பகுதி 36
சந்ததியார் |
மோகனரங்கம் ADMK MP |
எனது நண்பர் மாதவன் அண்ணாவிடம் விசாரித்தேன். அப்போதுதான் கந்தசாமி இலங்கை பொலிஸ் அதிகாரி என்றும் இலங்கை அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவருமான தொண்டமான் அவர்களின் மெய்ப்பாதுகாவலர் என கூறினார். செயலதிபர் உமாஇரண்டு வாரங்களின் பின்பு அவர்களை சென்னைக்கு அனுப்பச் சொன்னார். அதன் பின்பு வந்த செய்திகள் எப்ப என்று நேரகாலம் மறந்து விட்டது. எப்போ என்று அந்த நாளை தெரிந்த தோழர்கள் பதிவு விட்டால் நல்லது. சென்னையில் பெசன்ட் நகரில் உள்ள பாலசிங்கத்தின் வீட்டில் வெடிகுண்டு வெடித்து பாலசிங்கம் இருந்த வீடு கொஞ்சம் சேதம் அடைந்தது இது சம்பந்தமாக தமிழ்நாடு காவல்துறை கந்தசாமி உட்பட சிலரை கண்டுபிடித்து கைது செய்து சிறை வைத்த தகவல் வந்தது.இந்த வழக்கு இப்பவும் நடக்கிறது. பிற்காலத்தில் இது பற்றி நான்அறிந்த செய்தி ,இலங்கை உள்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சர்லலித் அத்துலத் முதலி உமாமகேஸ்வரன் மூலம் தமிழ்நாட்டில் உள்ளபாலசிங்கம் முதல் முக்கிய விடுதலைப் புலித் தலைவர்களை கொல்ல போலீஸ் அதிகாரி கந்தசாமியை அனுப்பிஉதவி செய்ய கூறியதாகஅறியக்கூடியதாக இருந்தது. இது சம்பந்தமாக 86 ஆம் ஆண்டு பின் தளமாக மாநாட்டுக்கு முன்பு செயலதிபர் உமா மகேஸ்வரனுக்கு மேல் வைக்கப்பட்ட குற்றச்சாட்டாகும்.
85 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் சந்ததியாரும் ஒருவரை அனுப்பி அவருக்குத் தேவையான உதவிகள் செய்யும் படியும், அவர் தமிழ் மக்களுக்கு மிகவும் முக்கியமானவர் எனக் கூறி எனது சுகம் மற்றும் எனது வேலைகளை பற்றி கேட்டு,தூர இருந்து வேலை செய்தாலும் இயக்கத்துக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த கூடிய வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என அறிவுரை கூறினார். இதுதான் அவருடன் நான் கடைசியாக பேசியது. அவர் அனுப்பி யவர் இலங்கையின் முக்கிய அட்வகேட் ருத்ரமூர்த்தி அவர்கள்.கொழும்பில் சிறைப்பட்ட தமிழ் இளைஞர்களுக்காகவாதாடியவர் என கேள்விப்பட்டேன். எல் கனேசன் எம்பி வீட்டில் இருந்த இந்திய நண்பர்களுக்கு அவரை நன்றாக பிடித்து விட்டது. காலையில் எழும்பி குளித்து விபூதி பூசி சாமி கும்பிடுவார். சைவ சாப்பாடுதான் சாப்பிடுவர் அதுவும் தனது காசில். காலையில் அவர் டெல்லியில் புகழ் பெற்ற மனித உரிமை அமைப்புகள் வக்கீல்கள் சங்கம் தனிப்பட்ட புத்திஜீவிகள் எல்லோரையும் தொடர்பு கொண்டு அவரை சந்திக்கச் சென்றார். நான்தான் அவரை ஸ்கூட்டரில் அழைத்துக்கொண்டு அவர் குறிப்பிடும் இடங்களுக்குகூட்டிக் கொண்டு போவேன். எல்லோரும் அவரை மிகவும் மரியாதை கொடுத்து பேசுவார்கள். இலங்கைத் தமிழர்பிரச்சனை, இலங்கையில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் பற்றியெல்லாம் விளக்கமாக எடுத்துக் கூறுவர். சில நாட்களில் நான் அவருடன் போக முடியாவிட்டால் எனது இந்திய நண்பர் சம்பத் என்பவர் அழைத்துக்கொண்டு போவார். ஒரு மூன்று வாரத்தின் பின்பு ருத்ரமூர்த்தி அவர்கள் ஓர் உள்ளரங்க கூட்டத்தைக் கூட்டினார். அதில் கிட்டத்தட்ட 300 பேர் வரை வந்தார்கள். வந்தவர்கள் அறிவுஜீவிகள் சீனியர் பத்திரிகையாளர்கள் புகழ்பெற்ற வக்கீல்கள் எல்லாம் வந்தார்கள். அவர் தான் தயாரித்த இலங்கை இனப்பிரச்சினை சம்பந்தமான சிறு புத்தகம் ஒன்றையும் எல்லோருக்கும் கொடுத்தார். அதோடு இலங்கைத் தமிழர்பிரச்சினை பற்றி விரிவாக எடுத்துரைத்தார் அடுத்த நாள் சென்னைக்கு புறப்பட்டு விட்டார். இப்போது அவரைப் பற்றிய தகவல் அறிய முடியவில்லை. மிக
அருமையான
மனிதர்.சந்ததியார், டேவிட் ஐயா, டாக்டர் ராஜசுந்தரம் |
எமது இயக்கத்துக்கு பல உதவிகள் புரிந்த புத்தளம் டாக்டர் இலியாஸ் சென்னையில் இருந்து டெல்லி வந்தார். அவருக்கு வேண்டிய உதவிகளை செய்யும்படி சென்னை அலுவலகத்தில் இருந்து கூறினார்கள்.தேவையான வைத்திய கருவிகளை வாங்கி கொடுத்தேன். அவர்வாங்கிய முக்கிய கருவிகள் முஸ்லிம் இளைஞர்களுக்கு சுன்னத் செய்வதற்கான கருவிகள். அவர் இரண்டு முறை டெல்லி வந்து போனார். ஒவ்வொரு முறையும் ஆகக்கூடியது இரண்டு மூன்று நாள் தான் இருப்பார்.
இந்திய அரசுபேச்சுவார்த்தைக்கு வாசுதேவா டெல்லி வந்தபோது என்னிடம் தனிப்பட்ட முறையில் இயக்கத்தில் சில பிரச்சினைகள் நடந்து கொண்டிருப்பதாக கூறினார். சந்ததியார் எமது கழகத்தை உடைக்க முயற்சி செய்வதாக கூறினார்.அங்கு ஒரே குழப்பமாக இருப்பதாகக் கூறினார். பெருசு இடம் (உமா) இதைப் பற்றி கேட்க வேண்டாம் என கூறினார். உண்மையில் நான் அதைப் பெரிது படுத்தவில்லை.டெல்லி வேலைகள் உற்சாகமாகவும் பரபரப்பாகும் இருந்தபடியால் நான் அதில் தான் கவனம் செலுத்தினேன் என்பது உண்மை. இதுவும் பாரதூரமானது இருந்தால் செயலதிபர் உமா என்னிடம் கூறுவார் தானே என நினைத்தேன்.
இவர்கள் பேச்சுவார்த்தைக்கு டெல்லிக்கு வரும்முன்பே சந்ததியாரை பிடித்து கொலை செய்த விடயம். டேவிட் ஐயா காவல்துறையில் புகார் செய்து அந்த விடயம் பரபரப்பாகி பத்திரிகையில் வந்த பிறகுதான் டில்லியில் எனக்கு தெரிந்தது. பத்திரிகைகளில் நமது இயக்கம் சார்பாக சந்ததியாரைபற்றி பல அவதூறான செய்திகளை செயலதிபர் உமாமகேஸ்வரன் கூறியிருந்தார்.ஒரு பெண்ணுடன் தகாத உறவு வைத்து ஓடிவிட்டார் என்ற பல கதைகள். கொலைசெய்யப்பட்டார் என்றும் செய்திகளும் வந்தன. இந்திய உளவு அதிகாரிகள் ரா, IBஅதிகாரிகள் இந்த விடயம் பற்றி தங்களுக்கு விபரம் வேண்டும் என்றார்கள்.
நான் தொலைபேசி மூலம் செயலதிபர் உமாமகேஸ்வரன் இடம் இதைப் பற்றிக் கூறி விபரம் கேட்டபோது உடனடியாக என்னை சென்னை வர சொன்னார். 85 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் என நினைக்கிறேன் ரயிலில் சென்னைக்கு சென்றேன். எமது நிர்வாகப் பொறுப்பில் இருந்த மாதவன் அண்ணா வீட்டில் தங்கிக் கொண்டு, எமது செயலதிபர் உமாவை சந்தித்தேன்.
செயலதிபர் உமாமகேஸ்வரன் டெல்லியில் அதிகாரிகள் பத்திரிகையாளர்களிடம் சந்ததியார் பற்றி கூறும்போது, சந்ததியார் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் பயிற்சி பெறும்தோழர்களிடம் இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களை கூறி, இந்தியாவுக்கு எதிராக எமது இயக்கத்தை திசை திருப்ப பார்ப்பதாகவும், வங்கம் தந்த பாடம்மொழிப்பெயர்ப்பு புத்தகத்தை தமிழில் அச்சடித்துஇயக்கத் தோழர்களுக்கு .இலங்கையிலுள்ள தோழர்களுக்கும் பொதுமக்களுக்கும்அனுப்புவதாகவும்,இந்தியாவுக்கு எதிரான தீவிரப் பிரச்சாரம் செய்வதாகவும் அதோடு அவருக்கு போதைப் பொருள் விற்பனை செய்யும் இலங்கையைச் சேர்ந்த ராதா என்ற பெண்ணுடன் தொடர்பு உள்ளது என்றும் கூறச் சொன்னார்.பத்திரிகையாளர்களிடம் கூறும் போது மட்டும் ராதா என்ற பெண்ணுடன் தலைமறைவாகி விட்டதாக கூறச் சொன்னார். இந்திய உளவு அதிகாரி களிடம் கூறும் போது மட்டும் சந்ததியார் இந்திய எதிர்ப்பில் இந்தியாவுக்கு எதிராகவேலை செய்வதால் சந்ததியாருக்கு மரண தண்டனைவழங்கப்பட்டது என்று கூறச் சொன்னார்.
உடனடியாக அன்றே என்னை டெல்லிக்கு கிளம்பச் சொன்னார். நானும் அன்றே கிளம்ப ஆயத்தம் ஆனேன்.பின்பு நான் எனக்கு நெருக்கமான மாதவன் மற்றும் இரண்டு தோழர்களை சந்தித்துப் பேசியபோது அவர்கள் சுற்றிப் பார்த்து விட்டு ரகசியமாக இயக்கம்முன்பு போல் இல்லை. முகாம்களில் எமது தோழர்களை யேசந்தேகப்பட்டு கொலைகள் செய்வதாகவும் , இதற்காகமூர்த்தி என்பவர் தலைமையில்ஒரு குரூப் செயல்படுவதாகவும் அதற்கு கந்தசாமி தலைமை தாங்குவதாக கூறி. கவலைப்பட்டார்கள். யாரும் யாரையும் நம்பி கதைக்க வேண்டாம் எல்லோரையும் எல்லோரும் சந்தேகக் கண்கொண்டு பார்க்கிறார்கள்.தாங்களும் விதியே என்று மனது உடைந்து வேலை செய்கிறோம் ஒரு சந்தோசமும் இல்லை என்றார்கள். நானும் பலவித யோசனைகளுடன் டெல்லி புறப்பட்டு விட்டேன். நான் சென்னை வந்த நேரம் சென்னையில் பெரும் புயலடித்து இருந்தது ஆந்திராவில் ரயில் தண்டவாளங்கள் அடித்துச் செல்லப்பட்டன. பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.இரவு 8 மணிக்கு டெல்லி போகும் GT எக்ஸ்பிரஸ் என்ற ரயில் சுற்றுப் பாதையில்டெல்லி போகும் என்று கூறிவிட்டார்கள். 64 பேர் பயணம் செய்யும் ஒரு பெட்டியில் இரண்டு பேர்தான் இருந்தோம். அதே மாதிரிதான் மற்ற பெட்டிகளில் பயணிகள்இருந்தார்கள்.40மணி நேரத்தில் டெல்லி போகும் வழமையான ரயில்,ரயில் தாமதமாக தாமதம் மட்டும் 72 மணி நேரம் கிட்டத்தட்ட அஞ்சு நாள் பயணம். வாழ்க்கையே வெறுத்துவிட்டது. மாலை 6 மணி போல் எனது இருப்பிடத்துக்கு சென்றேன். பக்கத்து வீட்டிலிருந்தவர்கள் இரண்டு நாளாக தொலைபேசி விடாமல்அடித்துக் கொண்டிருந்தது என்று கூற நான் விபரம் கூறினேன். பின்பு தொலைபேசி அடிக்க எடுத்துப் பேசினேன். சென்னை அலுவலகத்தில் இருந்து தொலைபேசி அவர்களிடமும் இப்பதான் டெல்லி வந்தேன் தாமதத்திற்கான காரணத்தையும் கூறினேன்.அவர்கள் செயலதிபர் உமாமகேஸ்வரன் 6 மணி விமானத்தில் டெல்லி வருவதாகவும் அவரை போய் கூட்டி வரும் படி கூறினார்கள்.நான் உடனடியாக கைகளை கழுவி உடுப்புகளை மாற்றி விட்டு முதலில் போய் இருவருக்கும் சாப்பாடு வாங்கி வைத்துவிட்டு, எனது ஸ்கூட்டரில் ஏர்போர்ட் போய் இரவு 10 மணி போல் செயல் அதிபரை கூட்டி வந்தேன். அவரும் என்னிடம் எனது பயண விவரங்களை கேட்டு விட்டு,நீர் ரயில் டிக்கெட்டை கேன்சல் பண்ணிவிட்டு வந்து சொல்லி இருந்தால் ஃப்லைட் டிக்கெட் போட்டு தந்திருப்பேன் என்றார்.
அடுத்த நாள் காலை இந்திய உளவுத் துறை அதிகாரியை பார்த்து பேச, ரா அதிகாரிசந்ததியாரை பற்றி செயலதிபர் உமாமகேஸ்வரன் கூறியகாரணங்களை எல்லாம் கேட்டுவிட்டு, நீங்கள் உங்கள் இயக்க பிரச்சினைகளைஉங்கள் நாட்டில் போய் பார்த்திருக்க வேண்டும். உங்கள் இயக்கத்தை பற்றி வரும் ரிப்போர்ட்டுகள் நன்றாக இல்லை முகத்தில் அடித்தாற்போல் கூறிவிட்டார்.பின்பு ஐபி அதிகாரிகள் சந்தித்து போது அவர்கள் மிகக் கடுமையாக கண்டித்தார்கள்.தமிழ்நாட்டில் கொலை செய்ததை மரண தண்டனை கொடுத்ததாக பெருமையாக கூறுகிறீர்கள்.இந்திய சட்ட ஒழுங்கிற்கு இது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும்.சந்ததியார் இந்தியாவுக்கு எதிராக நின்றால் அவரை இயக்கத்தை விட்டு விலகி இருக்கலாம்.இப்படி எத்தனை பேரை கொலை செய்யப் போகிறீர்கள். தமிழ்நாடு பொலிஸார்நெருக்கமாக கண்காணித்துக் கொண்டிருக்கிறார்கள்.அவர்கள் உங்களுக்கு நெருக்கடி கொடுத்தால் இந்த கொலை போன்ற விஷயங்களுக்கு இந்திய அரசு உங்களுக்கு உதவிக்கு வராது கடுமையாக கூறிவிட்டார்கள்.
அவர்கள் போன பின்பு கொஞ்சம் யோசித்த எமது செயலதிபர் உமா மகேஸ்வரன், எல்லோரையும்கூட்டிக்கொண்டு இலங்கைக்குப் போக வேண்டியதுதான்.இவர்கள் யார் எங்கள் இயக்க விடயங்களில் தலையிட இவர்களுக்கும்ஒரு பாடம் கற்பிக்க வேண்டும் என்றார்.
அடுத்த நாள் மீண்டும் ஒரு குழப்ப முயற்சியில்ஈடுபட்டோம்.
தொடரும்.....
No comments:
Post a Comment