பகுதி 89
முள்ளி குளத்தில் எமது முகாம் தாக்கப்பட்டு கிட்டத்தட்ட 42க்கும் மேற்பட்ட தோழர்கள் வீரமரணம் அடைந்ததை அடுத்து கொழும்பில் நடந்த கழக உட் பிரச்சினைகள் அதாவது கழகத்தின் செயலதிபர் உமாமகேஸ்வரன் அவர்களுக்கும் மிஞ்சியிருந்த கழகத் தோழர்களுக்கும் இடையில் பிரச்சனை, செயலதிபர் உமாமகேஸ்வரனுக்கும், மாணிக்கம் தாசன் லண்டன் கிருஷ்ணன் அவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சினையில் ஒருவரை ஒருவர் மறைமுகமாக கொலை செய்ய முயன்றது எல்லாம் பல பேருக்கு தெரியும். ஆனால் முகாம்களிலும், வெளிநாடுகளிலும் இருந்த இயக்கத்துக்கு வேலை செய்த பலருக்கு இன்று வரை ஒரு உண்மைகளும் தெரியாது. பல பேருக்கு இரண்டாவது தள மாநாடு நடந்தது, எங்கு நடந்தது, எப்படி நடந்தது என்று கூட தெரியாமல் இருக்கிறார்கள். அதோடு வெற்றிச்செல்வன் எழுதுவதெல்லாம் பொய் என்று பதிவுகள் வேறு.
மாணிக்கம் தாசன் சித்தார்த்தன், ஆட்சி ராஜன், மதன், மாறன் போன்றவர்களிடம் செயலதிபர் உமா மகேஸ்வரனின் நடவடிக்கைகள் பற்றி கடுமையாக விமர்சித்திருக்கிறார். புளொட் இயக்கத்தின் ராணுவ தளபதி மாணிக்கம் தாசன். பல தோழர்களின் மரணத்திற்கு பின்பும் செயலதிபர் உமா மகேஸ்வரனின்நடவடிக்கைகள் திருப்தி இல்லாத காரணத்தால், மிகவும் கவலைப்பட்டு இருந்தது உண்மை. சென்னையிலிருந்து என்னிடம் கூட பலமுறை தொலைபேசி மூலம் பேசும்போது எல்லாவற்றையும் இழந்து கொண்டு போகிறோம், பெருசு (செயலதிபர் உமாமகேஸ்வரன்) எதைப்பற்றியும் கவலைப்படவில்லை என்று என்னிடம் கூறியுள்ளார்.
வெற்றிச்செல்வன் |
1989 உமா மகேஸ்வரனின் மரண தண்டனையின் பின் மாணிக்கம் தாசனை கட்டுப்படுத்த எந்தத் தலைமையும் இருக்கவில்லை. ஆனால் அதற்கு முன்பு உமாமகேஸ்வரன் என்ற சக்தியை மீறி நேரடியாக செயல்பட முடியாமல் இருந்தது என்பதை கவனிக்க வேண்டும். பல பேருக்கு தெரியாத ஒரு முக்கிய விடயம். உமா மகேஸ்வரனின் பாதுகாப்பாளர் , வாகன சாரதியாக இருந்த ராபினை , ஏதோ ஒரு கோபத்தில் செயலதிபர் உமாமகேஸ்வரன் ராபினின் சாதியைச் சொல்லி திட்டியதால், கோபமடைந்த ராபின் செயலதிபர் ஒடு கடும் வாக்குவாதம் பட்டு, காரோடு தலைமறைவாகிவிட்டார்.செயலதிபர் ஆட்சி ராஜனிடம் ராபினையும், காரையும் கண்டுபிடிக்கும் படியும், ராபினை போட்டு தள்ளுபடியும் கூறியுள்ளார்.ராபினுக்கும், செயலதிபர் உமா மகேஸ்வரனும் என்ன பிரச்சனை நடந்தது என்று ஆட்சி ராஜனுக்கு தெரியவில்லை. ஆட்சி ராஜன் ராபினை தேடியுள்ளார், கொலை செய்வதற்காக இல்லை. என்ன நடந்தது என்று அறிய. மட்டுமே. ராபினை கண்டுபிடிக்கமுடியவில்லை.
அன்று கொழும்பில் செயலதிபர் உமா மகேஸ்வரனுக்கு எதிராக கொழும்பில் இருந்த தோழர்கள் செயல்பட்டார்கள் முடிந்தால் அவருக்கு மரண தண்டனை கொடுப்பதற்கு கூட முடிவெடுத்து இருந்திருக்கிறார்கள். அதேநேரம் இன்னும் இருவர் செயலதிபர் உமா மகேஸ்வரனுக்கு எதிராக மிக ரகசியமாக செயல் பட்டுக் கொண்டிருந்தார்கள் அவர்கள் மாணிக்கம் தாசன் லண்டன் கிருஷ்ணன் இருவரும். மாணிக்கம் தாசன் லண்டன் கிருஷ்ணன் நடவடிக்கைகளை சக்திவேல் மிக உன்னிப்பாக கவனித்து செயலதிபர் உமா மகேஸ்வரனை எச்சரித்திருக்கிறார்.துரதிர்ஷ்டவசமாக செயலதிபர் தனது பாதுகாப்புக்கு ஆட்சி ராஜனை நம்பி இருந்திருக்கிறார். எமது இயக்க ராணுவ தளபதி மாணிக்கம் தாசன் ஆட்சி ராஜனின் நடவடிக்கைகளை முடக்கக் கூடிய சக்தி இருந்தது என்பதையும் கவனிக்க வேண்டும். கொழும்பில் இருந்த முக்கிய தோழர்களின் மனநிலையை அறிந்த மாணிக்கம் தாசன் ரகசியமாக மேல்மட்ட தோழர்களிடம் குறிப்பாக சித்தார்த்தன், மாறன், மதன், k.L ராஜன், ஜெயா ஆட்சி ராஜன் , தராக்கி சிவராம் போன்றவர்களிடம் தனித்தனியாக செயல் அதிபரின் நடவடிக்கைகள் பற்றி கவலைப்பட்டு பேசியது மட்டுமல்லாமல்,கழகத்தைக் காப்பாற்ற வேண்டுமென்றால் செயலதிபர் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதே ரீதியில் சென்னைக்கு எனக்கு தொலைபேசி எடுத்து என்னிடம் கூட பலமுறை கவலைப்பட்டு உள்ளார்.
கொழும்பில் நடந்த இந்த விடயங்களை அறியாத பலர் இன்றும் இது பொய். தங்களுக்கு எல்லாம் தெரியும் மாணிக்கம் தாசன் சித்தார்த்தன்உமா மகேஸ்வரனுக்கு மிகவும் விசுவாசமாக இருந்தார்கள்.இந்திய உளவுத் துறை ஏற்பாடு செய்து செயலதிபர் உமாமகேஸ்வரன் கொலை செய்யப்பட்டார். இல்லை பரந்தன் ராஜன் ஏற்பாட்டில் இந்த கொலை நடந்தது என்று பலவாறு கட்டுக்கதைகளை இன்றுவரை தங்களுக்கு ஏற்ற மாதிரி எழுதுவது பேசுவது என்று இருக்கிறார்கள். இப்படி எழுதும் பலர் செயலதிபர் உமா மகேஸ்வரனுக்கு பின்பு வவுனியாவில் நடந்த பல கொலைகள் கற்பழிப்புகள் கொள்ளை அடிப்பதற்கு துணை போனவர்கள் மட்டுமல்ல. தங்கள் பங்குக்கு மாணிக்கம் தசானுக்கு சமூகத்தில் கெட்ட பெயரை ஏற்படுத்திக் கொடுத்தவர்கள் என்பது தான் உண்மை.
கொழும்பில் சித்தார்த்தனின் பாதுகாப்பும் ஜேவிபி ஆட்களால் கேள்விக்குறியாக இருந்தபடியால்,மாணிக்கம் தாசன் உட்பட முக்கிய எமது தோழர்கள் சித்தார்த்தனைவெளிநாட்டுக்கு போக சொல்லியிருக்கிறார்கள்.அதேநேரம் அங்கு முள்ளிக்குளம் எமது முகாம் தாக்கப்பட்ட சம்பவம் சம்பந்தமாக மாணிக்கம் தாசன் மேல் சில தோழர்கள் சந்தேகப் பட்டுள்ளார்கள். இந்த சந்தேகத்தை செயலதிபர் ஓடு நெருக்கமாக இருந்த சக்திவேல், முருகேசு போன்றவர்கள் பல தோழர்களிடம் கதைத்து உள்ளார்கள். சரியாக முகாம் தாக்கப்படும் சமயத்தில் அதாவது ஒரு நாள் இரண்டு நாளுக்கு முன் மாணிக்கதாசன் ஏன் கொழும்பு வந்து ஏன் வழமைபோல் உடன் திரும்ப போகவில்லை.அது சம்பந்தமான உண்மையான செய்திகள் இன்றுவரை எனக்கு கிடைக்கவில்லை. அந்த உண்மைகளை யாரும் விபரம் தெரிந்தவர்கள் எழுதினால் நன்றாக இருக்கும்.
மாணிக்கம் தாசன் தோழர்களுடன் |
சிங்கப்பூரில் நாங்கள் கப்பல் வாங்க கொடுத்த பணத்தின் கடைசி பகுதி திரும்பத் தருவதாக சிங்கப்பூரில் இருந்து தகவல் வந்ததையடுத்து சித்தார்த்தன் செயலதிபர் உமா மகேஸ்வரனின் அனுமதியோடு சிங்கப்பூர் போய் விட்டு திரும்ப இலங்கை போகாமல் இந்தியா வந்து சென்னையில் என்னோடு வடபழனி அலுவலத்தில் தங்கி விட்டார்.
தொடரும்.
?
No comments:
Post a Comment