றையும் ஷெர்லி கந்தப்பா பார்த்துக்கொள்வார் என்றும் கூறினார். ஜெர்மனி போய் வந்த பின்பு ரமேஷிடம் விபரம் கேட்டபோது அவர் கந்தப்பா அத்துலத் முதலிடம் தன்னை அறிமுகப்படுத்தி செயலதிபர் உமா சார்பாக வந்திருப்பதாக அறிமுகப்படுத்தி விட தான் தலை காட்டியதாகவும், பின்பு தன்னை விட்டு விட்டு, அவர்கள் இருவரும் இரண்டு நாள் மிக ரகசியமாக மிக அதிக நேரம் பேசியதாகவும், என்ன பேசியதாகக் தனக்குத் தெரியாது என்றும் கூறினார். ஆனால் செவிலி கந்தப்பா மிக மகிழ்ச்சியுடன் இருந்ததாகவும் கூறினர். அவர்கள் டெல்லி வந்தபோது நானும் கவனித்தேன் ஷெர்லிமிக மகிழ்ச்சியாகத்தான் இருந்தார்.
|
வாசுதேவா |
ஒரு முறை சித்தார்த்தன், லண்டன் கிருஷ்ணன் ,செயலதிபர் உமாமகேஸ்வரன் மூவரும் டெல்லி வந்து இருந்த போது,நாங்கள் நால்வரும் மிக மகிழ்ச்சியோடு பல விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்தோம். மொக்கு மூர்த்தி, வாமதேவன், கண்ணன்,வாசுதேவா போன்றவர்களின் செயல்பாடுகளைப் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். மொக்கு மூர்த்தியை பற்றி சித்தார்த்தனும் கிருஷ்ணனும் கவலை தெரிவித்தார்கள். அப்போது உமா மகேஸ்வரன் மூர்த்தியின் திறமையைப் பற்றிக் கூறினார். முதன்முதலில் தாங்கள் ஒரு கொலையை செய்து சரியாக புதைக்காது விட்டதனால் ஒரத்தநாட்டில் ஊர் மக்கள் அதைப் பற்றிப் பேச தொடங்கியதால்,. முகாம் பொறுப்பாளர் பயிற்சிக்காக வந்த தோழர் மூர்த்தி அழைத்துக்கொண்டுபோய் அந்த பிணத்தை தோண்டி எடுத்து வேறு இடத்தில் புதைக்க சொல்ல, அந்தத் தோழர் மூர்த்தியும் அருவருப்பு படாமல் அந்த பிணத்தை தோண்டி எடுத்து சாக்குமூட்டையில் கட்டி பிண நீர் வழிய வழிய தலையில் தூக்கி வைத்து வேறு இடத்தில் வைத்ததாகவும், அப்போதுதான் மூர்த்தியின் விசுவாசமும், துணிச்சலும் தங்களுக்கு தெரியவந்து அவரை எமது விசாரணை (சித்திரவதை முகாம்) பொறுப்புக்கு போட்டதாகவும் கூறினார். அதன் பின்னர் தோழர் மூர்த்தி , மொக்குமூர்த்தி ஆகிவிட்டார் என செயலதிபர் சிரிப்புடன் கூறினார். பின்புஎமது செயலதிபர் உமாமகேஸ்வரன் வாமதேவன் இன்திறமையைப் பற்றிக் கூறினார். அதாவது ஒரு ஊரில் பெண்கள் முழுக்க மிகமிக பத்தினியாக வேறு ஆண்களை ஏறெடுத்து பார்க்காத வர்கள் என்று பெயரெடுத்து அந்த ஊரில் வாமதேவன் விட்டடால், குறைந்தது 10 பெண்களை யாவது பத்தினி தன்மையை இழக்கச் செய்து விடுவார் என்று அட்டகாசமாக சிரித்துக்கொண்டே கூறினார்.
|
கண்ணன் |
சித்தார்த்தன் கேட்டார் இந்த உளுத்துப் போன திறமையற்ற கண்ணன் என்கிற சோ திஸ் வரனே ஏன் எமது கழக ராணுவ பொறுப்புக்கு போட்டீர்கள் என்று ,பரந்தன் ராஜன் ஐ ராணுவ பொறுப்புக்கு போட்டிருந்தால், திறமையாக கழக ராணுவத்தைவழிநடத்தி இருப்பார் என்று, அதற்கு செயலதிபர் உமாமகேஸ்வரன் மறுத்து தலையாட்டி, அது தனக்கு ஆபத்து என்றும் எல்லா தோழர்களையும் தனது திறமையால் ராஜன் தன் பக்கம் இழுத்து விடுவார். ஆனால் கண்ணன் ஒன்றும் செய்யாவிட்டாலும் தான் சொல்வதைக் கேட்டு நடக்கும் தனக்கு எதிராக ஒருகாலமும் திரும்பாது, என்றும் கூற சித்தார்த்தன் விசுவாசத்தை விட திறமை முக்கியம் மாணிக்கம் தாசனை சரி போட்டு இருக்கலாம் தானே என்று கூறினார். அதற்கு செயலதிபர் மாணிக்கம் தாசன் தோழர்களை தலைமைதாங்கி வழிநடத்த தகுதியற்றவர், மாணிக்கம் தாசன் ஒரு சாகச விரும்பி. எப்பவும் எதையாவது சாகசமாக செய்ய விரும்பும் ஆள்என்று கூறினார்.
|
வாமதேவன் |
சின்ன உதாரணம் ஒன்றையும் செயலதிபர் கூறினர். எப்படி என்றால் 60 பேர் இருக்கும் ஒரு முகாமுக்கு மாணிக்கம் தாசன் போனால், அங்கு ஒருவருக்கும் சாப்பிட ஒன்றும் இல்லை பட்டினியாக இருக்கிறார்கள் என்று தெரிந்தால், மாணிக்கம் தாசன் தனக்கு வேண்டிய ஒரு சில தோழர்களை வேலை இருக்கிறது என்று கூறி அழைத்துப்போய் அவர்களுக்கு பிரியாணி போன்ற சில உணவுகளை வாங்கிக் கொடுத்து கூட்டிக்கொண்டு வருவார். ரகசியமாக. அதே முகாமுக்கு பரந்தன் ராஜன் போனாள் தோழர்கள் பட்டினியாக இருப்பதைப் பார்த்து, உடனடியாக முகாம் பொறுப்பாளர் அழைத்து எத்தனை பேர் இருக்கிறீர்கள் என்று கேட்டு தன்னிடமிருக்கும் பணம் முழுவதையும், எடுத்துக்கொடுத்து, பணத்துக்கு அளவாக அரிசி பருப்பு கிழங்கு வாங்கி வரும்படி கூறி பின்பு அவர்களுடன் இருந்து சாப்பிட்டுவிட்டு கிளம்புவார். இப்படி இருந்தால் பயிற்சிபெறும் தோழர்கள் ராஜனுக்கு தான் விசுவாசமாக இருப்பார்கள்.அதனால் தனக்கு எதிராக இன்னொரு ஆள் வளர்வதை வளர விடக்கூடாது என்றார். வாசுதேவ ஐ பற்றி கூறும் போது வாசுதேவா, கண்ணனை போன்றவர் தான். வளவள என்று பேசுவார். சோசலிசம் தத்துவம் கொள்கை என்று பேசமாட்டார். குழப்பமாக பேசியே மற்றவர்களை குழப்பி விட்டு விடுவார். அதனால் வாசுதேவா வை பற்றி கவலை இல்லை என்று கூறினர். செயலதிபர் இன் பேச்சைக் கேட்டு நாங்கள் திகைத்து நின்றோம்.
எங்கள் திகைப்பை போக்க ஒரு சிரிப்பு கதையைக் கூறினார், தஞ்சாவூரில் மற்ற இயக்கங்களின் நடவடிக்கைகளை, நடமாட்டங்களை அறிய மூர்த்தியின் உளவுப்படை பல இடங்களில் சுற்றி வருவார்களாம். அப்படிப் போன ஒருஉளவுத்துறை தோழர் ஒரு இலங்கை அரசின் சிங்கள உளவாளி இருப்பதாக மூர்த்திக்கு தகவல் கொடுக்க வேறு சில தோழர்களும் சேர்ந்து சிங்கள உளவாளியை பிடித்துக்கொண்டு வந்து விட்டார்களாம். அவன் பேசிய மொழி தெரியாமல் அரைகுறை சிங்களம் தெரிந்த ஒரு தோழரை அழைத்து வந்து விசாரிக்கச் சொல்லி இருக்கிறார்கள், அந்தத் தோழரும் திறமையாக விசாரித்து அந்தத் தோழரும் அந்த இலங்கை உளவாளி புளொட் இயக்கத்தை பற்றி அறிய வந்ததாக கூறியதாக மக்களிடம் ஒப்பித்து விட்டு போய்விட்டார். மொக்கு மூர்த்தியும் வழமையாக சித்திரவதை செய்து கொலை செய்து கொண்டிருக்கிறார். அந்த இலங்கை உளவாளியின் உடுப்புகளை சோதனை செய்தபோது தஞ்சாவூர் லாட்ஜ் சாவி இருந்திருக்கிறது.வேறு சில உளவாளிகளும் இருக்கலாம் அல்லது முக்கியமான உளவு பொருட்கள் இருக்கலாம் நினைத்துபோக. அங்கு அவர்களுக்கு அவர் இலங்கை உளவாளி அல்ல வடநாட்டிலிருந்து துணிமணி விக்க வந்த இந்திக்காரன் என்று தெரியவந்தது. இவர்களுக்கு இந்தியும் புரியாது சிங்களமும் புரியாது. அவர்கள் வந்து மொழி பெயர்ப்பு செய்த தோழ ரைகடுமையாகத் தாக்கியிருக்கிறார்கள். இதைக்கேட்டு சித்தார்த்தன் கொஞ்சம் கடுமையாகவே அந்த இந்திக்காரன் குடும்பம் என்ன பாடுபடும், முக்கு மூர்த்தி தோழர்களுக்கு கடுமையான தண்டனை கொடுத்திருக்க வேண்டும் என்று கூற, தான் அவர்களை கண்டித்து விட்டதாக கூறினார்.
எமது இயக்கத்தின் மறுமுகம் கொஞ்சம் கொஞ்சமாக எங்களுக்குத் தெரிய ஆரம்பித்த நேரம் அதுவாகும். ஆனாலும் அன்று அதை நாங்கள் பெரிய சீரியஸ் விஷயமாக நினைக்கவில்லை என்பதும் உண்மையே. பெரிய விடுதலை இயக்கத்தில் இப்படியான தவறுகள் நடக்கத் தான் செய்யும் என்று எமது செயலதிபர் உமா மகேஸ்வரன் கடைசியில் கூறிய வார்த்தைகள் தான் நாங்கள் நம்பியது.
No comments:
Post a Comment