பகுதி 91
நான் இதற்கு முன்பு போட்ட பதிவுக்கு, பணத்துடன் இயக்கத்தை விட்டு வெளிநாட்டு க்கு ஓடிய பலர் நான் உண்மைகளைஎழுதக் கூடாது என்பதற்காக தங்கள் தகுதிக்கேற்பமிகவும் கீழ்த்தரமான ஆபாசமான படங்களை போட்டு கருத்து என்ற பெயரில் ஆபாச முறையில்எச்சரிக்கை விடுத்தார்கள். அவர்களது ஆபாசக் கருத்துக்களை எடுத்து விட்டதோடு, அவர்களையும் தடை செய்து உள்ளேன்.
அமிர்தலிங்கம், யோகேஸ்வரன் படுகொலை எங்களைவெகுவாகப் பாதித்திருந்தது. அமிர்தலிங்கத்தை பற்றிய பலவித மாற்றுக்கருத்துக்கள் இருந்தாலும், அன்றைய நிலையிலும் சரி, அதன் பிறகு இன்றுவரை ஈழத்தமிழர்களின் பிரச்சனையை தெள்ளத்தெளிவாக, வரலாற்று ரீதியாக சர்வதேச மட்டத்தில் எடுத்து வைக்கக்கூடிய ஒரு தலைவர் இல்லை என்பதே என் கருத்து.
சிங்களத் தலைவர்கள் திட்டமிட்ட முறையில் ஆரம்ப காலங்களிலிருந்து சிங்களக் குடியேற்றங்கள் ஏற்படுத்தி தமிழர்களின் பாரம்பரிய இடத்தை பிடித்தார்கள். அதன் பிறகு பண்பாடு, கலாச்சாரங்களை அழிக்க யாழ் நூலகத்தை தீயிட்டுக் கொளுத்தினார்கள். அதுவும் சில எம் தமிழர்களின் உதவியோடு தான் செய்ததாக அறிய முடிந்தது. அதன்பின்பு முடிந்த அளவு தமிழ் விடுதலை இயக்கங்களில் ஊடுருவி தமிழர்களின் சிந்திக்கக்கூடிய, எதிர்கால தமிழர் தலைவர்களாக வரக் கூடியவர்களை துரோகிகள் என்று கூறி கொலை செய்வித்தார் கள்.
எல்லாவற்றுக்கும் உச்சகட்டமாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமிர்தலிங்கம் போன்ற, திறமையான தமிழர் தலைவர்களை அழித்தொழிக்க இலங்கை ஜனாதிபதி பிரேமதாசா கொழும்பில் பல உதவிகள் செய்துள்ளார். அதற்கு அப்பொழுது பேசப்பட்ட காரணம் அமிர்தலிங்கம் போன்ற தலைவர்கள் இருக்கும் வரை இந்தியா சமாதான பேச்சுக்களை ஏற்படுத்தி இலங்கையில் தலையிடாக் கூடிய சந்தர்ப்பம் இருக்கும் என்று.இப்படியாக துரோகி என்று கூறி தமிழ் தலைவர்களையும், சிந்திக்கக்கூடிய புத்திஜீவிகளையும் படுகொலை செய்வது நாங்கள் நேரடியாக இலங்கை சிங்கள அரசுக்கு, ( அதாவது சிங்கள அரசு தான்செய்ய வேண்டியதை எமது தமிழ் விடுதலை இயக்கங்களை கொண்டு கொலை செய்தது) உதவி செய்வதாகவே அமைந்தது. இதில் எல்லாஇயக்கங்களும் பெருமை வேறு துரோகிகளை அழித்துவிட்டோம் என்று.
அமிர்தலிங்கம் போன்ற தலைவர்களை தமிழ் விடுதலை இயக்கங்கள் சரியாக பயன்படுத்தவில்லை என்பது என் கருத்து. இந்திராகாந்தி காலத்தில்,இந்தியா அமிர்த லிங்கத்தை முன்னிறுத்தி , ஒரு சிறந்த தீர்வு திட்டத்தை முன்னெடுக்கப் போவதாக பெரியவர் ஜி பார்த்தசாரதி எல்லா இயக்கத்தலைவர்களிடமும் தெள்ளத்தெளிவாக தெரிவித்த பின்பு, எல்லா விடுதலை இயக்கங்களும் அமிர்தலிங்கத்தை ஒதுக்கி, எதிரியாகப் பார்த்தார் கள். இது பற்றி நான் முன்பே ஒரு பதிவு போட்டுள்ளேன். எல்லா விடுதலை இயக்கங்களும் அமிர்தலிங்கத்தை விட தாங்கள் தான் இந்தியாவுக்கு மிக விசுவாசியாக இருப்பதாக காட்டிக்கொள்ள எத்தனை எத்தனை நாடகம் போட்டார்கள்.
சித்தார்த் தரும், நானும கொழும்பிலிருந்து ஆட்சி ராஜன் இடமும் மாணிக்கம் தாசன் இடமும் அடிக்கடி தொடர்பு கொண்டோம்.. அப்பொழுது ஆட்சி ராஜன் செயலதிபர் உமாமகேஸ்வரணும், நானும் கொழும்பில் அமிர்தலிங்கத்தின் செத்த வீட்டுக்கு போனதாகவும், திரும்ப வரும்போது, செயலதிபர் படபடப்பாக இருந்ததாகவும் தங்களை பாதுகாப்பு பற்றி எச்சரிக்கை செய்ததாகவும் கூறினார். அவர் பயந்த காரணம் பிரேமதாசா. அத்துலத்முதலி க்கும் செயலதிபர் உமா மகேஸ்வரனுக்கு ம் இருந்த நட்பு முதலில் இருந்தே பிரேமதாசாவுக்கு பிடிக்கவில்லை என்று கதை இருந்தது.
கூடுதலாக ஆட்சி ராஜன் முக்கிய விஷயத்தை கூறினார்.18/07/1989 காலை 10 மணிக்கு சிங்கப்பூர் போகும் விமானத்தில் உமா மகேஸ்வரன், முஸ்லிம் பெயரில் சிங்கப்பூர் பயணம் போகப் போவதாகவும், சிங்கப்பூர் போக அவர் ஒரு வழிப்பாதை டிக்கெட் எடுத்து (one-way), தங்களுக்கும் தெரியாமல் அங்கிருந்து வேறு நாட்டு போவதற்கு தனியாக ரகசியமாக ஒரு டிக்கெட் வைத்துள்ளார் என்றும் எந்த நாடு என்று தங்களால் அறிய முடியவில்லை என்றும் கூறினார். 18ஆம் தேதிக்கு முன்பு அவருக்கு இயக்க முக்கிய தலைவர்கள் முடிவு செய்தபடி மரண தண்டனை வழங்கப்படும் என்று கூறினார். மாணிக்கம் தாசன் தொலைபேசி எடுத்து செயலதிபர் வெளிநாடு போவது குறித்து உறுதி செய்தார். அத்தோடு மாணிக்கம் தாசனுக்கு ஒரு சந்தேகம். செயலதிபர் உமா மகேஸ்வரனுக்குமேல் நடவடிக்கை எடுக்கும் போது, ஆட்சி ராஜன் தன்னையும் சுடலாம் என்று. சித்தார்த்தன் மாணிக்கம் தாசன் இடம் அப்படி ஒன்றும் நடக்காது, வேண்டுமென்றால் தாசன் போய் வவுனியாவில் இருக்கும்படியும், உமா மகேஸ்வரன்சம்பவம் நடந்த பின்பு கொழும்பு வந்து அடுத்த நடவடிக்கைகளை தொடரும் படியும் கூறினார்.
சித்தார்த்தர் இந்த சமயம்தான் இந்தியாவில் இருக்க விரும்பவில்லை என்று கூறி, அமிர்தலிங்கத்தின் செத்த வீட்டுக்கு யாழ் போகப் போவதாக கூறி, அதற்குரிய ஏற்பாடுகளை செய்து இந்திய ராணுவ அமைதிப்படை விமானத்தில் சித்தார்த்தரை யாழ்
அனுப்பினேன்.15, அல்லது 16ஆம் தேதி என்று நினைக்கிறேன், ஆட்சி ராஜன் தொலைபேசி எடுத்து சித்தாத்தர் இடம் பேசவேண்டும் என்றார். நான் சித்தார்த்தர் யாழ் போனா விடயத்தை கூறினேன். ஆக்சிஜன் சித்தார்த்தன் புத்திசாலித்தனமாக யாரும் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளமுடியாத இடத்துக்குப் போய் விட்டதாக கூறினார். மேலும் ஆச்சி ராஜன் எனக்கு புதிதாக ஆச்சரியப்படத்தக்க விஷயங்களை கூறினார். காருடன் காணாமல் போன செயலதிபர் உமா மகேஸ்வரனின் பாதுகாவலரும் , வாகன சாரதி யாக இருந்தவருமான தோழர் இராபினை மாணிக்கம் தாசன் ரகசியமாக கொண்டு வந்து தன்னிடம் ஒப்படைத்ததாகவும், ராபினாய் கூடபயன் படுத்திக்கொள்ளும்படி தன்னிடம் கூறியதாகவும் கூறினார். உண்மையில் செயலதிபர் உமாமகேஸ்வரநுக்கும், இராபினுக்கும் கடும் பிரச்சனை வந்தவுடன் மாணிக்கம் தாசன், காருடன் ராபின்னை கூட்டிப்போய் மிக இரகசியமாக நம்பிக்கையான சிங்கள நண்பரிடம் ஒப்படைத்துள்ளார். காரை விற்று விட்டார். யாருக்கும் இந்த விஷயம் தெரியாது. பின்னாட்களில் ராபின்மிக விபரமாக இந்த விடயத்தை எங்களிடம் கூறினார். சுவிஸில் இருக்கும்போது இந்த பல உண்மைகளை ராபின் பகிரங்கமாக பல பேருடன் கூறி திரிந்ததால் அவர் கொலை செய்யப்பட்ட முக்கிய காரணமாயிற்று.
இதேநேரம் மாணிக்கம் தாசனும் சித்தருடன் அவசரமாக பேச வேண்டும் என்று கூறினார், சித்தர்யாழ் போன விஷயத்தை கூறி, என்ன விபரம் என கேட்க, தான் உடனடியாக வவுனியா போவதாகவும் அங்கிருந்து தொடர்பு கொள்வதாகவும் கூறினார்.
சிவசிதம்பரம், யோகேஸ்வரன், அமிர்தலிங்கம் |
17/07/1989 அன்று மதியம் ஆட்சி ராஜன் தொலைபேசி எடுத்து, சித்தார்த்துக்கு சில தகவல்கள் கூறமுடியுமா எனக்கேட்டார், நான் எந்த வசதியும் இல்லை என்று கூறினேன். நாளை காலை செயலதிபர் வெளிநாட்டுக்கு போகப் போகிறார். அவருக்கு எதிரான சம்பவம் இன்று நடக்கும் என நினைக்கிறேன். எமது இராணுவத்தளபதி மாணிக்கம் தாசன் பச்சைக்கொடி காட்டி விட்டு வவுனியா போய்விட்டார். செயலதிபர் தனது அதிஉயர் ராணுவபாதுகாப்பு இருந்த இடத்திலிருந்து சில பயணம் சம்பந்தப்பட்ட ஏற்பாடுகளுக்காக தங்களுடன் பம்பலப்பிட்டி தொடர் அடுக்குமாடி குடியிருப்பில் வந்து தங்கள் பாதுகாப்பில்தங்கியுள்ளதாகவும், தனக்கு மிக கவலையாக இருப்பதாகவும், ஆனால் இயக்க நன்மைக்காக இயக்கத்தின் முக்கிய தலைவர்கள் எடுத்த முடிவுக்கு தான் கட்டுப்படுவதாக கூறினார்.
மாணிக்கம் தாசன் வவுனியா போக முன்பு, லண்டன் கிருஷ்ணன் தமிழ்நாடு வந்து சென்னை மயிலாப்பூரில் உள்ள சவேரா ஹோட்டலில் தங்கியிருந்தார். எனக்கு போன் எடுத்து கொழும்பில் எதுவும் விசேஷம் என்றால் தனக்கு உடனடியாக கூறும்படி கூறினார்.
ஆட்சி ராஜன் கூறியதைக் கேட்ட எனக்கு மிக கவலையாக இருந்தது. செயலதிபர் உடன் பழகிய நாட்கள், தனிப்பட்ட முறையில் அவரின் நல்ல குணங்கள் எல்லாம் மனக்கண்முன் வந்து போயின. ஆனாலும் விடுதலை இயக்கத் தலைவர் என்ற முறையில் அவர் நடந்து கொண்ட முறைகள், சிங்கள அரசின் பாதுகாப்பு அமைச்சரின் நட்பை பெற்றுக் கொண்ட பின்பு அவரின் நடவடிக்கைகள் இயக்கத்தையும் போராட்டத்தையும் காட்டிக் கொடுப்பது ஆகவே இருந்தது. திறமை மிக்க தலைவன் என்ன காரணத்துக்காக இந்த நிலையை எடுத்தார். சென்னை தாஜ் ஓட்டலில் இலங்கை தூதுவர் அறையில் என்ன நடந்தது. தாஜ் ஓட்டல் சந்திப்புகளுக்கு பின்புதான் அவர் முற்றுமுழுதாக இலங்கை அரசின் ஆதரவாளராக ரகசியமாக மாறிப்போனார் என்பதுதான் உண்மை. இந்த பல உண்மைகள் பல பேருக்கு தெரியாது. தெரிந்த சிலரும் இதைப்பற்றி பேச விரும்பவில்லை.
இரவு பத்து பதினோரு மணி போல் ஆட்சி ராஜன் தொலைபேசி எடுத்து இருக்கிறார் ஆனால் தொலைபேசி உரிமையாளர் எமது வீட்டு ஓனர் என்னிடம் கொடுக்கவில்லை. இரவு நேரமாகிவிட்டதால் காலை எடுக்க சொல்லியுள்ளார். ஆட்சி ராஜனும் அவரிடம் காலையில் என்னிடம் கூறும்படி ஒரு செய்தி சொல்லி இருக்கிறார். இரவு எட்டு மணி போல் அந்த சம்பவம் நடந்து விட்டது என்று கூறும்படி கூறியுள்ளார்.
காலையில வீட்டு உரிமையாளர் ஆட்சி ராஜனின்தொலைபேசி செய்தியை கூறகேட்டு, எதிர்பார்த்த செய்தி என்றாலும் மிக அதிர்ச்சியாகவும் கவலையாகவும் இருந்தது.
தொடரும்
That's it...
ReplyDelete