பகுதி 86
வெற்றிச்செல்வன் |
ஆட்சி ராஜன் தான் நடக்கும் போது முழங்காலில் துப்பாக்கி குண்டு இருப்பதால் நடக்கும் போது வலியுடன் கூடிய டக்,டக் என சத்தம் வருவதாக கூறி இருவரும் வடபழனியில் இருந்த டாக்டரிடம் போனோம். அவர் பரிசோதித்து விட்டு ஆப்ரேஷன் செய்து குண்டை எடுக்க வேண்டும். ஒரு 30 ஆயிரம் ரூபாய் செலவாகும் என்றார். நாளை வருவதாக கூறி திரும்ப போகவில்லை காரணம் பணம் இல்லை.
நாங்கள் இருந்த வீட்டுக்கு அடிக்கடி செயலதிபர் போன் எடுத்து ஆட்சி ராஜனிடம் சொன்ன விஷயங்களில் முன்னேற்றம் பற்றி கேட்டறிவார். ஆட்சி ராஜனும் சக்கை எடுக்கும் விஷயமாக சில பேரிடம் கூறியுள்ளதாக பொய் கூறுவர். செயல் அதிபரும் விரைவில் விஷயத்தை முடிக்கும்படி கூறுவர். பிறகு என்னை வரச்சொல்லி போன் மூலம் பேசுவார். ஆட்சிராஜன் சில விஷயங்களுக்காக வெளியூர்களுக்கு போக வேண்டி வரும் நீர் கூட்டிக்கொண்டு போய் காட்டும். நானும் சரி என்றேன்
சென்னையில் ஆட்சி ராஜன் இருக்கும்போது ஆட்சி ராஜனும் சபாவும் அடிக்கடி சினிமா படத்துக்குத்தான் போய் வருவார்கள். சிலவேளைகளில் நானும் போவேன் எனக்கு அவ்வளவா ஆர்வம் இல்லை.
இரவில் தூக்கம் வராது டீ குடித்துக் கொண்டே பழைய கதைகளை தான் பேசிக்கொண்டு இருப்போம். ஆச்சி ராஜனுக்கு வசந்துக்கு என்ன நடக்குமோ என்ற பயம் இருந்தது. பெரியவர் ஆட்சி ராஜனுக்கும் சிவபாலனுக்கு விசாரணை என்று கடிதம் கொடுத்து இருந்தார்.
தோழர் சுரேஷ்
தோழர் காண்டீபன்
அன்புடையீர்
உசாவல் குழு
இத்துடன் இணைக்கப்பட்டுள்ள அறிக்கை தொடர்பாக கீழ்காணும் தோழர்களே தாங்கள் உசாவழுக்கு உட்படுத்தி பொருள் கிழமைக்குள் அறிக்கை சமர்ப்பிக்கும்படி கேட்கப்படுகின்றிர்கள்.
தோழர் வசந்த்
தோழர் சந்திரன் தோழர்
தோழர் மாதவன்
தோழர் ரவீந்திரன்
இவர்கள் நால்வரும் மாநாட்டுக்குப் பின்னும் தோழர் திவாகரன் பற்றி தவறான செய்திகளை பரப்பி உள்ளார்கள். என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளர்கள். இவர்கள் பரப்பியதாக கூறப்படும் செய்திகள் தொடர்பானவை அறிக்கையில் காட்டப்பட்டுள்ளது. உசாதுக்கான சாட்சிகளின் பெயர்களையும் அவர்களின் விசாரணைகளையும் மிகவும் ரகசியமாக வைக்கும்படி கேட்க படுகின்றீர்கள்.
க. முகுந்தன்
செயலதிபர் 17/04/89
படிகள்
தோழர் வசந்த்
தோழர் சந்திரன்
தோழர் மாதவன்
தோழர் ரவீந்திரன்
தோழர் திவாகரன்
இனி என்னிடம் இருக்கும் சிறுசிறு ஆவணங்களை படங்களாக மட்டும் போடுவேன். அந்தக் கடிதங்களின் விபரத்தை பதிவில் எழுதவில்லை. சிலர் தோழர்கள் நான் எழுதுவது பொய்யென்று நிரூபிக்க நான் போடும் கடித ஆவணங்கள் செயலதிபர் எழுதவில்லை என்று நிரூபிக்க முயற்சி செய்கிறார்கள். நல்ல விடயம். அவர்கள் முயற்சி செய்யட்டும். அவர்கள் கழகத்தில் இருக்கும்போது செயலதிபர் கையெழுத்து பார்த்திருப்பார்களோ தெரியாது. என்னிடம் இருக்கும் குறிப்புகள் கையெழுத்துகள் மற்றும் நான் நேரடி பார்த்த, கேட்ட செய்திகளை தான் பதிவாக போடுகிறேன்.நான் கேள்விப்பட்ட பல செய்திகளை என் மனதுக்கு ஆதாரம் இல்லாததால் போடவில்லை. இந்த தொடர் முடிந்த பின்பு நான் கேள்விப்பட்ட பல விடயங்களை எழுதுகிறேன். சரி பிழை என்னிடம் கேட்கக் கூடாது.
வசந்துக்கு எதிரான செயலதிபர் விசாரணை கடிதங்கள் |
வசந்துக்கு எதிரான செயலதிபர் விசாரணை கடிதங்கள் |
வசந்துக்கு எதிரான செயலதிபர் விசாரணை கடிதங்கள் |
இப்பொழுது நான்போடும் பதிவுகளில் எனக்குத் தெரிந்து நூற்றுக்கு நூறு உண்மையான தகவல்கள். மிகவும் படித்த துப்பறியும் சிங்கங்கள் முதலில் ஏனிந்த ஒரு பெரிய இயக்கம் சிதறிச் சின்னாபின்னமாகி விட்டது என்பதை கண்டுபிடியுங்கள். எனது பதிவுகளை பொய்யென நிரூபிக்கும் பொய்யான முயற்சியில் இறங்கி சிலரை காப்பாற்ற முயல வேண்டாம். இந்தப் பதிவிலும் அடுத்த பதிவிலும் செயலதிபர் உமா மகேஸ்வரனின் சொந்தக் கையெழுத்தில் உள்ள சில கடித ஆவணங்களை போடுகிறேன். ஆராய்ச்சியாளர்கள் அது உண்மையான கடிதம் தானா என்று ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சி செய்யவும்.
ஆட்சி ராஜன் சென்னையில் இருக்கும் போது அடிக்கடி கொழும்பில் இருக்கும் தனது சக தோழர்களுக்கு தொலைபேசி மூலம் அங்குள்ள நிலைமைகளை அறிந்து எனக்கும் கூறுவார். தள மகாநாடு நடந்து எமது இயக்கத்தில் ஒரு திருப்பம் வரும் என்று நினைத்தால், தொடர்ந்து குழப்பங்களும், ஒருத்தரை ஒருத்தர் போட்டுக் கொடுத்து இயக்கத்தில் பல குழப்பங்கள் புதிது புதிதாக வந்து கொண்டிருக்கின்றன என்று அறியக் கூடியதாக இருந்தது.
கீழே பதிவிட்டுள்ள ஒரு படம். லெபனான் பயிற்சியின் போது அங்கு போன லண்டன் கிருஷ்ணன் அவர்களுடன் எனக்கு நினைவில் உள்ள பெயர்கள் கந்தசாமி, மாணிக்கம் தாசன், காலித் போன்றவர்கள். மற்றவர்களின் பெயரை மறந்துவிட்டேன்.
லெபனான் போர் முகாமில் லண்டன் கிருஷ்ணன் உட்பட தோழர்கள் |
தொடரும்
No comments:
Post a Comment