பகுதி 87
வசந்த் - கந்தசாமி |
சென்னையில் ஆச்சி ராஜன் செயலதிபர் உமாமகேஸ்வரன் செய்யச் சொல்லி கூறிய எந்த சமூக விரோத செயலையும் செய்ய வில்லை செய்யவும் விரும்பவில்லை. செயலதிபர் செய்யச் சொல்லி கூறிய முதல் வேலை press வேலை என்பது, மிகவும் கவலை தரும் செய்தியாகும். அண்மையில் மறைந்த , புளொட் இயக்கத்துக்கு ஆரம்ப காலத்தில் மிகப் பெரும் உதவிகள் செய்த இளவழகன் அவர்களை கொலை செய்யும்படி, 1988 ஆண்டு வசந்திடம் பொறுப்பை ஒப்படைத்து, வசந்த் செய்யாததால் இப்போது ஆட்சி ராஜனிடம் ஒப்படைத்துவிட்டார்.ஆச்சி ராஜன் எந்த வேலையும் செய்யவில்லை.
வெற்றிச்செல்வன் தோழர்களுடன் |
சென்னையில் ஆட்சி ராஜன் இருக்கும்போது ஆட்சி ராஜனும் சபாநாதன் குமாரும் அடிக்கடி போய் இயக்கத்தை விட்டு ஒதுங்கியிருந்த மூத்த உறுப்பினர் பெரிய மெண்டிஸ் என்று கூறப்படும் சண்முகம் மற்றும் கமலி ஆகியோரை போய் சந்தித்து வருவார்கள். சிலவேளைகளில் எங்களிடம் பணம் இல்லாவிட்டால் சாப்பாட்டுக்காக சண்முகம் இடம் பணம் வாங்கி வருவார் . 21/05/1989 அன்று மாலை படத்துக்கு போய்விட்டு வருவதாக கூறிச்சென்ற ஆட்சி ராஜனும் சபாநாதன் குமாரும் அவசர அவசரமாக ஓடி வந்தார்கள். முள்ளிக்குளம் முகாமை விடுதலைப்புலிகள் சுற்றி வளைத்து அடித்து கந்தசாமி மாணிக்கம் தாசன் உட்பட முக்கியமான எல்லா தோழர்களையும் கொன்றுவிட்டதாக எமது இயக்க ஒரு முன்னால் தோழர் கூறியதாக கூறினார். நாங்கள் நம்பவில்லை. அப்படி இருந்தால் கட்டாயம் போன் செய்து இருப்பார்கள் என்று நம்பினோம். ஆட்சி ராஜன் உடனடியாக கொழும்புக்கு போன் எடுத்து தனது ஆட்களிடம் விசாரித்த போது, சண்டை நடந்தது உண்மை என்றும் ஒரு சிலர் தப்பி வந்துள்ளார்கள் என்றும் சண்டையின் முழு விபரமும் தெரியவில்லை. ஆனால் மாணிக்கம் தாசன் இரண்டு நாட்களுக்கு முன்பே கொழும்பு வந்துவிட்டதாகவும் கூறினார்கள்.
கொழும்பில் இருக்கும் எமது இயக்கம் எல்லா தோழர்களும் பரபரப்பாக இருப்பதாகவும், ஆட்சி ராஜனே உடனே அங்கே திரும்ப வரும்படி கூறினார்கள்.
நான், ஆச்சி ராஜன், சபாநாதன் குமார் மூவரும் விடிய விடிய இதைப் பற்றி தான் பேசிக் கொண்டிருந்தோம். செயலதிபர் இன் கடந்தகால தவறுகளை எல்லாம் அசைபோட்டு யோசித்துப் பார்த்தோம். இலங்கையின் பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத்முதலி ஓடு மிக நெருங்கிய நட்பை வைத்துக்கொண்டு எங்கள் இயக்கத்துக்கு கொஞ்சம் சரி ஆயுதங்கள் பெற்றுக்கொடுக்க அவரால் முடியவில்லை. இயக்கத் தோழர்களின் பாதுகாப்பு பற்றி அவர் கவலைப்படவில்லை.
ஆனால் அவர் மட்டும் இலங்கை பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத் முதலியின் தங்கை வீட்டில் மிகவும் பாதுகாப்பாக, செயலதிபர் தங்கியிருந்த வீடு இருந்த ஏரியா இலங்கை ராணுவத்தின் மிக மிக பாதுகாப்பான பகுதியாகும். செயலதிபர் மட்டும் இலங்கை ராணுவ அமைச்சர் இன் செல்லப் பிள்ளையாக இருந்து கொண்டு அவரை நம்பி வந்த தோழர்களை கைவிட்டுவிட்டார் என எல்லா செய்திகளையும் அலசி ஆராய்ந்து பார்த்து கவலைப்பட்டோம்.
அடுத்த நாள் ஆட்சிராஜன் கொழும்புக்கு போன் செய்த போது, கந்தசாமி சேவல் கொடி தாங்கள் சண்டை செய்து கொண்டு தப்பி வராமல், சில தோழர்களை தப்பி போகும்படி அனுப்பியதாகவும் தப்பிவந்த சில தோழர்களை தவிர எல்லோரும் இறந்துவிட்டதாகவும் தங்களுக்கு தகவல் வந்ததாக கூறினார்கள். இலங்கை ராணுவ பாதுகாப்பு கொடுக்க விடுதலைப்புலிகள் எங்கள் முள்ளிக்குளம் முகாமை தாக்கியதாக கொழும்பிலிருந்து கூறினார்கள். அதேநேரம் கொழும்பில் குழம்பி நின்ற தோழர்கள் செயலதிபர் உமா மகேஸ்வரன் இடம் இலங்கை பாதுகாப்பு அமைச்சர் அத்துலத் முதலியின் தொடர்புகொண்டுமுள்ளி குளத்தில் எங்கள் தோழர்களை காப்பாற்றும்படி உதவி கேட்கும்படிகூறியுள்ளார்கள். அதற்கு கோபப்பட்ட செயலதிபர் விடுதலை சண்டை என்று வந்துவிட்டால் இதையெல்லாம் எதிர்பார்க்க தான் வேண்டும். அதற்காக போய் உதவி எல்லாம் கேட்க முடியாது என்று தோழர்கள் எடுத்தெறிந்து பேசியுள்ளார். அதோடு கொழும்பில் இன்னொரு விஷயமும் தோழர்களால் பரபரப்பாக பேசப்பட்டுள்ளது மாணிக்கம் தாசன் எப்படி சரியாக இரண்டு நாட்களுக்கு முன் கொழும்பில் வந்து தங்கியிருந்தது ஏன்? முதலே மேஜர் கொப்பேகடுவ மூலம் தாசனுக்கு தகவல் வந்துவிட்டதா? இப்படி பல கேள்விகள் கொழும்பில் உலாவுவதாக கூறினார்கள்.
ஆட்சி ராஜனும் மாணிக்கத் தாசன் தோழர்களே கைவிட்டு வரக்கூடிய ஆள் இல்லை. மாணிக்கம் தாசன் ஏன் கொழும்பு வந்தார். வந்தால் உடனடியாக திரும்பப் போய்விடுவார். என்ன நடந்தது ஒன்றும் யாருக்கும் புரியவில்லை. ஆட்சிராஜன் உடனடியா க கொழும்புப் போவதற்குரிய ஏற்பாடுகளை செய்தோம். பத்திரிகை செய்திகளை பார்த்த வேலூரில் இருந்த தோழர்களும் சென்னை வர எங்களுக்கு கிடைத்த தகவல்களை கூறி அவர்களை அனுப்பி வைத்தோம். முழுவிபரம் கிடைத்த பின்பு சபாவை செய்திகளை கூறும்படி அனுப்புவதாக கூறினேன். நானும் சபாவும் மட்டும் இருந்து தோழர்களைப் பற்றி பழைய கதைகளை வைத்துக் கொண்டு இருப்போம்.
இந்திய, தமிழ்நாடு உளவு அதிகாரிகள் விபரங்கள் கொண்டுபோனார்கள். கொழும்பு போன ஆச்சு ராஜன் ஓரளவு விஷயங்களை கூறினார். கந்தசாமி சேவல் கொடி வசந்த் எல்லோரும் செத்ததும் மீதான வேண்டும், கொழும்பில் இருக்கும் தோழர்களும் செயலதிபர் உமாமகேஸ்வரநுக்கும் கடும் கருத்து வேறுபாடுகள் தோன்றி உள்ளதாகவும். செயலதிபர் அதைப்பற்றி கவலைப்படாமல் தோழர்கள் இன்னும் கோவம் படும்படியான கருத்துக்களை கூறுவதால் நிலைமை இன்னும் மோசமாகி கொண்டு போகிறது என்று கூறினார். அதோடு தோழர்களே சித்தார்த்தனும் மாணிக்கம் தாசன் ஓரளவு சமாதானப்படுத்தி வருகிறார்கள் என்றும் கூறினார்.
சித்தார்த்தனும் எனக்கு தொலைபேசி எடுத்து அங்குள்ள நிலைமையை பற்றி கூறி கவலைப்பட்டார். அதோடு மாணிக்கம் தாசன் தொலைபேசி எடுத்து கந்தசாமி செத்துப் போனதை பற்றி கூறி மிகவும் கவலைப்பட்டு கிட்டத்தட்ட அழுதே விட்டார். என்னை மருத்துவ சிகிச்சையில் இருக்கும் தோழர்களையும். சிறையில் இருக்கும் தோழர்களையும் கவனமாக பார்க்கும்படியும், சிறையில் இருக்கும் தோழர்களை வெளியில் எடுக்க முயற்சி செய்யும்படியும் கூறினார். நான் முள்ளிக்குள சம்பவம் பற்றி பத்திரிகையில் கொடுத்த அறிக்கை..
முள்ளிக்குள தாக்குதல் சம்பந்தமாக பத்திரிகை அறிக்கை |
23_ 05_89
ஆசிரியர்
சென்னை. பத்திரிகைச் செய்தி
விடுதலை புலிகளின் கொலைவெறித் தாக்குதல்
மன்னார் மாவட்டம் முள்ளிக்குளம் பகுதியில் முகாமிட்டிருந்த எமது தோழர்களை 20_05_89 சனிக்கிழமை கொலைவெறி கும்பலான விடுதலைப்புலிகள் சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தியதில் எம் பல தோழர்கள் வீரமரணம் அடைந்தனர். எமது புளொட் தோழர்களுடன் நட்புறவுடன் இயங்கிவந்த பல அப்பாவி கிராம மக்களையும் புலிகள் சுட்டுக்கொன்றனர்.
இனத் துரோகிகளின் கொலைவெறி செயலுக்கு பலியான எம் இளம் வீர தோழர்களுக்கும் கிராம மக்களுக்கும் எமது வீர அஞ்சலி செலுத்துகின்றோம்.
மன்னார் மாவட்டத்தில் இன பிரச்சினையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எமது இயக்க தோழர்கள் பலவழிகளில் புனர் நிர்மான வேலைகளில் உதவி புரிந்து வருகின்றனர் இதைக் கண்டு பொறுக்காத புலி கும்பல் பலமுறை எமது தோழர்களை கொலைகள் செய்துள்ளனர்
இக்கொலைவெறி தாக்குதல்களை சர்வாதிகார இரத்தவெறி பிடித்த புலிகள் இயக்கம் உடனடியாக நிறுத்தாவிட்டால் நாம் எமது தோழர்களையும் தமிழ் மக்களையும் காப்பாற்ற பிற சக்திகளுடன் சேர்ந்து போராடுவோம் என தெரிவிக்கின்றோம்
த. வெற்றிச்செல்வன்
பிரதிநிதி, PLOT
தொடரும்.
No comments:
Post a Comment