பகுதி 102
வெற்றிச்செல்வன் |
கடிதம் எழுதிய திகதி
02/11/1989
த. வெற்றிச்செல்வன்
11 தேசிகர் வீதி வடபழனி
சென்னை 26
2/11/89
நண்பர் மாணிக்கம் தாசன் ஊடாக அனைத்து கழக அங்கத்தவர்களுக்கு
நான் கழகத்தில்1982ஆண்டு கடைசி மாதங்களில் சேர்ந்து இன்று வரை வேலை செய்து வந்தேன். கழகத்தில் இருந்தும் இன்றுவரை எனக்கு ஏற்பட்ட இரண்டு இழப்புகள் , முதலாவது 83 இந்திய பயிற்சிக்கு அலுவலக வேலை செய்ய ஆள் இல்லை எனக்கூறி மறுக்கப்பட்டதும் அடுத்து PLO பயிற்சிக்கு உதவி செய்ய பணிக்கப் பட்டதாலும் பயிற்சி பெறும் வாய்ப்பை பலமுறை கேட்டும் மறுக்கப்பட்டது. இரண்டாவது டெல்லியில் இருக்கும் போது பலமுறை எமது முகாம்களை பார்க்க தோழர்களை சந்திக்க பழக கேட்டும் மறுக்கப்பட்டது.
இவை இரண்டும் இன்றும் என்னை கழகத் தோழர்களிடம் இருந்து இருந்து தூரவே வைத்திருக்கின்றன. அண்மையில் நண்பர் ரவி மூர்த்தி இங்கு வந்தார் . சாம் முருகேசு வவுனியாவில் வந்து நான் ஜெயா, மதன், K.L ராஜன் துரோணன், ஆட்சி ராஜன் போன்றவர்களுடன் தொடர்பு வைத்திருப்பது வைத்திருப்பதாக கூறியதாகவும், அதனால் தாசனும் அங்குள்ள தோழர்களும் கோபப்பட்டு தன்னை கேட்க தான் இங்கு வந்து என்னை விசாரிப்பதற்காக வும் வந்ததாக கூறி, இவர்களிடம் தொடர்பு வைத்திருந்தால் கழகத்தில் தொடர்ந்து இருக்க முடியாது எனக் கூறினார். இலங்கையில் நான் நின்ற காலத்தில் (15/0189 முதல் 30/03/89 வரை) வெளியில் இருந்த நான் கதைத்த எல்லாத் தோழர்களும்( சிறையில் இருந்தவர்கள் தவிர )முகுந்தனின் தலைமை கழகத்திற்கும் தமிழ் இனத்துக்கும் துரோகத்தனமாக மாறிவிட்டதை நேரடியாகவும் மறைமுகமாகவும் ஏற்றுக்கொண்டனர் அதன் பின்பு முள்ளிக்குளம் சம்பவத்துக்குப் பின்னர் முகுந்தன் ஓர் அளிக்கப்பட வேண்டிய சக்தி இந்த துரோக சக்தியை அழிப்பதன் மூலம் தமிழ் இனத்தை காப்பாற்ற முடியாவிட்டாலும் கழகத் தோழர்களை சரி காப்பாற்ற வேண்டும் என்ற கருத்தில் அன்று இருந்த தோழர்களும் தமக்குள் கூடிக்கூடி கதைப்பதாக அறிந்தேன் .நான் அன்று கொழும்பிலும் சரி இன்றும் சரி முகுந்தன் அழிக்கப்படவேண்டிய சக்தி என்பதில் உறுதியாக இருக்கின்றேன் ..சந்தர்ப்ப வாதத்துக்காக அல்லது போலி வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு மறுக்கவில்லை ஆனால் இன்று உங்களில் எத்தனை பேர் உண்மையை மறைத்து ஒரு சில தோழர்களை மட்டும் இதில் ஏன் பலிகடாவாக்க பார்க்கிறீர்கள்? சிறையில் இருந்து வந்த நுதோழர்கள் கோபப்படுவதில் உண்மை உண்டு . அவர்களுக்கு நடந்த உண்மைகள் தெரியாது. அவர்களுக்கும் உங்களை எல்லாம் நன்றாய் தெரியும். கஷ்டமான காலங்களில் எல்லாம் ஒன்றாய் வாழ்ந்தவர்கள் நீங்கள் எல்லாம்.நடந்த விபரங்களை எல்லாம் கூறி எப்படி எப்படி முகுந்தனின் தலைமை கழகத் தோழர்களையும் கழகத்தையும் அழித்தது என்ன விளங்கப் படுத்தியும் மூத்த தோழர்கள் கடந்த வருடங்களில் அவர் எப்படி இலங்கை அரசோடு மறைமுக நட்பு வைத்து கழகத்தையும் இனத்தையும் காட்டிக் கொடுத்தார் என்ன விளக்கி இருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு உண்மையை மறைத்து சிலரை பலியாகுவதக்கு நான் உடன்பட மாட்டேன். இது பலியாக்கபட்ட தோழர்களில் யாரும் என்னோடு நெருங்கி பழகியதில்லை. அதிலும் சிலரை கொழும்பில் வைத்து தான் எனக்குத் தெரியும்.
கடந்த காலங்களில் நானும் முகுந்தனின் மிக விசுவாசியாக தான் இருந்தேன். அனுபவமும் தலைமையின் செயல்பாடுகளும் திட்டமிட்ட முறையில் ஓர் மிகப் பெரிய இயக்கத்தை அழிய விட்டும், எத்தனையோ சிரமங்களுக்கு மத்தியில் கடைசிவரை அவரோடு அவர் தலைமையை ஏற்று இருந்த தோழர்களை அழித்தும்,அழிய விட்டும்தோழர்களை காப்பாற்ற எந்த முயற்சியும் செய்யாமல் கொழும்பில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்ததையும் பார்த்தபோது எனக்கு தனிப்பட்டவர்களை விட கழகமும், மக்களும் தான் முக்கியம் என நினைத்தேன்.
எந்த ஒரு தோழனும் தான் இயக்கத்துக்கு வரும்போது ஒரு தனிப்பட்ட தலைவனின் சொகுசு வாழ்க்கைக்காக தனது மானம் மரியாதை கடைசியில் உயிரையும் விட்டது எமது இயக்கத்தில் தான். எமது ஆயிரக்கணக்கான தோழர்கள் இருந்த காலத்தில் நாம் சாதித்தது என்ன?
நூற்றுக்கணக்கான தோழர்கள் உயிரிழந்தார்கள். இதில் எத்தனை பேர் வந்த நோக்கத்துக்காக கொள்கைக்காக தமது உயிரை தியாகம் செய்தார்கள். அவர்களுக்கு முறையான அஞ்சலி செலுத்தப்பட்டதா? அவர்களின் விபரம் உள்ளதா? ஏன் கலுவில் காட்டில் வைத்து நாம் முகுந்தன் இடம் பேசிக்கொண்டு இருக்கும்போது கூறினார் வாசு,கண்ணன், சுபாஷ் போன்ற தோழர்கள் கொல்லப்பட்டது தனக்கு இயற்கையே உதவி செய்து விட்டதாகவும், இல்லாவிட்டால் அவர்கள் இன்று தனக்கு எதிராக மாறி விட்டிருப்பார்கள் என்றும் கூற, தோழர்வசந்த் மட்டும் இப்படிகூறியதை எதிர்த்தார். இப்படி கூறலாமா?
அதோடு இரண்டாவது கழக மாநாட்டில் தெரிவுசெய்யப்பட்ட கழகத் தோழர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமான காண்டீபணையும், சுரேசையும் மொக்கங்கள் எனக்கூறி ஆனந்தியை யும், திவாகரணையும் போடச்சொல்லி என்னையும், K.Lராஜனையும் வற்புறுத்தி பயமுறுத்தியது. அதோடு காலத்துக்காக வாழ்ந்த தோழர்களை மொக்கண்கள் இவர்கள் அடிபடத் தான் சரி, கொள்கைக்காக புதிய தோழர்களை மலையகத்தில் சேர்ப்பதாகவும் கூறியது எல்லாம் சரியா? (இது பற்றிய விபரம் சாம் முருகேஷ் விடம் கொடுத்த மூன்று கேசட்களில் உள்ளது. இந்த முக்கியமான கேசட் தோழர்களிடம் போட்டுக் காட்டவில்லை என்பதை அறிய வியப்பாய் உள்ளது)
கழகத்தில் நடந்த சம்பவங்களுக்கு கழக அங்கத்தவர் என்ற முறையில் எனக்கும் பங்கு பொறுப்பு உண்டு. அதேநேரம் முகுந்தனின் மறைவிட்கும் இப்படி ஒரு சம்பவம் நடக்கலாம் நடக்கும் எல்லா வெளியிலிருந்த தோழர்களுக்கும் தெரியும். ஏன் துரோணன் இந்தியா வந்தபோது நான் துரோணனை வேலூரில் பத்தன், ரவி மூர்த்தி ஓடு தங்க விட்டேன். ரவி மூர்த்தி அதை குணன் மூலம் தாசனுக்கு தெரியப்படுத்த கடிதம் போட்டார். அதில் அவர் எழுதிய வாசகம் துரோணன் ஒரு நல்ல நோக்கத்திற்காக தான் ஈடுபட்டுள்ளார். அவர் துரோகி அல்ல என எழுதிய கடிதம் தயாளன் விலாசம் மூலம் குணேககு எழுதப்பட்டது. யார் இந்த சம் முருகேசு முகுந்தன் மறைந்த பின்பு கொழும்பில் சம்பந்தப்பட்டவர்களை நேரில் சந்திக்கவில்லையா? ஏன் இந்த ஒளிவு மறைவு . முகுந்தன் தலைவராக இருக்கும்போது தான் உண்மைகளை கூட பயப் பட்டோம். நான் இக்கடிதத்தை சிறையில் இருந்து வந்த தோழர்களுக்காக தான் எழுதுகிறேன். ஏனெனில் அவர்களுக்குத் தான் உண்மை நிலை தெரியாது மற்றவர்களுக்கு இப்படி நடக்கும் என தெரியும், அல்லது நிலைமைகளை பார்த்து யோசித்து இருக்கிறார்கள். சிறையில் இருந்து வந்த தோழர்கள் குறிப்பாக விசு குரு போன்றவர்கள் நடந்த உண்மைகளை அறிந்து கொள்ள வேண்டும் அப்படி இல்லை தங்கள் சுயநலனுக்காக உண்மைகளை மறைத்து நயவஞ்சகமான முறையில் பலிகடா வாக்கப்பட்ட தோழர்களை நீங்கள் துரோகிகள் என நினைத்தால் அந்தப் பட்டியலில் என்னையும் சேருங்கள். ஆனால் தொடர்ந்து சந்தர்ப்பவாதிகளால் இந்த ஒரு பெரும் இயக்கத்தை அழிய விட்டுவிடாதீர்கள். PLOTE இல் இருக்கும் அல்லது விலகி நிற்கும் தோழர்களுக்கும் என்றும் PLOTE தான். தங்கள் இனிய வாழ்க்கையே அதற்கு பலியிட்டவர்கள். எங்கிருந்தாலும் PLOTE விட்டுக் கொடுக்காதவர்கள் என்பதை அறியுங்கள்.
அடுத்த மாநாட்டில் கடந்த கால வரலாறுகளை ஆராய்ந்து புதிய திருப்பத்தை தமிழ் மக்களுக்காக படைக்க உங்களை வாழ்த்துகிறேன். தோழர்கள் விரும்பினால் நாம் கடந்த காலங்களில் விட்ட, எனக்குத் தெரிந்த உண்மைகளை எழுத்து மூலம் அறியத்தருகிறேன். அதுபோல் இன்று இருக்கும் பல முன்னணி தோழர்களுக்கும் பல உண்மைகள் தெரியும். கழக, தமிழ்மக்களின் நலனை முன்னிட்டு கடந்த பல வருடங்களில் சம்பவங்களை எழுத்து மூலம் சமர்ப்பிக்க முன்வரவேண்டும் . எமது கழகம் திடீரென உடையவில்லை. கண்முன்னே படிப்படியாகத்தான் உடைந்து வந்தது. அப்படி இருந்தும் பழைய தலைமை கழகத்தை வளர்க்க முயற்சி செய்யவில்லை. இது முகாமில் இருந்த தோழர்களுக்கு தெரியாது. ஆனால் பொறுப்புக்களில் இருந்த இல்லாத முன்னணி தோழர்களுக்கு தெரியும். மறுக்க முடியாது.
நான் ஜனவரி 89 இல் இலங்கை வந்தபோது முருகன் கூறினார் வெற்றி அண்ணா பெரியவரிடம் கூறி எப்படியாவது இந்தியாவிடம் உதவி பெற செய்யுங்கள்.
எனது கடிதம்
நான் எழுதிய கடிதத்தின் முதல் நான்கு பக்கங்கள் |
தொடரும்
No comments:
Post a Comment