பகுதி 98
சாம் முருகேசு திரும்ப கொழும்புக்கு தனியாக போனாரா? இல்லை சித்தாத்தூர் ரோடு போனாரோ இப்ப நினைவில் இல்லை. ஆனால் 13/09/1989 கொழும்பில் இலங்கை ஜனாதிபதி பிரேமதாசா அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி இருந்தார். அதைப் பயன்படுத்தி எமது அரசியல் கட்சி ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி தலைவர் சித்தார்த்தன், மிக நீண்ட நாட்களின்பின் கொழும்பு சென்றார். போகும் முன்பு ஆச்சி ராஜன் மற்ற நண்பர்களிடம் இயக்கத்தின் மத்திய குழு , மற்றும் இருக்கும் எல்லா தோழர்களையும் கூட்டி உண்மைகளை எடுத்துரைத்து, 3 ஆடியோ கேசட் கலையும் போட்டுக்காட்டி, எமது இயக்கத்தை நல்ல முறையில் நடத்துவோம். நீங்கள் எல்லாம் வந்து பழையபடி இயங்க வேண்டும் கேட்டுக்கொண்டார். என் மூலம் (வெற்றிச்செல்வன்) அவர்களுடன் தகவல் பரிமாற்றம் செய்வதாகவும் கூறிச்சென்றார்.
லண்டனில் இருந்து ஐக்கிய நாடுகள் சபை புகழ் முன்னாள் நீதிபதி வைகுந்தவாசன் சென்னை வந்து உட்லண்ட்ஸ் ஓட்டலில் தங்கியிருந்தார். எங்கள் லண்டன் கிளை ஏற்பாட்டின்படி, நான் போய் அவரை சந்தித்தேன். வைகுந்தவாசன் ஐயா அவர்கள் இங்குள்ள அரசியல் நிலைமைகள் எல்லாம் பேசிவிட்டு, மாலைதீவில் பிடிப்பட்ட கழகத் தோழர்களின் விபரம் மற்றும் அப்போது உள்ள நிலைமைகளை கேக்க எனக்கு முழு விபரங்களும் தெரியாது என்று கூறிவிட்டேன். வைகுந்த வாசன் ஐயாவும் தான் மாலைதீவு போகப் போவதாகவும், அங்கு போகும்போது மாலைதீவு உயரதிகாரிகள் முடிந்தால் மாலைதீவு ஜனாதிபதியை கூட சந்தித்து வருவேன் என்று கூறினார்.
மாலைதீவு போய் வந்த வைகுந்தவாசன் ஐயா என்னை அழைத்து பிடிபட்டவர்கள் விபரங்களையும் தண்டனை விபரங்களையும் தந்தார். அதோடு பிடிபட்டவர்களில் தண்டனை குறைப்பு பற்றி இந்திய இலங்கை அரசுகளை சந்தித்து பேசினால் தான் முடியும் என்றார். இலங்கை ஜனாதிபதி பிரேமதாசாவோடு நல்லவிதமாக சித்தார்த் தனையும் பேசச் சொன்னார். அதோடு என்னையும் அழைத்துக் கொண்டு சென்னையில் இருந்த மத்திய அரசு அதிகாரிகளை சந்தித்தார். அவர்களின் ஆலோசனைப்படி டெல்லியில் இந்திய வெளிவிவகார செயலாளரை,வெளிநாட்டு அமைச்சர் ஐ சந்தித்து ஒரு கருணை மனு கொடுக்கச் சொன்னார்கள். அவரும் டெல்லி வழியாக லண்டன் போகும்போது அதிகாரிகளை சந்திப்பதாக கூறிச் சென்றார். அவரது இடைவிடாத முயற்சியும், சித்தார்த்தர் முயற்சியால்பிரேமதாச ஆதரவும் கிடைத்ததால் மாலைதீவு சிறையில் இருந்த புளொட் தோழர்கள் பின்பு விடுதலை ஆனார்கள்.
ஆட்சி ராஜனும், தோழர்களும் பாதுகாப்பாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் அருகில் புதுபேட்டை என்ற இடத்தில் வீடு வாடகைக்கு பிடித்தார் கள்.கொழும்பில் இருந்து சித்தார்த்தன் எந்த தொடர்பும் கொள்ளவில்லை. கொழும்பில் அலுவலகம், தொலைபேசி எந்த விபரமும் சென்னையில் பொறுப்பிலிருந்த எனக்கு தெரியவில்லை. லண்டன் அலுவலகம் மூலம் இயக்க செய்திகள், தள மாநாட்டு அறிக்கைகள் என்பனவந்து சேர்ந்தன. அதோடு சேர்த்து எனக்கு ஒரு சிறு குறிப்பும் அனுப்பியிருந்தார்கள். அந்த குறிப்பு கீழே உள்ளது.
தோழர் வெற்றிச்செல்வன்
தங்கள் கேட்டபடி, முள்ளிக்குள கழக மாநாட்டு அறிக்கையை இணைக்கிறேன்.
கால தாமதத்துக்கு மன்னிக்கவும்
மேலும் நாளாந்த செய்திகளை கொழும்பில் இருந்து பெற்றுக் கொள்கின்றோம்.
இதுவரையில் பல்வகை சிரமங்களின் மத்தியிலும் தாங்கள் ஆற்றிய உதவிக்கு நன்றிகள் பல தொடர்புகளை வலுப்படுத்தி
தோழர்
லண்டன்
/10/89
கொழும்பிலிருந்து உமாமகேஸ்வரன் மரண தண்டனையில் கழக சார்பாக பெயர் சேர்த்த ஜெயா, ஜூட், துரோணன் போன்றவர்களும் சென்னை வந்தார்கள். ஜெயா அண்ணாநகரில் தனது உறவினர்களுடன் தங்கி கொண்டார்.ஜூட், துரோணன் சில நாட்கள் ஆட்சி ராஜன் , நண்பர்களுடன் இருந்துவிட்டு கொழும்பு திரும்பி விட்டார்கள். அவர்கள் இருவரும் கொழும்பு திரும்பிய பின்பு வேறு ஒரு சந்தேக வழக்கில் பிடிபட்டு ஒரு வருடத்துக்கு மேல் சிறையில் இருந்தார்கள் என நினைக்கிறேன்.
லண்டனிலிருந்து வந்த தொலைபேசி செய்தி மூலம் திரும்பவும் இந்திய உளவுத்துறையுடன் தொடர்பு கொண்டு எங்களுக்கு ஆயுதங்களும் பணமும் வேண்டும் என்றும், கடந்த காலத்தை போல் இந்தியாவுக்கு எதிராக, மறைமுகமாக கூட இருக்க மாட்டோம் என்று கூறி உதவிகள் கேட்க கொழும்பிலிருந்து கூறியதாக கூறினார்கள். நானும் கழக சார்பாக இந்திய அதிகாரிகளிடம் உதவிகள் கேட்டேன். அவர்கள் வவுனியாவில் இருக்கும் தங்கள் அதிகாரிகளுடன் பேசச் சொன்னார்கள். இதையும் நான் லண்டன் அலுவலகத்துக்கு தெரிவித்தேன்.
சித்தார்த்தரின் தொலைபேசி எதிர்பார்த்திருந்த நிலையில், வவுனியாவிலிருந்து மாணிக்கம் தாசன் ரவி மூர்த்தி என்னும் தோழரை சென்னைக்கு அனுப்பி எனக்கு சில எச்சரிக்கை செய்திகள் சொல்லி அனுப்பி இருந்தார். சாம்முருகேசு வவுனியா வந்து செய்யல அதிபரின் மரணதண்டனைக்கு கழக சார்பாக பெயர் கொடுத்தவர்கள் சென்னை கழக அலுவலகத்திற்கு வந்து போவதாகும், சகஜமாக கழக இந்திய பிரதிநிதி வெற்றிச்செல்வன் இடம் வந்து பேசுவதாகவும் கூறியுள்ளார்.
அதனால் என் மேல் வருத்தமடைந்த மாணிக்கம் தாசன் நீங்கள் ஆட்சி ராஜன் நண்பர்களுடன் பகிரங்கமாக தொடர்புவைத்திருப்பது மூலம் இந்திய அமைதிப்படை சிறையிலிருந்து வந்திருக்கும் எல்லா தோழர்களுக்கும் எங்கள் எல்லோர் மேலும் சந்தேகத்தை வரவழைக்கும். இப்போது இயக்கம் வளரக்கூடிய சூழ்நிலையில் இருப்பதால் சரியான நேரம் வரும் வரைக்கும் அவர்களுடன் தொடர்பு கொள்ள வேண்டாம் என்று செய்தியைக் கூறி அனுப்பி இருந்தார்.
இரண்டு நாட்கள் கழித்து மாணிக்கம் தாசன் தொலைபேசி எடுத்து என்னிடம் பேசிய வார்த்தைகள் இன்றும் நல்ல ஞாபகத்தில் இருக்கிறது. வெற்றி உமக்கு ஏழுபேர் பெரிதா? கழகம் பெரிதா ? என்று முடிவு செய்யும். எவ்வளவு காலங்களுக்கு பின்பு கழகம் வளர்ச்சியடைய பணமும் ஆயுதங்களும் கிடைக்கின்றன. இந்த நிலையில் அவர்களுடன் தொடர்பு வைத்து, கழகம் திரும்ப உடைவதை தான் விரும்பவில்லை என்று கூறினார். நான் கூறிய பதில் எனக்கு கழகமும் முக்கியம். அதேபோல் நீங்கள் சித்தார்த்தர் அந்த செயலதிபர் மரணதண்டனையை மத்திய குழுவை கூட்டி இயக்கமே செய்ததாக முடிவு எடுப்பதாக கூறிய படி விரைவில் செய்யுங்கள் என்றேன். அவர் அப்படி செய்யக் கூடிய நிலைமை இப்போது இல்லை என்று கூறி தொலைபேசியை வைத்துவிட்டார்.
நான் ஆட்சி பஜனையும் நண்பர்களையும் சந்தித்து, ரவி மூர்த்தி கூறிய செய்தியையும், மாணிக்கம் தாசன் தொலைபேசி மூலம் கூறிய செய்தியையும் கூறி விவாதித்தோம்.
இவர்கள் எல்லோரும் மாணிக்கம் தாசன் தங்களை பலி கொடுத்து, இயக்கத்தை தொடர்ந்து நடத்த முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. அதனால் மாணிக்கம் தாசன் ஆனால் தங்களுக்கு ஏதும் ஆபத்து வரும் என்று அடித்துக் கூறினார்கள். நான் சித்தார்த்தரின் முடிவு தெரியும் வரை பார்த்து இருப்போம் என்று கூற, அவர்கள் மாணிக்கம் தாசனின் ஆயுதங்களின் முன் சித்தார்த்தர் ஒரு பொம்மைதான். இப்போது சித்தார்த்துக்கு பக்கபலமாக ஒருவரும் இல்லை. எனது நிலைப்பாடுகள் பற்றி ஆட்சி ராஜன் நண்பர்கள் கேட்டபோது, நான் ஒரு காலமும் உண்மையை மறைத்து உங்களுக்கு எதிராக வேலை செய்யமாட்டேன். என்னால் முடிந்த அளவு எல்லா தோழர்களுக்கும் உண்மையை சொல்லப் போகிறேன். எனக்கு ஒரு நம்பிக்கை நான் கழக இந்திய பொறுப்பில் இருப்பதால் எனக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார்கள் என்ற தைரியம்தான். நானும் அவர்களிடம் வழமைபோல் நீங்கள்தான் அலுவலகம் வந்து போங்கள் என்று கூறினேன். அவர்களும் வந்து எல்லோரையும் சந்தித்தார்கள். சில தோழர்கள் அவர்களுடன் போய் சாப்பிட்டார்கள்.
இந்த செய்தி திரும்பவும் மாணிக்கம் தாசன் கொதிப்படைய செய்தது.
தொடரும்
No comments:
Post a Comment