நான் எனது அனுபவங்களை எழுதும் போது, எமது இயக்கத்தின் சார்பாக டெல்லியில் இருக்கும் போது, எனது அரசியல், தகவல் தொடர்புகளோடு மத்திய இந்திய மத்திய உளவுத்துறை அதிகாரிகளை சந்திக்கும் பொறுப்பும் என்னிடம் கொடுக்கப்பட்டிருந்தது. அதே மாதிரி சென்னையில் இருக்கும் மத்திய மாநில உளவுத்துறை அதிகாரிகள் சந்திக்கும் பொறுப்பு வேறு ஒரு இயக்கத் தோழர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. நாங்கள் நேரடியாக எமது செயல் அதிபருக்கு சந்திப்புகள் பற்றி ரிப்போர்ட் பண்ணுவோம். இது எங்கள் இயக்கத்தில் மட்டுமல்ல ,எல்லா விடுதலை இயக்கங்களும் தங்கள் தங்கள் இயக்கத்தின் சார்பாக குறிப்பிட்ட சிலரை மட்டும் மத்திய மாநில உளவுத் துறை அதிகாரிகளை சந்திக்க நியமித்து இருந்தார்கள். இந்த இயக்கங்களின் சார்பாக நியமித்த அவர்கள் மட்டுமே நேரடியாக கட்சிகளின் தலைவர்களுக்கும், இந்திய உளவுத் துறை அதிகாரிகளுக்கு இடையே பாலமாகசெயல்பட்டார்கள். அதற்காக செயல்பட்டவர்களை இந்திய உளவுத் துறைகளின் முகவர்கள் என்று கூறுவது தவறு. இந்த நடைமுறைகளை அறியாமல் சில அறிவுஜீவி எழுத்தாளர்கள் வெளிநாடுகளில் இருந்து கொண்டு, இலங்கை அரசின் முகவர்களாக செயல்பட்டு இன்றுவரை இருந்து கொண்டு, நான் இந்திய உளவுத்துறைகு முகவராக செயல்படுவதாக எழுதி பெருமை கொள்வதாக பதிவுகள் போட்டுள்ளார்கள். இப்படி எழுதியவர்கள் 2009 கடைசி யுத்த நேரத்தில் இலங்கை அரசின் நேரடி முகவர்களாக செயல்பட்டு, வெளிநாடுகளில் இலங்கை அரசுக்கு எதிராக நடந்த போராட்டங்களை பற்றியும் யார் யார் போராட்டங்களில் ஈடுபட்டார்கள் என்பதையும் விபரங்கள் கொடுத்து, பின்பு இலங்கை போய் இலங்கை அரசின் பல உதவிகளை பெற்ற கதைகளும் நாங்கள் கேள்விப் பட்டுள்ளோம். வெளிநாடுகளில் போய் வசதியான வாழ்க்கை வாழ்ந்துகொண்டு, இலங்கை அரசின் முகவர்களாக செயல்படுவது பற்றி வெட்கப்பட வேண்டும்.
ஆட்சி ராஜன் கொழும்பிலிருந்து சென்னை வரும்போது நானும் சபாநாதன் குமாரும் போய் விமான நிலையத்திலிருந்து அழைத்து வந்தோம். வரும்போது சபாநாதன் ஆட்சி ராஜனிடம் கேட்ட கேள்வி ஏன் உமா மகேஸ்வரனை பிடித்து வைத்து அடித்து விசாரணை செய்து பின்பு சுட்டுக் கொன்றிருக்க வேண்டும். அப்படிச் செய்யாமல் உடனடியாக சுட்டுக் கொன்றது தவறு என்று சபாநாதன்கவலைப்பட்டார். அப்படி கவலைப்பட்ட சபாநாதன் பின்பு ஆட்சி ராஜனின் பண உதவியால் ஜெர்மனிக்கு போய் அங்கிருந்து லண்டன் போனர். லண்டன் போனபின்பு, என்ன காரணமோ தெரியவில்லை, உமாமகேஸ்வரன் மாதிரி ஒரு தலைவர் இல்லை, அவரைக் கூலிப்படை கொலை செய்து விட்டது என்று இன்றுவரை புலம்புகிறார். ஆட்சி ராஜன் இடமே பணத்தை வாங்கி வாழ்ந்துவிட்டு இன்று ஆட்சி ராஜனை கூலிப்படை என்று கூறுகிறார். இப்படி பல பேர் இருக்கிறார்கள்.
ஆட்சி ராஜனின் ஏற்பாட்டில் இயக்கத்துக்கு சம்பந்தமே இல்லாத இருவர் சென்னை வந்தார்கள். விக்கி என்ற தெகிவளை தொலைபேசி நிலையத்தில் வேலை செய்தவர். ஆட்சி ராஜன் மற்றும் நமது இயக்க தோழர்கள் அங்கிருந்துதான் தொலைபேசியில் எல்லா இடமும் பேசுவார்களாம். உமா மகேஸ்வரன் கொலைக்கு பின்பு அவர்களை தேடி போலீசார் வந்து தொல்லை கொடுத்து இருக்கிறார்கள். அதனால் விக்கி பயந்து போய் இருக்க ஆட்சி ராஜன் சென்னை அழைத்து வந்து விட்டார். மற்றவர் ஜெயபாலன். இவர் இப்போது லண்டனில் தேசம் நெட் ஜெயபாலன் என்றால் எல்லோருக்கும் தெரியும். இவரை கூட்டிக் கொண்டு வந்த காரணம், முள்ளிக்குளம் தாக்குதலில் இறந்த வசந்தின் தம்பி என்றும் வசந்த் தனக்கு நெருங்கிய நண்பனாக இருந்தாலும், தள மாநாட்டுக்கு முன்னும் பின்னும் செயலதிபர் உமாமகேஸ்வரன் பற்றிய உண்மைகளை தோழர்களிடம் பயப்படாமல் எடுத்துரைத்தது அதனால் வசந்துக்கு தள மாநாட்டின் பின்பு செயலதிபர் பல விசாரணைகளை வைத்தது அது சம்பந்தமாக பழைய எனது பதிவில் வருகிறது. வசந்தின் முயற்சியால்தான் பல தோழர்கள் செயலதிபர்பற்றியஉண்மை நிலை அறிந்து அவருக்கு மரண தண்டனை கொடுக்க ஆதரவு தெரிவித்ததாக ஆட்சி ராஜன் கூறினார். வசந்தின் குடும்பம் கஷ்டத்தில் இருப்பதால், தான் வசந்தின் குடும்பத்துக்கும் உதவி செய்ததோடு, வசந்தின் தம்பியை வெளிநாட்டுக்கு அனுப்பி விட்டால் அவர்கள் குடும்ப கஷ்டம் தீரும் என்று எமக்கு ஆட்சி ராஜன் விளக்கமளித்தார்.
ஆட்சி ராஜன் ஏற்பாட்டின்படி, நான்தான் ஒரு வெளிநாட்டு ஆட்களை அனுப்பும் இலங்கை தமிழர் மூலம், குறைந்த செலவில் ஜெயபாலனை லண்டனுக்கு அனுப்பி வைத்தேன். சில வருடங்களின் பின் தேசம் நெட் ஜெயபாலன் அம்மா, ஊரிலிருந்து ஒரு பெண்ணை அழைத்து வந்து ஆட்சி ராஜனுக்கு திருமணம் செய்து வைத்தார். அதோடு தேசம்நெற் ஜெயபாலன் காதலித்து வந்த பெண்ணையும் கூட அழைத்து வந்து, தேசம் நெட் ஜெயபாலனுக்கு ம் திருமணம் நடந்தது.
எமது கழகத்திலிருந்து முதன்முதலில் செயலதிபர் உமா மகேஸ்வரனுக்கு எதிராக பிரிந்த தீப்பொறி குழுவின் காந்தன் என்றழைக்கப்பட்ட ஜான் மாஸ்டர் இலங்கையில் தலைமறைவாக இருந்தது வசந்தின் வீட்டில். அங்கிருந்துதான் ஜான் மாஸ்டர் உமா மகேஸ்வரனை கொலை செய்யவும், உமா மகேஸ்வரனுக்கு விசுவாசமான கழக முக்கியஸ்தர்களை கொலை செய்ய திட்டம் தீட்டியதாக தெரிந்தது.. கடைசியில் வசந்தன் வீட்டில் தங்கியிருந்து விடுதலைப்புலி கிட்டுவுக்கு கை குண்டு வீசியது தான் தான் மிச்சம்.
தனது வீட்டில் ஜோன் மாஸ்டர் தங்கியிருந்தது வசந்துக்கு தெரியாது.
இந்திய இலங்கை ஒப்பந்தத்திற்கு பின் உமா மகேஸ்வரனின் கட்டளைக்கு அமைய, பணம், தங்கம், போதைப் பொருள் வாங்கி இலங்கைக்கு அனுப்ப வசந்த் தலைமையில் இருந்த ரகசிய குழுவினர் தமிழ்நாட்டில் கொலை கொள்ளை போன்ற பாரிய சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு , இலங்கைக்கு உமா மகேஸ்வரனுக்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார்கள். கடைசியில் ஆரம்ப காலங்களில் எங்களுக்கு உதவி செய்த ஒரத்த நாட்டைச்சேர்ந்த இளவழகன் ஐயும், ராமசாமி என்ற தமிழ்நாட்டு காரர்களை உமா மகேஸ்வரனின் கட்டளைப்படி கொலை செய்ய முயன்ற போதுதான் , சித்தார்த்தனும் நானும் வசந்துக்கு புரியும் படி பல புத்திமதிகளையும் உண்மைகளையும் கூறினோம். இதன் பிறகுதான் வசந்த் தாங்கள் ஏன் இயக்கத்துக்கு வந்தோம், அப்போது தாங்கள் செய்யும் வேலைகள் என்ன, இயக்கத் தலைமை தங்களை ஒரு விடுதலை இயக்க போராளி என்ற இடத்திலிருந்து விலகி தங்களை ஒரு சமூக விரோதியாக மாற்றியது பற்றி சிந்தித்த கவலைப்பட்டு இதையே பல தோழர்கள் இடம் எல்லாம் கூறி , இயக்கத் தோழர்களுக்கு உண்மைநிலையை விளங்கப்படுத்தி கடைசியில் முள்ளி குளத்தில் வீரமரணம் அடைந்தார்.
ஆட்சி ராஜன் எமது வடபழனி அலுவலகம் வந்து போவார். அங்கிருந்ததோழர்களும் ஆட்சி ராஜனிடம் மிக நெருக்கமாக பழகினார்கள். சித்தார்த்தன் வரவேண்டாம் என்று கூறினாலும், இயக்கம் செய்த மரண தண்டனை, தனிப்பட்ட முறையில் செயலதிபர் உமா மகேஸ்வரனை நாங்கள் கொலை செய்யவில்லை. எமது இயக்கத்தின் அரசியல் கட்சித் தலைவர், கழகத்தின் ராணுவத் தலைவர் மற்றும் கழக முக்கியஸ்தர்கள் கூடி எடுத்த முடிவின் படி, மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இப்போது உங்கள் செயல் எல்லாம் ஏதோ நாங்கள் மட்டும் தான் செய்தது போலவும், நீங்களெல்லாம் ஒன்றும் தெரியாதவர்கள் போல் நடிப்பது தவறு என்று சித்தார்த்தன் இடம் நேரடியாக கூறினர்.
கொழும்பிலிருந்து சேம் முருகேஷ் சென்னை வருவதாகவும் எங்கள் எல்லோரிடமும் முக்கிய விடயம் பேசவேண்டும் என்றும் கூறினார்.
சென்னை வந்த சாம்முருகேசு எங்களுடன் வடபழனி அலுவலகத்தில் தங்கினார். பல விடயங்களை கூறினார்
தொடரும்.
No comments:
Post a Comment