பார்வையாளர்களின் எண்ணிக்கை

Search This Blog

Powered by Blogger.

Wednesday, 13 October 2021

எனது இந்திய அனுபவம் பகுதி 104

  வெற்றிசெல்வன்       Wednesday, 13 October 2021

பகுதி 104


நான் தோழர் மார்க்கோ இடம் கடிதங்கள் இலங்கைக்கு கொடுத்தனுப்பி இரண்டு மூன்று நாட்களின் பின் நவம்பர் 1989 நடுப்பகுதியில் ஒருநாள் மாணிக்கம் தாசன் தொலைபேசி எடுத்து ரெண்டு வரிதான் பேசினார். நீர் அடங்க மாட்டியா? விளைவுகள் மோசமாக இருக்கும். தொலைபேசியை வைத்துவிட்டார். அதன்பின்பு ஒரு மொட்டை வான் கடிதம் வந்தது. அது எழுதியது மாணிக்கம் தாசன் தான். கடிதம் கீழே உள்ளது.


CRBஉறுப்பினர்

 தமிழீழம்

 10/ 11/89




புரட்சிகர நிதான வணக்கம் 

தோழர் வெற்றிச்செல்வன்

 அறிவது நீர் கடந்த காலங்களில் PLOT இயக்க உறுப்பினராக இருந்து உமக்குத் அந்த பணிகளை செய்து வந்தது அனைவரும்அறிந்தது.

 நீர் உமக்காக ஒதுக்கப்பட்ட பணிகளை தவறாகப் பிரயோகம் செய்து வருகின்றீர் என கடைசி காலகட்டத்தில்  செயலதிபர் அறிந்து உமக்கும் அதை கூறியிருந்தார். இதனால் நீர் மனமுடைந்து போய் இருந்ததும் உண்மை.

 பெரியவரின் மறைவுக்கு சற்று முன்னரும் பின்னரும் உமதுநடவடிக்கைகள் இயக்கத்தை அழிக்க வேண்டும் என்பது போலவே இருக்கிறது. இது எந்தவித காரணமும் இன்றி, கதையும் இன்றி உடனடியாக நிறுத்த வேண்டும். உமக்கு இயக்கத்தில் இருக்க வேலை செய்ய விருப்பம் இல்லையோ இயக்க உடமைகளையும் சொத்துக்களையும் பாதுகாப்பாக இயக்கத்துக்கே கிடைக்கக்கூடியதாக செய்யவும். இயக்க தஸ்தாவேஜுகள் இன் ஒரு பிரதியாவது என்பது எவருக்கும் கொடுக்கக் கூடாது . நீர் இன்று இருக்கும் நிலையில் விரும்பியதை செய்யலாம். எவருக்கும் எதனையும் கொடுக்கலாம். விரும்பியபடி ஆடலாம் .உம்மை பயப்படுத்த இதனை உமக்கு எழுதவில்லை ,கடந்தகால உமது சேவைகளுக்கு மதிப்பு கொடுக்கும் விதத்திலேயே இந்த புத்திமதியை எழுதுகின்றேன்.  நீர் இயக்கத்தினை விட்டு போக முதல் இயக்க சொத்துக்களை  அழித்ததோ,  விற்றோ, எறிந்தோ விடுவிர்  என்றால், நீர் எந்த வெளிநாட்டில் பாதுகாப்பாக இருக்கப் போகிறீர், விடவே மாட்டோம், செலவையும் பார்க்க மாட்டோம் ஒன்று இரண்டு பேர் பிடிப்பதையும் பார்க்க மாட்டோம், 1_2பேர் பிடி படுவதையும் பார்க்க மாட்டோம். இந்த நடவடிக்கையை இயக்கத்தின் கடந்த காலம் மாதிரி இருக்காது .இயக்க நல்ல மாதிரியே நடக்க வேண்டும் என விரும்புபவர்களின் நீரும் ஒருவன் என்றால் தயவுசெய்து இயக்கத் சொத்துக்களை பாதுகாப்பாக இயக்கத்துடன் ஒப்படைக்கத் தயார் படுத்தவும். விரைவில் அதற்கானவர் வந்து உண்மை சந்திப்பர் .மேற்கூறியவற்றை விளையாட்டாக எடுப்பீர் என்றால் உமது வாழ்வுடன் விளையாடுகிறிர்  என்பதேயாகும். நன்றி.

 நல்லது செய்து நன்றாக வாழ்க 

இப்படிக்கு

 CRB

உறுப்பினர்


இக் கடிதத்திற்கு உடனடியாக பதில் போட்டேன். கடிதம் கீழே.



T.Vetri chelvan

11,Desigar st

Vadapalani

Madras.26

24/11/89.

சித்தார்த்தர்/விசு/காண்டீபன்/ஆனந்தி

GTR/மாணிக்கம் பிள்ளை/மாணிக்கம் தாசன்

CR B குழு உறுப்பினர்கள்

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், தமிழீழம்

               வணக்கம்

உங்களில் ஒரு உறுப்பினர் எனக்கு, நான் 2/11/89 நண்பர் மாணிக்கம் தாசன் ஊடாக அனைத்து கழக அங்கத்தவர்களுக்ககும் என்று விலாசம் இட்ட மார்க்கோ மூலம் அனுப்பிய கடிதத்துக்கு ஓர் மிரட்டல் மொட்டை கடிதம் போட்டுள்ளார். உங்களில் ஒருவர் வேறு எழுத்தில் எழுதி இருந்தாலும் அது யார் என வசனநடை மூலம் தெரிகிறது. அதோடு from எழுதிவிட்டு அழித்த இடத்திலும் அவரின் பெயர் அறியக்கூடியதாக இருக்கிறது.

        கடந்த காலத்திலும் பின்பு மாநாட்டிலும் CRB இக்கு தெரிவு செய்த பெயர்பட்டியல் மாற்றத்தையும், ஏன் உடன் எங்களுக்கு சொல்லவில்லை . அதோடு முன்பு பழைய செயலதிபர் விட்ட பிழைகளை ஏன் தோழர் மத்தியில் ஏன் கூறவில்லை. நாங்கள் காட்டிலும், ரோட்டிலும் அலைந்து அழிய பார்த்துக் கொண்டுதானே இருந்தீர்கள் என பல இன்றுள்ள கழக அமைப்பில் உள்ள தோழர்கள் என்னை நேரடியாக குற்றம் சாட்டினார்கள். உண்மை. என்று வாய் திறந்து பேச பயப்பட்டேன். விளைவுகள் தெரியும். ஆனால் இன்று வரை கழகத்தை, கழகத்தைப் பயன்படுத்தி பணம் சேர்க்கவோ, சொத்து சேர்க்கவோ, உறவினரை வெளிநாட்டுக்கு கழகப் பணத்தில் அனுப்பவோ இல்லை. இங்கும் சொகுசு வாழ்க்கை வாழவில்லை. அதோடு பிரச்சினைகளில் இருந்து ஒதுங்கி வாழுவோம் என்றால் ஜெயிலில் இருக்கும் தோழர்களும் சிகிச்சை பெற்ற தோழர்களும் அனாதைகளாக இங்கு நின்றதால் இதுவரை கழக சுமையை தனிப்பட்ட நான் சுமந்தேன்.

    

அன்று  பயந்து பேசாமல் இருந்தது போல், இன்றுகழகத் தலைவர்கள் விடும் பிழைகளை பார்த்துக்கொண்டு இருந்தால், பதவி காப்பாற்றப்படும் எனக்கு, ஆனால் நாளை தோழர்கள் அழியும்போது நான் தோழர்களுக்கு துரோகம் செய்தவன் ஆவேன். எனக்கு வந்த மொட்டை கடிதம் கழக சொத்துகள் பற்றியதாக உள்ளது. இது அடிப்படையில் அதைப் பற்றியது அல்ல .உண்மையில் முன்னால் செயலதிபர் இன் கொலைசம்பந்தமாக உண்மைகள் தொடர்ந்து தோழர்களுக்கு தெரிந்தால் பிரச்சனை என என்னை பயமுறுத்தி உண்மைகளை மறைக்கும் முயற்சியே ஆகும். ஓர் விடுதலை இயக்கத்தில் சேரும்போதே உயிருக்கு உத்தரவாதம் இல்லை அப்படியிருக்க உயிரை பற்றி மிரட்டுவது வீண்.

         மேலும் முன்பு எழுதிய கடிதத்தின்படி தோழர்கள் விரும்பினால் உண்மையை எழுதுகிறேன் எனக் கூறியிருந்தேன். அதன்படி  பழைய செயலதிபர் இன் கொலையில் சம்பந்தப்பட்ட யாவரினதும் உண்மைகளை நான் எழுத வேண்டிய தேவை உள்ளது. காரணம் இன்று சில தோழர்கள் கழகத்துக்காக செய்த கொலையை, பலிகடா ஆக்கப்பட்டு, தோழர்கள் மத்தியில் துரோகிகளாக காட்டப்படுகிறார்கள். அதேநேரம் சம்பந்தப்பட்ட மற்றவர்கள் உண்மைகளை மறைக்க மொட்டை கடிதம் போடுகிறார்கள்.


மேலும் மொட்டை கடித வாசகங்களின் படி எனக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை நான் தவறாக பிரயோகம் செய்ததாகவும், அதை பழைய செயலதிபர் அறிந்து எனக்கு கூறியதாகவும், அப்படியானால் கழக மாநாட்டில் முதல் நாள் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கவும், தேர்தல் அலுவலராக கடமை ஆற்றவும் ஏன் என்னை நியமித்தார். அதோடு தேர்தல் அலுவலராக நியமித்த பிரச்சினையில் செயலதிபர் என்னையும்,KL ராஜனையும் ஆதரித்து இவர்கள்  மிக நம்பிக்கையானவர்கள் என அக்கூட்டத்தில் காரசாரமாக கூறினார். பதிவு நாடா விலும் உள்ளது. அதோடு நான் இந்தியா வந்த பின்பு அன்றைய இக்கட்டான நேரத்தில் என்னை கொழும்பு நிர்வாகப் பொறுப்பாளராகவும் நியமித்த தாகவும் அறிந்தேன். அப்படியாயின் அன்று செயலதிபர் கழகத்தை  தவறாக பிரயோகம் செய்பவர்களின் கைகளிலா பொறுப்புகள் கொடுத்து கழகத்தை அழிய விட்டார். அவர் சாகும் வரை நிர்வாகப் பொறுப்பில் என்னைத்தான்  நான் இந்தியாவில் இருந்தாலும் போட்டிருந்தார்.


அடுத்த மொட்டை கடித வசனம் பெரியவரின் மறைவிற்கு சற்று முன்னரும் பின்னரும் எனது நடவடிக்கைகள் இயக்கத்தை அழிக்க .வேண்டும் என்பது போலவே இருக்கிறது என. இவ்வளவு தெரிந்த இந்த CRB உறுப்பினர்  ஏன் உடன் தக்க நடவடிக்கை எடுக்க இல்லை. இந்த PLOTE இயக்கத்தை அழிக்க ஓர் உறுப்பினர் முயலும்போது, அதிலும் முக்கிய பொறுப்பில் உள்ள (சென்னை பிரதிநிதி) ஓர் உறுப்பினர் முயலும்போது, உடனடியாக அவரை மாற்றாமல் விட்டதும், அதோடு நடந்த CRB கூட்டத்தில் கூறாமல் விட்டதும், கூறியிருந்தால் உடன் முறையான தகவல் அறிவித்து பதவி மாற்றம் செய்வதும், கடிதம் எழுதிய CRB உறுப்பினரின் வேலை. அதை விட்டுவிட்டு இன்றுவரை கழக வேலைகள்செய்யச் சொன்னதும், கழகத்துக்கு தில்லியில் ஆயுதம் மற்றும் உதவிகள் கேக்க சொன்னதும், மாலைத்தீவு விடயமாக வைகுந்தவாசன் உடன் பேச சொன்னது ஏன்? அதோடு கழகத்தை அழிக்க முயன்றதாக எழுதியவர்கள் ஏன் எனக்கு கழகத்தை வளர்ப்பது பற்றி கடிதம் எழுத வேண்டும்.

   நான் 2/11/89இல் எழுதிய கடிதத்தில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளேன் புதிதாக வரும் பொறுப்பாளர் இடம் எனது சகல பொறுப்புகளையும் உடன் ஒப்படைப்பதாக. இக்கடிதம் CRB யால் ஆராயப்பட்டதா? அப்படியாயின் முறையாக எனக்குத் தகவல் தந்திருக்கலாம் தானே. அதை விட்டுவிட்டு ஏன் மொட்டைக் கடிதம் எழுதிய பின்பும் (10/11/89) கழக வேலைகள் கூறினீர்கள்.

                          இவ்வளவுக்கும் எனக்கு முறையான முறையில் CRB பதில் தந்தால், கழகம் தொடர்ந்து நல்ல முறையில் இயங்குகிறது PLOTE இன் முன்னாள் உறுப்பினர் என்ற முறையில் மகிழ்ச்சி அடைவேன். இத்துடன் CRB உறுப்பினரின் மொட்டை கடித நகலும், முன்பு நான் எழுதிய கடித நகலும், அதோடு பலிகடாவாக பட்ட தோழர்கள் kL ராஜன், ஆட்சி ராஜன் தாசனுக்கு என் மூலம் அனுப்பிய கடித நகல்களும(மார்க்கோ மூலம்) இணைத்துள்ளேன்.


செயலதிபர் உமா மகேஸ்வரனின் கொலையால் திட்டமிட்டு பலிகடா வாக்கப்பட்ட தோழர்கள் முன்பு கசட் மூலமும் பின்பு கடிதம் மூலமும் தங்களுக்கு உரிய பதிலை தரும்படி  கழகதோழர்களை கேட்டிருந்தார்கள். ஆனால் கழகம் இதுவரை பதில் தராமல், ஆனால் இவர்களை அழித்து உண்மைகளை மறைக்க சிலரை கழகத்தில் விலகியவர்கள் என்ற பெயரில் கொழும்பு அனுப்பியுள்ளதாகவும், விரைவில் இங்கும் (இந்தியா) அனுப்ப உள்ளதாகவும்  அறிந்துவேதனைப்படுகிறேன். பலிகடா வாக்கப்பட்ட தோழர்கள் இன்று கழகத்தை நல்ல முறையில் நடத்த தகுதியுள்ளவர்கள் கருதும்IPKF சிறையில் இருந்து வந்த தோழர்களின் பிரதிநிதிகளை சந்தித்து நடந்த உண்மைகளைக் கூற விரும்புகிறார்கள். உரிய பதிலை உடன் எதிர்பார்க்கிறார்கள்.

       நான் எழுதிய கடிதம் தோழர்களுக்கு காட்டப்படாமல் உண்மைகளை மறைக்க மிரட்டப் படுவதால், சகல தோழர்களுக்கும் கடித நகல் இனிமேல் அனுப்ப யோசிக்கிறேன் எனது இந்த முடிவு CRB விட்ட பிழைதான்.

நன்றி

அன்புடன் முன்னாள் கழக உறுப்பினர்

த. வெற்றிச்செல்வன்


Note

இத்துடன் திருச்சி ஜெயிலில் உள்ளவர்கள் போட்ட கடித நகலும் வைத்துள்ளேன்.


இந்தக் கடிதங்களை அனுப்பியவுடன் சுறுசுறுப்பாக உண்மைகளை மறைக்க எங்களுக்கு எதிராக ஆயுத  நடவடிக்கை எடுக்க, விமானம் மூலமும், படகு மூலமும் இயக்கத் தோழர்களும், நமது ராணுவ தளபதி மாணிக்கம் தாசன் வந்தார்கள்.


தொடரும்.

          

...











logoblog

Thanks for reading எனது இந்திய அனுபவம் பகுதி 104

Previous
« Prev Post

No comments:

Post a Comment