பகுதி 105
நவம்பர் 1989 கடைசியில் இலங்கையிலிருந்து சிலர் வந்தனர்.அவர்களில் இதுவரை பெயர் நன்றாக ஞாபகம் இருக்கிறது. ஒருவர் உமா பிரகாஷ் , விசு (லிங்கநாதன்)வந்தவர்களில் சிலர் வடபழனி அலுவலகத்திலேயே தங்கினர். சிலர் வெளியில் தங்கியிருந்தார் கள். ஆட்சி ராஜன் நேரடியாக அலுவலகம் வந்து அவர்களை சந்தித்துப் பேசினர். அவர் அவர்களிடம் வற்புறுத்தியது மத்திய குழுவை கூட்டங்கள், தேவை ஏற்படின் விசாரணை கமிஷன் வையுங்கள் . அப்போது எல்லா தோழர்களுக்கும் முன்னாலும் எல்லா உண்மைகளையும் கூறத் தயாராக இருக்கிறோம், முன்பு நாங்கள் அனுப்பிய கேசட், உப்பட கடிதங்களை கூட தோழர்களுக்கு போட்டு காட்டப்படவில்லை என்று கூறினார். அவர்களும் கடிதங்கள் கேசட் பற்றி தங்களுக்கு ஒன்றும் தெரியாது என்று கூறினார்கள். அதோடு மேலும் ஆச்சி ராஜன் கூறும்போது, பல உண்மைகள் தோழர்களுக்கு தெரியும் முன்பு ,எங்களை கொலை செய்ய முயற்சிகள் நடப்பதாக தெரிகிறது. சித்தார்த்தன், மாணிக்கம் தாசனை நேரடியாகவே குற்றம் சாட்டினார்.
பின்பு உமா பிரகாஷ், விசு போன்றவர்கள் என்னிடம் தனியாக செயலதிபர் உமாமகேஸ்வரர் மரணதண்டனை பற்றிய விபரங்கள் கேக்க , முள்ளிக்குள எமது தோழர்களின் இறப்புக்கு பின்பு கொழும்பில் நின்ற கிட்டத்தட்ட 40 கழகத் தோழர்களுக்கும், செயலதிபர் இன் கொலையில் பங்கு இருக்கிறது என்று கூறினேன்.
அவர்களும் சித்தார்த்தன், மாணிக்கம் தாசனுக்கு பங்கு இருக்கிறதா எனக் கேட்டார்கள். நான் இருக்கிறது என்று கூறினேன்.. அவர்கள் இருவரும் , குறிப்பாக உமா பிரகாஷ் மாணிக்கம் தாசனுக்கு இந்த கொலையில் உள்ள தொடர்பை விபரமாக எழுதித் தரும்படி கேட்டார்கள். அப்படி எழுதித் தந்தால் தோழர்களுடன் காட்டி, உண்மையை கொண்டுவரமுடியும் என்றார்கள். அவர்களின் பேச்சு உண்மையை வெளிக் கொண்டு வருவதைவிட மாணிக்கம் தாசனுக்கு எதிராக மட்டுமே இவர்கள் செயல்படுவதாக தோன்றியது. நானும் முதலிலேயே இரண்டு கடிதங்கள் , கேசட்கொடுத்துள்ளேன், நீங்கள் முயற்சி செய்து அந்தக் கேசட், கடிதங்களை பெற்று, தோழர்களிடம் காட்டும்படி கூறினேன். 2 , 3வருடங்களின் பின் உமா பிரகாஷ் எமது இயக்கத்தில் இருந்து விலகி இலங்கை அரசின் ஆதரவுடன் புதிய இயக்கம் தொடங்கியபோது கொழும்பு நகருக்கு அருகிலுள்ள ஒரு இடத்தில் உள்ள வீட்டில் வைத்து மாணிக்கம் தாசன் நண்பர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார் என அறிந்தேன்.
விசு என்னோடு அலுவலகத்தில் வேலை செய்ய வந்துள்ளதாக கூறினார்.அதேநேரம் மாணிக்கம் தாசன் நம்பிக்கையான சில தோழர்களுடன் படகில் வந்து, ராமேஸ்வரத்தில் ஒரு லாட்ஜில் தங்கி உள்ளார். அந்த நேரம் தமிழ்நாடு கியூ பிரான்ச் போலீசார் சோதனையில் கைது செய்யப்பட்டு இருக்கிறார். அப்பொழுது அங்கு வருகை தந்திருந்த க்யூ பிராஞ்ச் எஸ் பி திரு சுப்ரமணியம் அவர்கள் அவர்களை விசாரித்த போது,தான் புளொட்இயக்கத்தைச் சேர்ந்தவர் என்றும்,தனது பெயர் தாசன் என்றும் கூறியுள்ளார். எஸ்பி சுப்ரமணியம் உடனடியாக தனது சென்னை அலுவலகம் மூலம் என்னை தொடர்பு கொண்டு கேட்க எனக்கு அப்போதுதான் மாணிக்கம் தாசன் மற்றும் சில தோழர்கள் வந்திருப்பது தெரிந்தது. நான் அவர்கள் எங்கள் இயக்கம்தான் என்று கூற, எஸ் பி ஒரு கியூ பிராஞ்ச் அதிகாரி மூலம் அவர்களை சென்னை வடபழனி அலுவலகத்தில் ஒப்படைத்து, ஒரு கடிதம் வாங்கி சென்றார்.
இந்த நிகழ்வு எனக்கு ஒரு மிகப் பாதுகாப்பாக அமைந்தது. அவர்கள் அங்கு பிடிபடாமல் இருந்திருந்தால் அவர்கள் வந்ததே எங்களுக்கு தெரிந்திருக்காது. உண்மையில் அவர்கள் வந்தது ஆட்சி ராஜன் நண்பர்களை சுட்டுக் கொள்வதற்கு, முடிந்தால் எனக்கும் மரண தண்டனை தான். இப்போது எனக்கு எதிராக அவர்களால் ஆயுத ரீதியாக எதுவும் செய்ய முடியாது காரணம் கியூ பிரான்ச்.
மாணிக்கம் தாசன் உடன் வந்த தோழர்களில் ஒருவர் பெயர் டுமால். இந்த டுமாள் நான் சென்னைக்கு பொறுப்பாக வந்தபோது, இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பின் இலங்கை எம்பஸ்ஸி போய் துப்பாக்கி பிரயோகம் செய்த வழக்கில் கிட்டத்தட்ட ஒன்றரை வருடத்துக்கு மேல் சென்னையில் சிறையில் இருந்தவர். நான் வந்த பின்பு தான் வழக்கை முடித்துவெளியில் எடுத்தேன். என்னோடு பல மாதங்கள் இருந்த அவர். அவர் தனியாக என்னை சந்தித்து அண்ணா உங்களில் எனக்கு நல்ல மதிப்பு இருக்கிறது. தாசன் அன்னை சொன்னபடி ஆட்சி ராஜன் , மற்றவர்களை நாங்கள் சுட்டுக் கொலை செய்யத்தான் போகிறோம். நீங்களும் அவர்களோடு தொடர்பு வைத்து இருக்கிறீர்கள் என கதை உண்டு. நீங்கள் அவர்கள் தொடர்பை விட்டு விடுங்கள். இல்லையென்றால் தாசன் அண்ணா கூறினால் உங்களையும் சுடுவேன் என்று கூறினான். நான் சிரித்துக்கொண்டே போய் விட்டேன். மாணிக்கம் தாசன் குரூப் வந்த நோக்கம் தெரிந்துவிட்டது. இந்த டுமால் பற்றி பின்பு எழுதுகிறேன்.
மாணிக்கதாசன் பெரிய அளவாக பேச்சுவார்த்தை இல்லை. தோழர் விசுவுக்கு சென்னையில் எனது வேலைகளை, அதிகாரிகளை அறிமுகப்படுத்த சொன்னார். எனக்கு விளங்கி விட்டது. விரைவில் ஆட்சி நண்பர்களோடு சேர்த்து என்னையும் கொலை செய்யக் கூடும் என்று. ரகசியமாக ஆட்சி ராஜன் நண்பர்களுக்கு நிலைமையைவிளங்கப்படுத்தி யோசித்தோம். ஆட்சி ராஜன் நண்பர்கள் தாங்கள் பாதுகாப்பாக இருந்து கொள்வதாகவும், என்னைத்தான் மிகவும் கவனமாக இருக்கும் படியும், சபாநாதன் குமார் மாணிக்கம் தாசன் ஆட்களோடு நெருங்கிப் பழகிக் கொண்டு அதேநேரம் எனக்கும் பாதுகாப்பாக இருப்பார் என்றும் ராஜன் கூறினார். அதோடு எக்காரணம் கொண்டும் சபாநாதன் குமாரோடு மாணிக்கம் தாசன் மற்றும் தோழர்கள் பார்க்கக்கூடிய விதமாக பேச வேண்டாம் என்றும் கூறினார். நான் பொறுப்பில் இருக்கும் வரை சபாநாதன் குமார் எனக்கு மறைமுகமாக பாதுகாப்பாக இருந்தது. பெரிய பலமாக இருந்தது.
தோழர் விசுவுக்கு கொஞ்சம் கொஞ்சமாக கியூ பிராஞ்ச் அதிகாரிகள், IB, Raw அதிகாரிகளை அறிமுகம் செய்தேன். விரைவில் நான் இலங்கைபோகப் போவதாகவும், சிலவேளைகளில் விசு தான் இங்கு எமது இயக்கம் சார்பாக பொறுப்பாளராக வருவார் எனவும் தெரிவித்தேன். ஆனால் விசு பொறுப்புக்கு வர அவசரப்பட்டு, அந்த அதிகாரிகளை தனியாக சந்திக்கும் போது, அரசியல் நிலைமைகள் பேசுவதை விட, என்னைப் பற்றி மோசமான பிரச்சாரங்கள் செய்துள்ளார். அவர்கள் என்னிடமே இதைக் கூறி, இன்னமும் உங்கள்இயக்கம் திருந்த இல்லை போல என்று கூறி வருத்தப்பட்டார்கள்.
நான் விசுவுக்கு எனக்கு நெருங்கிய அரசியல்வாதிகளை குறிப்பாக திமுக அரசியல்வாதிகளை அறிமுகப்படுத்தவில்லை. காரணம் அவர்களிடமும் போய் கழகம் மற்றும் அரசியல் பேசுவதை விட்டு என்னை குறை கூறி பேச மட்டும் தான் செய்வார் என்று தெரியும். நானும் உடனே உடனடியாக என்னிடமிருந்த நான்செலவழித்தகணக்கு வழக்குகள் என்பவற்றை கொழும்பு ஆனந்தி அண்ணாவுக்கு அனுப்பினேன். காரணம் அவர்களிடம் கொடுத்தால் கிழித்து விடுவார்கள். எமது இயக்கம் எனக்கு தெரியக் கூடியதாக சொத்துக்கள்ஒன்றும் இயக்கப் பெயர் களில் இருக்கவில்லை. பணமும் இருக்கவில்லை கடன் தான் இருந்தது. இலங்கையிலிருந்து இயக்கத்துக்கு வசந்த் தலைமையில் தமிழ்நாட்டில் இருந்துதான் கொள்ளையடித்து, தங்க கட்டிகள் மற்றும் போதைப் பொருள் அனுப்பி சொத்து சேர்த்தார் கள். ஆனால் செயலதிபர் உமாமகேஸ்வரன் தமிழ்நாட்டில் பல பினாமி பெயர்களில் எஸ்டேட்டுகள் வாங்கியிருப்பதாக பின் தளமாநாட்டில் குற்றம் சாட்டப்பட்டது. உண்மையில் நமதுஇயக்க பொருளாளர் இருக்கு எந்த எந்த வழியில் இயக்கத்துக்கு பணம் வருவது என்று தெரியாது. செயலதிபர் கொண்டு வந்து கொடுக்கும் பணத்தைத் தான் வரவு என்று இயக்க பொருளாளர் எழுதிக் கொள்வார். இயக்க பண வரவுகள் சம்பந்தமாக சந்ததியார் காலத்திலிருந்து பல பிரச்சனைகள், பின்தள மாநாடு வரை நடந்தது தெரியும். அதன் பிறகு எந்த மத்திய குழு உறுப்பினர்களும் பணம் சம்பந்தமாக செயலதிபர் உடன் பிரச்சினை படவும் இல்லை. அதைப் பற்றி கவலைப் படக் கூடிய நிலையிலும் யாரும் இருக்கவில்லை.
மாணிக்கம் தாசன், ஆச்சி ராஜன், நண்பர்களை தேடி திரிவதை அறிந்துகொண்டேன். புதிதாக வேறு சில தோழர்களும் இலங்கையிலிருந்து வந்திருப்பதாகவும், சில ஆயுதங்கள் கூட வைத்திருப்பதாகவும், சபாநாதன் குமார் எச்சரித்தார். ஆச்சி ராஜன் சபாநாதன் ஐ வைத்து மாணிக்கம் தாசன் நடவடிக்கைகளை கண்காணித்தார். ஆனால் மாணிக்கம் தாசன் சபாநாதன் குமாருக்கும் ஆட்சி ராஜனுக்கும் உள்ள சுழிபுரம் தொடர்பை வைத்து, சபாநாதன் குமாரை சந்தேகப்படுவது காட்டிக்கொள்ளாமல் மாணிக்கம் தாசன் நடந்துகொண்டார். தாசன் சபாநாதன் குமார் எப்படியும் ஆட்சி ராஜனை சந்திப்பார் அப்போது ஆட்சி ராஜனை போடலாம் என்று போட்ட கணக்கின் படி, சபா ஆச்சு ராஜனின் சந்திக்கும்போது,, ஆட்சி ராஜன் எச்சரிக்கையாக இருந்தபடியால் பல நேரங்களில் தப்பியுள்ளார். நாங்கள் கூறினோம் சிலவேளை சபா நாதன் தாசனுக்கு சந்திக்க போவதை பற்றிசொல்லி இருப்பார் என்று, ஆனால் ஆச்சி ராஜன் நம்பவில்லை. மாணிக்கம் தாசன் சபாநாதன் குமாரை சந்தேகப்பட்டு பின் தொடரலாம் என்று கூறினார். இதே எச்சரிக்கையை சபாநாதர் இடமும் கூறி தன்னை சந்திக்க முயற்சி எடுக்க வேண்டாம் என்று கூறினார்.
இப்படியான ரகசியமான உள் போராட்டங்கள் நடந்துகொண்டிருக்கும்போது, நான் இயக்கத்தை விட்டு விலகும் நேரம் வந்துவிட்டதை உணர்ந்தேன். முதலில் பாதுகாப்பாக இருப்பதற்காக ரகசியமாக அடையாரில் ஒரு ரூம் பார்த்து வைத்துக் கொண்டேன். பின்பு சென்னை கியூ பிரான்ச் அதிகாரிகளுக்கு ஒரு கடிதம், மாணிக்கம் தாசனுக்கு ஒரு கடிதம், இயக்க மத்திய குழுவுக்கு (CRB) ஒரு கடிதம் அனுப்பினேன்.
தொடரும்.
No comments:
Post a Comment