பகுதி 92
உமா மகேஸ்வரன் |
கடந்த இரண்டு பதிவுகளிலும் மறைக்கப்பட்ட, மறந்த நடந்த உண்மைகளை எழுதுவதால், பலவித நெருக்கடிகள் ஏற்பட்டாலும், இதுவரைகாலமும் நடந்த உண்மைகளை மறைத்து, பலரை பலி கொடுத்தும், பதவிக்காகவும் பணத்துக்காகவும் உல்லாச வாழ்க்கைக்காகவும் தமிழ் தலைவர்களாக வாழ்ந்து கொண்டும் வாழ்ந்து மறைந்த சிலரின் உண்மை முகத்தை வெளிக் கொண்டுவர வேண்டிய தேவை உள்ளது. செயலதிபர் உமா மகேஸ்வரனின் கொலை பற்றி எத்தனை எத்தனை வதந்திகள் கட்டுக்கதைகள். பரந்தன் ராஜன் கொலை செய்தார். இந்திய raw உளவுத்துறை கொலை செய்தது போன்ற பல கட்டுக்கதைகளை கொலை செய்தவர்களே அதாவது அந்த கொலையால் லாபம் அடைந்தவர்கள்பரப்பிவிட்டார்கள். காரணம் தாங்கள் சம்பந்தப்பட்டிருப்பது வெளியில் தெரியக்கூடாது என்பதற்காக. ஆனால் இப்பொழுது சிலர் மாணிக்கம் தாசன் உமா மகேஸ்வரனின்விசுவாசி, சித்தார்த்தன் நேர்மையானவர் நீங்கள் எழுதுவது பொய் என்று கூறுகிறார்கள். இந்த ஆயுதம் தூக்கிய விடுதலை இயக்கங்களில் யார்யார்க்கும் யாரும் விசுவாசியும் இல்லை நம்பிக்கையாளர்களும் இல்லை. எல்லா இயக்கங்களிலும் இது தான் உண்மை. தான் வாழ யாரை கொன்றாலும் தவறு இல்லை என்ற நிலை தான் இருந்தது. தமிழ் மக்களை எப்படி சிங்கள அரசிடமிருந்தும், இராணுவத்திடம் இருந்து காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமிழ் விடுதலை இயக்கங்கள் கடைசியில் அந்த தமிழ் மக்களையே துரோகிகள் என்றும் காட்டிக் கொடுப்பவர்கள் என்றும் மாற்று இயக்கத்தவர்கள் என்றும் சித்திரவதை செய்து கொலை செய்தோமோ, அதே மாதிரி விசுவாசம் தான் எல்லோரிடமும் இருந்தது.
காலை 9 மணி போல் ஆட்சி ராஜன் தொலைபேசி எடுத்து, நீண்ட நேரம் பேசினார். தொலைபேசியில் பேசியது மட்டுமல்ல பின்பு நேரடியாக சந்தித்தபோது கூறிய சம்பவங்களையும் இதில் எழுதுகிறேன்.மறைந்த செயலதிபர் உமா மகேஸ்வரன் பகல் பம்பலப்பிட்டி அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்து பகல் உணவாக வெஜிடபுள் புலாவ் கேக்க, முட்டை பிரியாணி வாங்கி கொடுத்திருக்கிறார்கள். செயலதிபர் வழமையாக பம்பலப்பிட்டி தொடர் மாடியில் வந்து தங்கி இருந்து போகும் போது. இரவில் கடற்கரை அருகே நடைப்பயிற்சியில் இருந்து விட்டு தான் போவாராம். அவருக்குத் துணையாக ஆட்சி ராஜன் அல்லது ராபின் அல்லது சக்திவேல் கைத்துப்பாக்கியுடன் போவார்களாம். செயலதிபர் தன்னுடன் கூட அவர்களை வரவிடாமல், குறைந்தது 100 யார் தொலைவில் பின்னால் வர சொல்லுவாராம். காரணம் இவர்களை வைத்து தன்னை யாரும் அடையாளம் கண்டுபிடித்து விடுவார்கள் என்று. செயலதிபர் கொழும்பில் பல இடங்களில் முஸ்லிம் அடையாளத்துடன் தனியாக போய் வருவாராம். ராபின் இவரை விட்டு ஓடிவிட்டான். செயலதிபர் உமா மகேஸ்வரனின் கெட்ட நேரம் என நினைக்கிறேன், சக்திவேல் அப்போது ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்திருக்கிறார். சக்திவேல்சிறையிலிருந்து இருக்காவிட்டால் உமா மகேஸ்வரனின்மரண தண்டனையும் நடந்தே இருக்காது தடுத்துவிட்டு இருப்பார்.
இரவு எட்டு மணி போல் தூரத்தில் ஆட்சி ராஜன் பின்தொடர, கைகளில் முஸ்லிம் பெயரில் பாஸ்போர்ட் அடுத்த நாள் பயணம் போக வேண்டிய விமான டிக்கெட்டுகள் உடன் நடைப்பயிற்சியில் இருந்த செயலதிபர் திடீரென ஆட்சி ஆட்சி என்ற கத்தியுள்ளார். திட்டமிட்டபடிஎதிர்த்திசையில் நான்கு இயக்கத் தோழர்கள்திடீரென தோன்றி,அதில் ஒருவர் செயலதிபர் உமாமகேஸ்வவரணை இரண்டு மூன்று முறை நெஞ்சில் சுட்டுள்ளார். முகம் குப்புற விழுந்ததில் முகத்தில் சிறு அடிகள் பட்டுள்ளது.சில பேர் எழுதிய படி முகத்தை சிதைத்து உள்ளார்கள், சடலம் ரெண்டு நாட்கள் அனாதையாகக் கிடந்தது என்ற கட்டுக்கதை எல்லாம் பொய். ஆட்சி ராஜனும், மற்ற நால்வரும் உடனடியாக காலி வீதிக்கு வந்து, போலீசாருக்கு குறிப்பிட்ட இடத்தில் ஒரு சடலம் கிடப்பதாக தொலைபேசி மூலம் கூறியுள்ளார்கள். அதேநேரம் துப்பாக்கி சத்தம் கேட்ட தூரத்தில் இருந்த சிலரும் போலீசாருக்கு அறிவித்துள்ளார்கள். போலீசார் வந்து உமா மகேஸ்வரனின் சடலத்தை எடுக்கும் வரை ஆட்சி ராஜனும் , மற்ற தோழர்களும் தூரத்தில் வேறு வேறு இடங்களில் ஒளிந்து இருந்து தாங்கள் பார்த்ததாக கூறினார்கள். காரணம் தங்கள் அன்புக்குரிய தலைவரை அனாதைப் பிணமாக அந்த இடத்தில் விட்டுப்போக தங்களுக்கு மனம் வரவில்லை என்று கூறினார்கள்.
வெற்றிச்செல்வன் |
அடுத்த நாள் காலையில் இயக்கத்தின் நேர்மையான எந்தவித பதவி இழக்கும் ஆசைப்படாத ஆனந்தி அண்ணாவிடம் போய் தங்கள் 10 பேர் செயலதிபர்கோ உமாமகேஸ்வரன் இரவு சுட்டுக் கொன்றதாகவும், சடலம் போலீசார் எடுத்து போய் விட்டார்கள் என்றும் கூற, முதலில் நம்பாத ஆனந்தி அண்ணர் பின்பு நிலைமையை உணர்ந்து உடனடியாக செயலதிபர் இன் மனைவியிடம் போய் கூறி, போலீஸ் நிலையம் போய் , உண்மை நிலையை அறிந்து இருக்கிறார்கள். ஆட்சி ராஜன் தொலைபேசி மூலம் வவுனியாவில் இருந்த மாணிக்கம் தசானுக்கும்விபரத்தைக் கூறி, பின்பு அந்த நேரம் வவுனியாவில் செயலதிபர் ஒருவேளை தொடர்பாக போயிருந்த முருகேசு வை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு உடனடியாக கொழும்பு வந்து ஆனந்தி அண்ணாவுக்கு உதவி செய்யச் சொல்லி உள்ளார். முதலிலேயே மாணிக்கம் தாசன் சித்தார்த்தன் மற்றும் கொழும்பில தோழர்கள் எடுத்த முடிவுகளை அரசல்புரசலாக அறிந்து இருந்த முருகேசு, கவலைப்பட்டாலும், விதிதான்என்று கூறிவிட்டு உடன் கொழும்புவருவதாக கூறியுள்ளார்
ஆட்சி ராஜன் இடம் ஏன் நீங்கள் போய் நாங்கள்தான் செய்தோம்., என்று கூறினீர்கள். நீங்கள் ஏன்உங்கள் தலையில் மண்ணை போட்டுக் கொண்டீர்கள் என்று நான் கோபப்பட்டேன். செயலதிபர் ஐ காணவில்லை, என்று கூறி தேடிவிட்டு, போலீசில் புகார் செய்து இருக்கலாம். கடைசியில் விடுதலைப் புலிகள் சுட்டுக் கொன்று இருப்பார்கள், அல்லது இலங்கை அரசாங்கத்தின் பச்சை புலிகள் இயக்கம் கொண்டிருக்கும் என்று முடிவாக இருக்கும் என்று கூறினேன்.
அப்பொழுதுதான் ஆட்சி ராஜன் சில விஷயங்களை கூறினார். அதுவரை எனக்கு இந்த விடயங்கள் தெரியாது. கொழும்பில் வைத்து மாணிக்கதாசன் சித்தார்த்தன் போன்றவர்கள் ஆட்சி ராஜனிடம் கதைக்கும் போது செயலதிபர்உமா மகேஸ்வரனுக்கு மரணதண்டனை கொடுத்துவிட்டு, கட்டாயம் நீங்கள் 10 பேர் போய், ஆனந்தி அண்ணர், திவாகரன் போன்றவர்களிடம் இயக்கமே தான் அவருக்கு மரண தண்டனை கொடுத்தது அவர் விட்ட தவறுகளுக்காக என்று கூற வேண்டும் என்று கூறியுள்ளார் கள். அதோடு மாணிக்கம் தாசன் தான் புளொட் ராணுவ தளபதியாக பொறுப்பாக இருக்கும் போது வேறு இயக்கம் எங்கள் செயலதிபர் கொன்றார்கள் என்று செய்தி வந்தால் தனக்கு அவமானம் என்று கூறியுள்ளார். மாணிக்கம் தாசன் மனநிலைதான் தனக்கும் இருந்ததாக ஆச்சி ராஜன் கூறினார். சித்தார்த்தன் உமா மகேஸ்வரனின் மரணதண்டனைக்கு பின்பு அடுத்தகட்ட மாக எல்லா இயக்கத் தோழர்களையும் அழைத்து, எங்கள் இயக்க செயலதிபர் உமா மகேஸ்வரனின் தவறான நடவடிக்கைகள் அவர் இயக்கத்துக்கும் இயக்கத் தோழர்களுக்கும் செய்த துரோகங்கள், மற்றும் இலங்கை அரசோடு சேர்ந்து குறிப்பாக லலித் அத்துலத்முதலி யோடு சேர்ந்து தமிழினத்துக்கு செய்த துரோகங்கள் போன்றவற்றை கூறி, எங்கள் இயக்கமே நமது செயல் அதிபருக்கு மரண தண்டனை கொடுத்தது என்று கூறினாள் அது ஒரு சரித்திரமாக இருக்கும், எல்லா விடுதலை இயக்க தலைவர்களும் இனிமேல் தவறு செய்ய பயப்படுவார்கள் என்று கூறி ஆட்சி ராஜனை மூளைச்சலவை செய்து உள்ளார்கள்.
தாங்கள் தான் செய்ததாக 10 பேரின் பெயரை கூறும் போது, சித்தார்த்தனும், மாணிக்கம் தாசனும் தங்கள் பெயரை குறிப்பிட வேண்டாம் என்றும், காரணம் தோழர்கள் முன் விசாரிக்கும்போது தாங்கள் நடுநிலையாக இருந்து விசாரிப்பதாக காட்டிக் கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்கள். எக்காரணம் கொண்டும் சம்பவ இடத்தில் இருந்தவர்களில் தனிப்பட்ட பெயர்கள் வெளியில் வரக்கூடாது. காரணம் எமது இயக்கமே முடிவெடுத்து மரண தண்டனை கொடுத்ததாக இருக்க வேண்டும் என்று கூறி உள்ளதை ஆட்சி ராஜன் கடைசி வரை கடைபிடித்தார்.
ஆட்சி ராஜன் சித்தர் ,மாணிக்கம் தாசன் கூறிய படி தான் நினைத்திருந்த பத்து பேர்களில் மாறன், துணை ராணுவ தளபதி காண்டீபன், தராக்கி சிவராம் போன்றவர்களின் பெயர்களை இதில் சேர்க்கவில்லை. காரணம் தோழர்களின் கூட்டத்தில் இவர்கள் சித்தார்த்தன் மாணிக்கம் தாசனுக்கு ஆதரவாக நடுநிலையாக இருந்து பேசுவார்கள். அவர்களும் நாங்கள் நடந்த உண்மைகளை கூறுவோம் என்று கூறியுள்ளார்கள்.
ஆனந்தி அண்ணனிடம் போய் சொல்லும்போது ஆட்சி ராஜன் தனது பெயரையும், , அதோடு செயல் அதிபரின் தவறான நடவடிக்கைகளால் கோபப்பட்டு கொழும்பில் இருந்த கழக முக்கியஸ்தர்களான மதன், K.L ராஜன், ஜெயா, ராபின்போன்றவர்களின் பெயரையும் அதோடு தனது கழக ரகசிய வேலைகளுக்கு உதவியாக இருந்த ஜூட், மற்றும் துரோணன் என்பவரின் பெயரையும் சேர்த்து கூறி உரிமை கூறியுள்ளார்கள்.
உண்மையில் நடக்கப்போகும் சம்பவங்களை நாட்கள் உட்பட கடைசிவரை அறிந்தவர்கள் மொத்தமே நான்கேபேர்தான். ஆட்சி ராஜன், , மாணிக்கம் தாசன், சித்தார்த்தன், மற்றது நான்.சித்தார்த்தன் இந்தியாவில் வந்து தங்கியிருந்த படியால் எனக்கு முழு விபரங்களும் தெரிந்தது. எனக்கு தெரிய வேண்டி வந்த காரணம் மாணிக்கம் தாசன் ஆட்சி ராஜன் சித்தார்த்தன் இற்கு தொலைபேசி எடுக்கும்போது கூடுதலாக முழு விபரங்களும் நான்தான் கேட்டுள்ளேன்.
ஆட்சி ராஜன் சித்தார்த்தன் மாணிக்கம் தாசன் பேச்சை கேட்டு நம்பி ஏமாறாமல் இருந்தாள் இன்று இயக்கத்தின் முக்கிய பொறுப்புகளில் இருந்திருப்பார்கள். அல்லது சித்தார்த்த மாணிக்கம் தாசனும் தாங்கள் ஆட்சி ராஜனுக்கு கூறிய படி உடனடியாக கழகத் தோழர்களை அழைத்து நடந்த விஷயங்களை கூறி செயலதிபர் மா மகேஸ்வரனின் கொலையை கழகம் பொறுப்பு எடுத்து இருந்தால் இன்று எல்லோரும் கழகத்தில் ஒற்றுமையாக நல்லமுறையில் இயக்கத்தை வழிநடத்தி இருப்போம்.
அன்றிலிருந்து இன்றுவரை உண்மைகளை தெரியாமல் பலர் பேர்கள் சுய தேவைக்காக ஆட்சி ராஜனும் நண்பர்களும் செயலதிபர் உமா மகேஸ்வரனை கொலை செய்து விட்டதாக எழுதி வருகிறார்கள். அதோடு இதற்குப் பின்புலமாக இந்திய raw உளவுத்துறை இருந்ததாக நீண்ட கதை வசனம் எழுதுகிறார்கள். செயலதிபர் உமாமகேஸ்வரன் வெளியுலகத்துக்கு பிரபாகரனுக்கு நிகரான ஒரு தலைவர். அவரை கொலை செய்துவிட்டு பெருமையாக யாரும் தேவை இல்லாமல் நான்தான் கொலை செய்தேன் என்று பின்விளைவுகளை ஆராயாமல் கூறமாட்டார்கள். அதோடு ஒரு உளவுத் துறையின் ஏற்பாட்டில் நடந்திருந்தால் கடைசிவரை கொலை செய்தவர்களின் பெயர் வெளி வந்து இருக்காது, அப்படி வந்திருந்தாலும் அதை மறைக்க அந்த உளவுத்துறை அவர்களையும் கொலை செய்து இருக்கும்.
சித்தார்த்தன் |
இந்த கொலையால் ஆதாயம் பெற்றவர்கள் சித்தார்த்தனும் மாணிக்கம் தாசனும் மட்டுமே. இவர்கள் இருவரின் நம்பிக்கை துரோகத்தால் ஆட்சிராஜன், , மற்றும் பெயர் கொடுக்கப்பட்ட 6 பேரின் பெயர்களும் துரோகிகள் என்று முத்திரை குத்தப்பட்டது. அதோடு தங்களுக்கு இந்த கொலையில் உள்ள நேரடி சம்பந்தத்தை மறைக்க ரபினையும் அவரின் மனைவியையும் ஸ்விஸ் நாட்டில் வைத்து கொலை செய்தார்கள்.அன்று சித்தார்த்தன் மாணிக்கம் தாசன் கூறியபடி செயலதிபர் உமா மகேஸ்வரனை கொலை செய்துவிட்டு ஆனந்தி அண்ணாவிடம் ஏழு பெயர்களின் பெயரைக் கூறி உரிமைகோரி இருக்காவிட்டால், என்ன நடந்தது என்று யாருக்கும் தெரிந்திருக்காது. கடைசியில் சந்தர்ப்பத்திற்காக விடுதலைப் புலிகளின் தலையில் செயலதிபர் உமாமகேஸ்வரன் கொலையும் விழுந்திருக்கும்.
இன்றுவரை இந்தக் கொலையைப் பற்றி எழுதும் பலர் ஏன் இவர்கள் போய் ஆனந்தி அண்ணாவிடம் ஏழு பேரின் பெயரை கொடுத்து உரிமை கோரினார்கள் என்று ஆராயவில்லை. இதுதான் உண்மையில் நடந்த விடையங்கள்.
தொடரும்.
No comments:
Post a Comment