பார்வையாளர்களின் எண்ணிக்கை

Search This Blog

Powered by Blogger.

Thursday, 30 September 2021

எனது இயக்க இந்திய அனுபவங்கள் - பகுதி 88

  வெற்றிசெல்வன்       Thursday, 30 September 2021

பகுதி - 88 


செந்தில், உமா மகேஸ்வரன், வாமதேவன், ஜான் மாஸ்டர்



மாணிக்கம் தாசன் தோழருடன்

20/05/1989. முள்ளி குளத்தில் இலங்கை ராணுவ உதவியோடு தமிழீழ விடுதலைப் புலிகள் நமது முக்கிய ஆரம்பகால 60க்கும் மேற்பட்ட தோழர்களை படுகொலை செய்த நாளுக்கும், இதன் தொடர்ச்சியாக கொழும்பில் எஞ்சிய மூத்த தோழர்களுக்கும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழக செயலதிபர் உமா மகேஸ்வரனுக்கு இடையில் ஏற்பட்ட பலதரப்பட்ட கருத்து வேறுபாடுகள் வாய்த் தர்க்கங்கள் கொலை மிரட்டல்கள் இதன் முடிவில் கொழும்பில் வைத்து கழகத்தின் முக்கிய இரண்டாம் கட்டத் தலைவர்கள் கழகத்தின் செயலதிபர் உமாமகேஸ்வரன் அவர்களுக்கு மரண தண்டனை கொடுக்க முடிவு எடுத்து, மரண தண்டனை கொடுத்த16/07/1989 வரை கொழும்பில் நடந்த அனைத்து சம்பவங்களும் இந்தியாவில் பொறுப்பிலிருந்த எனக்கு சித்தார்த்தன், மாணிக்கம் தாசன், இடைக்கிடை ஆட்சி ராஜன் போன்றவர்கள் தொலைபேசி மூலம் கூறிய செய்திகளை இப் பதிவில் போடுகிறேன். அதற்கு முன் சென்னையில் எந்த ஒரு முக்கிய செய்தியும் பதிவில் போடக் கூடியதாக என் நினைவில் இல்லை. திருச்சி ஜெயிலில் இருந்த தோழர்களே போய் பார்த்தது, வேலூர் ஆஸ்பத்திரியில் இருந்த அண்மையில் மறைந்த பத்தர் தோழரே போய் பார்ப்பது போன்ற வேலைகள் தான் இருந்தன.

முள்ளிக்குள எமது தோழர்களின் இறப்புக்கு பின்பு, கொழும்பில் சொந்த எஞ்சிய அனைத்து தோழர்களும் மாணிக்கதாசன், மற்றும் அரசியல் தலைவர் சித்தார்த்தன் போன்றவர்களும் செயலதிபர் உமாமகேஸ்வரன் அவர்களிடம் அடுத்து என்ன செய்வது என்று பேசும்போது, என்ன காரணமோ தெரியவில்லை செயலதிபர் சரியான பதில் சொல்லாமல் கோபப்பட்டு இவர்கள் மேல் எரிந்து விழுந்துள்ளார். அதோடு எல்லோரிடமும் நீங்கள் இயக்கத்தை விட்டு போகலாம். என்னால் மலையகத் தமிழர்களை வைத்து ஒரு புதிய இயக்கம் உருவாக்க முடியும் என்று கூறியுள்ளார். செயலதிபரின் இந்த கதை எல்லாம் தோழர்களையும் கோபப்பட வைத்துள்ளது. சில தோழர்களை தனிப்பட்ட முறையிலும்  தரக்குறைவாக திட்டியுள்ளார்.  மாறன் தோழர்  எமது இயக்கம் நூற்றுக்கணக்கான இளைஞர்களை இழந்துள்ளது. இப்ப இருப்பவர்களும் வீட்டுக்கும் உதவவில்லை நாட்டுக்கும் உதவவில்லை. சுற்றி எதிரிகளை மட்டும் தான் சம்பாதித்து வைத்து உள்ளார்கள். எங்களை  இயக்கத்தை விட்டு விட்டுப் போகச் சொன்னால் நாங்கள் எங்கே போவது என்று திரும்பக் கேட்டுள்ளார். (அன்று தோழர்களுக்காக குரல் கொடுத்த மாறனை1998 ஆண்டு எமது மிகமுக்கிய தலைவரும் மாறனின் நெருங்கிய நண்பரும்ஆன ஒருவர் கொலை செய்து தூக்கில் தொங்க விட்டதாகவும், அல்லது மாறன் தூக்கில் தொங்க துப்பாக்கி முனையில் மிரட்டி தற்கொலை செய்யபட்டதாகவும் தகவல் கொடுமையான நிலை)  அதற்கு செயலதிபர் அதற்கு நான் பொறுப்பு இல்லை. என்று கூறியதுடன், செயலதிபர் இன் நாக்கில் சனி இருந்திருக்க வேண்டும், மேலும் அவர் என்னை நம்பியா விடுதலைக்கு வந்தீர்கள், என்று பல வார்த்தைகளை கூறியுள்ளார். இது மிஞ்சியிருந்த அங்கிருந்ததோழர்களுக்கு கடும் கோபத்தை உண்டு பண்ணி உள்ளது. அங்கு நடந்த சம்பவங்களை மாணிக்கம் தாசன் மற்றும் சித்தார்த்தன் இவர்கள் மூலம் தொலைபேசி வாயிலாக அறியக் கிடைத்தது. 

கொழும்பில் செயலதிபர் உமா மகேஸ்வரனுக்கு ஆதரவாக இருந்தது சக்திவேல் மட்டுமே. ஆட்சி ராஜன், சாம் முருகேஷ் பின்னர் எனக்கு கூறிய செய்தி , சக்திவேல் தலைவருக்கு ,விசுவாசமாக இருந்தாலும், அவர் நடந்து கொண்ட விதம் சக்திவேலுக்கு பிடிக்கவில்லை. அதோடு தோழர்களை கொழும்பில் வைத்து குழப்புவது, செயலதிபர் உமா மகேஸ்வரனுக்கு எதிராகப் தூண்டுவது மாணிக்கம் தாசன் தான் என்று தோழர்களிடம் இடம் கூறியுள்ளார். கொழும்பில் அன்று இருந்த முக்கிய தோழர்கள் எமது உதவி இராணுவத்தளபதி மன்னார் காண்டீபன், மதன், k.L ராஜன், ஆட்சி ராஜன், ஜெயா, மாறன், தராக்கி சிவராம், லண்டன் கிருஷ்ணன்போன்றவர்களிடம் மாணிக்கம் தாசன் ,சித்தார்த்தனும் ரகசியமாக பல சுற்றுப் பேச்சு வார்த்தைகள் நடத்தியுள்ளார்கள். அதில் முக்கியமானது நாங்கள் இயக்கத்தை விட்டுபோவதை விட, செயலதிபர் உமா மகேஸ்வரனை முதலில் இயக்கத்தை விட்டு தூக்க வேண்டும். நேரடியாக சொல்வதென்றால் உமா மகேஸ்வரன் தமிழ் மக்களுக்கும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் செய்த துரோகத்துக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்பது.செயலதிபர் பற்றிய சகல விபரங்களும் அலசி ஆராயப்பட்டு இருக்கின்றன. அத்துலத்முதலி தொடர்பு அதன் மூலம் விடுதலைக்கு ஏற்பட்ட இழப்புகள் பற்றி எல்லாம் சித்தார்த்தர் விளங்கப்படுத்தி உள்ளார்.

வெற்றிச்செல்வன்

மகேஸ்வரனுக்கு மரணதண்டனை கொடுப்பது பற்றிய செய்தி எந்த தோழருக்கும் அதிர்ச்சி அளிக்கவில்லை. எல்லோரும் வரவேற்றிருக்கிறார்கள். இவர்கள் ரகசியமாக கூடிப்பேசி திரிவது சக்திவேல், ஆனந்தி, திவாகரனா மாணிக்கம் பிள்ளை போன்றவர்களுக்கு தெரியாது. இதில் வேடிக்கை என்னவென்றால் ஆட்சி ராஜன் மனதளவில் செயலதிபர் உமா மகேஸ்வரனுக்கு எதிராக இருப்பது பல பேருக்கு தெரியாது. சித்தார்த் எனக்கு தெரியும். ஆனால் மாணிக்கம் தாசன் ஆட்சி ராஜனை ஒரு சந்தேகபார்வைதான் பார்த்துள்ளார். காரணம் செயலதிபர் உமாமகேஸ்வரர் மாணிக்கம் தசாணை லண்டன்  கிருஷ்ணனைபோடசொல்லி சொன்னது மாணிக்கம் தாசனுக்கு தெரியும்.. ஆச்சி ராஜன் மாணிக்கம் தாசணை சுடமாட்டார் என்று மாணிக்கத்துக்கு உத்தரவாதம் கொடுத்தது சித்தார்த்தர். இது எனக்கு நன்றாக தெரியும். மேலும் விபரங்கள் எழுதும் முன் இது சம்பந்தமாக இரண்டு வருடத்துக்கு முன்பு போட்ட பதிவை இதனுடன் கீழே போட்டு உள்ளேன்.

17/06/2019 வெளிநாட்டில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து கொண்டுதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின்இருக்காமலும் கழகத் தலைவர் சரியில்லை கழகம் சரியில்லை என்று இயக்கத்தை விட்டு ஓடியவர்கள் இன்று தாங்கள் தான் ஏதோ தமிழக மக்கள் விடுதலை கழகத்தைக் கட்டிக் காப்பவர்கள் போல் எழுத தொடங்கியுள்ளார்கள் கழகத் தலைவர் உமா மகேஸ்வரனின் மரண தண்டனையை யாரோ சிலர் கூலிக்காக செய்தது போல் காட்ட முற்படுகிறார்கள்

 என்ன நடந்தது என்று தெரிந்தும் தெரியாதது போல் நடிப்பவர்களுக்கு திரும்பவும் எனக்குத் தெரிந்த விபரங்களை கூறுகிறேன் முள்ளிக்குளத்தில் எமது பழைய வீரம்மிக்க தோழர்களை இலங்கை அரசின் உதவியுடன் விடுதலைப் புலிகள் கொன்ற பின்பு கொழும்பில் கிட்டத்தட்ட 40 தோழர்கள் கட்ட இருந்திருக்கிறார்கள் மொழிக்குள்ள சம்பவத்துக்குப் பின் ஒரு மாதம் கழித்து நண்பர் மாணிக்கம் தாசன் எனக்கு சென்னைக்கு தொலைபேசி எடுத்து பல விடயங்களைக் கூறினார்

ஆட்சி ராஜன்
கொழும்பில் இருந்த தோழர்கள் கொதித்துப் போயிருந்த தலைவர் உமாவை பார்த்து பேச வேண்டும் என்று தகராறு பண்ணினார்களாம் பின்பு கல்கிசையில் ஒரு வீட்டில் உமாமகேஸ்வரன் சந்திப்பு நடந்த போது தோழர்களும் உமா மகேஸ்வரனும் மிகப்பெரும் வாக்குவாத பட்டன ராம் உமா மகேஸ்வரன் தோழர்களே பார்த்து நீங்கள் எல்லாம் இயக்கத்தை விட்டு போங்கள் என்னால் புது இயக்கம் கட்டியெழுப்ப முடியும் எனக்கூற மாறன் போன்ற தோழர்கள் மிகக் கடுமையாக ஆரம்பத்திலிருந்து அக்காலம் வரை தலைவர் விட்ட பிழைகளை சுட்டிக்காட்டியதோடு அத்துலத் முதலியின் தொடர்பையும் சுட்டிக்காட்டியுள்ளார். மாணிக்கம்தாசனுமசித்தார்த்தனும் தோழர்களைசமாதானப்படுத்த  செய்த முயற்சி பலிக்கவில்லை எனக் கூறினார் அங்கிருந்த அவ்வளவு தோழர்களும் உமா மகேஸ்வரனைபதவியில் இருந்து துரத்த வேண்டும் மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்ற அளவில் பேசியிருக்கிறார்கள் அக்கூட்டத்தில் பங்குபற்றிய பலரின் பெயர்களை எனக்கு தாசன் கூறினார் இப்போது நினைவில் உள்ள பெயர்கள் சித்தார்த்தன் மாணிக்கம் தாசன்சித்தார்த்தனின் பாதுகாப்பாளர அயும் ஐயும் குடித்துவிட்டு வந்து மிகப்பெரிய கலாட்டா அங்கு பண்ணியுள்ளார் மேலும் மாணிக்கம் தாசன் ஆட்சி ராஜன் கே எல் ராஜன் மதன் மாறன் காண்டீபன் ஜெயா சாம் முருகேசு துரோணன் ஜூட் சுரேஷ்அன்டன் சிவராஜா ஜோசப் விஷ்ணு போன்ற பெயர்கள் ஞாபகத்தில் உள்ளன அச்சமயம் கொழும்பு நிர்வாகப் பொறுப்பில் என்னைத்தான் போட்டிருந்தார்கள் என் என்னை அங்கு வர முடியுமா என மாணிக்கம் தாசன் கேட்டார் நான் இந்த நேரத்தில் அங்கு வர விரும்பவில்லை என கூறினேன் அவர் கூறினார் பொடிகள் எல்லாம் பெரியவருக்கு எதிராக இருக்கிறார்கள் என்ன நடக்குமோ தெரியாது. இதன் பின்புதான் எல்லோரும் கலந்துபேசி ரகசியமாகதலைவருக்குமரண தண்டனை கொடுத்திருந்தார்கள் இக்கூட்டத்தில் சம்பந்தப்பட்ட பலர் இன்னும் உயிரோடு இருக்கிறார்கள் வெளிநாடுகளிலும் இருக்கிறார்கள் அவர்கள் மனம் திறந்தார் முழு உண்மைகள் தெரிய வரும் அந்தக் கூட்டத்திற்கு பின்பு எடுத்த நடவடிக்கைகளதான் இதுஇதில் ஆறும் கூலிப்படையாக செயல்படவில்லை என்பதை உறுதியுடன் கூறிக்கொள்கிறேன் அப்படி கூலிப்படையாக செயல்பட்டு இருந்தால் அதற்கு தலைமை தாங்கியவர்கள் மாணிக்கம் தாசன் சித்தார்த்தன் மற்றும் அக்கூட்டத்தில் பங்குபற்றியவர்கள் அனைவரும் தான்


தொடரும்












logoblog

Thanks for reading எனது இயக்க இந்திய அனுபவங்கள் - பகுதி 88

Previous
« Prev Post

No comments:

Post a Comment