பகுதி 29
வாழப்பாடி ராமமூர்த்தி M P |
கலாநிதி சாலை இளந்திரையன் |
(நான் எனது அனுபவங்களை எழுதுவது வெளிநாட்டில் இருக்கும் பல தமிழீழ மக்கள் விடுதலைக் கழக உறுப்பினர்கள் அதாவது இயக்கத்தை விட்டு விலகியவர்கள் ஒதுங்கி இருப்பவர்கள்தாங்கள் நான் எனது அனுபவங்கள் எழுதுவது தவறு என்றும் எழுதக் கூடாது என்றும் நேரடியாகவும் மறைமுகமாகவும் செய்திகளை அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.நான் யாரையும் எனது முகநூலைபார்க்க படிக்க சொல்லவில்லை. விருப்பமில்லாத நபர்கள் என்னை தடை செய்து விட்டு போகட்டும். நான் எனது அனுபவங்கள் பதிவாக இருக்கட்டும் என்று மட்டும்தான் போடுகிறேன் ஒழிய. யாரும் லைக் போட வேண்டும் என்ற கருத்து சொல்ல வேண்டும் என்றோ போடவில்லை என்பதை திரும்பவும் தெரிவித்துக் கொள்கிறேன்)
எனது 27வது பதிவில் ஆலடி அருணா எம்பியின் வீடு பற்றி எழுதி இருந்தேன். அதில் நண்பர் பரதன் அந்தவீட்டில் இருந்த கேரளா குடும்பத்தில் இருந்த பெண்களை மூன்று பெண் குட்டிகள் பற்றி குறிப்பிடவில்லை என்ன கவலைப்பட்டு இருந்தார். பின்பு அந்த பின்னூட்டத்தை எடுத்துவிட்டார். இதைப்பற்றி இதில் குறிப்பிடுகிறேன். ஆலடி அருணா MPஎனக்கு வீடு கொடுக்கும் போது, கூறினார் பக்கத்தில் பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள், சுற்றியிருக்கும் வீடுகள் எல்லாம் இந்திய எம்பி மார்களின் வீடுகள் அங்கும் பெண் பிள்ளைகள் இருப்பார்கள். உங்களால் எந்த ஒரு கெட்ட பெயர் வந்துவிடக் கூடாது. எனக்கு மட்டுமல்ல, ஈழப் போராளிகளுக்கு அது கெட்ட பெயராக அமைந்து விடும். ஆனால் உங்களால் எந்த ஒரு கெட்ட பேரும் வராது என நம்புகிறேன் சிறு கெட்டபேர் வந்தாலும் துரத்தி விடுவேன் என கூறினார்.
எமது செயலதிபர் உமா மகேஸ்வரன் அடிக்கடி டெல்லி வந்து போவார். அவர் எப்போதும் என்னோடு ஆலடி அருணா வீட்டில்தான் தங்குவார். மாலை நேரங்களில் பக்கத்தில் வாடகைக்கு இருக்கும் கேரளா குடும்பத்தில் பெண்கள் கல்லூரி விட்டு வந்து பின்பக்கம் பேட்மின்டன் விளையாடுவார்கள். எங்கள் செயலதிபர் உமா மகேஸ்வரனும் அவர்களோடு போய் விளையாட முயற்சி செய்வார். அவர்கள்ஒன்றும் பேசாமல் வீட்டுக்குள்போய் விடுவார்கள். குளிர் காலத்தில் வெயில் பார்க்க வெளியில் வந்து கதிரை போட்டு இருப்பார்கள். எமது செயலதிபர் ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டு கதிரையும் எடுத்துப் போட்டு வெளியில் போய் இருப்பார். எனக்குத் ரொம்ப தர்மசங்கடமாக இருக்கும்.பலமுறை ஆலடி அருணா எம்பி கூறிய வார்த்தைகளே அவருக்கு கூறி இருக்கிறேன். என்னை அலட்சியமாக பார்ப்பார். இந்த செய்திகளை எழுத விரும்பவில்லை ஆனால் பரதன் தனது பின்னூட்டம் மூலம் எழுதவைத்துவிட்டார்.
ஷெர்லி கந்தப்பா ஜெர்மன் மனைவி மோனிகா உடன் வளர்ப்பு பிள்ளைகளுடனும் டெல்லி வந்து ஜெர்மனி போனார்கள். டெல்லியில் இருக்கும் போது இருவரும் சில வெளிநாட்டு தூதரகங்களை சந்தித்தோம். எமது தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் இலங்கைஅரசின் கைகளில் விழுந்து குறிப்பாக உமா மகேஸ்வரன் அத்துலத் முதலியின் கைகளில் சரணடைந்து விடுதலையையும் எமது இயக்கத்தையும் அழிததக்கு முழு காரணமும் இந்த ஷெர்லி கந்தப்பா தான் என முக்கியமான தோழர்களுக்குதெரியும். இதுபற்றி பின்பு விவரமாக எழுதுகிறேன்.
இந்திரா காந்தி இறந்த பின்பு ராஜா நித்யன் டெல்லி வந்து இருவரும்தொடர்ச்சியாக பத்திரிகையாளர்கள் வெளிநாட்டுத் தூதுவர்களை சந்தித்து எமது பிரச்சினைகளை விளக்கினோம்
சாலினி இளந்திரையன் |
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் திருகோணமலை தளபதி மறைந்த ஜெயச்சந்திரன், மட்டும் விடுதலைப் புலிகளின்பிரபாகரனின் நெருங்கிய நண்பர் சார்லஸ் அன்டனி ஆகியோரின் அரசியல் குரு இடதுசாரி சிந்தனை உள்ளபயஸ் மாஸ்டர் லெசோத்தோ நாட்டில் இருந்து இந்தியா வந்து செயலதிபர் உமாமகேஸ்வரனையும், சந்ததியாரையும் சந்தித்தார்.சந்ததியார் அவரை டெல்லிக்கு அனுப்பி பயஸ் மாஸ்டரின்தொடர்புகளை எங்கள் இயக்கத்துக்கு பயன்படுத்த சொன்னார்.அக்காலகட்டத்தில் பயஸ் மாஸ்டர் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் விடுதலை இயக்கத்தின் ரகசிய வேலைகளை செய்து வந்தார் என அறிந்தேன். அவரோடு போய் ANC ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் விடுதலை இயக்கம், சுவப்போ நம்பி பியா விடுதலை இயக்கம் சந்தித்துப் பேசினோம். இரண்டு விடுதலை இயக்கங்களும் எங்களோடு மிக நன்றாக தொடர்பில் இருந்தார்கள் ANC இந்திய பிரதிநிதி திரு முல்லா மிக
அருமையான
அவர் எங்களுக்கு நல்ல புத்திமதிகளை கூறுவர். என்னோடு தங்கியிருந்த சைமன் என்ற தோழருக்கு அவரை மிகவும் பிடிக்கும். பயஸ் மாஸ்டர் இரண்டுதரம் இந்தியா வந்தார். சந்ததியார் இன் கொலையின் பின்பு மனம் வெறுத்து எங்கள்இயக்கத்தோடு இருந்த தொடர்பை விட்டு விட்டார். என்னோடு தனிப்பட்ட முறையில் இன்று வரையில் தொடர்பில் இருக்கிறார்.84 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்திய லோக்சபா பொதுத்தேர்தல் நடந்தது. இந்திரா காங்கிரஸ் அமோக வெற்றிப்பெற்றது. தமிழ்நாட்டிலிருந்து புதிய எம்பிக்கள் வந்தார்கள். இதேநேரம் செயலதிபர் உமாமகேசுவரன் மூன்று, நான்கு வருடங்களின் பின் தளத்துக்கு அதாவது இலங்கைக்குச் சென்றார். அவரது இந்தப் பயணம் எமது வளர்ச்சியை விட, இயக்க அழிவுக்கு வழி கோலியது என்பதுதான் உண்மை. சுழிபுரத்தில் ஆறு விடுதலைப்புலிஇயக்கத் சிறுவர்களை கொலைசெய்து ,கடற்கரையில் புதைத்து விட்டார்கள் என நினைக்கிறேன். அந்த நேரம்செயலதிபர் உமா மகேஸ்வரன் சுழிபுரத்தில் அல்லதுவட்டுக்கோட்டையில் இருந்திருக்கிறார். அவர் அதைத் தடுத்து இருக்கலாம். அதைவிட மோசம் அதை மறைக்க நாங்கள் விட்ட அறிக்கைகள். எனக்கு டெல்லியில் கூற, அப்படி ஒரு விஷயம் நடக்கவில்லை மீது விடுதலைப்புலிகளின் சூழ்ச்சி என்று பிரச்சாரம் செய்ய அறிக்கை அனுப்பினார்கள்.நானும் அதை நம்பி பிரச்சாரம் செய்து பின்பு உண்மை வெளிவர அசிங்கப்பட்டது உண்மை.
செயலதிபர் இலங்கை பயணம்பத்திரிக்கைகளில் வந்து
இந்திய அதிகாரிகள் குறிப்பாக ஜி பார்த்தசாரதி என்னை கூப்பிட்டு விசாரித்தார் செயலதிபர் உமா மகேஸ்வரனை டெல்லி வரச் சொன்னார்.
ஷெர்லி கந்தப்பா |
அவர் உமாமகேஸ்வரன் இடம் ரொம்பவே வருத்தப்பட்டார். இந்தியாவிலும் இந்திராகாந்தி இல்லாத நேரம் ஒரு குழப்பநிலை இருக்கும்போது நீங்கள் அங்கு போய் இருந்தது தவறு ஏதாவது நடந்திருந்தால் அல்லதுஉங்களை இலங்கை அரசு கைது செய்து இருந்தால் இங்கே இருக்கும் ஆயிரக்கணக்கான இயக்கத் தோழர்களின் நிலைமை என்ன? இந்தியாவுக்கும் கெட்ட பெயர் தானே வரும். இந்திய தேர்தல் முடிந்த பின்பு எங்களிடம் சொல்லிவிட்டு நீங்கள் போயிருக்கலாம். அங்கு போயும் கொலை பிரச்சனை என்று கேள்விப்பட்டோம் அது உங்கள் நாட்டில் இருந்த பிரச்சினை என்பதால் அதைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை ஆனால் இந்திய பத்திரிகைகளில் இந்த செய்தி பெரிதாக அடிப்பட்டால் மக்கள் மத்தியில் ஈழ விடுதலை இயக்கங்களுக்கு மதிப்பு இருக்காது என கூறினார்.செயலதிபர் உம் இனிமேல் படியான தவறு நடக்காது என கூறி விட்டு வெளியில் வந்து அந்த ஆள் கிடக்கிறார் என்று சொன்னார்.
டெல்லியில் நமது வேலைகள் வழமைபோல் நல்ல முறையில் நடந்து கொண்டிருந்தன வாழப்பாடி ராமமூர்த்தி எம் பி அவர்கள் டெல்லியில் புகழ்பெற்ற பேராசிரியர்கள் கணவன் மனைவி சாலை இளந்திரையன் சாலினி இளந்திரையன் இருவரையும் சந்திக்க ஏற்பாடு செய்தார் இவர்கள் டெல்லி யுனிவர்சிட்டியில் தமிழ் பேராசிரியராக இருந்தார்கள் அவர்கள் டெல்லியில் பலதரப்பட்ட தமிழ் மாணவர்கள் மத்திய அரசு தமிழ் அதிகாரிகள், தமிழ் அறிஞர்கள் போன்றவர்களே எனக்கு அறிமுகப்படுத்தி விட்டார்கள். டெல்லி ஐஐடி ஜேஎன்யூ யூனிவர்சிட்டி தமிழ் மாணவர்கள் டெல்லி யுனிவர்சிட்டி தமிழ் மாணவர்கள் எமது ஈழ விடுதலை போராட்டத்துக்கு மிக ஆதரவாக இருந்தார்கள். ஆனால் அவர்கள் தனிப்பட்ட முறையில் எந்த ஒரு விடுதலை இயக்கத்தையும் ஆதரிக்கவில்லை. எங்களிடம் இலங்கை அரசின் வன்முறைபடங்களை வாங்கி பலமுறை யுனிவர்சிட்டி ஐஐடி இடங்களில் கண்காட்சி வைத்தார்கள் பணம் சேகரித்து எங்களிடம்கொடுத்தார்கள். அடுத்தடுத்த வருடங்களில் எல்லாவிடுதலை இயக்கங்களின் உண்மை முகங்கள் தெரியதொடங்கின.கொலை போதை மருந்து கடத்தல் சகோதரர் படுகொலை தமிழ்நாட்டில் தமிழ்நாட்டு மக்களிடம் கொள்ளை அடிப்பது போன்ற எல்லா செய்திகளும் அந்த மாணவர்கள் ஊருக்கு போய்வரும் போது அறிந்து மற்றவர்களிடமும் கூறி எமது இயக்கங்களின் ஈழ விடுதலையை இது ஒரு விடுதலைப் போராட்டமே இல்லை என்று நேரடியாக எங்களிடம் கூறினார்கள் எங்களையும் வரவேண்டாம் என்று கூறிவிட்டார்கள். ஒரு சிலர் தனிப்பட்ட முறையில் நட்பு பாராட்டினார்.
ராஜீவ் காந்தி புதிய அரசின் பாராளுமன்ற உறுப்பினர்களையும் சந்திக்கும் படலமும் அதிகாரிகளை சந்திக்கும் நானும் சித்தார்த்தனும் தீவிரமாக இறங்கினோம்
தொடரும்.......
No comments:
Post a Comment