பகுதி 37
அடுத்த நாள் காலையில் நானும் செயலதிபர் உமா மகேஸ்வரனும் வை. கோபால்சாமி MP வீட்டுக்குப் போனோம். வை கோபால்சாமி எம்பி டெல்லிவரும் போது அடிக்கடி போய் நான்சந்தித்து பேசுவேன்.அதுபோல் செயலதிபர் உமா மகேஸ்வரனும் டெல்லிவரும்போது கோபால்சாமி எம்பி டெல்லியில்இருந்தால் போய் சந்திப்பர்.அவர் விடுதலைப் புலிகளோடு நெருக்கமாக இருந்தாலும் எங்களோடு நல்ல தொடர்பில் தான் இருந்தார்.
கோபாலசாமி எம் பி யும்,அவரது உதவியாளரும் எங்களுக்கு தேனீரும் பிரெட் டோஸ்ட் போட்டு கொடுத்து உபசரித்தார்கள். திம்பு பேச்சுவார்த்தை பற்றி, பேச்சுவார்த்தை வந்தபோது, உமாமகேஸ்வரன் செயலதிபர்ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார். இந்திய வெளியுறவுச் செயலர் ரொமேஷ் பண்டாரிபேச்சுவார்த்தை சம்பந்தமாக இலங்கைக்குப் போய் வரும் போது அவர் இலங்கை ஜனாதிபதி ஜெயவர்த்தனா அவருடன் நெருங்கிப் பழகி வைர நெக்லஸ் கள் விலை கூடிய நவரத்தினம் மாலைகள் போன்றவற்றை அன்பளிப்பா பெற்றுக்கொண்டதும் , மட்டுமல்லாமல் இந்திய,இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு எதிராக வேலை செய்வதாகவும் போட்டுக் கொடுத்தார்.வை கோபால்சாமி மிகவும் கோபத்துடன் இவ்வளவெல்லாம் நடந்திருக்கிறதா நான் விடமாட்டேன் ஒரு கை பார்க்கிறேன் என்று கூறினார். அன்று ராஜ்யசபா பாராளுமன்றத்தில் வைகோஇந்திய வெளியுறவுச் செயலர் ரொமேஷ் பண்டாரி இலங்கை ஜனாதிபதியின் கைக்கூலிவைர நெக்லஸ் க்காக விலை போய்விட்டார் காரசாரமாக பேசினார்.அடுத்த நாள் பத்திரிகைகளில் எல்லாம் ரொமேஷ் பண்டாரி வைர நெக்லஸ் வாங்கியதுதான் முக்கியத்துவம் பெற்றன.
அன்று மாலை ரொமேஷ் பண்டாரி சந்திக்க போன் செய்தபோது, உடனடியாக ஆறு மணி போல் தனது வீட்டில் வந்து சந்திக்கச் சொன்னார்..அவரை சந்தித்தபோது அழாத குறையாக தன்னைப் பற்றி பொய்யான செய்தியை பாராளுமன்றத்தில் வை .கோபால்சாமி பேசி விட்டதாகவும், திம்புவில் நடந்த சம்பவத்தை கூட சித்தார்த்தன் உண்மையை பத்திரிகை யில் கூறி இருக்காவிட்டால்பேச்சுவார்த்தை தோல்வியில் முடிய தான் காரணம் என எல்லோரும் எழுதி இருப்பார்கள். சித்தார்த்துக்கு தன் நன்றியைக் கூறச் சொன்னார். எமது செயலதிபர் உமாமகேஸ்வரன் உடனடியாக வைர நெக்லஸ் கதையை விடுதலைப்புலிகள் தான் வைகோவிடம் கூறியிருப்பார்கள் அவர்கள்தான் வைகோவுடன் நெருக்கம் எனக் கூறினார். அவரும்இருக்கலாம் எனக் கூறி யோசிக்கத் தொடங்கினர். நானும் செயலதிபர் உமா மகேஸ்வரனும் எமது ராஜதந்திரத்தை நினைத்து சிரித்து சந்தோசப் பட்டோம். இப்படித்தான் இவர்களை பழிவாங்க வேண்டும் என்றார். எமது இந்த செயல் அந்த அதிகாரியின் பதவிக் காலத்தில் ஒரு கரும்புள்ளி.நவரத்தினங்கள் வைர நெக்லஸ்உடன் வேறு பல பொருட்களும் லஞ்சம் வாங்கினார் என பலரும்நேரடியாக எழுதத் தொடங்கினார்கள். அதற்கு ஆதாரம் வை கோபால்சாமி பாராளுமன்றத்தில் பேசிய பேச்சு என்றார்கள். பாராளுமன்றத்தில் ஆதாரமில்லாமல் பேசியிருக்க மாட்டார் என்றும் கூறினார்கள். இலங்கை இந்திய பத்திரிகைகளில்எமது இயக்கம் பயிற்சி பெறும் இடங்கள் பல பத்திரிகைகளில் வெளிவரத் தொடங்கின.சர்வதேச ரீதியில் பெரிய பிரச்சினையாக இருந்தது. இந்திய அதிகாரிகள்இதைப் பற்றி என்னிடம் கேட்கும்போது, நான் இதுபற்றி செயலதிபர் உமாவிடம் விபரம் கேட்ட போது, ஈபிஆர்எல்எஃப் , அல்லது ஈரோஸ் இந்தசெய்தியை கொடுத்திருக்க வேண்டும் என தங்களுக்கு தெரியவந்ததாக அதிகாரிகளிடம் கூற சொன்னார். அதிகாரிகள் நம்பவில்லை. IB ஐபி அதிகாரிகள் எமது இயக்கம் தான் ஷெர்லிகந்தப்பா மூலம் இந்தியாவுக்கு எதிராக வேலை செய்கிறது என கண்டுபிடித்து விட்டார்கள். எமது இந்த வேலைதமிழ்நாட்டில் பயிற்சி பெற்ற ஆயிரக்கணக்கான தோழர்களே பாதித்தது என்பது உண்மை. இப்படியான போட்டுக் கொடுக்கும் வேலைகளைவிடுதலைப் புலிகளைத் தவிர மற்ற இயக்கங்கள் ஒருத்தர் போட்டுக் கொடுக்கும் வேலைகளை செய்து வந்தார்கள் என்பது உண்மையே.
85 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் லெபனான் பயிற்சிக்கு போக வந்த ஒரு தோழர் சங்கானை சேர்ந்தவர்என்னோடு ஒரே வகுப்பில் படித்த நெருங்கிய நண்பரின் தம்பி இவரும் மானிப்பாய் இந்துக்கல்லூரியில் தான் படித்தவர். சின்ன மெண்டிசின் சமவயது நண்பர்கள் தான்.அவர்களின் விமான பயணத்துக்கு முதல் நாள் இரவு சென்னையில் இருந்து எனக்கு தொலைபேசி அந்த தோழரை அனுப்ப வேண்டாம். அவர் எங்கும் தப்பி போக விட வேண்டாம். இரண்டொரு நாளில் சென்னையிலிருந்து ஆள் வரும்அவருடன் அனுப்பி விடசொல்லி.அந்த சங்கானை தோழர் விசாரித்த போது தன்னை சந்ததியார் இன் ஆள்என்று முதலில் சந்தேகித்து விசாரித்தார்கள் என்றும், தன்னை சென்னைக்கு அனுப்ப வேண்டாம் தன்னைக் கொன்றுவிடுவார்கள் என்றும் கூறினார். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.
நான் செயலதிபர் உமாமகேஸ்வரன் இடம்இது பற்றிய விபரத்தை கூற அவர் தனக்கு தெரியாது தான் விசாரிக்கிறேன் என்றார் நானும் எனது நண்பரின் தம்பி எனக்கு சின்ன வயசுல இருந்தே தெரியும் தவறான ஆளாக இருக்காது என்று கூற, சரி டெல்லியில் கொஞ்சநாள் இருக்கட்டும் தான் கந்தசாமி இடம் பேசுவதாக கூறினார். நான் சென்னை அலுவலகத்துக்கு தொடர்புகொண்டு மாதவன் அண்ணாவிட கந்தசாமி வந்தால் உடன் என்னை தொடர்பு கொள்ள சொல்லச் சொன்னேன். கந்தசாமி தொடர்பு கொண்டபோது விபரத்தைக் கூறி, உதவி கேட்டேன் கந்தசாமிஅவன் கழகத்திற்குள் பிரச்சினை பண்ணாவிட்டால் சரி நீ புத்தி சொல்லி வை என்று கூறினார்.நான் கந்தசாமி மாறன் மூவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்தோம். கந்தசாமி சாகும்வரை நெருங்கிய நண்பனாக தான் இருந்தார். சங்கானை தோழர் திரும்ப சென்னை போய் இயக்கத்தில் வேலை செய்து இயக்கம் உடைந்தபோது வெளிநாட்டுக்கு போய் விட்டதாக அறிந்தேன் இப்போது அவர் நோர்வே நாட்டில் இருப்பதாக செய்தி.
லண்டனில் இருந்து மகர சிங்கம் என்ற பெரியவர் வந்திருந்தார். அவர் இலங்கை அரசுக்கு எதிரான வாசகங்கள் அடங்கியமாட்டிக்கொண்டு இந்திய பாராளுமன்றத்திற்கு அருகில் போய் ஆர்ப்பாட்டம் செய்யப்போவதாக கூறினார். ஒரு மாதிரி அவரை தடுத்து இந்திய நண்பர் சம்பத் அவர்கள் அவரைக் கூட்டிக்கொண்டு போய் கன்னாட் ப்ளேஸ் என்ற இடத்தில் நிற்க வைத்தார்.ஆர்ப்பாட்டம் செய்து விட்டு வந்த பெரியவர் மகர சிங்கமையா சென்னைக்குப் புறப்பட்டு, பின்பு தஞ்சாவூர் சென்றுஎமது முகாம் எல்லாம் பார்வையிட்டு திரும்ப லண்டன் போக டெல்லி வந்தபோது அவர் புளொட் கட்டாயம் தமிழீழம் பெற்றுத் தரும்என்ற நம்பிக்கை தனக்குவந்துள்ளதாக கூறினார்.
எமக்கு பல வெளிநாட்டு தூதரகங்களின் தொடர்புகள் கிடைத்தன.அங்கு வேலை செய்யும் முதன்மைச் செயலாளர் அல்லது இரண்டாம் செயலாளர் உண்மையில் அவர்கள்தான் அந்தந்த நாட்டின் ரகசிய உளவுத்துறை ஆட்கள் அவர்கள்தான் தாங்கள் வேலை செய்யும் நாட்டின் எல்லா விபரங்களையும் எடுத்துதங்கள் நாட்டின் வெளி நாட்டு உளவுத் துறைக்கும், தங்கள் நாட்டு வெளியுறவு அமைசுக்கும் ரிப்போர்ட் போடுபவர்கள். தூதுவர் என்பவர் ஒரு அலங்கார பொம்மை. அவரை பப்ளிக்காக யார் வந்தாலும் போய் பார்க்கலாம்.ஆனால் முதன்மைச் செயலாளர் அல்லது இரண்டாம் செயலாளர் அவை சந்திக்கும் சந்திப்புகள் மிக ரகசியமாக இருக்கும்.
நாளை டில்லியில் எங்கள் தொடர்பில் இருந்த பத்திரிகையாளர்கள் வெளிநாட்டு தூதரகங்கள் பற்றிய விபரங்களை தருகிறேன்.
தொடரும்.....
No comments:
Post a Comment