பகுதி 106
நல்ல காலம் மறைந்த செயலதிபர் கழக மத்தியக் குழுவுக்கு தெரியாமல் செங்கல்பட்டு பஸ் கம்பெனியில் வட்டிக்கு கொடுத்த பணத்துக்கு கடைசியாக திரும்ப கொடுக்க வேண்டிய தொகை ஒரு லட்சத்தி 72000 ரூபா பணத்தை மிகவும் நேர்மையாகதிரும்பக் கொண்டுவந்து கொடுத்து, கடன் முடிந்ததாக பத்திரத்தில் கையெழுத்து வாங்கிக்கொண்டு போனார்கள். அவர்கள் கொடுத்த பணம் எல்லா கடன்களையும் அடைத்து, வீட்டு வாடகை எல்லாம் கட்டி மற்றும் எல்லா செலவுகளையும் முடிக்க உதவியது. ஆனாலும் நான் இயக்கத்தை விடும்போது எனக்கு எமது இயக்கம் 12,625/ தர வேண்டி இருந்தது.
அந்தக் கணக்குகள் விபரம் இலங்கையில் இருந்த ஆனந்தி அண்ணாவுக்கு அனுப்பிய கணக்குகளின் சில விபரப் பிரதிகள் என்னிடம் இருக்கின்றன. அவற்றை கீழே போட்டோவாக போட்டுள்ளேன். இந்த கணக்கு,வழக்கு எனக்கு பதியப்பட வேண்டியது முக்கியமாக உள்ளது.
தொடரும்.
No comments:
Post a Comment