பகுதி 94
வெற்றிச்செல்வன், முருகேசு, உமா மகேஸ்வரன், குகதாசன் |
இலங்கை ஜனாதிபதி பிரேமதாசாவின் நேரடி அழைப்புஇருந்தும் சித்தார்த்தன் உடனடியாக இலங்கை போக விரும்பவில்லை. கொழும்பில் எமது இயக்க அலுவலகங்கள் எல்லாம் போலீசாரால் மூடப்பட்டுள்ளதாக அறிந்தோம். மாணிக்கம் தாசன் மட்டும் உடனடியாக சித்தார்த்தர் வந்து கழகத் தோழர்களை சந்தித்து சமாதானப்படுத்த வேண்டும் என்று அடிக்கடி தொலைபேசி எடுத்து வற்புறுத்திக் கொண்டே இருந்தார். உமா மகேஸ்வரனின் மரணம் நிகழ்ந்து கிட்டத்தட்ட ஒரு வாரத்தின் பின்பு, மாணிக்கம் தாசன், சித்தார்த்தன் வேண்டுகோளுக்கிணங்க, இயக்க சார்பாக உமாமகேஸ்வரன் மரணத்துக்கு உரிமை கோரிய பெயர்களில் உள்ளவர்களில்முதலில் தனித்தனியாக விமானத்தில் கொழும்பிலிருந்து வந்தார்கள். மதன், K.L ராஜன், ராபின் , ஜூட் இவர்களை நானும், சபாநாதன் குமாரும் விமான நிலையம் போய் அழைத்துக் கொண்டு வந்து அமைந்தகரையில் ஒரு ஹோட்டலில் தங்க வைத்தோம். மூவரும் வந்தபின்பு MMDA என்ற இடத்தில் சபாநாதன் குமாரும், நானும் அவர்கள் தங்குவதற்காக ஒரு வீடு எடுத்தோம்.
இவர்கள் சித்தார்த்தனை சந்திக்க விரும்பினார்கள். நுங்கம்பாக்கத்தில் அப்போது இருந்த கன்பத் ஹோட்டலில் ரூம் போட்டு சித்தார்த்தன் இவர்களை சந்தித்தார். நானும் கூட ஒப்இருந்தேன். அவர்களின் கோரிக்கை மாணிக்கம் தாசன், சித்தார்த்தன் கூறியபடி இப்போது இருக்கும் இயக்கத் அங்கத்தவர்களை உடனடியாகக் கூட்டி, மறைந்த செயலதிபர் உமா மகேஸ்வரனின் மரண தண்டனையை இயக்கமே பொறுப்பு எடுக்க வேண்டும். கடந்தகால தவறுகளை எல்லாம், தவிர்த்து நல்ல முறையில் இயக்கத்தை நடத்த வேண்டும். அதோடு வவுனியாவில் அமைதிப்படைசிறையிலுள்ள இயக்கத் தோழர்களே விடுதலை செய்ய முயற்சி எடுக்க வேண்டும். முடிந்தால் மாலைத்தீவு சிறையில் உள்ள இயக்க தோழர்களையும் விடுதலை செய்ய முடியாவிட்டாலும், குறைந்த தண்டனை பெற வழக்கறிஞர்களை வைத்து ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறினார்கள்.
ஆட்சி ராஜனும், மற்றவர்களும் இந்தியா வந்தபிறகு அடுத்து என்ன செய்வது என்று கூடி முடிவெடுப்போம் என்றார். அதோடு வவுனியாவில் இருந்த தோழர்களின் மனநிலையை மாணிக்கம் தாசன் இடம் கேட்டு தெரிந்து கொள்கிறேன் என்றார். ஒரு முடிவு எடுக்கும் முன்பு தயவுசெய்து எமது வடபழனி அலுவலகத்திற்கு வந்து செல்ல வேண்டாம். அது சில பிரச்சினைகளை கொடுக்கும் என்றும் கூறினர் சித்தார்த்தன்.
நானும் சித்தார்த்தனும் பலமுறை இந்திய அதிகாரிகளை சந்தித்து வவுனியாவில் இருக்கும் இந்தியா அமைதிப்படை சிறையில் இருக்கும் தோழர்களே முதலில் விடுவிக்க பலமுறை !பேச்சுவார்த்தைகளை நடத்தி, கடந்தகால தவறுகளை இனிமேல் விடமாட்டோம் என்று சித்தார்த்தன் உறுதிமொழி கூறியதையடுத்து அமைதிப்படை சிறையிலிருக்கும் எமது இயக்கத் தோழர்களை விடுதலை செய்ய கொள்கை அளவில் ஒப்புக் கொண்டார்கள்.
மாலைதீவு சிறையில் இருக்கும் தோழர்களை பற்றி இந்திய அதிகாரிகளுடன் பேசும்போது மாலைதீவு ஜனாதிபதி தான் அதைப் பற்றி முடிவு செய்ய வேண்டும், என்று கூறி விட்டார்கள்.
சித்தார்த்தும் நானும் திருச்சி ஜெயிலில் இருக்கும் இயக்க நண்பர்களை வெளியில் எடுப்பது சம்பந்தமான தொடர் நடவடிக்கையாக எமது வக்கீலிடம் பேசினோம். மிச்சக்காசு தொடர்பாக பின்பு தருவதாக உறுதி கூறினோம்.
உமா மகேஸ்வரன் மரண தண்டனை பற்றி விளக்கம் கூற வேண்டும் என்பதற்காக, பத்திரிகை நண்பர்கள், மற்றும் சில நண்பர்களை சந்திப்பதை தவிர்த்து கொண்டோம். மாணிக்கம் தாசன் தான் அடிக்கடி தொலைபேசி எடுத்து சித்தார்த்தனைஉடனடியாக இலங்கை வரும்படியும், கொழும்பில் நடந்த சம்பவங்கள் தெரியாத வவுனியாவில் இருக்கும் எமது தோழர்கள் உமாமகேஸ்வரன் கொலை சம்பந்தமாக கடும் கோபத்தில் இருப்பதாகவும் அவர்களிடம் நடந்த உண்மைகளை தன்னால் கூற முடியாது இருப்பதாகவும் கூறினார்.
நானும் சபாநாதன் குமாரும் கொழும்பிலிருந்து வந்தவர்களுக்கு வேண்டிய எல்லா உதவிகளையும் செய்து கொடுத்துக் கொண்டிருந்தோம்.
சில நாட்களின் பின் ஆட்சி ராஜன் கொழும்பிலிருந்து வந்து அவர்களுடன் இணைந்து கொண்டார்.
நான் பதிவுகள் போட ஆரம்பித்த காலத்திலிருந்து என்னை உள் பெட்டியில் வந்து, எழுதக் கூடாது என்று மிரட்டல், கொலை மிரட்டல், ஆபாசமாக பேசியவர்களை எல்லாம் நான் முகநூலில் தடை செய்து உள்ளேன்.
உண்மைகளை மறைக்க என்னை திட்டிய கருத்துக்கள் |
உண்மைகளை மறைக்க என்னை திட்டிய கருத்துக்கள் |
சில நண்பர்கள் நான் தடை செய்த நபர்கள் என் பதிவுகளைப் பற்றியும் என்னைப் பற்றியும் போட்ட கருத்துக்களை எனக்கு அனுப்பியிருந்தார்கள். அவற்றையும் கீழே தருகிறேன்.
தொடரும்..
No comments:
Post a Comment