பார்வையாளர்களின் எண்ணிக்கை

Search This Blog

Powered by Blogger.

Friday, 3 September 2021

எனது இயக்க இந்திய அனுபவங்கள் - பகுதி 43

  வெற்றிசெல்வன்       Friday, 3 September 2021

பகுதி 43 


தோழர் மாதவன்
அரசியல் செயலர் வாசுதேவா
18/10/1980 ஆரம்பிக்கப்பட்ட தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் தனது முதல் தள மாநாட்டை1986 பெப்ரவரி மாதம் 19 திகதி முதல் 24 வரை இலங்கையில் நடைபெற்றது. இதனடிப்படையில் பின் தளத்தில் ஒரு மாநாடு நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மாநாடு சம்பந்தப்பட்ட விபரங்கள் டெல்லி கிளைக்கும் விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. எமது தளம் மாநாட்டுக்கு முன்பு தமிழகத்தின் குரல் கலையகத்தில் இருந்து வெளியேறிய தோழர்கள் எழுதிக் கொள்வது என்ற ஒரு கடிதம் டெல்லிக்கு எனக்கு வந்தது. அதில் அவர்கள் எமது வெளியேற்றம் அராஜகத்துக்கு எதிரானதே தவிர விடுதலைப் போராட்டத்துக்கு எதிரானதல்ல என்று குறிப்பிட்டிருந்தார்கள். அதில் எமது கழகத்தில் நடக்கும் அடக்கு முறைகளை பற்றி குறிப்பிட்டு இருந்தார்கள். ஸ்ரீதரன், வினோத் சிவா,அன்டன், எரிக், ரமணி, ஜோசப்,, கோபிநாத் ஆகிய எட்டுபேர் கையெழுத்துப் போட்டு இருந்தார்கள். இயக்க பிரச்சினைகள் வெளியில் வரத் தொடங்கிவிட்டன., இயக்கத்தின் உண்மையான நிலை இப்பொழுது எனக்கும் அறியக்கூடியதாக இருந்தது.
பின்தள மாநாட்டு குழுவாக மார்ச் மாதம் 25,26,27 கழக மத்தியகுழு பின் வருபவர்களை தெரிவு செய்தது. தோழர் வாசுதேவா மாநாட்டு பொறுப்பாளர், தோழர் முகுந்தன், தோழர் சீசர் தோழர் மாதவன் தோழர் திவாகரன் தோழர் சுபாஷ் தோழர் ஆனந்தி தோழர் ராதா தொடர் காலித் தோழர் பொன்னுத்துரை
மாநாட்டில் கலந்துகொள்ள தகுதியுள்ளவர்கள்
செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும்
1983 ஆண்டு இனக் கலவரத்திற்கு முன்பு இயக்கத்தில் இணைந்தவர்கள்
  • தமிழக சமூக விஞ்ஞான கல்லூரி 15
  • தமிழீழ மாணவர் பேரவை அஞ்சு பேர்
  • கலையகம் vote3
  • கலையகம் vote ஒலிபரப்பு3
  • தொலைத்தொடர்பு 3
  • பிரச்சார பிரிவு 6
  • கரை பொறுப்பு 6
  • அலுவலகம் 1,2,3,4, 5 பேர்
  • முகாம் பொறுப்பாளர்கள் 20 பேர்
  • முகாம் நிர்வாகம் 18 பேர்
  • பயிற்சி தோழர்கள் 75 பேர் வரை
  • டெல்லி கிளை இரண்டு பேர்
  • தேனி கண்டி பயிற்சி பெற்ற அனைவரும். 10% நியமனங்கள்
  • உதவி முகாம் புதுக்கோட்டை 3, ஒரத்தநாடு ஆறு, பாதுகாப்பு 3
15/4/1986 நடைபெறவிருந்த மாநாடு தளத்திலிருந்து வரவிருந்த தோழர்கள் வரத் தாமதமானதால் மாநாடு ஒத்திவைக்கப்பட்டது. அதோடு ஆதவன் செந்தில் பாவு சி இயக்க மத்திய குழுவில் இருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டார்கள். அழியாத கோலம் ,கோம்ஸ் பின் தளத்தில் உளவுப் படையால் கொலை செய்யப்பட்டனர் என்ற வதந்தி தளத்தில் பரப்பப்பட்டு தளத்திலிருந்து ஈஸ்வரன் பின்தள மாநாட்டை ஒத்தி வைக்கும்படி தகவல் அனுப்பினார்.
தள உறுப்பினர்களுக்கு உண்மையை கூற பின்தள ஏற்பாட்டு குழு உறுப்பினர் பொன்னுத்துரை, பின்தள பாதுகாப்பு பொறுப்பாளர் பாபுவும் தளம் இலங்கை சென்று வந்தார்கள். தளத்தில் இருந்து வந்த செய்திகளை எடுத்து பின்தள மாநாடு சம்பந்தமான ஏற்பாடுகள் திரும்பத் தொடங்கின.30/03/1986இல் சுபாஷ் எடுத்த கணக்கின்படி முகாம்களில் மொத்தம் 1675 தோழர்கள் இருப்பதாக கணக்கு காட்டப்பட்டது. தெரிவு செய்யப்பட்ட தோழர்கள் விபரம்.
  • மருத முகாம் தோழர்கள் எண்ணிக்கை 76
  • பதுளை தோழர்கள் எண்ணிக்கை 64
  • கல்லாறு தோழர்கள் எண்ணிக்கை 136
  • புளியங்குளம் தோழர்கள் எண்ணிக்கை 151
  • மாங்குளம் தோழர்கள் எண்ணிக்கை 141
  • கல்முனை தோழர்கள் எண்ணிக்கை 151
  • குஞ்சுக்குளம் தோழர்கள் எண்ணிக்கை 64
  • முல்லை தோழர்கள் எண்ணிக்கை 115
  • ஜமாலியா தோழர்கள் எண்ணிக்கை 134
  • பண்டிவிரிச்சான் தோழர்கள் எண்ணிக்கை 44
  • பாலமோட்டை தோழர்கள் எண்ணிக்கை 125
  • கல்வி தோழர்கள் எண்ணிக்கை 72
  • குருவி மேடு தோழர்கள் எண்ணிக்கை 236
  • துலாவில் தோழர்கள் எண்ணிக்கை 106
  • கற்றன் தோழர்கள் எண்ணிக்கை 24
  • வடமுனை தோழர்கள் எண்ணிக்கை 13
  • மூதூர் (சுனில்)R D தோழர்கள் எண்ணிக்கை 23
மொத்தம் 1675
தள செயக்குழு, மகாநாட்டு ஒத்துழைப்பு குழு தோழர்கள் பின் தளம் வந்தார்கள். பின்னர் தள, பின் தள மத்திய குழு உறுப்பினர்கள் சென்னையில் 6/6/86 மூன்று நாட்கள் கூடி பின்தள மாநாடு சம்பந்தமான பல முடிவுகளை எடுத்தார்கள். தளத்தில் இருந்து வந்த முக்கியமானவர்கள் சுந்தரலிங்கம் ,ஈஸ்வரன் ,ரகு ,விசாகன் ,குமரன், கண்ணன் போன்றவர்கள்
கழகத் தோழர்கள்
7/6/1986 முதல் புதிய மாநாட்டு ஏற்பாட்டுக் குழு வாசுதேவன் ,முகுந்தன், சீசர், திவாகரன், ஆதவன், ராதா, சுபாஷ் பொன்னுத்துரை, காலித், ஆனந்தி, ஆனந்தன், செல்வராசா எல்லாளன்.13/06/1986 முதல் ஏற்பாட்டு குழு கூட்டம் நடைபெற்றது. அதற்கு முதல்காலித்11/06/1986 வெளியேறிவிட்டார்.
தள குழுவில் இருந்து வந்த தோழர்கள்7/06/86 to13/06/86 இடைப்பட்ட காலத்தில் முகாம்களில் போய் குழப்பம் செய்துவருவதாக T3S தோழர்களால் குற்றம்சாட்டப்பட்டனர்.
புதிதாக பின் தள மாநாடு 19/07/1986எல்லோரும் சேர்ந்து முடிவு செய்திருந்தார்கள்.
தளத்தில் இருந்து வந்திருந்த அனைத்து தோழர்களும் ஒத்துழைப்பு கொடுத்த மாதிரி நடித்து, 06/07/1986 நடந்த மாநாடு சம்பந்தமான கூட்டத்தில் ஈஸ்வரனும் தளத்தில் இருந்த தோழர்களும் வெளியேறிவிட்டார்கள்.
பின் தள மாநாடு சம்பந்தமான முழு விபரங்களும் இப்போது வவுனியாவில்இருக்கும் அன்புமணி தோழருக்கு மிக நன்றாக தெரியும் அவர் இது பற்றிய பதிவு போட்டால் மிக நல்லது. அவர்தான் தளத்தில் இருந்து வந்த தோழர்களை வரவேற்று பாதுகாக்கும் பொறுப்பில் இருந்தார் என நினைக்கிறேன்.
பின்தள மாநாடு சம்பந்தமான அனைத்து அறிக்கைகள் குறிப்புகள் போன்ற அனைத்து விதமான எழுத்து வேலைகள் போன்றவற்றை மற்ற தோழர்களின் உதவியுடன் சிறப்பாக செய்து வந்தவர் நிர்வாக பொறுப்பாளர் தோழர் மாதவன் அண்ணா.

தொடரும்......
logoblog

Thanks for reading எனது இயக்க இந்திய அனுபவங்கள் - பகுதி 43

Previous
« Prev Post

No comments:

Post a Comment