பகுதி 51
நான் எனக்குத் தெரிந்த உண்மைகளை பதிவுகளாக போடுவதற்கு காரணம், எனது தலைவர் உமா மகேஸ்வரனை அசிங்கப்படுத்துவது என் நோக்கமல்ல. ஒரு விடுதலைப் போராட்ட இயக்கத்தின் தலைவர் என்ற முறையில் அவர் விட்ட தவறுகளை சுட்டிக் காட்டுவது தான். எமது போராட்டம் இன்னும் முடியவில்லை வருங்காலத்தில் போராடுபவர்கள் எங்கள் தலைமுறை விட்ட தவறுகளை திருத்திக் கொள்வதற்கு. நான் போடும் பதிவுகளுக்கு உமாமகேஸ்வரன் மட்டும்தான் துரோகி போல பல பேர் கருத்துகளை எழுதுகிறார்கள். அது தவறு மற்ற இயக்கத் தலைவர்கள் இவரைவிட பல துரோகங்கள் செய்துள்ளார்கள். அது பற்றி அந்தந்த இயக்கத் தோழர்கள் எழுதினால் நன்றாக இருக்கும்
உமாமகேஸ்வரன் இருக்கும் காலத்தில் நடந்த தவறுகளை விட, சித்தார்த்தன் மாணிக்கதாசன் காலங்களில் நடந்த கொலைகள் கொள்ளைகள் கற்பழிப்புகள் அதிகம். அதுபோல், இலங்கை அரசோடு சேர்ந்து விடுதலைப்புலிகள் உட்பட மற்ற இயக்கங்கள்செய்த கொலைகள், இலங்கை இந்திய படைகளோடு சேர்ந்து மற்ற இயக்கங்கள் செய்த கொலைகள் கொள்ளைகள் மிக அதிகம். இவர்களோடு ஒப்பிட்டால் உமாமகேஸ்வரன் தவறுகள் மிகச் சிறியவை. சரி இனி பதிவுக்கு வருவோம்.
நானும் செயலதிபர் உமாமகேஸ்வரன் இடம் இந்திய அதிகாரிகள் பயிற்சியும் ஆயுதங்களும் தர தயாராக இருப்பதாகவும், கடந்த காலத்தில் நாங்கள் பல தவறுகள் விட்டு உள்ளதால் , சித்தார்த்தன் போன்ற தலைவர்கள் யாரும் பொறுப்பாக இருக்க வேண்டும் என கூறினார்கள் என கூறினேன். செயல் அதிபரும் அதை ஏற்றுக்கொண்டு தான் சித்தார்த்துடன் பேசுவதாகும், என்னையும் சித்தார்த்துடன் பேசச் சொன்னார். நிலைமையை நானும் பவனும் சித்தார்த்தர் இடம் தொலைபேசியில் எல்லாம் விளக்கிச் சொன்னோம். தான் வருவதில் பிரச்சனை இல்லை இந்திய அதிகாரிகள் ஏமாற்றி விட்டால் என்ன செய்வது என்று கேட்டார். இதுதான் எமது இயக்கத்துக்கு கடைசி கட்ட முயற்சி செய்து பார்ப்போம் என்று கூறினோம். சித்தாத்தன் டெல்லி வந்தார். பவன் நான் சித்தார்த்தன் மூவரும் பல விடயங்களை அலசி ஆராய்ந்தோம். அதன்பின்பு
சித்தார்த்த ன் |
பவனை செயல் அதிபரிடம் கூறி சென்னைக்கு அனுப்பினேன். சித்தார்த்தன் திரும்பவும் ரா உளவுத்துறை உயர் அதிகாரிகளிடம் பேசி நம்பிக்கையாக சென்னை சென்றார். சென்னையிலும் அடுத்தடுத்து மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின. கடைசி கட்ட இந்திய பயிற்சி , சுட்டு பழக பெருந்தொகையான தோட்டாக்கள் ,பயிற்சி முடிய ஆயுதங்கள் என முகாம் தோழர்களும், எமது இயக்க முன்னணித் தலைவர்களும் பரபரப்பாக இயங்குவதாக சென்னையிலிருந்து மகிழ்ச்சியான செய்திகள் வந்தன. செயலதிபர் உமா மகேஸ்வரனும் மிகவும் பரபரப்பாக முகாம்களில், கடற்கரையோரம் போன்ற இடங்களில் எல்லாம் போய் இலங்கைக்கு போவதற்குரிய வேலைகளை குறிப்பதாகவும் சென்னையிலிருந்து கூறினார்கள். முதன்முறையாக அப்போதுதான் எமது இயக்கம் சுறுசுறுப்பாக இயங்கியதாக நான் நினைக்கிறேன். இந்திய பயிற்சியும்ங்் தொடங்கி விட்டதாக அறிந்தேன்.
செயலதிபர் உமா மகேஸ்வரன் சித்தார்த்தனை திரும்ப டெல்லி அனுப்பி, பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் டெல்லி பிரதிநிதிகளுடன், லண்டன் ஆயுத வியாபாரி எங்களை ஏமாற்றி விட்ட நிகழ்வைக் கூறி திரும்ப அந்த பணம் கிடைக்குமா என அறிய சொன்னார். நானும் சித்தார்த்தனும் எங்களுக்கு முன்பே நண்பர் ராக இருந்த பாலஸ்தீன விடுதலை இயக்கம் பிரதிநிதி. சந்தித்து தாங்கள் ஏமாற்றப்பட்ட முழு விபரங்களையும் கூறினோம். அவர் ஆயுத வியாபாரிகள் ஏமாற்றுவது குறைவு. தாங்கள் பல ஆயுதவியாபாரிகளிடம் தொடர்ந்து வியாபாரம் செய்வதால், தங்களுக்கு எல்லா ஆயுத வியாபாரிகளையும் தெரியும் என்றும், இல்லாவிட்டால் தங்கள் பெயரைச் சொல்லி வேறு யாரோ ஏமாற்றி இருப்பார்கள் என்றும் கூறினார். சித்தார்த்தன் ஆயுத வியாபாரியின் பெயர் மற்றும் விபரங்களை அவரிடம் கொடுத்தார். அவரும் இரண்டொரு நாட்களில் தான் தலைமை கழகத்தை தொடர்பு கொண்டு விபரங்களை அறிவதாக கூறினார். நாங்கள் அப்போது அவரை சந்தித்தாலும் அவர் எங்களுக்கு அரபு ஸ்பெஷல் காபி என்று ஒரு கடும் கருப்பு கலர் காப்பி ஒன்றை போட்டுக் கொடுப்பார். அவர் ரசித்து ருசித்து குடிப்பார். நானும் சித்தார்த் தரும் கஷ்டப்பட்டு ஒரு புன்னகையோடு குடித்து முடிப்போம்.
இரண்டொரு நாள் முடிய பாலஸ்தீன இயக்கப் பிரதிநிதி எங்களை தனது அலுவலகம் அழைத்தார்.
தோழர்கள் பயிற்சியில் |
கடைசியில் உமா மகேஸ்வரன், லண்டன் கிருஷ்ணனின் நம்பிக்கைத் துரோகத்தால் இயக்கப் போராளிகள் இடம் கெட்ட பெயர் வாங்கியது தான் மிச்சம். உமா மகேஸ்வரன் பற்றிய நெருங்கிய விஷயங்களை அறிந்திருந்ததால் லண்டன் கிருஷ்ணன் அவரை ஏமாற்றியது சுலபமாக இருந்திருக்கிறது.
கடல்பயிற்சியில் தோழர்கள் |
சித்தார்த்தனும் சென்னை போய் தேவையான வேலைகளை செய்யத் தொடங்கியுள்ளார். இதேநேரம் டெல்லியில் டெல்லி அரசியலில் நிலைமைகள் பரபரப்பாக இருந்தன. ராஜீவ்காந்தி அரசு வாங்கிய போஃபர்ஸ் பீரங்கி பலவித ஊழல் இருப்பதாக கூறி எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தை நடத்த விடவில்லை ஒரே ஆர்ப்பாட்டம் என்ற பத்திரிகையைத் திருப்பினாலும் போஃபர்ஸ் பீரங்கி பற்றிய செய்திகள்தான். பாராளுமன்ற சபாநாயகர் எதிர்க்கட்சிகளை சமாதானப்படுத்த கூட்டு பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஒரு விசாரணை கமிஷனை அமைத்தார். அந்தப் பாராளுமன்றக் கூட்டுக் குழுவில் ஏடிஎம்கே கட்சியை சேர்ந்த நாங்கள் இருந்த வீட்டின் பாராளுமன்ற உறுப்பினர் ஆலடி அருணா எம்பியும் ஒரு உறுப்பினர். பாராளுமன்ற கூட்டுக் குழுவின் விசாரணைகள் முடிந்து, கூட்டுக்குழு ஏகமனதாக தயார் செய்த அறிக்கையை ஆலடி அருணா எம்பி ஏற்றுக்கொள்ளவில்லை. தனியாக ஒரு அறிக்கை தயாரித்து ஊழல் குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் உள்ளதாக அறிக்கை கொடுத்தார். ஆலடி அருணா எம்பி அறிக்கைகள் தயார் செய்யும் போது எழுதிய பக்கங்களை தினசரி என்னிடம் கொடுத்து, டைப்பிங் செய்து வரச் சொல்லுவார். எனக்கு உண்மையில் அதன் விபரம் தெரியாது. அவர் டைப்பிங் க்கு போகும் முதல் முன்பு ஒரே ஒரு வார்த்தை தான் கூறுவர். தம்பி டைப் செய்யும்போது 3 பிரதிகளுக்கு மேல் வைக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். நான் தினசரி பல நாட்கள் போய் டைப் செய்து எடுத்து வந்து கொடுத்திருக்கிறேன். ஆலடி அருணா எம்பியின் தனி அறிக்கை பாராளுமன்றத்தை ஸ்தம்பிக்க செய்தது. ஒரே நாளில் டெல்லிப் பத்திரிகைகள் எல்லாம் ஆலடி அருணா எம்பியின் புகைப்படமும் செய்திகளும் , பேட்டிகளும்தான். நான் எனது டெல்லி அலுவலகத்தை விட்டு சென்னைக்கு நிரந்தரமாக வரும்போது ஆலடி அருணா நன்றி சொல்லும் போது அப்போதுதான் அவர் நான் டைப் செய்தது தான் தான் எழுதிய அறிக்கை என்று கூறி எனக்கு அவர் நன்றி கூறினார் அப்போதுதான் எனக்கு அந்த விஷயமே தெரிந்தது.
செயலதிபர் தோழர்களுடன் கடற்கரையில் |
டெல்லியில் போபர்ஸ் பீரங்கி ஊழல் பெரும் பரபரப்பாக இருக்க, இலங்கையில் இலங்கை ராணுவத்தின் முன்னேற்றம், தாக்கும் சக்தி அதிகரித்து தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பெரும் தடையாக இருந்தது. இதே நேரம் எங்களது தமிழீழ மக்கள் விடுதலைப் படையின் போராளிகளும் மன்னாரில் இறங்க தொடங்கிவிட்டதாக நினைக்கிறேன்.
இந்தியாவின் ராஜீவ் காந்தியின் அரசாங்கத்துக்கு கெட்டபெயர் ஏற்பட்ட நேரம். அடுத்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வருமா என்ற கேள்வி குறியே இருந்தது. தடுமாறிய டெல்லி காங்கிரஸ் ஆட்சியை தூக்கி நிறுத்தி, ராஜீவ் காந்திக்கு ஒரு புதிய சிந்தனையை ஏற்படுத்திக் கொடுத்தவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் பாலசிங்கம் அவர்கள். இது பற்றி எத்தனை பேருக்கு தெரியும். அடுத்த பதிவில் விபரங்களை தருகிறேன்.
தொடரும்......
No comments:
Post a Comment