பகுதி 99
ரவி மூர்த்தி இலங்கையிலிருந்து வந்த காலம்1989 செப்டெம்பர் கடைசியில்அல்லது ஒக்டோபர் முதல் வாரம் என நினைக்கிறேன். ரவி மூர்த்தி எனக்கு ரகசியமாக வாய்மொழியாக மாணிக்கம் தாசன் கூறியதை பதிவு செய்திருந்தேன். அதேநேரம் என்னோடு அலுவலகத்தில் தங்கியிருந்த தோழர்கள் பார்க்கக்கூடிய விதத்தில் ஒரு கடிதமும் மாணிக்கம் தாசன் எனக்கு அனுப்பியிருந்தார். அதன் விபரம் கீழே
M. தாசன் Jamboo
வவுனியா
22/9/89
அன்பின் தோழர் வெற்றிச்செல்வன் அறிவது
பெரியவரின் சம்பவம் மிகவும் வேதனைகுள் எம்மை தள்ளிவிட்டது
பெரியவர் இல்லாமல் நாம் படும் பாடு இன்று தமிழீழமேஉணர்கிறது
இயக்கங்கள் ஆரம்பித்த பல தலைவர்கள் இன்று இருக்கும்போது நாம் எமது தலைவரயே அழிய விட்டுவிட்டோம். இவ்வாரம் நகரில் முகாம், அலுவலகம் திறந்து செயல்பட உள்ளோம்.
நன்றி
மீதி ரவி மூர்த்தியிடம்
இப்படிக்கு
அன்பின் m. தாசன் Jamboo
கந்தசாமியின் கவலை ஒரு புறம் இருக்க பெரியவரையும் இழந்தாள் எப்படி இருக்கும்.
மாணிக்கம் தாசன் ரவி மூர்த்தி மூலம் ரகசியமாக சொல்லிவிட்ட எச்சரிக்கையும், அதேநேரம் அவரிடம் கொடுத்துவிட்ட பகிரங்கமாக எல்லா தோழர்களும் வாசிக்கக்கூடிய மாதிரி கடிதமும், மாணிக்கம் தாசன் தனக்கு செயலதிபர் உமாமகேஸ்வரன் மரணத்தில் தனக்கு எந்தவித தொடர்பும் இல்லை நிரூபிக்க எடுக்கும் முயற்சிகளும் தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது. ஆச்சி ராஜனும் நண்பர்களும் ஏன் நானும்கூட சித்தார்த்தன் மூலம் ஏதும் நல்ல செய்திகள் வருகிறதா என எதிர்பார்த்திருந்தோம். ஒன்றும் வரவில்லை. அதேநேரம் அடிக்கடி ஆட்சி ராஜன் மற்றவர்களும் இயக்கத்தில் இருக்கும் தமது நண்பர்களை தொடர்புகொண்டு கழக நிலைமைகளை அறிந்து கொண்டிருந்தார்கள். அங்கிருந்து எந்த நல்ல செய்திகளும் வரவில்லை. யாரும் செயலதிபர் கொலை பற்றிய உண்மைச் செய்திகளை சொல்லி, உண்மைகளை வெளிக்கொண்டுவர முயற்சி செய்யவில்லை. சித்தார்த்தன் ,மாணிக்கம் தாசன் கழக வளர்ச்சி பற்றி தான் பேசுகிறார்கள். ஆனால் எல்லா தோழர்களுக்கும் இவர்கள் மேல் ஒரு சந்தேகம் இருக்கிறது. இப்படியான தகவல்களை தான் வந்தன. அதேநேரம் வந்த ஒரே சந்தோசமான செய்தி சக்திவேல் மட்டும் பகிரங்கமாக பல தோழர்களிடம் மாணிக்கம் தாசன் தான் செயலதிபர் கொலைக்கு காரணம் என கூறியுள்ள தகவல்.
தமிழ்நாட்டிலும் இயக்கங்களின் நடவடிக்கைகளின் மேல் கடும் கட்டுப்பாடுகள் விதிக்க தொடங்கினார்கள்.க்யூ பிராஞ்ச் அதிகாரி கள் ஒவ்வொரு இயக்க விபரங்களை சேகரிக்க தொடங்கினார்கள். அந்த விபரங்களை அதிகாரப்பூர்வமாக எழுத்து மூலம் கேட்டார்கள். அந்த விபரங்கள்.
கியூ பிரான்ச் தமிழ்நாடு
19/09/89
இந்தியாவில் எமது (PLOTE) இருப்பிடங்களும் அதிலுள்ள தோழர்களின் விபரங்களும்
சென்னை 11. தேசிகர் வீதி, வடபழனி சென்னை 26
த. வெற்றிச்செல்வன் பிரதிநிதியும், பொறுப்பாளர்
மு. சைமன்
க. சுதன் தற்காலிகம்
வேலூர். 35, சாரதி நகர், காகித பட்டறை, வேலூர். வட ஆற்காடு
யோகராஜா (பக்தன்)
மார்க்கோ. மு
சபா
பியந்தன்
எல்லோரையும் இலங்கை அனுப்ப முடிவு அடுத்தும் பொருளாதார போக்குவரத்து வசதி இனங்களால் அனுப்ப முடியவில்லை விரைவில் இலங்கை அனுப்ப முயற்சிகள் மேற்கொண்டுள்ளோம்
த. வெற்றிச்செல்வன்
பொறுப்பாளர்
PLOTE
கொழும்பிலிருந்து 5/10/1989 திகதி இட்ட சதானந்தன் என்ற ஆனந்தி அண்ணர் கையொப்பமிட்ட DPLF கடிதத் தலைப்பில்செய்தி. கீழே உள்ளது.
தோழர்
India கிளை
அன்புடையீர்
அண்மைக்காலத்தில் எமது அமைப்புக்கு ஏற்பட்ட மாபெரும் இழப்பும், அதையடுத்து இங்கு சில காலம் எமது செயல்பாடுகள் மந்த நிலை ஏற்பட்டதும் நீங்கள் அறிந்ததே. கழகத்தில் கடந்த மன்னார் மாநாட்டில் இயக்கத் தோழர்கள் ஆல் வாக்கெடுப்பு மூலம் தெரிவு செய்யப்பட்ட சித்தார்த்தன் உட்பட ஏழு பேர் கொண்ட கட்டுப்பாட்டுச் சபையால்சில முக்கிய பொறுப்புகள் கொடுக்கப்பட்டு செயற்குழுவின் பணிப்பின் பேரில் தோழர் சித்தார்த்தர் வெளிநாடு சென்றிருந்தார். செயலதிபர் இன் மறைவுக்குப்பின் உடனடியாக தோழர் சித்தார்த்தன் இங்கு வரமுடியவில்லை. கொழும்பில் விசாரணைக்காக எமது காரியாலயம் மூடப்பட்டது. கழகத் தோழர்களும் இறுதிக் கிரியைகளுக்காக வவுனியா சென்று உடனடியாக கொழும்பு திரும்ப முடியவில்லை. காரணங்களால் வெளிநாட்டு கிளைகளுடன் தொடர்பு கொள்ள முடியவில்லை.
13/09/1989 நடைபெற்ற அனைத்துக்கட்சி மாநாட்டு சூழ்நிலையை பயன்படுத்தி தோழர் சித்தார்த்தன் கொழும்பு வர முடிந்தது. மாநாடும் அதை எடுத்து ஜனாதிபதியுடன் சந்திப்பு முடிந்த பின் 30/09/1989, 1/10/1989 ஆகிய திகதிகளில் சித்தார்த்தன் வவுனியா சென்று கூட்டத்தைக் கூட்டி சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. கடந்த மாநாட்டு தீர்மானங்கள் அமைய அடுத்த மாநாடு நடத்தி செயலதிபர் ஐ தெரிவு செய்யும் வரை செயல் அதிபரின் பொறுப்புகளை கட்டுப்பாட்டு குழு குழு நிலையில் செயல்படுத்த வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது. செயலதிபர் உறுப்பினர் வெற்றிடத்துக்கு ஒருவர் தெரிவு செய்யப்பட்டு ஏழு பேர் கொண்ட கட்டுப்பாட்டு சபை பூரண படுத்தப்பட்டது.
இந்த கட்டுப்பாட்டு சபையில் வைக்கும் தோழர் சித்தார்த்தன் வெளிநாட்டு தொடர்பு உட்பட அரசியல் பொறுப்பாளர்.
தோழர் மாணிக்கம் தாசன் ராணுவ பொறுப்பாளர்
தோழர் ஜி டி ஆர் கிழக்குப் பிராந்திய பொறுப்பாளர்
ஆகிய மூவர் தவிர்த்து ஏனையோர் பெயர்கள் அவர்களது பாதுகாப்பு கருதி ரகசியமாக வைப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது இந்த கட்டுப்பாட்டு சபையே கழகம், முன்னணி (PLOTE,DPLF) இரண்டையும் இன்னைக்கும் சபையாக இருக்கும். அத்துடன் இரண்டுக்கும் தனித்தனியாக செயற்குழு இருக்கும். அவற்றுக்கான கூட்டங்கள் விரைவில் கூடி தெரிவுகள் நடைபெறும்.
அனைத்துக்கட்சி மாநாட்டில் நாம் பங்கு கொண்டதுடன் சூழ்நிலையை பயன்படுத்தி இந்திய ராணுவத்தால் கைதான பலரையும் இலங்கை அரசால் கைது செய்யப் பட்டு தடுப்புக்காவலில் உள்ள கென்றி பெரேரா உட்பட பல தோழர்களை விடுதலை செய்துள்ளோம். விடுதலை யாதவர்களும் இன்னும் சில நாட்களில் விடுதலை ஆவார்
இங்கு இன்னும் சில நாட்களில் நிலைமைகள் சீரடைந்ததும் அனைத்து கிளை களுடனும் நேரடியாக தொடர்பு கொள்கிறோம்.
நன்றி
இங்கனம்
சதானந்தன்.
தொடரும்.
No comments:
Post a Comment