பகுதி 38
TR. பாலு |
பிரான்ஸ், கனடா, ஜெர்மனி, அல்ஜீரியா சௌத் யேமன், பிரிட்டிஷ்அமெரிக்கா, டென்மார்க் ,பெல்ஜியம், மொரிஷியஸ், ஸ்விஸ், சிம்பாவே, போன்ற நாட்டு அதிகாரிகளையும், பாலஸ்தீன விடுதலை இயக்கம், ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ், நம் பிபிய நாட்டு விடுதலை இயக்கம் ஸ்வப்போ போன்ற விடுதலை அமைப்புகளுடனும் மிக நெருங்கிய தொடர்பில் இருந்தோம். மற்ற 50க்கும் மேற்பட்ட வெளிநாட்டு தூதரகங்களுக்கு மாதாமாதம் எமது வெளியீடுகள் அனுப்பி வைப்போம்.இதில் குறிப்பிடப்பட வேண்டியவர் சிம்பாவே ஹை கமிஷன் இன் முதன்மைச் செயலாளர் திரு .முகொனோ அவர்கள். இவர் மும்பையில் படித்தவர். படிப்பு முடித்தவுடன் நேரடியாக 1984 ஆம் ஆண்டு கடைசியில் புதுடில்லியில் ஆரம்பிக்கப்பட்ட சிம்பாவே ஹை கமிஷன் முதல்செயலாளராக நியமிக்கப்பட் டார். எங்களை விட இரண்டு மூன்று வயது தான் கூடுதலாக இருப்பார். ஆரம்பத்தில் டெல்லியில் பைவ் ஸ்டார் ஹோட்டலில் தான் இவர்களின் ஹை கமிஷன் ஆபீஸ் செயல்பட்டது.
புதிதாக ஆரம்பிக்கப்பட்ட ஹை கமிஷன் என்பதால் வேறு எந்த ஒரு இயக்கமும் அவர்களை தொடர்பு கொள்ளவில்லை. எமது இயக்கம் சார்பில் நான் நான் முதலில் இவரைதொடர்பு கொண்டு, டெல்லியில் எமதுஅலுவலகம் இருக்கும் வரை இருவரும் நல்ல தொடர்பில்இருந்தோம்.. இவரை வாரத்தில் மூன்று நாட்களுக்கு மேல் சந்திப்போம். என்னோடு வந்திருந்த பரதன், சைமன் போன்றவர்கள் டெல்லி அலுவலகம் சார்பாக தொடர்பு கொண்டவர்கள் இவர்களுடன் நல்ல நட்பாய் பழகியவர். சில வேலைகளில் எங்களை தேடிக் கொண்டு நாங்கள் இருந்த இடத்துக்கு காரில் வருவார். நானும் சித்தார்த்தனும்,அவரை சந்திக்கும் போது நமது பகலுணவு அவருடன் 5 ஸ்டார் ஒட்டலில் தான். அடிக்கடி அவருடன் சாப்பிடுவோம். நான் டெல்லியில் இருந்த காலங்களில் நல்ல சாப்பாடு சாப்பிட்டது அப்போதுதான். அடுத்தது விடுதலை இயக்கங்கள் டெல்லிக்குபேச்சுவார்த்தைக்கு வரும்போதுவீட்டுக்கும் கட்டிக் கொண்டு வந்துவிடுவோம். அதை நாங்களும் இந்திய தோழர்களும் பங்கிட்டு சாப்பிடுவோம்.
NVN. சோமு |
சிம்பாவே ஹை கமிஷன் முகோனோவசந்த் விகார் என்ற இடத்தில் வீடு எடுத்து மனைவியையும் பிள்ளைகளையும் கூட்டி வந்த பின்பு, நானும் சித்தார்த்தனும் அடிக்கடி வீட்டுக்கு டின்னர் சாப்பிட கூப்பிடுவார். இரவு டின்னரில் பியர், அவர்களின் அன்றாட உணவு ரவை உப்புமா போன்று இருக்கும், அடுத்து மாட்டு இறைச்சி எலும்பும் சதையும் , கஷ்டப்பட்டு சாப்பிட்டு வருவோம். செயலதிபர் உமாமகேஸ்வரன் வரும்போது அவர் மாலை நேரத்தில் வீட்டில் சந்திப்பார். உமா மகேஸ்வரன்குடிக்க மாட்டார் இறைச்சி சாப்பிட மாட்டார் அதோடு அவருக்கு முன்னால் நாங்களும் சாப்பிடமாட்டோம் குடிக்க மாட்டோம். எங்களின் நிலைமையும் அவர் புரிந்து கொண்தார்.எமது செயல் அதிபருக்கு டீயும் பிஸ்கட்டும் எங்களுக்கும் சேர்த்து கிடைக்கும்.
இதே மாதிரி ஃபிரான்ஸ் முதன்மை செயலாளரும் வீட்டில் தான் சந்திக்க விரும்புவார்.காரணம் அடிக்கடி எம்பஸ்ஸி அலுவலகத்துக்கு வந்து போவது பலத்த கண்காணிக்கப்படும். அதனால்தான் அவர் வீட்டில் சந்திப்பர். அவர்வீட்டுக்கு போனவுடன் சின்ன ஒரு அலமாரியை திறந்துஇருக்கும் விதம் விதமான குடி வகைகளில் எது வேண்டுமென்று கேப்பார். எனக்கு குடிவகைகளில் பற்றி ஒன்றும் தெரியாததால், ஏதாவது சரி என்றும் கூறுவேன். அவர்தான் குடிப்பதே எனக்கும் கொடுப்பார். ஒருமுறை செயலதிபர் வந்திருக்கும்போது பிரான்ஸ் அதிகாரியை சந்திக்க போனபோது, வழமை போல அவர் அலுமாரியை திறந்து என்னவேண்டும் என்று கேட்க, செயலதிபர் தனக்கு கூல்ட்ரிங்க்ஸ் மட்டும் போதும் என்றார். அவருக்கு கூல்ரிங்ஸ் எனக்கு குடி வகையும் கொடுக்க நான் பதறிப் போயிட்டேன். . செயலதிபர் கண்ணால் ஜாடை காட்டினார் குடிக்கும்படி. வெளியில் வரும்போது செயலதிபர் கோரினார். இப்படியானவர்களை சந்திக்கும் போது அவர்கள் குடிக்கக் கொடுத்தால் குடியும். அப்பதான் அவர்களோடு மனம் விட்டு பேச முடியும். இல்லாவிட்டால் அவர்களை அவமரியாதை செய்ததாக இருக்கும். அதற்காக வீட்டில் வாங்கி வைத்து எல்லாம் குடிக்கக்கூடாது என்று கூறினார்.
பரதன் |
பரதன் என்ற சாரங்கன்இங்கு இருக்கும் போது என் வியன் சோமு, டி ஆர் பாலு, ஆந்திரா கர்நாடகா எம்பிக்கள், பிரிட்டிஷ் எம்பஸ்ஸி போன்றவர்களே சந்தித்த பின்பு டெல்லி அலுவலகத்துக்கு கொடுத்த குறிப்பு இன்றும் என்னிடம் உள்ளது.
பிரான்சில் இருந்து கப்பலில் வேலை செய்த வினோத் என்பவர் எமது இயக்கத்தில் சேர்ந்து வேலை செய்ய டெல்லி ஊடாக சென்னை வந்தார். இவர்விடுதலைப்புலிகளில் சாகும்வரை உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த திலீபன் அவர்களின் உடன் பிறந்த அண்ணன்.அவருடன் பேசும்போது தனது தம்பி திலீபன் தவறான இடத்தில் போய் சேர்ந்து இருக்கிறான்என்று கூறுவார். இவர் வரும்போது பெருந்தொகையான டெனிம் ஜீன்ஸ் கொண்டு வந்தபோது டெல்லி ஏர்போர்ட் தமிழ் அதிகாரி பெயர் சித்தார்த்தன்கஸ்டம்ஸ் அதிகாரி பெருந்தொகையான அளவு டேக்ஸ் போட்டுவிட்டார். கட்ட காசில்லாத தால்,ஏர்போட்டில் திரும்ப காசுக்கட்டி எடுப்பதாக கூறி விட்டு வந்துவிட்டார். இந்த சம்பவம் G.பார்த்தசாரதி அவர்கள் செல்வாக்காகஇருந்த நேரம் நடந்த சம்பவம். நான் போய் G.பார்த்தசாரதி அவர்களை பார்த்தேன். அவர் உடனடியாக டெல்லி ஏர்போர்ட் சீப்கஸ்டம்ஸ் அதிகாரி சீக்கியர் அவருக்கு தொலைபேசி மூலம் விபரம் கூறி என்னை அனுப்பி வைத்தார். அந்த சீக்கிய அதிகாரி என்னை வரவேற்று நன்றாகப் பேசினார் பின்பு டேக்ஸ் அடித்த விபரங்களை பார்த்தஅதிகாரி சும்மாவே கிளியர் பண்ணி இருக்கலாம் என்றார். பின்பு சீக்கியஅதிகாரி மற்ற கஸ்டம்ஸ் அதிகாரி சித்தார்த்தனை கூப்பிட்டு விபரம் கூறி டேக்ஸ் போட வேண்டாம் என்று கூறினார். ஆனால் அவர் பிடிவாதமாக 2000 ரூபாய் டாக்ஸ் அடித்துதான் டெனிம்ஜீன்ஸ்களை கிளியர் பண்ணினார். அந்தநேரம் டெல்லி ஏர்போர்ட் கஸ்டம்ஸ் அதிகாரியாக நடிகர்மேஜர் சுந்தர்ராஜனின் தம்பியும் இருப்பதைப் அவர் அச்சு அசலாகநடிகர் சுந்தர்ராஜன் போலவே இருப்பார்.
நான் டெல்லியில் இருந்து பல முறை எமது இயக்க தோழர்கள் பயிற்சிக்காக ராணுவ சப்பாத்துக்கள் புதியது குறைந்த விலையில் கிட்டத்தட்ட இரண்டாயிரம் சோடிகள் வாங்கி ரயிலில் போட்டு சென்னைக்கு அனுப்பி இருக்கிறேன். ராணுவசீருடைகள் என்பனவும் வாங்கி அனுப்பி இருக்கிறேன். சென்னையிலிருந்து தொலைத்தொடர்பு , வானொலி கருவிகளுக்கு பார்ட்ஸ் வாங்க சென்னையிலிருந்து உடுவிலை சேர்ந்த சுரேன், வசந்தி என்பவரும் வந்திருந்தார்கள்.இடங்களுக்குக் கூட்டிக் கொண்டு போய் வாங்கி கொடுத்தேன். சுரேன் படிக்கும் காலத்தில் இருந்து எனக்கு தெரியும் அவரின் அண்ணா எனது வகுப்புத் தோழன்.
84 ஆம் ஆண்டிலிருந்து லண்டனில் இருந்து டெல்லி வழியாக சென்னை வந்து போகும் முக்கியமான நபர் லண்டன் கிருஷ்ணன் என்பவரை பற்றி அடுத்த பகுதியில் எழுதுகிறேன்.
தொடரும்......
No comments:
Post a Comment