பகுதி 77
கடற்கரையில் தோழர்கள் |
பல தோழர்களும், சில நண்பர்களும் எனது பதிவுகள் செயலதிபர் உமா மகேஸ்வரனை மட்டுமே குற்றவாளியாக காட்டி பதிவு செய்கிறீர்கள், ஏன் உங்கள் மற்ற தலைவர்கள் இயக்கத்தை தவறாக வழி நடத்தவில்லையா? ஏன் அவர்களைப் பற்றி எழுதவில்லை என்று கேட்டார்கள் கேட்கிறார்கள். எங்கள் இயக்க நடைமுறை பற்றி உண்மையில் பலருக்கு தெரியாது. ஏன் பயிற்சிபெற்ற ஆயிரக்கணக்கான தோழர்களுக்கு கூட தெரியாது. எமது அமைப்பில் பலவித அணிகள் இருந்தன. உதாரணத்துக்கு விவசாய தொழிலாளர் மீனவ போன்ற அணிகள். அதுபோல் வெளியுலகத்திற்கு தெரிந்த கட்டுப்பாட்டு குழு,மத்தியகுழு ,பொதுக்குழு போன்றவை. ஆரம்பத்தில் மத்திய குழுவில் இருந்தவர்கள் பெரும்பான்மையோர் பெரிய ஐயாவின் (உமா மகேஸ்வரன்)விசுவாசிகள். அதோடு மத்திய குழுவிலிருந்த ஜான் மாஸ்டர் போன்ற தீப்பொறி குழுவினர் அவர்கள் இயக்கத்தில் இருக்கும் வரை செயலதிபர் உமா மகேஸ்வரனுக்கு எதிராக மத்திய குழுவில் எந்தக் கருத்தும், இயக்கத்தின் தவறான நடவடிக்கைகளுக்கு எதிராக எந்த உட்கட்சி போராட்டத்தையும் பின் தளத்தில் நடத்தியதாக தெரியவில்லை. சந்ததியார் மட்டும் பல இடங்களில் எமது இயக்க தவறானசெயல்பாடுகளை சுட்டிக்காட்டியிருந்தார். எமது தவறான போக்குகளை சந்ததியார் பல தோழர்கள் இடமும் விவாதித்திருக்கிறார். இயக்கத்தில் இருக்கும் வரை சந்ததியாருக்கு பின் தளத்தில் பக்கபலமாக இருக்காமல் , பின் தளத்தில் இருந்துவிட்டு ரகசியமாக ஓடி சென்றபின் தீப்பொறி குழுவினர் பல உண்மைகளை எழுதினார்கள். அதன் முடிவு எங்கள் இயக்க அரசியல் செயலாளர் சந்ததியார் இன் கொலை. அதுமட்டுமல்ல சந்ததியார் ஒரு போதை மருந்து கடத்தல் பெண்ணுடன் வெளிநாட்டுக் ஓடிவிட்டதாக கதை கட்டப்பட்டது.
அடுத்தது மத்திய குழு உறுப்பினராக இருந்த நிரஞ்சன் என்ற சிவனேஸ்வரன் ((மிக மூத்த உறுப்பினர்)செயலதிபர் உமாமகேஸ்வரன் இன் தனி மனித ஒழுக்கத்தைப் பற்றி நேரடியாக கண்டித்தபடியால் கொலை செய்யப்பட்டார்.அடுத்தது எங்கள் பின் தள ராணுவ பயிற்சி போன்றவற்றில் தீவிரமாக செயல்பட்ட, ராஜனை ஒடுக்குவதற்கு செயலதிபர் உமாமகேஸ்வரன்செய்த முயற்சிகள் பலன் அளிக்காததால் 1986இல் நமது இயக்கம் உடைந்து இரண்டாகி விட்டது. பல நூற்றுக்கணக்கான தோழர்கள் மனம் வெறுத்து இயக்கத்தை விட்டு வெளியேறிய சம்பவமும் நடந்தது.எமது இயக்கம் சம்பந்தமான எல்லா முடிவுகளும் தனிப்பட்ட செயலதிபர் உமாமகேசுவரனால்மட்டுமே எடுக்கப்பட்டது. ஆனால் முடிவுகள் அறிவிக்கும் போது கட்டுப்பாட்டு குழு சார்பாக, மத்திய குழு சார்பாக என்று அறிக்கைகள் வெளி வரும். சந்ததியார், ராஜனுக்கு பின்பு யாரும் மத்திய குழுவில் ஓ, தனிப்பட்ட முறையிலோ பின் தளத்தில் இயக்கத் தவறுகளை சுட்டிக்காட்ட யாருக்கும் தைரியம் இருக்கவில்லை.அதேநேரம் இயக்கத்தின் அதிஉயர் அங்கமான கட்டுப்பாட்டு குழுவில் இருந்த கண்ணன் என்றோ சோ திஸ் வரணும், இரா வாசுதேவா இருவரும் தவறுகளை சுட்டிக்காட்டும் நிலையில் இருக்கவில்லை.ஆமாம் சாமி தான்.
இயக்க ஆரம்பகாலம் முதல் செயலதிபர் இன் மரணம் வரை எல்லா முடிவுகளும் உமா மகேஸ்வரனால்மட்டுமே எடுக்கப்பட்டன. அவரின் நேரடி பார்வையிலேயே எனது வேலைகளும் இருந்தன. அதனால் எனது பதிவுகளில் அவரின் தவறுகளே முதன்மையாக இருக்கின்றது.
சில சில நண்பர்கள் செயலதிபர் உமா மகேஸ்வரனின் எல்லா தவறுகளும் தெரிந்துகொண்டு, அதை தட்டிக் கேட்காமல், அவரின் தவறுகளுக்கு நானும் துணை போனதாகவும், இல்லாவிட்டால் இயக்கத்தை விட்டு விலகி போய் இருக்க வேண்டும் என்று கேட்டார்கள். தவறை தட்டிக் கேட்க எமது இயக்கத்தில் எனக்கு எந்த பக்க பலமும் இல்லை. அதேநேரம் தனி ஒருவனாக தவறை தட்டிக் கேட்க நான் முட்டாளும் இல்லை. அதேநேரம் நான் இயக்கத்தில் இருந்தவரை நடந்த தவறுகளுக்கு இயக்க உறுப்பினர் என்ற முறையில் நானும் தான் பொறுப்பு என்பதை மறுக்கவில்லை.நானும், அதே மாதிரி பல பொறுப்புக்களில் இருந்த தோழர்களும் எமது வேலைகளை தவறுகள் இன்றி சிறப்பாக செய்தோம். நாங்களும் எங்கள்வேலைகளில் தவறுகள் செய்துசொகுசாக இன்று வாழ்ந்திருந்தால் இந்தப் பதிவுகள் வந்திருக்காது. இயக்கத்துக்கு வந்த நான் உட்பட பல தோழர்களுக்கு உமாஉமாமகேஸ்வரன் மட்டும் இயக்கமாக தெரியவில்லை. அதிலிருந்த ஆயிரக்கணக்கான தோழர்களும் இயக்கமாக தெரிந்தார்கள். நான் 1976 ஆண்டு கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே தமிழர் விடுதலைக் கூட்டணியின் தீவிர அரசியலில் இருந்தேன்.1979 ஆண்டு முதல் பயங்கரவாத தடை பிரிகேடியர் வீரதுங்க முகாமிக்கு கொழும்பிலிருந்து கைதுசெய்யப்பட்டு கொண்டு போன அவர்களில் நானும் ஒருவன். சந்தர்ப்ப வசத்தில் இயக்கத்துக்கு வரவில்லை. எமது இயக்கம் ஒருநாள் நல்ல நிலைமைக்கு வரும். போராட்டத்தில் முக்கியப் பங்கு பெறும் என்ற நம்பிக்கை இருந்தபடியால் இயக்கத்தை விட்டு போவதற்கு அன்று எவ்வளவோ வசதி இருந்தும் மனம் வரவில்லை.
1989 ஆண்டு கொழும்பு போய் அங்கு இயக்க நிலைமைகள், செயலதிபர் உமாமகேஸ்வரன் பற்றிய பல உண்மைகளை தெரிந்த பின்பு, இயக்கத்தை விட்டு போய்விட வேண்டும் என்று எண்ணம் மேலோங்கியது. அதேநேரம் மனம் விட்டு பேசக் கூடிய பல தோழர்களிடம் கழக தவறுகளை மனம்விட்டு தைரியமாக பேசக் கூடியதாக இருந்தது. இதற்கு காரணம் வசந்த்.
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வந்துவிட்டன. யாழ் மாவட்டத்தில் நுவரெலியா மாவட்டத்தில் உனக்கு எந்த ஒரு பாராளுமன்ற உறுப்பினர் பதவியும் கிடைக்கவில்லை. எதிர்பார்த்ததுதான் ஆனால் எல்லோர் முகத்திலும் ஒரு சோகம் தெரிந்தது. உமாமகேஸ்வரன் மட்டும் மிகக் கடுமையாக நடந்து கொண்டார். தள மாநாட்டை கூட்டி, இயக்கத்தை சீர்திருத்த வேண்டும், ஏதோ தோழர்கள் தான் தவறானவர்கள் மாதிரி காட்டிக்கொண்டார்.
மன்னார் மாவட்ட எமது முள்ளிக்குள முகாமில் இரண்டாவது தளமாநாட்டை நடத்துவதற்கு ஏதுவாக கொழும்பில் இருந்தும் மலையகத்தில் இருநதும் தோழர்களை கற்பிட்டி வழியாக படகு மூலம் முள்ளிக்குளம் அனுப்பிக் கொண்டிருந்தார்கள். மலையகத்திலிருந்து நண்பன் சங்கிலி கந்தசாமி வந்திருந்தார். எங்களை கூட்டிப்போக வந்திருந்த தோழரை கந்தசாமி அறிமுகம் செய்து வைத்தார். அவரின் பெயர் சேவல் கொடி. அந்தப் பெயரைக் முதலேகேள்விப்பட்டிருந்தேன். இந்தியாவிலிருந்து இலங்கைக்கு எமது தோழர்கள் வரும்போது கந்தசாமி, சேவல் கொடி, மாணிக்கம் தாசன் போன்றவர்கள் மிகக் கடுமையாக விடுதலைப் புலிகளோடு சண்டையின் பின் எங்கள் தோழர்கள் பலரைகாப்பாற்றி வந்தவர்கள் என்று. அதோடு மாலைதீவில் இருந்து தப்பிவந்த நால்வரில் ஒருவர் என்றும் அறிந்திருந்தேன்.
என்னையும் கந்தசாமியை கூட்டிக்கொண்டு சேவல் கொடி மினி பஸ்சில் புத்தளம் கற்பிட்டி சந்தியில் இறக்கினார். மாலை ஆறு மணி இருக்கும். கற்பிட்டி போகும் பஸ்சுக்காக காத்திருந்தோம். பஸ் வரும் வரை மறைவாக கிட்டத்தட்ட ஒளிந்து இருந்தோம். காரணம் அந்த ஏரியா வில் பல endlf தோழர்களின் சொந்த இடம். அந்த இடத்தில் முன்பு வேனில் வந்த எங்கள் இயக்கத் தோழர்களின் மேல் துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டு மதுரை சுரேஷ் என்றதோழர் இறந்த இடம். அங்குதான் ஆட்சி ராஜனுக்கும் முழங்காலில் சூடு பட்டு கடைசிவரை ஒரு குண்டின் பகுதி முழங்காலிலிருந்து வந்தது.பஸ் வர மூவரும் கற்பிட்டி பயணமானோம். இரவு கிட்டத்தட்ட எட்டு மணி இருக்கும். எங்கள் இயக்கத்துக்கு போட் (படகு) ஓடும் நண்பர் எங்களைஇரகசியமான ஒரு இடத்தில் தங்க விட்டுவிட்டு, இரவு உணவும் ஏற்பாடு செய்து கொடுத்தார்.
வெற்றிச்செல்வன் |
தொடரும்..
No comments:
Post a Comment