பகுதி 101
ஆட்சி ராஜன் |
மாணிக்கம் தாசன் எப்படியும் தங்களை கொலை செய்துவிட்டு, தன் மீது உள்ள சந்தேகத்தை போக்கிக் கொள்வார். அதற்கு இடம் கொடாமல் , ஆட்சிராஜனும் ,நண்பர்களும் , புளொட் டின் சதிவலையில் மாட்டு பட கூடாது என்று கவனமாக இருக்க வேண்டும் என்று தீர்மானித்தார்கள். என்னையும் அலுவலகத்தில் இருக்கும்போதும், தூங்கும் போதும் எச்சரிக்கையாக இருக்கச் சொன்னார்கள்.
அதோடு ஆட்சி ராஜனும், KL ராஜனும் மாணிக்கம் தாசனுக்கு, ஒரு கடிதம் கொடுத்துவிட்டார்கள். அதோடு நானும் ஒரு எட்டுப் பக்க கடிதம் (அன்று என் மனதில் தோன்றியது எல்லாம் எழுதி) இலங்கை போகும் தோழர்களிடம் கொடுத்துவிட்டேன். விதி யாரை விட்டது. மாணிக்கம் தாசன், சித்தார்த்தன் எங்களுக்கு எதிராக வேகமாக காய் நகர்த்த துவங்கி விட்டனர்.
K.L ராஜன் கடிதம்
KL ராஜன் கடிதம் |
KL ராஜன் கடிதம் |
தோழர் மாணிக்கம் தாசன் அவர்களுக்கு
நலம் நலமறிய அவா மேலும் நானும் நீங்களும் மனம் விட்டு பேசியது கிடையாது கண்ட இடத்தில் ஏனோதானோவென்று பேசியுள்ளோம் இதற்கு என்ன காரணம் என்று இன்று வரை எனக்கு விளங்காமல் இல்லை இருந்தும் சரியான முடிவு கொள்ள முடியவில்லை உங்கள் நிலை எப்படியோ முதல் முதலாக பாதுகாப்பு பொறுப்பை ஏற்க சென்னை வந்து பொறுப்பேற்ற பின் நீங்கள் எனக்கு வாழ்த்துக்கூறி மதிய உணவு உங்களுடன் சாப்பிட்டேன் பின் ஒருநாள் மட்டக்களப்பு ஜீவா பிரச்சினையாகவும் வேறு பிரச்சினையாகவும் என்னுடன் மண்டபத்தில் வைத்து கதைத்த போது நீரெல்லாம் இயக்க நன்மைக்குத் தான் செய்கிறீர் இருந்தாலும் உம்முடைய பாதுகாப்புக்காக கட்டளைஇடுவரிடம் கடிதம் பெற்றுக் கொண்டு செய்பவற்றை செய்யச் சொல்லி புத்தி கூறினீர் அதற்கு காரணமும் கூறினீர் கந்தசாமிக்கு நேர்ந்தது போல் நேரக்கூடாது என்று ஜீவாவின் பிரச்சினையே பெருசு என்னையும் சுபாசையும் வைத்து நேரேசொன்னபின் எடுத்த நடவடிக்கை தான் பெரிசு சொன்னபடிநான் செய்யவில்லை இதை நீங்கள் அறிந்திருப்பீர்கள் என நினைக்கிறேன் உங்களுக்கு தெரியாத பிரச்சினைகளே இருக்காது என்பது எனது கருத்து இருந்தும் பலருடன் பெருசு பற்றி அண்மைக் காலத்தில் பலர் உங்களுடனும் நீங்கள் சிலருடனும் நெருங்கி பல விஷயங்களை அலசி ஆராய்ந்து உள்ளீர்கள் என்னை தவிர என்று நினைக்கிறேன் பெரியவருக்கு ஏற்பட்ட முடிவு சம்பவத்துக்கு முன்பு இருந்த நிலை பொதுவாக அனைவரும் பெரியவரை ஏற்றுக் கொள்ளும் நிலையில் இல்லை எல்லோரும் அவரை தூக்கி எறிந்த நிலையிலேயே இருந்தோம் ஆனால் யார் பூனைக்கு மணி கட்டுவது என்று தெரியாததால் ஆனால் மணி கட்டியவர்களை தனியே பொறுப்பில் விடுவது நல்லதன்று இதற்கு நாம் எல்லாம் சேர்ந்து ஒட்டுமொத்தமாக அனைவருக்கும் பிரச்சினையை தெளிவுபடுத்தி ஸ்தாபனம் உரிமை கோருவது நலம் அனைத்தும் அறிந்த தாங்களும் தங்களை போன்றோரும் இன்றும் தற்போது உள்ள சில முன்னணி உறுப்பினர்களும் அனைத்தும் அறிவார்கள் பெரிசின் ஓட்டுமாட்டு நரி வேலை எல்லாம் தெரிந்தவர்கள் இப்படி இருக்க இன்னும் ஏன் பூசி மெழுக வேண்டும் இன்னும் ஏன் அவரை உத்தமராக ஊரவர்களுக்கும் தோழர்களுக்கும் ஏமாற்றவேண்டும் பெரியவரின் சம்பவம் சம்பந்தமாக பதிவு நாடார்கள் மணி கட்டியவர்கள் மூலம் உங்களுக்கு அனுப்பிய போது நீங்களும் அதை இன்னும் தோழருக்கு போட்டு காட்டவில்லை என கேள்வியுற்றேன் ஏன் இந்த நிலை நீங்க தோழர்களுக்கு போட்டு காட்ட வில்லை எனில் இதை அச்சு வடிவிலோ நாடவடிவிலோ பெருசுக்கு மணிகட்டியவர்கள் தோழர்களுக்கு வெளியிட உள்ளார்கள் என அறிந்தோம் இனிமே நீங்கள் அதை மறைப்பது சரியல்ல எந்த நிலையில் பார்த்தாலும் அவரின் பெயரை வைத்து இனி ஸ்தாபனம் வளர்க்க வேண்டிய அவசியமில்லை தனிநபருக்காக இல்லாமல் ஸ்தாபனத்துக்காக தோழர்களை உருவாக்குவோம் பெரிசின்ர சம்பவத்தை கேள்வியுற்று கலங்கிய தோழர்களின் சரி கொழும்பு யாழ் மக்களும் சரி கவலைப்படுவதாக தெரியவில்லை உங்களுக்கு பொறுப்புகளும் தொல்லைகளும் கூடுதலாக இருக்கும் அது வேறு இந்தியாவில் நின்றபொடியளோ வானொலியில் சம்பவத்தை கேள்விப்பட்டு சந்தோசம் கொண்டாடியவர்கள் உண்டு[வேலூர் ] வேறு என்ன எதற்கும் நன்கு யோசிக்கவும் அலுவலகத்துக்கெல்லாம் அவர்களை வர விட வேண்டாம் என்று சொல்லி விட்டீர்கள் தயவுசெய்து குறைநினைக்க வேண்டாம் தவிர்க்க முடியாது உங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன் அலுவலகத்துக்கு விலாசத்துக்கு அனுப்பவும் நன்றி
அன்புடன் கே எல் ராஜன் தேதி 1/10/1989
ஆட்சி ராஜன் கடிதம்
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் வன்னிப் பிராந்திய ராணுவ பொறுப்பாளர் மாணிக்கம் தாசன் அவர்களுக்குப்
முள்ளிக்குளஅடிக்கு பின் நீங்களும் அறிந்திருப்பீர்கள் நாமும் அறிந்தவை எங்கள் எல்லோரையும் விட நீங்கள் பெரியவரைப் பற்றி கூட தெரிந்தவர் பெரியவர் இறப்புக்கு முன்பும் முள்ளிக்குள அடிக்கு பின்னும் நீங்கள் உட்பட எல்லோருமே கதைத்த கதைகள் உண்மை அவரை தூக்கி எறிய வேண்டும் என்று நீங்களும் அந்த நேரத்தில் இருந்த முக்கியமானவர்கள் என்ற முறையில் மாறன் எஸ் ஆர் செலி கந்தப்பா காண்டீபன் பிரதீபன் மதன் ஜெயா இவர்களை விட ஓசி வீட்டில் இருந்தவர்கள் எல்லோரும் பெரியவரை விடக்கூடாது என்றுதான் கதை தீர்கள் தற்போது ஏன் நீங்கள் இவருடைய கொலையை இயக்க ரீதியாக உரிமை கோரவில்லை நீங்களும் எப்படி கதைத்தீர்கள் என்று எனக்கும் தெரியும் நீங்கள் தற்போது உங்களுக்கு ஒன்றும் தெரியாதது போல நாடகம் நடிக்கிறீர்கள் உங்களுக்கு சிறையில் இருந்து வந்தவர்கள் ஏதாவது செய்துவிடுவார்கள் என்று பயமா அல்லது உங்கள் பதவிகள் பட்டங்கள் இல்லாமல் போய்விடும் என்று நோக்கமா அல்லது இயக்கம் உரிமை கோரினால் இயக்கத்தை விட்டு முன்பு விலகிய பழைய நண்பர்கள் இயக்கத்துக்குள் வந்தால் உங்களுடைய பதவிகள் இல்லாமல் போய்விடும் என்றார் இவைகள் எல்லாம் காரணம் இல்லை என்றால் தற்போது இருக்கும் முக்கிய உறுப்பினர்கள் என்ற ரீதியில் நீங்கள் லண்டன் கிருஷ்ணன் எஸ் ஆர் மாறன் காண்டீபன்டீ டீ ர் சித்தார்த்தர் ஆனந்தி மாணிக்கம் பிள்ளை வெற்றிச்செல்வன் சாம் முருகேசு திவாகரன்ஷீர்லி கந்தப்பா மற்றும் சிறையில் இருந்தவர்கள் இல் குரு பிரகாஷ் வசந்தன் விசு இவர்கள் எல்லோருமே மனம் திறந்து ஓபன் ஆக கதைத்து ஒரு முடிவு எடுக்கலாம் தானே உண்மையிலேயே நீங்கள் எமது இனத்திற்காகவும் அனைத்து மக்களுக்காகவும் தான் தான் போராடுகிறீர்கள் என்றால் இயக்கத்தின் புரியாமல் இருப்பவர்களுக்கும் புரிய வைக்கலாம் நானே உங்களுடைய மனசாட்சிப்படி நீங்கள் எல்லோரும் சற்று சிந்தித்துப் பாருங்கள் பெரியவர் ஒரு இனத் துரோகி என்ற பெயர் வாங்காமல் தலைவர் என்ற முறையில் இறந்துவிட்டார் அது எனக்கு மிகவும் கவலை ஏன் என்றால் நான் இதை குறிப்பிடுகிறேன் என்றால் எமது இனத்திற்காக போராட வெளிக்கிட்ட அவரை எமது இனத்திற்கே யார் என்று தெரியாது சிங்கள இன மேடைப் பேச்சுக்களில் ஈடுபட்டு உள்ள சிங்கள இனத்திற்கு அவரை என்றும் தெரியும் தமிழினத்துக்கு தான் யார் என்று தெரியாது அவர் விட்ட தவறை தான் இப்போதும் எமது இயக்கமும் தலைமையும் விடுகிறது உதாரணம் ஒன்று எமது இயக்கம் தற்போது கொழும்பில் உள்ளது என்னை இயக்கத்தால் கட்டுப்படுத்த முடியாமல் கூலிப்படையிடம் காட்டிக் கொடுத்து உள்ளீர்கள் இது ஒரு கோழைத்தனம் இதை செய்தவர்கள் உண்மையிலேயே இனத் துரோகிகள் பெரியவருடைய கொலை தொடர்பாக நீங்கள் விட்ட அறிக்கை ஒன்றில் 7 பேர் பிரிந்து போனவர்கள் என்று விட்டீர்கள் அந்த ஏழு பேரையும் சந்தித்தபோது அவர்கள் எனக்கு சொன்னார்கள் கொலை நடப்பதற்கு முன்பே அப்போது இருந்தவர்களில் நூற்றுக்கு 90 வீதமானவர்கள் க்கு தெரியும் என்று உங்களுக்கும் தெரியும் என்று நீங்கள் சொன்னீர்கள் என்று சொன்னார்கள் நீங்கள் சொன்னீர்கள் ஆம் நான் கொழும்பில் நிற்கும் போது செய்ய வேண்டாம் என்றும் நான் வவுனியா போனபின் செய்யும்படி சொன்னீர் கலாம் ஏன் இப்போது மாறி நிற்கிறீர்கள் தலைமைப் பதவி பறிபோய்விடும் என்ற அல்லது உயிர்மீது ஆசையா என்று எனக்கு புரியவில்லை நீங்கள் பத்திரிகையில் கொடுத்த 7 பேருடைய கருத்துக்கள் கசட் மூலம் பதிவு செய்துள்ளார்கள் என்றும் உம்மிடம் அனுப்பி உள்ளார்களாம் அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று ஒரு முடிவு தரும்படியும் அப்படி ஒரு முடிவும் அவர்களுக்கு கொடுக்காவிட்டால் அவர்கள் போராட்டத்தை விட்டு ஒதுங்கும் நோக்கம் அவர்களுக்கு இல்லை எமது இனத்துக்காக போராடுகின்ற நல்ல சக்திகளுடன் சேர்ந்து போராடும் நோக்கம் அவர்களுக்கும் இருக்கு அப்படி நல்ல சக்திகளுடன் சேர்ந்து இனத்திற்கு எதிராக செயல்படும் சில குழுக்களுக்கு எதிராக செயல்பட வேண்டியிருக்கும் என்றும் அவர்கள் கூறினார்கள் இவர்களுக்கு உரிய முடிவு எந்த முடிவாக இருந்தாலும் சரி சென்னை அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கவும் என்னை பொருத்தவரைக்கும் உங்களுக்கு ஓரளவுக்கு தெரிந்து இருக்கும் என்று நினைக்கிறேன் எமது இயக்கம் மாநாட்டுக்குப் பின்னர் கூட பெரியவர் எனக்கு சில கட்டளைகள் போட்டார் எஸ்ஆர் மாறன் பிரதீபன் மதன் ஜெயா ஆகியோரை சுடும் படியும் நான் அவர்களுக்கு சொன்னது எனது முகத்தில் நீங்கள் விழிக்கக் கூடாது என்றுதான் சொன்னேன் எனக்கு இயக்கத்தைப் பற்றி ஒன்றும் தெரியாமல் நான் இருக்கவில்லை எல்லாம் தெரிந்துதான் இருக்கும்போது இருந்தேன் கந்தசாமி அண்ணர் இருக்கும்போது ஒரு மொக்கன் அவர் என்றுதான் எல்லாரும் சொல்லுவார்கள் அவர் அப்படிப்பட்டவர் அல்ல ஏனென்றால் முள்ளிக்குள மாநாடு நடத்தப் போகினம் மாநாட்டுக்கு முன்னால் எனக்கும் எனக்கும் வெற்றி செல்வத்துக்கும் சொன்னார் மாணிக்கத்தை தூக்கி எறிவது போல தான் மாநாடு நடத்தப் போகினம் அப்படி தூக்கி எறிய விடக்கூடாது என்று சொன்னார் அப்போது நான் கேட்டேன் ஏன் அப்படி சொல்கிறீர்கள் என்று இந்த காலகட்டத்தில் மாணிக்கத்தை தூக்கி எறிந்தால் இயக்கம் நடத்த முடியாது என்று சொன்னார் இன துரோகிகளை இனம் கண்டு அழிக்க வேண்டியது எங்கள் எல்லோருக்கும் உரிமை உள்ளது என்றும் எமது இனத்தின் போராட்டத்தை விட்டு ஒதுங்குவது இல்லை உடன் பதில் சென்னை அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கவும் நன்றி இப்படிக்கு ஆட்சி ராஜன் தேதி 12/10/1989
No comments:
Post a Comment