பகுதி 103
வெற்றிச்செல்வன் |
நாங்கள் அநியாயமாக அழிந்து விடுவோம். தாசன் அண்ணே இல்லாவிட்டால் பொடிகள் எல்லாம் ஓடி விடுவார்கள் இல்லையென்றால் எதிரிகள் அழித்து விடுவார்கள். என்று தாசனை ஒரே அடியாக புகழ்ந்தார். ஒரு மாதம் பின்பு முகுந்தன் ஓடு முள்ளிக்குளம் போய்விட்டு வந்து கூறினார், அப்போது ரூமில் ஜபார் உம் இருந்தார். தாசன் ஏக்கத்தை அழிவுப்பாதையில் இட்டுச் செல்வதாகவும், பொடியல் பெரியவர் இல்லாவிட்டால் மாணிக்கம் தாசனை சுட்டுக் கொண்டு இருப்பார்கள். தாசன் பல பெண்களுடன், பொடியலுடன் கூடாத தொடர்பு, ஒரு பொடியனை களத்தில் வைத்து மறைமுகமாக கொன்றதாகவும் இப்படி தாசனுக்கு எதிராக பல குற்றச்சாட்டுகளை கூறினார். அதிர்ச்சியாக இருந்தது. எனக்கு கழக முகாம்கள் இருக்கும் இடங்கள் தெரியாததால் நான் அவரிடம் ஒரே.ஒரு கேள்வி கேட்டேன். நீங்கள் எந்த முகாமில் இருந்தீர்கள் என. அதற்கு முருகன் தனக்கு தாசன் ஓடு ஒன்றாய் இவ்வளவு காலம் இருந்தும், ஒன்றும் தனக்கு தெரியாது பெரியவர் வந்தவுடன் பொடியங்கள் கூறத்தான் தனக்கு இது தெரியும் என்றார்.
பின்புதான் அறிந்தேன் முகுந்தன் திட்டமிட்ட முறையில் மாணிக்கம் தாசனுக்கு எதிராக ஒரு திட்டமிட்ட எதிர்ப்பு பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளார்,என எப்படி கழகத் தலைமை? தவறு செய்தால் உடனடியாக தவறை திருத்தச் சொல்ல வேண்டும். தவறுகளை செய்ய விட்டு, நேரம் வரும் போது தனக்கு சாதகமாக பயன்படுத்துவதா ஒரு விடுதலை இயக்கத்தின் தலைவரின் கடமை?
பல தோழர்களுக்கு தெரியாது சங்கிலி கந்தசாமி யும், நானும் மிக நெருங்கிய நண்பர்கள். கடைசி காலத்தில் முள்ளிக்குளம் கழுவி காட்டில் பல உண்மைகளை மனம் திறந்து பேசினோம். கவலைப் பட்டோம். தாசனுக்கு எதிரான பிரச்சாரத்தை முறியடிக்க வேண்டும். தாசன் முக்கியமான ஆள். எமது ராணுவ தளபதியை ஏன்அன்று தாசன் தான் PLOTE செயலதிபர் முகுந்தனால் சொல்லப்பட்ட அவரை கேவலப்படுத்தி அந்நிய பட விடக்கூடாது என்பதில் கந்தசாமி மிக உறுதியுடன் இருந்தார். இதைப்பற்றி பேச முகுந்தன் இடம் நானும் கந்த ரூம் போனபோது முகுந்தன் இதைப்பற்றிப் பேச எம்மிடம் மறுத்துவிட்டார்.
இங்கு ஆறு தோழர்கள் பிடிபட்டபோது, இங்கு ஆட்சி ராஜனும் இருந்தார். இருவரும் முகுந்தனிடம் தொடர்புகொண்டு உடன் advacate(வக்கீல்) கட்ட பணம் 25000 அனுப்பச் சொன்னோம். அதற்கு அவர் தாசன் மூலம் பதில் கூறினார். Phone தாசன் கூறிய பதில் இப்ப பிடி பட்டவர்களை விட. மாட்டார்கள். அதனால் காசுக்கட்டி அநியாயமாக காசை செலவழிக்க வேண்டாம். தேவையானால் ஜெயிலில் அடிக்கடி போய் பாருங்கள் என்று. இவர்கள் ஆறு பேரும் இயக்கத்துக்காக பிடிபட்டவர்கள். பல லட்சங்களை கொள்ளை அடித்து கொடுத்தவர்கள். இவர்களை நாம் பயன்படுத்திவிட்டு விட்டுவிடுவதா?
அண்மையில் இங்கு வந்த ரவி மூர்த்தி வரும்போது ஒரு சதம் காசு கூட கொண்டு வரவில்லை . இங்குள்ள கஷ்டம் கூட தெரியும். அதோடு பக்தனின் கஷ்டத்தைப் பார்த்து வெளிநாடு போக அவசரமாக தேவை என பதினையாயிரம் கேட்டபோது, அவசரமாக கடன் வாங்கி கொடுத்தேன். அவர் போகவில்லை அவர் அதில் 10000 தான் ஏஜென்சி கட்டிவிட்டு எனக்கு பொய் கூறி 2000 செலவுசெய்துவிட்டார். மிகுதி 3000 திரும்ப நான் பெற்றுக்கொண்டேன் இந்த விபரம் சுதனுக்கு தெரியும். விபரம் அவரிடம் கேட்கவும். பின்பு ரவி மூர்த்தி ஓடு பத்தன் இலங்கை போக அவர் கட்டிய 10,000 ரூபாயை வாங்கி ரவி மூர்த்தியும் பக்தனும் நான் எவ்வளவோ கெஞ்சிக் கேட்டும் வாங்கிய கடனை கொடுக்க அல்லது ஜெயிலில் உள்ளவர்களுக்கு கட்ட வீட்டு வாடகை கட்ட என கேட்டும் ஒரு ரூபா சரி திரும்ப தரவில்லை. பத்தாயிரம் செலவு செய்து தமது வீட்டுக்கும் நண்பர்களுக்கும் சாமான்கள் வாங்கிப் போனார்கள். நான் கோபமாக பத்தனிடம் கேட்டபோது அவர் கூறினார் நீர் பொறுப்பில் இருக்கும் படியால் எமது செலவுக்கும் ஏன் நாம் வீட்டுக்கு சாமான் வாங்கித் தரக் கூட நீர் தான் கடன் வாங்கி தர வேண்டியது உமது கடமை என்று. எப்படி தோழர்களின் தோழமை.
இங்கு ஜெயிலில் இருப்பவர்களின் நலனை கூட பார்க்க வசதி இல்லை. அவர்களுக்கு சாரம் கூட வாங்கிக் கொடுக்க கஷ்டமாக உள்ளது. வழக்கு விசாரணைக்கு வந்துவிட்டது. தூக்கா அல்லது ஜெயில் வாசமா என தெரியாது . அந்ததோழர்கள் என்னையே தங்கள் விடுதலைக்கு நம்பி உள்ளார்கள்.. என்னால் இயன்றவரை அவர்களுக்கு உதவி வருகிறேன்.
கடிதம் தொடர்கிறது
இதைவிட சிரிப்பு. ரவி மூர்த்தி மார்க்கோ விடம் தாசனுக்கு நடராஜர் சிலை வாங்கி வரும்படி 500 ரூபாய் கொடுத்துள்ளார். மார்க்கோ சிலை கிடைக்காததால், அக் காசை வைத்திருக்க நான் jail உள்ள நண்பர்களுக்கு சாமான்கள் வாங்க 500 ரூபாய் கேட்டபோது மார்க்கோ மறுத்துவிட்டார். ரவி மூர்த்தியிடம் பிரச்சனை வரும். அவரிடமே ஆகாச கொடுக்க வேண்டும் எனக் கூறினார். நான் கடன் வாங்கி கொடுத்த காசை இன்றுவரை பொறுப்பாக எல்லா தோழர்களையும் தேவைகளை கவனித்து அவர்களை கஷ்டப்படுத்தாமல் உதவி செய்த எனக்கே மார்க்கோ அக் காசை தரவில்லை. இது பெரிய தொகை அல்ல. அதோடு இலங்கையில் அக் காசுக்கு வேலையும் இல்லை. இதிலிருந்து மார்கோ எப்படி ரவி மூர்த்தியுடன் பய படுத்தப்பட்டுள்ளார் என தெரிகிறது. இது சம்பந்தமாக மார்க்கோ விடம் வாங்கிய கடிதத்தை இணைத்துள்ளேன்.
அனைத்து தோழர்களுக்கும் முடிவாக கூறுவது எனக்கு தோழர் தோழமையில் நம்பிக்கை விட்டுவிட்டது. என்னை கழகத்திலிருந்து விலகினாலும் சரி, எப்படியாயினும் நான் விலகுவதாக தீர்மானித்துள்ளேன். எனது கடமைகள் இரண்டு உண்டு. (1) இங்கு நீங்கள்ஓர் புதிய தோழரை குடும்பம்ஆக அனுப்புங்கள்.அவருக்கு எமது தொடர்புகளையும் வேலைகளையும் கற்றுக் கொடுக்க வேண்டும். எனக்கு மிக நெருங்கிய எம்பி , எம்எல்ஏ மாரை அறிமுகப்படுத்துகிறேன். இங்கு அனுப்பும் தோழரே எக்காரணம் கொண்டும் இராணுவ மற்றும் மறைமுக வேலைகளுக்கு பயன்படுத்த வேண்டாம். குடும்பம்ஆக அனுப்பினால் இங்கு police பிரச்சனைகள் இருந்தும் தப்பிக்கலாம்.
(2) இரண்டாவது இந்த ஜெயிலில் உள்ள ஆறு பேரையும் எப்படியும் வெளியில் எடுக்க வேண்டும் அதற்கு தாமதம் செய்யாமல் பண உதவி செய்யுங்கள். எமக்குள்ள கருத்து வேற்றுமைகள் எப்படி இருந்தாலும் முதலில் இவர்களை எடுக்க உதவி செய்யுங்கள். வழக்கு நடக்கிறது. தாமதம் செய்வது தோழர்களுக்கு பாதகமாக முடியலாம். புதிய பொறுப்பாளர் இடம் எனது சகல வரவு செலவுகளையும் கணக்கு விபரங்களையும் முறையாக ஒப்படைக்கிறேன். நான் விலகுவதற்கு முக்கிய காரணம் என்னை ஒரு பொறுப்பாளராக கணிக்காமல் எனக்கு அங்கு நடக்கும் எந்த விபரமும் அண்மையில் நடந்த அரசியல் பேச்சு வார்த்தைகள் கூட அறிய தரவில்லை. ஆனால் லண்டன் மட்டும் அறிக்கைகள் எல்லாம் அனுப்பப்படுகிறது. லண்டன் ஓடு தொடர்பு கொண்டு அந்த அறிக்கைகளை நான் பெற்றேன். சுதனிடம் விபரம் கேட்கவும். கடந்த காலத்தைப் போல் வெற்றி இயக்கத்தில் விசுவாசமாய் இருந்தால் போதும், வெற்றிக்கு அரசியல் கழக நிலைமைகள்தெரிய தேவையில்லை, என நினைக்கும் எமது தலைவர்களோடு நான் வேலை செய்யத் தயாராக இல்லை.
சித்தாத்தர் கூட இலங்கை போனது முதல் இன்றுவரை தொடர்பு கொள்ளவில்லை. எமது குறையைக் கூறினால் கூறுகிறார்கள் எனக்கு போன் எடுத்து 5000 ரூபாய், செலவு என்று. யாருக்கு கதை விடுகிறார்கள். புது ஆபீஸ் போன் நம்பர் கூட தரவில்லை. அண்மையில் அவசரமாக தொலைத்தொடர்பு கருவிகள் அனுப்புவது சம்பந்தமாக யாரிடம் எப்படி தொடர்பு கொள்வது என தெரியாமல், சாம்முருகேசு நம்பருக்கு போன் அடித்தால் சாமின் மனைவி சாந்தி இடம்தான் கழக வேலைகள் பற்றி கதைக்க வேண்டியுள்ளது. அவாவும் ஆபீஸ் இலக்கம் தரவில்லை. பின்பு மிக கடுமையாக பேசிய பின்பு தான் ரகசியம் என்று நமது கழக போன் நம்பர் தந்தா. சாமின் மனைவி கழகத்தில் அவ்வளவு முக்கிய இடமா? இந்த விபரம் சுதணுக்கு தெரியும். விபரம் கேக்கவும். இன்றுவரை கழகத்துடன் கடிதம் தொடர்புகொள்ள எனக்கு எந்த முகவரியும் தெரியாது. எனக்கு அவர்கள் அறிவிக்கவில்லை ,அவ்வளவு ரகசியமா?
நன்றி. உடன் தோழர்களின் பதிலை எதிர்பார்க்கிறேன்.
இப்படிக்கு
அன்புடன் நட்புடன்
த. வெற்றிச்செல்வன்.
நாங்கள் அனுப்பிய கடிதங்களுக்கு பதிலாக எமது வடபழனி அலுவலக முகவரிக்கு எனக்கு ஒரு மொட்டை வான்கடிதம் வந்தது.
இயக்கத்திற்குநான் எழுதிய கடிதங்கள் |
தொடரும்
No comments:
Post a Comment