பகுதி 26
கவிஞர் ஜெயபாலன் |
1984 ஆம் ஆண்டு சென்னையிலிருந்து எமது தோழர் கவிஞர் ஜெயபாலன் டெல்லிக்கு அனுப்பி வைக்கப் பட்டார் மிகவும் திறமைசாலி கெட்டிக்காரர். சிறந்த கவிஞர் என்பதால் அவரை கட்டுப்படுத்தி வைப்பதும் கடினம். உமாமகேஸ்வரன் அவருக்கு முழு சுதந்திரம் கொடுத்து அவரை அனுப்பி இருப்பதாக ஜெயபாலன் நினைத்தாலும், மறைமுகமாக அவரை கட்டுப்படுத்தி வைக்கும்படி முக்கியமானவர்களை சந்திக்க விடவேண்டாம் எனவும் எனக்கு தொலைபேசி வாயிலாக அறிவித்தார்.
நண்பர் ஜெயபாலன் கோபம் சட்டு சட்டென்று வரும். அவருக்கு செலவுக்கு காசு கொடுப்பதில்தான் இருவருக்கும் பிரச்சனை. ஆனால் ஜெயபாலன் காலையில் வெளியே புறப்பட்டால் பல முக்கிய நபர்கள் விடுதலை இயக்கங்களை சந்தித்துவிட்டு தான் வருவார்.இவர் எமக்கு அறிமுகப்படுத்திய முக்கியமானவர்கள் டெல்லி இந்துஸ்தான் டைம்ஸ் ஆசிரியர் திரு . பட்னீஸ், அவரின் மனைவி ஊர்மிளா பட்னிஸ். ஊர்மிலா பட்டினியூஸ் டெல்லி ஜவகர்லால் நேரு யூனிவர் சிட்டியில் சவுத் ஏசியா பற்றிய படிப்புக்கும் பொறுப்பாக இருந்தார் என நினைக்கிறேன். அதோடு இந்திய வெளியுறவு கொள்கை வகுப்பாளர்களும் இருந்த குழுவிலும் இருந்தார். அன்று இந்திய அரசின் அரசியல் சட்ட ஆலோசகர், அரசியல் சட்ட வரைவாளர் ஒரு தமிழர் அவரின் பெயரை மறந்துவிட்டேன் தாமோதரம் பிள்ளை என நினைக்கிறேன். இலங்கை இந்திய ஒப்பந்தத்தை வரைந்தவர். ஜெயபாலன்84 ஆம் ஆண் டேஇவரிடம் நட்பை வளர்த்துக்கொண்டார். ஆனால் உமா மகேஸ்வரன் தொடர்ந்து அவரை சந்திப்பதை தவிர்க்கும் படி கேட்டுக்கொண்டார். டெல்லியில் ஸ்டீபன் கல்லூரியில் உலக நாட்டு விடுதலை இயக்கங்களின் மாநாடு நடைபெற்றது. ஜெயபாலன் எப்படியோ இதை அறிந்து அதில் கலந்து கொண்டு நல்ல தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டார். அதில் பல தென்னமெரிக்க விடுதலை இயக்கங்களின் சங்கமம்.என்னையும் ஒரு நாள் கூட்டிக்கொண்டு போய் அவர்களிடம் அறிமுகப்படுத்தி பங்கு பெற செய்த போதுதான் ஜெயபாலனின் கவிதைகள் ஸ்பானிஷ் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது தெரியவந்தது. அவரின் ஜெயபாலனின் தொடர்புகள் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் நல்ல முறையில் பயன்படுத்தவில்லை என்பது உண்மை. பின்புதான் நான் கேள்விப்பட்டேன்.சென்னையிலிருந்து ஜெயபால னைஅப்புறப்படுத்துவதற்காக தான் ஜெய பாலன்டெல்லிக்கு அனுப்பப்பட்டதாகவும், உமா மகேஸ்வரனைசுற்றியிருந்த ஒரு அறிவு ஜீவிகள் என்ற அறிவற்ற கூட்டம் ஜெயபாலன் வளர்வதை விரும்பவில்லை என அறிந்தேன். ஜெயபாலன் இடமும்ஒரு பிடிவாதம் இருந்தது. சில வேளைகளில் தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று சாதிப்பார். நான் டெல்லி கபூர் வைத்தியசாலையில் தொண்டையில் ஆபரேஷன் செய்வதற்காக சேர்ந்து இருந்த போது மூன்று நாளும் என்னை கூட இருந்து பார்த்துக் கொண்டவர் ஜெயபாலன் தான். அடிக்கடி சென்னையில் இருந்து எமது தலைவர் ஜெயபாலன் பற்றிஎச்சரிக்கை செய்தபடி இருப்பார். அது என் மனதில் படிந்துஜெயபாலனின் செய்கைகளே கட்டுப்படுத்துவதிலேயே இருந்தேன். நல்லகாலம் ஜெயபாலனை மொக்கு மூர்த்தியிடம் அனுப்பவில்லை. ஜெயபாலன் இருக்கும் போதும் இன்னொரு தோழர் ஐயம் எனக்கு உதவியாக அனுப்பி வைத்தார் அவர் பெயர் சங்கர். அமைதியான
அருமையான
தோழர். நான் எம்பிக்களை சந்திக்கப் போகும் போது கூட வருவார்.இந்த வருடம்தான் சென்னை விமான நிலையம் மீனம்பாக்கம் குண்டுவெடிப்பு நடந்தது அது பற்றிய முன்பு பதிவு போட்டு இருந்தேன்இப்பவும் கீழே தருகிறேன்.#மீனம்பாக்கம்_விமானநிலைய_குண்டுவெடிப்பும்_எனக்குத் தெரிந்தபின்னனியும்
மண்1984 ஆம் ஆண்டு சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய குண்டுவெடிப்பு நடந்து இரண்டாம் நாள் டில்லியில் நான் தங்கியிருந்த இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் L. கணேசன்வீட்டுக்கு மாலை 5 மணி போல் சென்னையிலிருந்து இரண்டு இலங்கை தமிழர்கள் இந்த வந்தனர் அவர்கள் என்னிடம் முன்னாள் காலஞ்சென்ற யாழ்ப்பாணம் எம் பி யோகேஸ்வரன் அவர்கள் கொடுத்த ஒரு கடிதத்தை என்னிடம் கொடுத்தார்கள். அதில் யோகேஸ்வரன் எம்பி அவர்கள் இருவரையும் வை கோபால்சாமி எம்பி இடம் அறிமுகப்படுத்தி அவர்கள் சென்னை மருத்துவக் கல்லூரியில் படிக்கஇடம்எடுத்துக் கொடுக்க முடியுமா ?எனஎழுதியிருந்தார். அந்த சமயத்தில் டெல்லியில் வைகோ, நானிருந்த வீட்டு எம் பி எல் கணேசன் அவர்களோ டெல்லியில் இல்லை.
அந்த சமயத்தில் வெளியிலிருந்து வந்த டெல்லிதமிழ் நண்பர்கள் உங்களை கீழே தமிழ்நாடு போலீசார் விசாரித்து கொண்டிருக்கிறார்கள், எனக் கூறினார்கள். அப்போது அந்த இரண்டு இலங்கை தமிழ் இளைஞர்களும் போலீசார் தங்களை தேடித்தான் வந்திருக்கிறார்கள் என பதறினார்கள். அப்போதுதான் அவர்கள்உண்மையை கூறினார்கள் ஒருத்தர் பெயர் தபேந்திரன், மற்றவர் பெயர் சரவணபவன் இவர் சென்னை விமான பயிற்சி நிலையத்தில் விமான பயிற்சி பெறுவதாகவும் குண்டு வெடித்த சம்பவத்தில் தாங்கள்தான் இரண்டு சூட்கேஸ்களை விமான நிலையத்தில் கொண்டுபோய் வைத்ததாகவும் கூறினார்கள் தங்களை தமிழ்நாடு உளவுத்துறை தொடர்ந்து வருவதாகும் அவர்கள்தான் யோகேஸ்வரன் எம்பி இடம் விபரங்கள் கூறிஇன்று டெல்லி வந்துள்ளதாகவும் கூறினார்கள். நான் உடன் அவர்களை வேறு வழியாக வெளியில் அனுப்பி விட்டேன்.
பின்பு திமுக பாராளுமன்ற குழு தலைவர் சிடி தண்டபாணி அவர்களிடம் தொலைபேசியில் நிலைமைகளை கூறினேன். அவர் வீட்டுக்கு வெளியில் போய் போலீசாருடன் பேச வேண்டாம் கைது செய்து விடுவார்கள் அதனால் எம்பி வீட்டுக்குள் இருந்து அவர்களிடம் பேசுங்கள் எம்பி வீட்டுக்குள் வந்தால் உங்களை கைது செய்ய முடியாது என கூறினார். நான் இந்த போலீஸ் அதிகாரிகளை வீட்டுக்குள் அழைத்து விசாரித்தேன். வந்த போலீஸ் அதிகாரி தமிழ்நாடு கியூ பிரான்ச் எஸ்பி திரு பட் அவர்களும் அதிகாரிகள் தாங்கள் சென்னையிலிருந்து அவர்களைதொடர்ந்து வருவதாகவும் யோகேஸ்வரன் தான் அவர்கள்என்னிடம் போவதாக கூறியதாகவும் கூறினார்கள் நான் நான் உடன் இவர்களை எனக்குத் தெரியாது எனவும் யோகேஸ்வரன் மற்றும்தான் என்னிடம் அனுப்பியதாகவும் கூறி யோகேஸ்வரன் அனுப்பிய கடிதத்தை காட்டினேன். அவர்கள் திரும்ப வந்தால் தங்களுக்கு அறிவிக்கும்படி தொலைபேசி இலக்கத்தையும் அல்லது லோக்கல் போலீஸ் இடம்ஒப்படைக்கும்படி கொஞ்சம் மிரட்டலாக கூறி விட்டுச் சென்றார்கள்.
நான் உடனடியாக சென்னையிலிருக்கும் நமது தலைவர் உமாமகேஸ்வரன் இடம் இது பற்றி கூறினேன். அவரும் இது சம்பந்தமாக முன்னாள் இலங்கை சுங்க இலாகா உயரதிகாரி கரவெட்டி யைச் சேர்ந்த விக்னேஷ் ராஜா வையும் கைது செய்யப்பட்டுள்ளார் என கூறினார் விக்னேஷ் ராஜா உமா மகேஸ்வரனுக்கு ம், எனக்கும் மிக நெருங்கிய நண்பர். அடுத்தடுத்த நாட்களில் இது சம்பந்தமாக சில விபரங்கள் எனக்கு கிடைத்தன. விக்னேஷ் ராஜா சுங்க அதிகாரி என்ற முறையில் சென்னையில் இருந்த சுங்க அதிகாரிகளோடு நல்ல தொடர்பில் இருந்துள்ளார். இதைப் பயன்படுத்தி பனாகொடைமகேஸ்வரனும் விக்னேஸ்வரனுடன் போய் சென்னை சுங்க அதிகாரிகள் இடம் நல்ல பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.
இரண்டு சுங்க அதிகாரிகளிடம் த லா 15 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளார். சில கடத்தல் சாமான்கள் இருப்பதாக காரணம்கூறியுள்ளார். ரெண்டு சூட்கேஸ் களையும் செக் பண்ணாமல் இருக்க. இரண்டு சூட்கேஸ்களை கொண்டு போனவர்கள் தவேந்திரன் விமானம் ஓட்டும் பயிற்சி பெறும் சரவணபவன். போர்டிங் பாஸ் கிழித்துவிட்டு சூட்கேஸ்கள் சுங்க பகுதிக்கு போனபின்பு திரும்ப வெளியில் வந்து விட்டார்கள். அந்த காலத்தில் மீனம்பாக்கம் ஏர்போர்ட் மிகவும் சிறியது வெளியிலிருந்து பார்த்தால் சுங்க பகுதி வரை தெரியும். மகேஸ்வரனின் ஐடியா கொழும்பு போகும் லங்கா விமானம் ஒரு மணி நேரம் கொழும்பில் இருந்து விட்டு பின்பு லண்டன் செல்லும்,கொழும்பில் நிற்கும் நேரத்தில் வெடிக்கக்கூடிய மாதிரி சூட்கேஸ்களில் குண்டை செட் பண்ணி அனுப்பியிருந்தார். ஆனால் சுங்க அதிகாரிகளின் கெட்ட நோக்கம் 30000 ரூபா லஞ்சம்தரக்கூடிய அளவுக்கு இருந்தாள் சூட்கேஸ்களில் இலட்சக்கணக்கான பெறுமதியான தங்கம் இருக்கும் என நினைத்து அந்த இரண்டு சூட்கேஸ் எல்லாம் தனியாக விமானத்தில் ஏற்றாமல் எடுத்து வைத்து விட்டார்கள். இதைகவனித்துக்கொண்டிருந்த மகேஸ்வரனும் நண்பர்களும் பொது தொலைபேசி வழியாக சுங்க அதிகாரிகளுக்கு குண்டு இருக்கும் உண்மையை கூறியுள்ளார்கள். அவர்கள் நம்பவில்லை. பின்பு ஏர்போர்ட் மேனேஜருக்கும் போலீசாருக்கும் தகவல் கூறியுள்ளார்கள். ஆனால் காலம் கடந்து விட்டது குண்டு வெடித்து மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து சென்னை வழியாக இலங்கை போகும் சிங்களத் தொழிலாளர்கள் முப்பது பேர் கிட்ட இறந்துவிட்டார்கள். சுங்க அதிகாரிகளும் செத்துவிட்டார்கள் சுங்க அதிகாரிகளின் பைகளில் பதினையாயிரம் பணம் இருந்திருக்கிறது இது செய்தியாகும் பத்திரிகைகளில் வந்தது.
இந்த சம்பவங்கள் நடந்து சில மாதங்களில் எனக்கு மாதம் திகதி நினைவில் இல்லை விக்னேஷ்வர் ராஜாவின் அப்பா என நினைக்கிறேன் லண்டனில் காலமானார் இவர்தான் மூத்தவர் என்றபடியால் இறுதி கடமைகள் செய்ய ஜாமீனில் லண்டன் செல்ல விரும்பினார் ஜாமீன் கிடைக்கவில்லை அவர் உமாமகேஸ்வரனுக்கு மேற்படி ஜாமீன் விஷயமாக தகவல் அனுப்பினார் உமா மகேஸ்வரனும் தமிழக சட்ட அமைச்சர் பொன்னையன் உடன் பேச அவர் தான் ஏற்பாடு செய்ய உதவி செய்வதாகவும் ஆனால் மத்திய அரசு தடுக்கக் கூடாது எனவும் கூறி அதற்கும் நாங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் கூறினார். உமா மகேஸ்வரனும் டெல்லி வந்து நானும் அவரும் திரு ஜி பார்த்தசாரதி அவர்களை போய்ப் பார்ப்போம் அவர் கடுமையாக திட்டினார் பின்பு நாங்கள் விக்னேஸ்வரனும் இந்த குண்டு வெடிப்புக்கும் எந்த நேரடி சம்பந்தமும் இல்லை என கூறி விபரங்களை கூறினோம் விக்னேஸ்வரனும் சென்னை விமான நிலைய கஸ்டம்ஸ் அதிகாரிகளுக்கும் இருந்த நட்பை பனாகொடை மகேஸ்வரன் விக்னேஸ்வரன் ராஜாவுக்கு தெரியாமல் பயன்படுத்திக்கொண்ட விபரத்தையும்கூறினோம் பின்பு பார்த்தசாரதி தான்மத்திய அரசு அதிகாரிகளுடன் பேசி ஏற்பாடு செய்வதாகவும் ஒருமாத ஜாமீன் முடியாஇந்தியா திரும்ப வேண்டும் எனவும் கூறினார்.
பின்பு ஒரு மாத ஜாமீனில் வெளிவந்து, விக்னேஷ் ராஜா மதுரையில் தங்கியிருந்த தனது மனைவியுடன் லண்டன் போய்விட்டார். அந்த நேரம் இந்தியாவில் இந்திரா காந்தியின்மறைவும் அரசியல் சூழ்நிலைகள் மாறி இருந்தாலும் விக்னேஷ் ராஜா முடிந்து இந்தியா வரவில்லை. அவருக்கு எதிராக நீதிமன்றம் பிடியானை ஓபன் வாரன்ட் பிறப்பித்து பத்திரிகையிலும் வந்து லண்டன் இந்திய எம்பசி மூலம் இந்தியா கொண்டுவர முயற்சி செய்தார்கள்.விக்னேஷ் ஒரு ராஜா தனது முயற்சி மூலம் லண்டன் நீதிமன்றம் மூலம் தான் கைது செய்து இந்தியா கொண்டு வர படுவதை தடுத்துக் கொண்டார். விக்னேஸ்வரன் ராஜா ஜாமீன் அல்லது தப்பியதால் சென்னையில் பனாகோடமகேஸ்வரன் உட்பட மற்றவர்களுக்கு ஜாமீன் கிடைக்கவில்லை இது பனாகொடை மகேஸ்வரன் விக்னேஸ்வரன் மேல் கடுங்கோபத்தில் இருந்தார். விக்னேஸ்வரனை இந்தியா கொண்டுவர கடைசி முயற்சியாக பனாகொடை மகேஸ்வரன் தனது நண்பர்கள் மூலம் சேலத்தில் படித்துக் கொண்டிருந்த விக்னேஸ்வரன் இரு மகன்களையும் கடத்துவதற்கு முயற்சிகள் மேற்கொண்டார்.
இதை அறிந்த இரு மகன்களும் தலைமறைவாக இருந்தார்கள். விக்னேஸ்வரன் அவர்கள் உமா மகேஸ்வரனை தொடர்புகொண்டு விவரத்தை கூற உமா என்னிடம் அவர்களை லண்டன் அனுப்பும் பொறுப்பை ஒப்படைத்தார். சேலம் சட்டக்கல்லூரி மாணவர்களாய் இருந்த இருவரும் பின்பு என்னை தொடர்புகொண்டு டெல்லி வந்தார்கள் ஒரு வாரத்தில் நான் அவர்களை லண்டன் அனுப்பு ஒழுங்கு செய்து அனுப்பி வைத்தேன்.
(இதில் ஒரு சுவாரசியமான கதையும் உண்டு. விக்னேஸ்வரனின் மூத்தமகன் கிட்டத்தட்ட இருபது வயசு இருக்கும் அவர்தான் காதலித்த மதுரை பெண்ணையும் கூட அழைத்து வந்துவிட்டார் அந்தப் பெண்ணின் வீட்டார் ஒரு பக்கம் அவர்களை தேடுவதாக தகவல் இவர்களுடன் அந்த பெண்ணையும் லண்டன் அனுப்பி வைத்தேன்)
இங்கு ஜாமீன் கிடைக்காமல் பனா கொடை மகேஸ்வரனும் நண்பர்களும் கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் சிறையில் இருந்து இருந்திருக்கிறார்கள்.. பின்பு அவருக்கு ஜாமீன் கிடைத்து பலர் தலைமறைவாக சரவணபவான் சென்னை மருத்துவக்கல்லூரியில் மருத்துவராக படித்தார். 90 ஆம் ஆண்டுக்குப் பின்பு சரவணபவன் என்னோடு நல்ல தொடர்பில் இருந்தார் அவர் ஒரு சினிமாவில் கதாநாயகனாக நடித்தார். ஒரு புத்தகம் மாத இதழாக வெளியிட்டார் பெயர் மறந்து விட்டேன். தன் மேலுள்ள வழக்கில் ஜாமின் ரத்து செய்யப்படாமல் இருக்க சென்னை மருத்துவக்கல்லூரி சரித்திரத்தில் மிக நீண்ட காலம் படித்து மருத்துவராகி இருப்பவர் இவர் தான் என நினைக்கிறேன் இவரின் மருத்துபடிப்புமுழுவிபரம் பத்திரிகையில் பார்த்து தான் தெரிந்து கொண்டேன் இதற்கிடையில் லண்டனில் இருந்த விக்னேஷ் ராஜா தனக்கு மேலுள்ள மற்றவர்களுக்கும் உள்ள வழக்கை நடத்த எனக்கு பவர் ஆஃப் அட்டர்னி கொடுத்த கடிதத்தின் நகலும் கீழே தந்துள்ளேன். அதை நீதிமன்றம் ஏற்கவில்லை
இதுதான் சென்னை விமான நிலைய குண்டுவெடிப்பில் எனக்குத்தெரிந்த ஒரு பகுதி.
தொடரும்......
No comments:
Post a Comment