பகுதி 52
JR. ஜெயவர்தனா - ஒப்பரேஷன் லிபரேஷன் - அன்டன் பாலசிங்கம் |
இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும் இலங்கைஅரசாங்கத்துக்கும்1987 நடுப்பகுதியில் கடும் சண்டைஎன நினைக்கிறேன். அப்பொழுதும் வடமராட்சியை கைப்பற்றி தமிழீழவிடுதலை புலிகள் அமைப்பைமுற்றாக அழிக்கும் முயற்சியில் இலங்கை ராணுவம் கடைசி கட்ட போராட்டத்தை நெருங்கி இருப்பதாக இங்கு பத்திரிகைகள் எல்லாம் செய்திகள் பிரசுரித்தன. அப்பொழுது பிரபாகரன் யாழ்ப்பாணத்தில். புலிகளின் அரசியல் ஆலோசகர் ஆண்டன் பாலசிங்கம் நோய்வாய்ப்பட்டிருந்த தமிழ்நாடு முதலமைச்சர் எம்ஜிஆரிடம் போய், மத்திய அரசை தொடர்புகொண்டு உடனடியாக இலங்கை ராணுவத்தின் முன்னேற்றத்தை தடுக்கும் படி கேட்டுக்கொண்டார். அவர் வைத்த காரணம் யாழ்ப்பாண தீபகற்பத்தை இலங்கை அரசு கைப்பற்றிக் கொண்டால், இந்தியா எக்காரணம் கொண்டும் இலங்கையில் தலையிட முடியாது. இந்தியா தனது தேவைக்காக வேண்டி சரி யாழ்ப்பாணத்தை கைப்பற்றும் இலங்கை அரசின் முடிவை தடுக்க வேண்டும்.
பாலசிங்கம் பலமுறை சென்னைக்கும் டெல்லிக்கும் பறந்தார். இந்திய அதிகாரிகளை டெல்லியில் சந்தித்து இந்தியா யாழ்ப்பாணமக்களை காப்பாற்ற படை எடுக்க வேண்டும் என்று கூட கூறினார். இந்த விடயங்கள் டெல்லியில் எல்லா பத்திரிகை காரர்களுக்கும் தெரியும். எங்களோடு தொடர்புள்ள டில்லி பத்திரிகையாளர்கள் பாலசிங்கம் வந்து போகும் போதெல்லாம் அதைப்பற்றி எங்களுடன் விவாதித்தார்கள். இந்த செய்திகளை நான் உடனுக்குடன் சென்னைக்கும் அறிவிப்பேன்.
கடைசியில் எம்ஜிஆர் முன்னிலையில் ராஉளவு துறை உயரதிகாரிகள், பாலசிங்கம் பேச்சுவார்த்தை நடந்துள்ளது. பெரிய இலங்கை வரைபடத்தை வைத்து பாலசிங்கம் பேசியது பற்றி, தமிழ்நாடு உளவுத்துறை அதிகாரிகள் பிற்காலத்தில் கூறும்போது, தமிழீழ விடுதலைப் புலிகள் இந்தியாவை வா வா என அழைத்து கடைசியில் போ போ என்று துரத்தி விட்டார்கள் என்று கேலியாக பேசுவார்கள்.
அப்படியான ஒரு சந்தர்ப்பத்தை ராஜீவ்காந்தி அரசு தனது இமேஜை காப்பாற்றிக்கொள்ள, அல்லது போபோஸ் பீரங்கி ஊழல் பற்றி பத்திரிகைகளில் வரும் செய்திகளை திசை திருப்ப இலங்கை பிரச்சனையை கையில் எடுத்தார்கள் முதலில் யாழ்ப்பாண மக்களுக்கு உணவு கொடுப்பது போல,இலங்கை அரசாங்கம் விடாது என்று தெரிந்து கொண்டே, பல படகுகளில் உணவுப் பொருட்களை அனுப்பினார்கள். இலங்கை அரசு தனது கப்பற்படையை வைத்து தடுத்து இந்திய படகுகளை திருப்பி அனுப்பியது.
இப்பொழுது இந்தியா முழுக்க இந்தியா, இலங்கை பற்றிய செய்திகள் தான் வந்து கொண்டுள்ளன. இது நடந்து இரண்டாம் நாள் 04/06/1987 அன்று இந்தியாவின் பூமாலை ஆப்ரேஷன் என்ற விமானப்படை அதிரடி நடந்தது.பெங்களூர் விமானப்படை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானங்கள் யாழ்ப்பாணத்தின் மேலாகப் பறந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு பொருட்கள் பொதிகள் ஆக போட்டார்கள். இது இலங்கை அரசைபயம் காட்ட நடந்த ஏற்பாடு.
பாலசிங்கம் நினைத்த மாதிரி வடமராட்சி தாக்குதல்கள் நிறுத்தப்பட்டன. இந்தியா எதிர்பார்த்தமாதிரி J.R ஜெயவர்தனா இந்தியாவோடு பேசுவதற்கு தயாராகிவிட்டார். இந்த சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்த ராஜீவ்காந்தி அரசு உடனடியாக களத்தில் இறங்கியது. இதன் மூலம் இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியின் இமேஜ் வளரும் என கணக்குப் போட்டார்கள்.
இந்திரா காந்தியின் காலத்தில் இலங்கைப் பிரச்சினை பற்றி கையாளும் முறைகள் எல்லாம் தகர்க்கப்பட்டன. அதாவது விடுதலை இயக்கங்களுக்கு ரா உளவுத்துறை மூலம் ரகசியபயிற்சி மற்றும் ஆயுதங்கள் கொடுத்து படிப்படியாக இலங்கை ராணுவத்தை பலவீனப்படுத்தி அதன்மூலம் இலங்கை அரசுக்கு ஒரு நெருக்கடி கொடுத்து, இலங்கை தமிழ் மக்களுக்கு ஒரு நிரந்தர தீர்வை அமிர்தலிங்கம் மூலம் நடைமுறைப்படுத்துவதே இந்திரா காந்தியின் திட்டம். இங்கு இப்பவும் பலபேர் இந்தியா இலங்கை மீது படையெடுக்க முயற்சி செய்ததாக எழுதுகிறார்கள். அது தவறு.இந்திரா காந்திக்கு ஜே ஆர் ஜெயவர்தனா தான் எதிரியாக இருந்தார் ஒழிய ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா மிக நல்ல நண்பர். அதோடு இந்திரா காந்தி தனது நட்பு நாடுகளை குறிப்பாக சோவியத் ரஷ்யா, ஆலோசனைகளை நடத்தி தான் இலங்கைப் பிரச்சினையில் காய் நகர்த்தியது உண்மை. அதோடு இந்திய உளவுத்துறை ஒவ்வொரு இயக்கத்துக்கும் சண்டைகளை ஏற்படுத்தி அழித்தார்கள் என்று முழங்குகிறார்கள். இது தவறான செய்தி. ஒவ்வொரு இயக்கமும் தான் மட்டுமே செயல்பட வேண்டும் எல்லாம் தனக்கு மட்டுமே கிடைக்க வேண்டும் என்ற பேராசையில் செயல்பட்டதன் விளைவு தான் இயக்கங்களின் அழிவு விக்கு காரணம். இந்தியா தனது தேவைக்காக இயக்கங்களை பயன்படுத்தியது. அது எல்லாம் இயக்கத் தலைவர்களுக்கு நன்றாக தெரியும். அப்படி இருந்தும் இந்தியாவை நாங்கள் பயன்படுத்தியிருக்க வேண்டும். நாங்கள் அதை செய்யாமல் தமிழ்நாடு தான் எங்கள் போராட்ட களம் போல நினைத்து இங்கேயே எங்கள் செயல்பாடுகளை கூடுதலாக நடத்தத் தொடங்கினோம். அதோடு எங்கள் செயலதிபர் உமாமகேஸ்வரன் தான் ஒரு அரசியல் தலைவர் போல தமிழ்நாட்டிலும் பம்பாய் பெங்களூர் போன்ற இடங்களில் பொதுக்கூட்டங்களிலும் கலந்துகொண்டு பேசி,ஒரு தமிழ்நாட்டு அரசியல்வாதி போலவே நடந்து கொண்டார். எனக்கு தெரியக் கூடியதாக எந்த ஒரு விடுதலை இயக்கத் தலைவர்களும் தமிழ்நாட்டில் பொதுக்கூட்டங்களில் பேசவில்லை. உமா மகேஸ்வரன் தமிழ்நாட்டின் பொதுக்கூட்டங்களில் வீர முழக்கம் செய்வது எமது இயக்கத் தோழர்களுக்கு மிகவும் பெருமையாக இருந்தது என்பது உண்மை. ஆனால் உண்மையில் உமா மகேஸ்வரன் இலங்கையில்தான் பொதுக்கூட்டங்களில் பேசி இருக்க வேண்டும். இந்திய உளவுத்துறை IB இதை பலமுறை செயலதிபர் உமா மகேஸ்வரனுக்கு சுட்டிக்காட்டியது. நீங்கள் இங்கு பொதுக்கூட்டங்களில் தீவிரமாக இலங்கை அரசுக்கு எதிராகப் பேசுவது, பத்திரிகைகளில் வரும் போது இந்திய அரசுக்கு தர்மசங்கடமாக இருக்கிறது. காரணம் ஜெயவர்தனா இதை பயன்படுத்தி தீவிரவாதிகளை பகிரங்கமாக இலங்கை அரசுக்கு எதிராக தூண்டிவிடுகிறது என்று உலக நாடுகளிடம் தனது பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளார். உமா மகேஸ்வரன் தமிழ்நாட்டில் பொதுக் கூட்டங்களில் பேசுவது பற்றி எமது இயக்கத்துக்குள் கூட கருத்து வேறுபாடுகள் இருந்தன. ஆனால் உண்மையில் செயலதிபர் உமாமகேஸ்வரன் இந்திய அரசுக்கு தர்மசங்கடம் ஏற்படுத்தவே இந்தியாவில் பகிரங்கமாக மேடை ஏறி பேசியது என்று பின்னால் அறியக்கூடியதாக இருந்தது.
தமிழீழ விடுதலைப் புலிகள் அரசியல் ஆலோசகர் பாலசிங்கத்தின் முயற்சியால், ராஜீவ் காந்திக்கு தனது இமேஜை காப்பாற்றிக்கொள்ள நல்ல ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது.
ராஜீவ்காந்தி உடனடியாக ரா உளவுத்துறையின் செயல்பாடுகளை கட்டுப்படுத்தி, இலங்கைப் பிரச்சனை முழுவதையும் கையாளுவதற்கு இந்திய வெளியுறவுத் துறைக்கு முழு பொறுப்பும் கொடுத்தார். அதற்கு மேல் இலங்கையில் இந்திய தூதுவராக இருந்த டிக்சிட் ஜெயவர்தனா வை பயமுறுத்தி ஒப்பந்தத்துக்கு ஒத்துக் கொள்ள வைத்தார். ராஜீவ் காந்தி நினைத்தார் தனது ராஜ தந்திரத்தால் ஜெயவர்த்தனா அவை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டதாக, ஆனால் ஜெயவர்த்தனாவின் மிக நீண்டகால அனுபவம் தன்னால் இந்தியாவை எதிர்க்க முடியாது எந்த உலக நாடுகளும் இலங்கையின் உதவிக்கு வரவில்லை. இந்த ஒப்பந்தம் மூலம் இந்தியாவை சிக்கவைத்து இலங்கைத் தமிழரை , தமிழ் போராளிகளைஇந்தியாவுக்கு எதிரியாக மாற்ற நினைத்தார். நீண்ட காலத் திட்டத்தில் உண்மையில் வெற்றியும் பெற்றார்
இக்காலகட்டத்தில் எனது தொடர்புகள் முழுவதும் பத்திரிகை நண்பர்களே சந்திப்பிலேயே இருந்தன. குறிப்பாக டெல்லி இந்து பத்திரிகை ஆசிரியர் ஜிகே ரெட்டி அவர்கள் இந்திய அரசின் கொள்கை வகுப்பாளர்களின் ஒருவராய் இருந்தவர். அவரிடம் பேசும்போது மேலே குறிப்பிடும் பல உண்மை களை அறிய முடிந்தது. ஜிகே ரெட்டி அவர்களின் சிறந்த ஆளுமையைப் பற்றி சித்தார்த்தன், மற்றும் டெல்லியில் என்னோடு இருந்த காலங்களில் பரதன் சந்தித்துள்ளார் அவருக்கும் அவரைப் பற்றி தெரியும்.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் தமிழர் பிரச்சினை சம்பந்தமாக ஒரு ஒப்பந்தம் ஏற்பட போகும் தகவலறிந்து இயக்கங்கள் தமிழ்நாட்டிலிருந்து முகாம்களை மூடி நாடு திரும்புவதற்கு ரிய ஏற்பாடுகளை செய்யத் தொடங்கினார்கள். எமது தமிழீழ மக்கள் விடுதலைக் கழகமும் கடைசியாக இந்தியாவுடன் கிடைத்த பயிற்சியையும் முடித்துக்கொண்டு அவர்கள் கொடுத்த ஆயுதங்களுடன் இலங்கைக்கு அனுப்பி மன்னாரில் தரையிறக்க செயலதிபர் உமாமகேஸ்வரன் எல்லா ஏற்பாடுகளையும் செய்து பல தோழர்களையும் மன்னாரில் இறக்கி விட்டதாக செய்திகள் வந்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் பின்பு கேள்விப்பட்ட ஒரு செய்தியும் வருத்தத்தை அளிக்கிறது இந்தியா கொடுத்த ஆயுதங்களின் ஒரு சிறு பகுதியை செயலதிபர் உமாமகேஸ்வரன் இந்தியாவுக்கு எதிரான கேரளா நக்சலைட் இயக்கங்களுக்கு கொடுத்துள்ளதாக அறிந்து இந்திய IB உளவுத்துறை கடும் கோபத்தில் இருந்தார் கள்.
அவசரகதியில் இலங்கை-இந்திய ஒப்பந்தம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதை தயாரித்தவர்கள் ஒருவர் அரசியல் சட்ட அறிஞரான ஒரு தமிழரும் அடங்குவார். அவரின் பெயரை மறந்துவிட்டேன். கிட்டத்தட்ட அவரின் பெயர் தாமோதரம்பிள்ளை என நினைவில் உள்ளது. சரியோ தெரியவில்லை.
இலங்கை இந்திய ஒப்பந்த காலக்கட்டங்களில் எமது தமிழீழ மக்கள் விடுதலைக் கழகமும் செயலதிபர் உமா மகேஸ்வரனும் எந்த மாதிரியான நடவடிக்கை எடுத்தார்கள், யார் யார் எப்போது இலங்கையில் கரைஇறங்கினார்கள், எங்கு இலங்கையில் முதல் முகாம்அமைத்தார்கள். செயலதிபர் எப்போது எங்கு இலங்கையில் கரை இறங்கினார் எப்போது கொழும்பு சென்றார் எப்படி சென்றார் என்ற விபரங்களை அமைப்பில் இருந்து கரை இறங்கியவர்கள் தனி பதிவுகளாக போட வேண்டும் இல்லாவிட்டால் பதிவுகளாக தந்தாள் நான் போடுகிறேன். பல தோழர்கள் கொழும்பிலும் இங்கும் எப்படி என்றெல்லாம் எனக்கு சொல்லியிருக்கிறார்கள். அதை நான் கோர்வையாக எழுத முடியாது. எனக்குத் தெரியாது அந்த விடயங்களை பதிவுகளாக நானும் அறிய ஆசைப்படுகிறேன்.
இந்திய பிரதமர் இலங்கை இந்திய ஒப்பந்தம் வெற்றிபெற தமிழீழவிடுதலை புலிகள் அமைப்பை மட்டும் கருத்தில் கொண்டே ஏற்பாடுகள் நடந்துவந்தன. இது இந்தியா விட்ட மிகப்பெரிய தவறு. அமிர்தலிங்கத்தின் தமிழர் விடுதலைக் கூட்டணியும் மற்ற இயக்கங்களையும் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.
இலங்கையில் இருந்து இந்திய தூதுவர் தீக்ஷித் அவர்களின் நேரடி மேற்பார்வையில் பூரி என்ற அதிகாரி யாழ்ப்பாணம் சுதுமலை போய் பிரபாகரனை நேரடியாக சந்தித்து இந்தியா ஒப்பந்தம் பற்றி விரிவாக பேசி, பிரபாகரனின் முழு சம்மதம் பெற்று, அதை புதுடில்லிக்கு உடனடியாக அறிவித்துள்ளார். பிரபாகரன் இந்திய அதிகாரிகளிடம் வைத்த ஒரே கோரிக்கை, இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் இலங்கை தமிழர்களின் சார்பாக கையெழுத்து போடும் அதிகாரம் தமிழீழ விடுதலைப்புலிகளின் சார்பாக தனக்கு மட்டுமே அதாவது பிரபாகரனுக்கு உரியது என்றும், இலங்கைத் தமிழர் சார்பாக தமிழர் விடுதலைக் கூட்டணி அமிர்தலிங்கம் உட்பட வேறு எந்த ஓர் இயக்கத்திற்கும் உரிமை இல்லை என்றும் கூறியுள்ளார் அதோடு வேறு எந்த இயக்கத்தையும் அழைத்து ஒப்பந்தம் பற்றி பேசக்கூடாது என்றும் வாக்குறுதி வாங்கியுள்ளார். இந்த வாக்குறுதிகளை ஏற்றுக் கொண்ட இந்திய அதிகாரிகள், பிரபாகரன் சென்னை வழியாக புதுடில்லி செல்ல ஏற்பாடுகள் செய்துள்ளனர். முக்கியமாக புரிந்து கொள்ள வேண்டும் எந்த ஒரு வற்புறுத்தலும் இன்றி, ராணுவ பலத்காரம் இன்றி பிரபாகரன் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டு புதுடில்லி வந்தார். ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ளாவிட்டால் மாற்றம் செய்யும்படியும் கேட்டிருக்கலாம் புதுடெல்லி வராமல் விட்டிருக்கலாம்.
ஹோட்டலில் சாம்ராட் |
இதே நேரம் புதுடில்லியில் ராஜீவ் காந்திக்கு அரசியல்ஆலோசகர்கள் ஆல் ஓர் கேள்வி முன்வைக்கப்பட்டது. பிரபாகரன் மட்டும் இந்த இலங்கை-இந்திய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால், மற்ற இலங்கை விடுதலைஇயக்கங்கள், தாங்கள் இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ளவில்லை என்று இலங்கையில் போராட்டங்கள் நடத்தலாம். அல்லது இலங்கை அரசு மறைமுகமாக இந்த இயக்கங்களை தூண்டி விடலாம். இந்த இயக்கங்களை விடுதலைப் புலிகள் இயக்கம் போராட்டக் களத்தில் இருந்து பல உயிர் சேதங்கள் ஓடு அகற்றியதால் மற்ற விடுதலை இயக்கங்களுக்கு விடுதலைப்புலிகளின் மேலிருக்கும் கோபம் இந்த ஒப்பந்தத்திற்கு எதிராக கட்டாயம் செயல்படுவார்கள் என்று ராஜீவ் காந்திக்கு எடுத்துக் கூறப்பட்டுள்ளது.
29/07/1987 ஒப்பந்தம் இலங்கையில் கையெழுத்தாகும் முன்பு, பிரபாகரன் டெல்லிக்கு வரும் முன்பு மற்ற இயக்க தலைவர்கள் டெல்லிக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள். புளொட் சார்பாக சித்தார்த்தனும் வாசுதேவா வந்திருந்தார்கள். உமா மகேஸ்வரன் புத்திசாலித்தனமாக ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு போய்விட்டதாக தகவல் சொன்னோம். விடுதலை இயக்கங்களில் புதிய விடுதலை இயக்கமாக முதல்முறையாக இ என் டி எல் எஃப் சார்பாக அதன் தலைவர் பரந்தன் ராஜன் அவர்களும் கலந்து கொண்டார். இந்த இயக்கத் தலைவர்கள் எல்லாம் தங்கியிருந்த ஹோட்டல் பெயர் சாம்ராட் ஹோட்டல்.
தொடரும்......
No comments:
Post a Comment