பார்வையாளர்களின் எண்ணிக்கை

Search This Blog

Powered by Blogger.

Saturday, 21 August 2021

எனது இயக்க இந்திய அனுபவங்கள் - பகுதி 30

  வெற்றிசெல்வன்       Saturday, 21 August 2021

 பகுதி 30

ப. ​சிதம்பரம் M P

85 ஆம் ஆண்டு பலவித அனுபவங்களை தந்த ஆண்டு. எமது இயக்கத்தின் முழுநேர விடுதலைப் போராளிகளாக வேலை செய்ய,லண்டனில் இருந்து அங்கு வேலை செய்த தோழர்கள் வசந்தன் ,பரதன் போன்றவர்கள் டெல்லி வழியாக சென்னை வந்தார் கள். இதில் செயலதிபர் உமாமகேஸ்வரன் இடம் கேட்டு பரதனே இரண்டு மாதம் கிட்ட டெல்லியில் எனக்கு உதவியாக வேலை செய்ய கேட்க பரதனை திரும்ப டெல்லி அனுப்பி வைத்தார். டெல்லி வந்த பரதனும் பெயர் மாறி சாரங்கன் என்ற இயக்கப் பேரோடு ,எங்கள் தொடர்பில் இருந்த பாராளுமன்ற உறுப்பினர்களையும் புதிய பாராளுமன்ற உறுப்பினர்களையும் அதோடு எங்கள் தொடர்புகளில் இருந்த வெளிநாட்டு தூதரக அதிகாரிகளையும். பத்திரிகையாளர்களையும் , லண்டன் சித்தார்த்தன் உடன் சேர்ந்தும், என்னுடன் சேர்ந்தும் சந்தித்தார். இது பற்றிய டெல்லி கிளைக்கு பரதன் கைப்பட எழுதிகொடுத்த சில குறிப்புகள். என்னிடம் இன்னும் உள்ளன. அந்த நேரம் சீனிவாசனின் ஆயுதக் கொள்வனவு சம்பந்தமாக ஹொங்கொங் போக சென்னையிலிருந்து ரமேஷ் அல்லது திருஞானம் டெல்லி வந்திருந்தார்.

ரங்கராஜன் குமாரமங்கலம்
பரதன் லண்டனில் இருந்து டெல்லி வரும்போது அவரை வரவேற்று கூட்டி வர நானும் ரமேஷும் தான் போயிருந்தோம். ஜெர்மனியிலிருந்து ஒன்றுபட்ட புலிகளின் ஜெர்மன் அமைப்பாளர் முன்பு இருந்தவர், தற்போது எமது இயக்கத்துக்கு ஜெர்மனி நாட்டுக்குபொறுப்பாக இருந்தபரமதேவா டெல்லி வந்து சென்னை போனார். நாங்கள் இருந்த எல் கணேசன் எம்பி வீட்டுக்கு, கீழ் வீட்டில் இருந்த நமது நெருங்கிய நண்பர் சம்பத் வேங்கா எம்பியின் மகன் தனது வீட்டில் அவரை தங்க வைத்துக்கொண்டார்.venga எம் பி சென்னை போகும்போது இலவசமாகரயிலில் முதல் வகுப்புப் பெட்டியில் பரமதேவா அவர்களையும்கூட்டிக்கொண்டு போனார்.venga mp அந்த காலத்தில் அறிஞர் அண்ணாவிக்குநெருங்கியவர். அண்ணாவுக்குப் பின் கட்சியில் ஒதுக்கப்பட்டு விட்டார். பின்பு கலைஞர் திமுக ராஜ்யசபா எம்பி ஆக்கினார்.1978 முதல் 1984 ஏப்ரல் வரை ராஜ்யசபா எம்பியாக இருந்தார்.
டெல்லியில் எமக்குஎல்லா வழிகளிலும் உதவி செய்த நண்பர்களை பற்றி தனிப்பதிவு களாக போடஉள்ளேன். நன்றி மறப்பது நன்றன்று.
பரமதேவா வரும்போது ஒன்றுபட்டு விடுதலைப் புலிகள் காலத்தில் பிரபாகரன் கரிகாலன் என்ற பெயரில் ஜெர்மன் கிளைக்கு எழுதிய பல கடிதங்களை கொண்டு வந்திருந்தார். அதில்உமா மகேஸ்வரனை பற்றியும் அவரின் தவறான நடவடிக்கைகளை பற்றியும் எழுதியிருந்தார். அதோடு லண்டன் கிருஷ்ணன் நிதி மோசடி செய்வதாகவும்விடுதலைப்புலி அமைப்புக்கு சேகரித்த சொத்துக்கள் அவர் தனிப்பட்ட முறையில் பாதிப்பதாகவும் பல கடிதங்கள் இருந்தன.
சித்தார்த்தனும் லண்டனில் இருந்து டெல்லி வந்தார்.நானும் சித்தார்த்தனும் காலத்தை விரயம் செய்யாமல் புதிய எம்பிகளை முடிந்தளவு சந்திக்க தொடங்கினோம் திமுகவின் டி ஆர் பாலு எம்பி, ஆந்திரா தெலுங்கு தேச கட்சி என்டி ராமராவ் இன் நெருங்கிய நண்பர் உபேந்திரா எம் பி, அதிமுக ஜக்கையன் எம் பி, கோவை காங்கிரஸின் பி குப்புசாமி எம்பிமற்றும் பலரை சந்தித்தோம் பெயர்கள் நினைவில் இல்லை நினைவில் வரும் போது எழுதுவேன். வீடு ஒதுக்கப்படும் வரை தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருந்த குறிப்பாக சிதம்பரம் எம்பி சந்தித்து எமது போராட்டம் எமது வரலாறு எல்லாவற்றையும் எங்களுக்கு சாதகமான முறையில் அவரிடம் கூறுவோம். அவர் குறிப்புகள் எடுத்துக் கொள்வார் அடுத்த நாள் வரச் சொல்லுவார். அவரிடம் நாங்கள் மறைத்த விஷயங்களை தகுந்த புள்ளி விபரங்களுடன்எங்களிடம் கூறி எங்களை வாயடைக்கச் செய்ய குறிப்பாக மலையகத் இந்தியதமிழருக்கு வடக்குத் தமிழ் தலைவர்கள் செய்த துரோகங்கள் அவமானங்கள் பற்றியெல்லாம் பேசுவார்.பத்து பதினைந்து நாள் தொடர்ந்து சந்தித்திருப்போம் அவர் பாராளுமன்ற நூல் நிலையத்தில் போய் இலங்கை பற்றிய செய்திகள் ஆவணங்களை படித்து எங்களைவிட சிறப்பாக கூறுவர். எமது இயக்க வரலாறு அதுவரை வந்த இயக்கங்களின் மறுபக்கங்கள் சிதம்பரத்துக்கு அத்துபடி. அன்றிலிருந்து நானும் சித்தார்த்தனும்முடிவு பண்ணினோம்எங்களை புத்திசாலிகளாக நினைத்துக்கொண்டு மற்றவர்களிடம் எமக்கு மட்டும் சாதகமான செய்திகளை கூறி பிரச்சாரம் செய்யக்கூடாது என்று மட்டும்.
கிட்டி குமாரமங்கலம்
எல். கணேசன் எம்பி வீட்டில் வந்து தங்கிசெல்லும்பல தமிழ்நாட்டு தொழிற்சங்கவாதிகள் என்னை புதிதாக வந்துள்ள காங்கிரஸ் எம்பி ரங்கராஜன் குமாரமங்கலத்தை சந்தித்து நட்பை வளர்த்துக் கொள்ள சொன்னார்கள். நானும் அவருடன் சென்னையில் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டபோது தான்வரும்போது சந்திப்பதாகவும், தனது மனைவி மாமியார் வீடு டெல்லியில் இருப்பதாக கூறி விலாசமும் கொடுத்தார். அவரின் மனைவி ஒரு பஞ்சாபி. ரங்கராஜன் குமாரமங்களத்தை டெல்லியில் சந்தித்தேன் அவருக்கும் சிறுவயது தான் வித்தியாசமான கலகலப்பான அரசியல்வாதி தோளில் கை போட்டு தான் பேசுவார். இவரின் அப்பா மோகன் குமாரமங்கலம் இந்திரா காந்தியுடன் லண்டனில் படித்தவர். இடதுசாரி சிந்தனை உள்ளவர். திமுகவிலிருந்து எம்ஜிஆர் பிரிக்க மத்திய மந்திரியாக இருந்த இவரைத்தான் இந்திராகாந்தி பயன்படுத்தியதாக கூறுவார்கள். ரங்கராஜன் குமாரமங்கலத்தின் அம்மா வங்காளி. தீவிர இடதுசாரி ரங்கராஜன் குமாரமங்கலத்தின் பெரியப்பா இந்திய ராணுவ தலைமைத் தளபதியாக இருந்தவர்.ஒரு புகழ்பெற்ற குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று ரங்கராஜன் குமாரமங்கலத்தின் கூற முடியாது. அவர் எல்லோரிடமும் மிக எளிமையாகத் தான் பழகுவார். பிற்காலத்தில் டெல்லியில் வெளிநாட்டுக்குப் போக வந்து கள்ள பாஸ்போர்ட்கள், கள்ள விசா காரணமாக பல இலங்கைத் தமிழ் பெண்கள் குழந்தைகள் ஆண்களை ஜெயிலிலிருந்து பிணையில் வெளியில் எடுக்க இவரது பதவியும் இவரின் மனைவி கிட்டி குமாரமங்கலம் ஒரு அட்வகேட் எனக்கு மிகவும் துணையாக இருந்தார்கள். திகார் ஜெயிலில் இருக்கும் அப்பாவி இலங்கைத் தமிழர்களை விடுவிக்கும்படி நான் கேட்டுக் கொண்டதன் படி லோக்சபாவில் பாராளுமன்றத்தில் பேசினார். அவர் பேசிய குறிப்புகளை கீழே இணைக்கிறேன் இன்னும் தொடர்கிறேன்.ரங்கராஜன் குமாரமங்கலம் ராஜீவ் காந்தியின் சிறுவயதிலிருந்து குடும்ப நண்பராக இருந்தவர் கள்.
முற்போக்குச் சிந்தனையாளர்; அரசியல் பாரம்பரியம் மிக்க குடும்பத்தைச் சேர்ந்தவர்; தமிழ்நாட்டின் அரசுத் தலைமை வழக்கறிஞராக இருந்தவர்; இந்திரா காந்தி அமைச்சரவையில் உருக்கு, சுரங்கத் துறை அமைச்சராகப் பதவி வகித்தவர் என பல சிறப்புகளைக் கொண்டவர் - மோகன் குமாரமங்கலம். சேலம் மாவட்டம் குமாரமங்கலத்தின் ஜமீன்தாரும் அன்றைய சென்னை மாகாண முதல்வருமான ப.சுப்பராயன் - ராதாபாய் இணையரின் மகனாக லண்டனில் பிறந்தவர் மோகன் குமாரமங்கலம். முழுப் பெயர் சுரேந்திர மோகன் குமாரமங்கலம்.
தரைப் படைத் தலைமை தளபதியாகப் பணியாற்றிய பி.பி. குமாரமங்கலம், கோபால் குமாரமங்கலம் ஆகியோர் இவரது அண்ணன்கள். பார்வதி கிருஷ்ணன் தங்கை. மோகன் குமாரமங்கலம், லண்டனில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படித்தவர். சட்ட வல்லுநர். கம்யூனிசத்தால் ஈர்க்கப்பட்ட அவர், 1939-ல் இந்தியா திரும்பியதும் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார். 1941-ல் தேச விரோத துண்டறிக்கைகளை விநியோகித்ததாக பி. ராமமூர்த்தி, சி.எஸ். சுப்ரமணியம், ஆர். உமாநாத் ஆகியோருடன் ‘மதறாஸ் சதி’ வழக்கில் கைது செய்யப்பட்டார். நாடு சுதந்திரம் அடைந்த பிறகு விவசாயிகள் கிளர்ச்சி, சென்னை மாகாணத்தில் தீவிரம் அடைந்தது. பிற கம்யூனிஸ்ட் தலைவர்களுடன் மோகனும் கைதானார்.
பிறகு காங்கிரஸில் சேர்ந்தார். காங்கிரஸ் பிளவுபட்டபோது இந்திரா காந்திக்கு ஆதரவாகச் செயல்பட்டார். 1971 மக்களவைத் தேர்தலில் புதுச்சேரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கனிம வளங்களை அரசுடமையாக்குவதில் முக்கியப் பங்காற்றியது, உருக்குத் தொழில் வளர்ச்சிக்கு உதவியது என அவரது சாதனைப் பட்டியல் நீளமானது. 1973 மே 30-ல் நடந்த விமான விபத்தில் உயிரிழந்தார். இவரது மகன் ரங்கராஜன் குமாரமங்கலம் பின்னாளில் நரசிம்மராவ், வாஜ்பாய் அரசுகளில் அமைச்சராகப் பதவி வகித்தவர். மகள் லலிதா குமாரமங்கலம் பாஜக-வில் இருக்கிறார். தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவராக இருந்தவர் அவர். ரங்கராஜன் குமாரமங்கலத்தின் மகனுக்கும் ‘மோகன் குமாரமங்கலம்’ என்றே பெயர். அவர் இப்போது காங்கிரஸில் இருக்கிறார
தொடரும்......
logoblog

Thanks for reading எனது இயக்க இந்திய அனுபவங்கள் - பகுதி 30

Previous
« Prev Post

No comments:

Post a Comment