பகுதி 96
நான் எனது பதிவுகளை போடும்போது ஆரம்பத்திலிருந்தே இது எனது சொந்த நேரடி அனுபவங்கள் என்று தான் குறிப்பிட்டுள்ளேன். சிலர் தங்கள் வசதிக்கேற்ப நான் புளொட் வரலாறு எழுதுவதாக வேண்டுமென்றே திசை திருப்புகிறார்கள்.புளொட் வரலாறு எழுத ஆரம்பகால காந்தியம், ஆரம்ப காலத்திலிருந்து தளத்தில் அங்கு நடந்த வேலைகள் போராட்டங்கள் பற்றியும், அதோடு பின் தளம் என்று கூறப்படும் இந்தியாவில் முகாம்களில் நடந்த உண்மைகளும், அதில் நேரடி சம்பந்தப்பட்ட இயக்க உறுப்பினர்கள் எழுத வேண்டும். எனக்கு இவற்றில் எந்த நேரடி அனுபவங்களும் இல்லை. அதன்பின்பு இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் பின்பு இயக்க உறுப்பினர்கள் இலங்கை திரும்பிய போது நடந்த சண்டைகள் இயக்க உறுப்பினர்கள் மரணம், என்பவற்றை அப்போது அங்கிருந்த உறுப்பினர்கள் எழுத வேண்டும், எல்லாவற்றையும் அறிந்து , ஆராய்ந்து யாராவது வரலாறு எழுதுவார்கள்.
எனது பதிவை எதிர்ப்பவர்களின் ஒரு வகை கழகத்துக்காக உண்மையாகவே, உயிரை பணையம் வைத்து போராடியவர்கள், இவர்களுக்கு தங்களது நம்பிக்கையான தலைவர்களது மறுபக்கம் தெரியாததால், அவர்களைப் பற்றி அதாவது செயலதிபர் உமாமகேஸ்வரன், ராணுவத் தளபதி மாணிக்கம் தாசன், அரசியல் தலைவர் சித்தார்த்தன் போன்றவர்களை பற்றி உண்மைகளை எழுதும்போது அவர்களுக்கு கோபம் வருவது இயற்கை. ஆனாலும் அவர்களுக்கும் உண்மை தெரிய வேண்டும். சில தோழர்களுக்கு கழகத்தில் முக்கிய பொறுப்பில் இருந்த தாக கூறிக் கொண்டாலும் 1989 இல் கழக இரண்டாவது தள மகாநாடு நடந்தது தெரியவில்லை. தெரிந்தாலும் நான் எழுதுவது பொய்யென்று நிரூபிக்க1989இல்தள மாநாடு நடக்கவில்லை என்று அவர்கள் எழுதுகிறார்கள். அவர்களுக்காக செயலதிபர் உமாமகேஸ்வரன் தனது தலைமையில் நடந்த மாநாடு பற்றி வெளியிட்ட அறிக்கையை திரும்பவும் கீழே தருகின்றேன்.
எனது பதிவை புதிதாக ஒருவர் நான் எழுதுவது பொய் என்று நிரூபிக்க படாதபாடு படுகிறார்.நான் இந்திய உளவுத்துறையின் முகவர் என்று எனது பதிவுகளைப் படிக்காமலே எழுதியவர் அவர்தான் தேசம் நெட் ஜெயபாலன். காரணம் இன்று இவர் சமூகத்தில் அதி அறிவுஜீவி போல் தோற்றம் அளிப்பவர். இவர் தனது அண்ணா வசந்த் பற்றி உண்மைகளை எழுதவேண்டாம் என்று என்னிடம் நட்பு ரீதியில்கேட்டவர். ஆனால் உமா மகேஸ்வரனின் கொலையில் வசந்தின் பங்கு முக்கியமானது. அதை எழுதாமல் விட்டாள் பல உண்மைகள் வெளியில் வராது என்று கூறிவிட்டேன். அதோடு வசந்த் இந்தியாவில் கொலை கொள்ளை போதை மருந்து கடத்தியது இயக்கத்துக்காக, தனிப்பட்ட ரீதியில் செய்திருந்தால் அதை நான் மறைத்திருக்கலாம். அதோடு தேசம் நெட் ஜெயபாலன் தான் ஆட்சி ராஜன் ராபின் போன்றவர்களோடு தங்கியிருந்தது பற்றி பொதுவெளியில் எழுத வேண்டாம் என்றும், அதையும் கடந்து எழுதினால் தனக்குள்ள பத்திரிகை ,வலை செய்திகள் மூலம் அதை முறியடிக்க முடியும் என்றும் தனது எழுத்துக்கள் இன்று சர்வதேச தமிழர்களிடம் உங்களைவிட பெரிதும் வரவேற்பு உள்ளது என்றும் தேவையில்லாமல் சவால் போல் பேசியதால்தான் நான் தேசம் நெட் ஜெயபாலனுக்கு, அவரின் குடும்பத்தாருக்கு எங்களுடன் இருந்த தொடர்பில் சிறு பகுதியைஎழுதியது அவருக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக விட்டது.மற்றது வசந்த் செய்த தியாகத்துக்காக வசந்த் குடும்பத்துக்கு ஆட்சி ராஜன் செய்த பல உதவிகளில் நான் ஒன்றை மட்டும் அதாவதுதேசம் நெட் ஜெயபாலனை வெளிநாட்டுக்கு அனுப்பி எதுபற்றியும், அதற்கு நன்றிக்கடனாக ஜெயபாலனும் அவரின் அம்மா வும் ஆச்சி ராஜனுக்கு திருமணம் செய்து வைத்ததை மட்டுமே குறிப்பிட்டேன். அதற்கு ஜெயபாலன் தன்னை நான் போனில் மிரட்டுவதாகவும், தன்னைப்பற்றி பொய்ச் செய்திகளை எழுதுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த தொடராக நான் எழுதும் பதிவுகளில் ஜெயபாலன் இனி விமர்சிக்க விரும்பவில்லை. ஆனால் எல்லா உண்மைகளையும் தேசம்நெற் ஜெயபாலன் குடும்பம் ஆட்சி ராஜனிடம் எப்படி எப்படியான உதவிகள் பெற்றார்கள். அவரின் உறவினர்கள் கூட ஆட்சி ராஜன் இடம்பெற்ற உதவிகள் பற்றி தனியாக போடுகிறேன்.
சென்னை வந்த சாம் முருகேசு பல செய்திகளைச் சொன்னார். வவுனியாவில் குறிப்பாக இந்திய அமைதிப்படையில் சிறையில் உள்ள தோழர்கள் மிகவும் கோபமாக உள்ளதாகவும், உமாமகேஸ்வரன் கொலைக்கு பொறுப்பு ஏற்றுக் கொண்ட ஏழு பேரையும்ஏன் இன்னும் பிடிக்கவில்லை. உடனடியாக அவர்களை பிடித்து மரண தண்டனை கொடுக்க வேண்டும், என்று அவர்கள் மாணிக்கம் தாசன் மேல் கோபப்பட்ட தாகவும், அதோடு அவர்களுக்கு மாணிக்கம் தாசன் மேல், செயலதிபர் கொலையில் அவருக்கும் சம்பந்தம் இருக்கலாம் சந்தேகம் இருக்க வேண்டும்என்று சாம் முருகேசுஎன்று கூறினார். பிரச்சனையான நேரம் கொழும்பில் இருந்த உப ராணுவத் தளபதி மன்னார் கண்டிபன், மற்றும் சில தோழர்கள் உண்மையை கூற முடியாமல் மௌனமாக இருப்பதாகவும் கூறினார்.
கொலை நடந்த மறுநாள் சிறையிலிருந்த சக்திவேலை போலீஸ் காவலோடு கொழும்பில் எமது இயக்கத்துக்கு இருந்த எல்லா மறைவு இடங்களிலும் கொலையாளிகளை தேடியதாகவும், பின்பு சிறையிலிருந்து வெளிவந்த சக்திவேல்,எல்லோரிடமும் உமாமகேஸ்வரன் கொலையில் சம்பந்தப்பட்ட யாரையும் தான் உயிரோடு விட போவதில்லை என்றும், எல்லாவற்றிற்கும் மூலகாரணமான மாணிக்கம் தாசன் ஐயும் லண்டன்கிருஷ்ணனையும் கடைசியில் நடவடிக்கை எடுப்பேன் என்று கூறி வருவதாகவும் இன்னும், மாணிக்கம் தாசன் இடமே பழிவாங்காமல் விடமாட்டேன் என்று நேரடியாக கூறியதாகவும் கூறினார்.
.(சில மாதங்களுக்குப் பின் பா அல்லது சில வருடங்களுக்குப் பின்பா விடுதலைப் புலிகளோடு நடந்த சண்டையில் இருவரும் கொல்லப்பட்டதாக செய்திகள் வந்தன. அதேநேரம் சில செய்திகள் எங்கள் இயக்கத்தவர்கள் தான் அவர்களை பின்னிருந்து சுட்டுக் கொன்றார்கள் என்ற தகவலும் கூடவே வந்தது. உண்மை பொய் தெரியாது. தெரிந்தவர்கள் எழுதினால் நல்லது)
ஆட்சி ராஜன் நான் சித்தார்த்தன் இருக்கும்போது சாம் முருகேஷ் ஒரு உண்மையை கூறினார். அங்கு இருக்கும் சூழ்நிலையில் இனிமேல் உமா மகேஸ்வரனின் தவறுகளை சுட்டிக்காட்டி,இயக்கத்தை நடத்த முடியாது. ஆட்சி ராஜனை பார்த்து உங்களுக்கெல்லாம் சங்குதான் என்றார். மிகவும் கோபப்பட்ட ஆச்சி ராஜனை சித்தார்த்தர் சமாதானப்படுத்தினார். அதோடு சா முருகேசு உமா மகேஸ்வரனை கொலை செய்ய காரணம் உமா மகேஸ்வரனுக்கு நம்பிக்கையாக நெருக்கமாக இருந்த ஆச்சி ராஜன் முதலியோர் பெருந்தொகை பணத்தை கொள்ளை அடித்து மறைத்ததை செயலதிபர் உமாமகேஸ்வரன் கண்டுபிடித்து விசாரிக்க முற்பட்டதாகவும் இதனால்தான் கொலை நடந்ததாகவும் மாணிக்கம் தாசன் போன்றவர்கள் எல்லோரிடமும் கூறி உண்மையான காரணத்தை மறைத்துவிட்டார்கள் என்றார்.
சித்தரின் ஆலோசனைப்படி ஒரு முடிவெடுத்தோம். சித்தார்த்தர் , சாம் முருகேஷ், மற்றும் நான் மூவரும் சேர்ந்து, செயல் அதிபருக்கு மரணதண்டனை கொடுத்ததாகக் பொறுப்பு பெயர் கொடுத்தவர்களை விசாரிப்பது என்றும் அந்த விசாரணையை ஒலிப்பதிவு செய்து, அதை இயக்க அங்கத்தவர்களை கூட்டி போட்டுக்காட்டி உண்மையை கூறி நடந்த உண்மைகளை கூறி இயக்கமே அவருக்கு மரண தண்டனை கொடுத்தது என்று முடிவெடுக்க முடியும் என்று சித்தார்த்தன் கூறினார். தான் நேரில் மாணிக்கம் தாசன் இடம் பேசுவதாகவும் கூறினார்.
இந்த விசாரணையின்போது எல்லோரும் உமா மகேஸ்வரனை பற்றிய மறுபக்கத்தை விளக்கமாக கூற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டோம். நாங்கள் இதற்கு சம்பந்தம் இல்லாதது போல் குறுக்குக் கேள்விகள் எல்லாம் கேட்போம்கோபப்பட வேண்டாம் என்று சித்தார்த்தன் கேட்டுக்கொண்டார்.
இதே நேரம் வவுனியாவிலிருந்து எமது துணை ராணுவத் தளபதி காண்டீபன் எனக்கு ஒரு கடிதம் போட்டு இருந்தார். அந்த கடிதத்தை முன்பே முகநூலில் அந்தக் கடிதத்தைப் போட்டிருந்தேன். திரும்பவும் அதைப் போடுகிறேன்.
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவராக இருந்த உமா மகேஸ்வரன் 16/07/1989 மரணத்தின் பின் கழகத் துணை ராணுவ தளபதியாக இருந்த மன்னார் காண்டீபன் இந்தியாவில்தமிழீழ மக்கள் விடுதலைக் கழக இந்திய பிரதிநிதி யாக இருந்த எனக்கு 09/08/1989 எழுதிய கடித பிரதியை கீழே தந்துள்ளேன்.தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத் தோழர்களுக்கு மன்னார் காண்டீபன் ஐ பற்றி நன்றாக தெரிந்து இருக்கும். முள்ளிக்குளம்தாக்குதல் இறப்புக்குப்பின், மிஞ்சியிருந்த தோழர்களை கிட்டத்தட்ட 30 பேர் கொழும்பு பொல்ஹெங்கோட என்ற இடத்தில் இருந்த சந்திரிக்கா குமாரதுங்கவின் வீடு ஒன்றிலிருந்து பாதுகாத்து வந்தவர். அதில் இருந்தவர்தான் அலவாங்கு தாஸ் உட்பட மாணிக்கம் தாசன் இன் நம்பிக்கையானவர்கள். இவர்களில் பலர் கல்கிசையில் நடந்த கூட்டத்தில் தலைவர் உமா மகேஸ்வரன் ஓடு முரண்பட்ட வர்கள். உமா மகேஸ்வரன் மரணத்தின் அடுத்த நாட்களில்இவர் ஆச்சி ராஜனிடம் 30 ஆயிரம் ரூபாய் பணம் பெற்றுக்கொண்டு எல்லா தோழர்களையும் அழைத்துக்கொண்டு வவுனியா சென்றார். இவரின் இக்கடிதத்தை வாசித்து தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் இருந்த தோழர்கள் மற்றும் பல உண்மைகளை அறிந்து கொள்ளலாம் மன்னார் காண்டீபன் இயக்கத்தின் துணை ராணுவ தளபதியாக செயல் பட்டு சில ஆண்டுகளில்பின் வெளிநாட்டுக்கு போய் விட்டதாக அறிந்தேன். முழு விபரம் தெரியவில்லை.
வவுனியா
09/08/1989
அன்பின் வெற்றி அண்ணாவுக்கு, நான் நலம் உங்கள் எல்லோரின் நலனும் அறிய அவா.
மேலும் எழுதுவது என்னவென்றால் சித்தாஅண்ணா உங்களுடன்தான் நிற்கின்ராரா. நிலைமை எப்படி இருக்கின்றது. பேச்சுவார்த்தையின் முடிவு நன்றாக அமைந்துள்ளதா? உடன் எமக்கு தெரியப்படுத்தவும். இங்கு உள்ள நிலைமை கீழ்க்காணும் வாறு தான் உள்ளது. வவுனியாவில் இந்தியன் ராணுவத்துடன் கதைத்தோம். அவர்கள் கூறினார்கள் எம்மை (PLOT) புதுடில்லி கைவிட்டு விட்டதாகவும் தன்னுடைய பவருக்குள் உதவி செய்வதாகவும் எமது தோழர்களை எட்டு பேராக தங்களது சில காலங்கள் நிற்க வேண்டும் என்றும் LTTE க்குஅடித்து காட்டுங்கள் என்று கூறி அத்துடன் நமக்கு நம்பிக்கை ஏற்படுத்தி காட்டவேண்டும் என்றும் கூறினார்கள் அதற்குப் பின்தான் 30 ஆயுதங்கள் தருகிறோம் என்றார்கள் இதை நாங்கள் எல்லோரும் சேர்ந்து முடிவெடுத்து ஏற்றுக்கொண்டோம் எமக்கும் உங்களின் முடிவும்கிடைக்கவில்லை. வேறு வழியில்லாமல் தான் ஏற்றுக் கொண்டும் 08/081989 18 தோழர்களை இராணுவ முகாமுக்கு அனுப்பிவிட்டோம்
இது இப்படியிருக்க மட்டக்களப்பிலிருந்து எமது தோழர்கள் தொடர்பு கொள்ளும் படி letter கொடுத்து விட்டுள்ளார்கள் யாழ்ப்பாணத்தில் இருந்தும் திருகோணமலையில் இருந்தும் வந்து நிற்கின்றார்கள் சில நாட்களுக்குள் முடிவு கூறும்படியும் இல்லாவிட்டால் ENDLF எல்லோரையும் பிடிப்பதாக கூறியுள்ளார் கலாம். பிடித்து விடுவார்கள் ஆனால் நிலைமை மோசமாக உள்ளதால், உடன் நல்ல முடிவை தெரியப்படுத்தவும்
ஆச்சி ஆட்கள் நிற்பதாக அறிந்தேன்.நான் சுகம் விசாரித்ததாக கூறவும் அவர்களுடன் தொடர்பு வைத்திருப்பது இப்போதைக்கு யாருக்கும் தெரியாமல் இருப்பது நல்லது ஏனென்றால் இங்குள்ள சிலருக்கு விளங்குவது இல்லை
தெரிந்தால் இந்த நிலையில் பிரச்சனை ஆகிவிடும். எல்லாம் குழம்பி விடும். ரவி மூர்த்தியும் இங்குதான் நிக்கிறான். நான் சுகம் விசாரித்ததாக பத்தன், சபா எல்லோரிடமும் கூறவும் ஜெயிலில் உள்ளவர்கள் இன் பிரச்சனைகள் எப்படி இருக்கிறது. என்னுடன் ஓ or ரவி மூர்த்தி உடனே தொடர்பு கொள்வதாயின் கீழ்காணும் phone no தொடர்பு கொள்ளவும்
மேலும் இங்கு உள்ள பிரச்சனையை தீர்ப்பதற்கு நல்ல முடிவை எடுக்கவும்
இப்படிக்கு
தம்பி காண்டீபன்
No comments:
Post a Comment