பகுதி 31
ரங்கராஜன் குமாரமங்கலம் |
ரங்கராஜன் குமாரமங்கலத்தின் ஒதுக்கப்பட்ட வீடு நாங்கள் இருந்தஎல் கனேசன் MP இன் நேர் எதிர் வீடு. எனக்கும் அவருக்குமான தொடர்பு மிக நெருக்கமாக இருந்தது. அவர் வீட்டில் இருக்கும் போது இருவரும் எமது பிரச்சினைகள் பற்றி விபரமாக கேட்டு அறிந்துகொள்வார்.அவர் ஒரு தொழிற்சங்கவாதி என்றபடியால் எந்த நேரமும் அவரைச் சுற்றி ஒரு பெரிய சகல இன தொழிற்சங்கவாதி களும் இருப்பார்கள்.ஈழ விடுதலை இயக்கங்களில் எனக்கு மட்டும் தான் அவரை சந்தித்து பழகும் வாய்ப்பு கிடைத்தது.எமது விடுதலைப் போராட்டத்திற்கு எமது இயக்கம் அவரைசரியான முறையில் பயன்படுத்த வில்லை என்ற குறை எனக்கு உண்டு. அவர் புதிய வெளிநாட்டு செயலாளரை சந்திக்க வேண்டுமானால் அவரை அறிமுகப் படுத்துகிறேன் என்றார்.
l நானும் செயலதிபர் உமா விடம் இதுபற்றி தொலைபேசி மூலம் கூறியபோது நல்ல விடயம் விரைவில் தான் டெல்லி வருவதாக கூறினார்.
கம்பம் செல்வேந்திரன் |
இன்னொரு புதிய எம்பி அண்ணா திமுகவை சேர்ந்தவர் பெரியகுளம் தொகுதி திரு கம்பம் செல்வேந்திரன். அவர் புளட் பிரதிநிதி டெல்லியில் இருப்பதாக கேள்விப்பட்டு என்னை சந்திக்க விரும்பினார். அவரும் நாங்கள் இருந்த நோர்த் அவென்யூ தான் வீடு. அவரைப் போய் பார்த்தபோது அப்போது கிட்டத்தட்ட அவருக்கும் என் வயது தான் இருக்கும் என நினைக்கிறேன். எனக்கு ரொம்ப மதிப்பு கொடுத்து வரவேற்று பேசினார். தேனி முகாம் பற்றியும், பல தோழர்களின் பெயர்களை கூறியும் விசாரித்தார். உண்மை யில்அவர் கூறிய பெயர்களில் உள்ள தோழர்களே எனக்கு தெரியாது. நான் உங்களுக்கு எப்படி அவர்களை எல்லாம் தெரியும் என்றேன். அவர் கூறினார் தான் முழு நேரமும் தேனி முகாமில்தான் இருந்திருப்பதாக, எல்லாத் தேனி முகாம்தோழர்களும் நெருக்கமானவர்கள் என்று கூறினார். எனக்கு பெரிய ஆச்சரியம்.செயலதிபர் உமாமகேஸ்வரன் டெல்லி வந்தபோது கம்பம் செல்வேந்திரன் எம்பி வீட்டுக்கு அழைத்துபோனேன். செயலதிபர் உமாவைப் பார்த்து மிகவும் சந்தோசப்பட்டார். அவர் எம்பியாக இருந்தும் செயலதிபர் உமாமுன்னால் உட்காரவில்லை கைகளை கட்டியபடியே பேசினார்.நான்தான் அவரைப் பற்றிய விபரங்களையும் தேனி முகாமில் அவர் நெருக்கம் என்றும் செயலதிபர் உமாவிடம்விளக்கம் கூறினேன். செல்வேந்திரன் எம்பியைரொம்ப நேரம் சங்கடப்படுத்தாமல் செயலதிபர் விடைபெற்றார்.
ரங்கராஜன் குமாரமங்கலம் எம்பி தான் கூறிய படிஇந்திய வெளிவிவகார செயலாளர் ரமேஷ் பண்டாரி அவர்களை சந்திக்க ஏற்பாடு செய்து கொடுத்தார். நானும் செயலதிபர் உமா மகேஸ்வரனும் போய் சவுத் பிளாக் எனப்படும் புகழ்பெற்ற இந்திய அரசகட்டிடங்களில் இருந்த இந்திய வெளிவிவகார அமைச்சு அலுவலகத்தில் முதல் முறையாக செயலாளர் ரமேஷ் பண்டாரி யைசந்தித்தோம். அவர் கூடவே துணைச் செயலாளர் இருந்தார். அவரை நான் முன்பே பலமுறை சந்தித்திருக்கிறேன். தனிப்பட்ட முறையில்ரொமேஷ் பண்டாரியை சந்தித்த முதல் போராளித் தலைவர் செயலதிபர் உமாமகேஸ்வரன் தான். அவரிடம் பேசும்போது நாங்கள் என்றும் இந்தியாவுக்கு விசுவாசமாக இருப்போம்.இலங்கை அரசை பணிய வைக்க இந்தியா எங்கள் அமைப்புக்கு பயிற்சியும் ஆயுதங்களும் கூடுதலாகதரவேண்டும், என்றும் மற்ற எல்லா இயக்கங்களும் இந்தியாக்கு விரோதமாக செயல்படுவதாகவும் போட்டுக் கொடுத்தோம். நாங்கள் கூறியவாரே விடுதலைப் புலிகள் , ஈபிஆர்எல்எப் டெலோ, மற்றும் ஈரோஸ் தனித் தனியாக சந்திக்கும் போது இதே மாதிரிதான் போட்டுக் கொடுத்தார்கள். ஈரோஸ் மட்டும் கூடுதலாக போட்டுக் கொடுத்தார் கள். இது எப்படி உனக்கு தெரியும் என்று கேட்பீர்கள். அங்கு வேலை செய்யும் தமிழ் அதிகாரிகள்,அவர்கள் மட்டுமல்ல மட்டும் முக்கியமான அமைச்சுக்களில் வேலை செய்த தமிழர்கள் கூட என்னோடும் மற்ற இந்தியன் நண்பர்களோடும் நெருக்கமான நட்பை பேணியவர்கள் அதோடு அவர்கள் எம்பி மாரின், வீடுகளில், குவாட்டஸ் இல் வாடகைக்கு இருப்பவர்கள்.அவர்கள் மூலம் இந்த செய்திகள் எங்களுக்கு வரும்.அவர்கள் என்னிடம் என்னப்பா உங்க தலைவர் மார்,ஒருத்தர ஒருத்தர் குறை சொல்லியே இந்தியாவிடம் உதவி கேட்கிறார்கள். நல்லா விளங்கிடும் உங்க விடுதலைப் போராட்டம். எனக் கூறுவார்கள். நான் டெல்லியில் இருந்த இடம் அப்படி எல்லா செய்திகளும் அறியக்கூடியதாக இருந்தது.
ரமேஷ் பண்டாரி |
ஈபிஆர்எல்எப் காங்கிரஸின் எம் பி இரா. அன்பரசு வீட்டில் தங்கியிருந்தார்கள். அங்கு அவர்கள் அரசியல் வேலை செய்ததை விட, எம்பி மூலம் ஆட்களை வெளிநாட்டுக்கு அனுப்பும் வேலையில் செய்ததாக அறிந்தேன். அதோடு கூட்டாக தொழில் செய்வதாகவும் செய்திகள் வந்தன. ஈரோஸ் நேரு என்பவர் வெளிஇடத்தில் தங்கியிருந்தார். அவரின் வேலைகள் எல்லா இடங்களிலும் போய் மற்ற இயக்கங்களையும் குறை சொல்லுவது மட்டுமே.நாங்கள் எங்கள் அறிக்கைகள் பிரசுரங்கள் மூலம் மற்றவர்களை விட நாங்க சிறந்தவர்கள் என்று மறைமுகமாக அறிவிப்போம்.இந்திய அரசு அதிகாரிகளிடம் மற்ற இயக்கங்களைப் பற்றி மோசமாக அதாவது எங்களைத் தவிரமற்ற இயக்கங்கள் இந்தியாவுக்கு எதிராக வேலை செய்கிறார்கள் போட்டு கொடுப்போம் இதைத்தான் இலங்கை இந்திய ஒப்பந்தம் கையெழுத்தாகும் வரை நாங்களும் மற்ற இயக்கங்களும் செய்த வேலை. ஆனால் வெளியில் இந்திய எதிர்ப்பார்கள் என்றும் கட்டிக் கொள்வோம். விடுதலைப் புலிகள் உட்பட.
இதே ஆண்டு லண்டன் சீனிவாசன் மூலம் ஹாங்காங், ஆயுதங்கள் வாங்கப்பட்டு சிங்கப்பூர் வழியாக சென்னைக்கு ஆயுதங்கள் கன்டெய்னர் மூலம் வந்தன. அந்த ஆயுதங்கள் எங்கள் தவறால் சுங்கத்துறை யால் பிடிபட்டன. ஆனால் செயலதிபர் உமா மகேஸ்வரன் தனது தவறை மறைத்துமுகாம் தோழர்களிடம் தனக்கு எதிராக இந்தியா வேலை செய்வதாகவும் அந்த ஆயுதங்களை இந்திய ரா உளவுத்துறை பிடித்துவிட்டதாகவும் கதை சொன் னார். பின்தள மாநாட்டில் தனது தவறுக்காகஅதற்காக மன்னிப்பும் கேட்டார்.இது சம்பந்தமாக இன்றும் உண்மை அறியாமல் தங்களுக்கு தோன்றியபடி பதிவுகளை விட்டு வருகிறார்கள். இது சம்பந்தமாக நான் போட்ட பதிவை இத்துடன் இணைக்கிறேன்.
1984 ஆண்டு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் ஆயுதம் இறக்குமதி செய்த விடயம் சம்பந்தமாக பலவித வதந்திகள் தவறான கருத்துக்கள் பரப்பப்பட்டு வருகின்றன. ஏன் உமா மகேஸ்வரன் கூட தான் செய்த தவறு தெரியக்கூடாது என்று 86ஆம் ஆண்டு இயக்கத் தோழர்கள் இடம் உண்மையை மறைத்து இந்திய அரசாங்கம் தான் ஆயுதங்களை பிடித்தது என்று பொய் கூறினார். பின்பு பின்தள மாநாட்டின்போது மன்னிப்பு கேட்டார்.
. தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் லண்டன் கிளை உறுப்பினர் யாழ்ப்பாணம் திருநெல்வேலியை சேர்ந்த கதிரவேற்பிள்ளை சீனிவாசன் இயக்கத்திற்கு ஆயுதம் வாங்க 1984 ஆண்டு முயற்சிகள் செய்தார். அவருக்கு உதவி செய்ய மிக ரகசியமாக டெல்லியில் நானும்,சென்னையில் ரமேஷ் என்கிற நிலா நேசம் என்பவரும் (தற்போது கனடாவில் இருக்கிரார்) இந்த ஆயுதம் சம்பந்தமாக உமா மகேஸ்வரனுக்கு நேரடி தொடர்பாளராக நியமிக்கப் பட்டோம். சீனிவாசன் ஹொங்கொங் போய் ஏற்பாடுகள் செய்ய, சென்னையில் இருந்து டெல்லி வழியாக ரமேஷ் ஹொங்கொங் அனுப்பப் பட்டார். சில வேலைகளை முடித்துவிட்டு ரமேஷ் ஒரு வாரத்தில் திரும்பி விட்டார்.
சீனிவாசனுக்கு ஹாங்காங்கில் பணப் பற்றாக்குறை ஏற்பட்டபோது,ரகசியம் காக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் தனது 10 வயது மகளை பணத்தை எடுத்து வர ஏற்பாடு செய்தார் இது தெரிந்து அங்கிருந்து தமிழீழ மக்கள் விடுதலைக் கழக. தற்போதைய தலைவர் சித்தார்த்தன் சீனிவாசனை கடுமையாக கண்டித்து வேறு வழியில் பணத்தை அனுப்பியுள்ளார்.சீனாவிலிருந்து வந்த ஆயுதங்களை இந்தியாவில் ஆந்திராவுக்கு போகும் பழைய பேப்பர்கள் என பதிவு செய்து அனுப்பி அந்தக் அந்தக் கொள்கலனை ஏற்றி வந்த கப்பல் சிங்கப்பூரிலிருந்து அந்த கொள்கலன் சென்னைக்குப் போகும் கப்பலில் மாற்றப்படவேண்டும் சீனிவாசன் சிங்கப்பூரில் வேலை செய்த தனக்குத் தெரிந்த பல இளைஞர்களை அழைத்துசீன கொள்கலனில் இருந்து சென்னைக்கு வர வேண்டிய சிங்கப்பூர் கொள்கலனில் மாற்றி மாற்றியபோது ஆயுதங்களோடு இருந்த சீனமொழி பத்திரிகைகளை அகற்றிவிட்டு சிங்கப்பூரில் இருந்த ஆங்கில பழைய பத்திரிகைகளை வாங்கி அடுக்கி ஆயுதங்களை மறைத்துள்ளார்.
தலைவர் உமா மகேஸ்வரனுக்கு எல்லா விபரங்களும் அனுப்பப்பட்டு உமா மகேஸ்வரனும் சென்னையில் அந்தக் கொள் கலனைவெளியில் எடுக்க ஆந்திராவைச் சேர்ந்த சென்னையில் தொழில்செய்யும் அண்ணாநகரில் இருந்த கன்டைனர் கிளியரன்ஸ் ஏஜென்ட் இடம் பத்தாயிரம் ரூபா கொடுத்து இந்த பழைய பேப்பர்கள் வருவதாகவும் ஆந்திராவில் உள்ள பேப்பர் மில்லில் செல்வதாகவும் கூறி ஏற்பாடு செய்துள்ளார். ஏஜென்ட் கஸ்டம்ஸ்ம் அதிகாரிகளுக்கு எல்லாம் காசு கொடுத்து திறக்காமல் வெளியில் கொண்டு வரக் கூடியவர். அந்த ஏஜன்ட் முதலில் போய் சாதாரணமாக கொள்கலனை திறந்துபார்த்துள்ளார். மறைவாக இருந்த ஆயுதங்களை பார்த்து விட்டார்.பயந்துபோய் கொள்கலனை மூடி விட்டு வந்தவர். உமாவிடம் சண்டை பிடித்துள்ளார். கூடுதல் காசு கேட்டுள்ளார்.
அந்த ஏஜென்ட் சரிகட்ட உமா மகேஸ்வரன் தனது சகோதரியின் கணவர் ராஜதுறையையும், வாமத்தேவனயும்அனுப்பியுள்ளார். இதைக் கேள்விப்பட்டு சென்னையில் இருந்த சித்தாத்தன் அவர்களை திருப்பி
அழைத்துவிட்டு அந்தப் பொறுப்பை பரந்தன் ராஜன் இடம் கொடுக்கும் படி கூறியுள்ளார். ராஜன் காசு கூட குறைய பேசி கச்சிதமாக கண்டனரே எடுத்து விடுவார் என சித்தார்த்தன் கூறி இருக்கிறார் ஆனால் உமா மகேஸ்வரன் ஒரு காசு கூடமேலதிகமாக செலவழிக்காமல் வாமனும் ராஜதுரையும்
எடுப்பார்கள் என நம்பிக்கையாக கூறியுள்ளார். ஏஜென்ட் இடம் போன ராஜதுரை வாமணும் முதலில் ஏஜென்ட் மிரட்டியுள்ளார் கள். ஏஜென்ட் கூடுதல் பணத்துக்கு பிடிவாதமாக இருந்துள்ளார் . உடன்வாமன் கைத்துப்பாக்கியை எடுத்து ஏஜன்ட் இன் வாயில் வைத்து ரெண்டு நாளில் கண்டனர் எடுத்துத் தர வேண்டும் இல்லாவிட்டால் சுட்டு கொன்று விடுவதாக மிரட்டியுள்ளார்.
ஏஜென்ட் பயப்படவில்லை உடன் சுங்க இலாகா அதிகாரிகள் இடம் கன்டெய்னரில் ஆயுதங்கள் இருப்பதாக கூறியுள்ளார். ஆனால் ஏஜென்ட் உமா மகேஸ்வரனை காட்டிக் கொடுக்கவில்லை. அக்காலக்கட்டங்களில் விடுதலை இயக்கங்களுக்கு சிம்மசொப்பனமாக இருந்த பொலீஸ் ஐஜி மோகனதாஸ் அறிவித்துள்ளார்கள். கஸ்டம்ஸ் கூறியது ஆந்திராவிலுள்ள நக்சலைட்டுகள் அக்கு சீனாவில் இருந்து ஆயுதம் வந்துள்ளதா க. ஆனால் மோகனதாஸ் மோப்பம் பிடித்து ஆயுதம் வந்துள்ளதாக பத்திரிகைகளுக்கு செய்தியும் கொடுத்து உமா மகேஸ்வரனை நெருங்கிய சமயம், உமா உடனடியாக சென்னையிலிருந்து சித்தாத்தன் டெல்லிக்கு அனுப்பினார் நானும் சித்தார்த்தனும் போய் ஜி பார்த்தசாரதி அவர்களை பார்த்தோம் அவர் எங்களை ரொம்ப திட்டினார்.அவர் கேட்ட கேள்விகளுக்கு எங்களால் பதில் சொல்ல முடியவில்லை. உமா ஏன் இப்படி முட்டாளாக இருக்கிறார். மிக ரகசியமாக முடிக்கவேண்டிய வேலையை ஏஜென்ட் துப்பாக்கியை காட்டி மிரட்ட வேண்டுமா? அதோடு மோகனதாஸ் இயக்கங்களுக்கு எதிராக கடுமையாக இருப்பதாகவும் எம்ஜிஆர் கூடமோகனதாஸ்சிலவேளை கட்டுப்படுத்த முடியாது இருப்பதாகவும் கூறினார்.
.. இந்த விபரங்கள் பத்திரிகையில் வந்த படியால் இந்த ஆயுதங்களை எடுக்க மத்திய அரசால் உதவி செய்ய முடியாது என்று கூறினார் காரணம் பத்திரிகைகளும் இலங்கை உட்பட இலங்கைக்கு ஆதரவான நாடுகள் இந்தியாவின் மேல் எதிரான பிரச்சாரங்கள் செய்யக்கூடும்.அதோடு எந்த காரணம் கொண்டும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (பிளாட்)இந்த ஆயுதங்கள் வந்தன என்று யாரிடமும் கூற வேண்டாம் மறுத்து விடுங்கள். காரணம் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் தான் என்று செய்தி பரவினால் தமிழ்நாடு பொலிஸார் கட்டாய நடவடிக்கை எடுப்பார்கள். இந்த அவ்வளவு தான் நடந்தது உண்மை எங்கள் இயக்கம் செய்த தவறால் தான் ஆயுதங்கள் பிடிபட்டனர்.
. பின்பு பல மாதங்களின் பின் சென்னை வந்த சீனிவாசன் உமாமகேஸ்வரன் இடம் மிகவும் சண்டை பிடித்தார் தன் உயிரைப் பணயம் வைத்து கொண்டு வந்த ஆயுதங்களை கிளியர் பண்ண எடுக்க முடியாதா நீ எல்லாம் ஒரு தலைவன் உனக்கு ஒரு இயக்கம் என முகத்துக்கு நேராக கேட்டுவிட்டுஇயக்கத்தை விட்டு விலகிப் போய்விட்டார்
தொடரும்.....
No comments:
Post a Comment