பகுதி 50
வெற்றிச்செல்வன் |
எமது தமிழீழ மக்கள் விடுதலைக் கழக வரலாற்றில் இன்றுவரை தோழர்களால் குறிப்பிடப்படுவது எமது இயக்கத்துக்கு வந்த ஆயுதக் கப்பலை இந்திய அரசாங்கம் தடுத்து கைப்பற்றி விட்டது என்று, இந்த செய்தி முகாம்களில் இருந்த அப்பாவி தோழர்களை ஏமாற்ற பரப்பப்பட்ட கதை. செயலதிபர் உமா மகேஸ்வரனை ஆயுதங்கள் வாங்கிக் கொண்டு வரலாம் என்று லண்டன் கிருஷ்ணன் ஏமாற்றிய கதை.
பின்தள மாநாடு முடிந்த பின்பும், எமது கழகம் எமது விடுதலைப் போராட்டத்தில் எந்த முன்னேற்றத்தையும் காணவில்லை. ஆனால் பெரும் பின்னடைவுகளை சந்தித்தது. தளத்தில் நமது ராணுவ தளபதி மென்டிஸ் தமிழில விடுதலைப்புலிகளால் கைது செய்யப்பட்டு படு கொலை செய்யப்பட்டார். தளத்தில் இயக்கம் தடை செய்யப்பட்டது. முகாம்களிலுள்ள தோழர்களுக்கு உணவு பொருள் மற்ற வசதிகள் செய்து கொடுக்க, தலைமை கழகத்தில் பணமில்லை. அதேநேரத்தில் இயக்கத்தின் நிர்வாக வேலைகளைக்கூட செய்ய பணம் இல்லாமல் முடக்கம் ஏற்பட்டது.
PLO பவன் |
லண்டனை சேர்ந்த எமது கழக சர்வதேச அமைப்பாளர் கிருஷ்ணன் செயலதிபர் உமாமகேஸ்வரன் இடம் தான் வெளிநாட்டில் சேர்க்கப்பட்ட பணத்தைக் கொண்டு பெருந்தொகையான ஆயுதங்கள் கொண்டு வருவதற்கு ஏற்பாடு செய்வதாகவும்,அதற்கு தோழர்களைத் ஏற்படுத்தவும் நம்பிக்கையான தோழரை தான் குறிப்பிடும் நாளில் குறிப்பிட்ட நாட்டுக்கு அனுப்ப ஏற்பாடு செய்யும்படியும் கூறியுள்ளார். செயலதிபர் உற்சாகமாக வேலைகளைத் தொடங்கி, வெளிநாட்டுக்கு அனுப்ப நம்பிக்கையான தோழராக PLOபவனை டெல்லிக்கு அனுப்பி பக்காவான ஒரு பாஸ்போர்ட்டையும் செய்து வைக்கச் சொல்லி, லண்டன் கிருஷ்ணன் குறிப்பிடும் நாளில் சவுத் யேமன் நாட்டின் தலைநகர் எடன் அனுப்பச் சொன்னார். பி எல் ஓ பவனை நடேசன் அவர்கள்உற்சாகமாக வழி அனுப்பி வைத்துள்ளார். PLO பவன் பற்றி சில குறிப்புகள்.
பி எல் ஓ பவன் பரந்தன் ராஜன் லெபனான் போகும் குழுவோடு 1984ஆம் ஆண்டு கடைசியில் டெல்லி வந்தபோது முதன் முறையாக அவரை பார்த்தேன். மிகவும் அமைதியானவர் யாரோடையும் அதிகம் பேச மாட்டார். பயிற்சி முடிந்து திரும்பி வரும் போது நானும், பரதனும் விமான நிலையம் போய் அவரை அழைத்து வந்தோம். பவனை சென்னைக்கு அனுப்பும்போது, சென்னையில் ராஜனுக்கும் கழகத்துக்கும் ஏற்பட்ட முரண்பாடுகள் பற்றி எதுவும் சொல்லி அனுப்பவில்லை. பவன் முதலில் சென்னை எமது அலுவலகத்துக்கு போய் பார்த்திருக்கிறார் முக்கிய தோழர்கள் யாரும் அங்கு இருக்கவில்லை, அங்கிருந்த தோழர் காளிதாஸ்PLO பவனை அழைத்துக் கொண்டுபரந்தன் ராஜன் வீட்டுக்கு போய் இருக்கிறார்கள். அங்கு போய் வரும்போது பவனை தேடி வந்த மாணிக்கம் தாசன், கந்தசாமியும் ராஜன் வீட்டுக்கு போய் வரும் பவனை சந்தேகப்பட்டு, தாங்கள் சந்தேகப்பட்டது பவனுக்குதெரியாமல், அவரை அழைத்துக்கொண்டு ஒரத்தநாடு போய் முகாம் ஒன்றில் பெரும் கட்டுப்பாடுகளுடன் தடுத்துவைத்திருக்கிறார்கள். தற்செயலாக எமது ராணுவச் செயலர் கண்ணன் பவன் தடுத்து வைத்து இருப்பதை பார்த்து அதிர்ச்சியாகி கோபப்பட்டு, அவரைஅழைத்துக்கொண்டு போய் வேறு முகாமில் விட்டுள்ளார். பின்பு பவன் தான் tela முகாமுக்கு பயிற்சியாளராக இருந்துள்ளார். தள
மாநாட்டுக்கு ராணுவ செயலர் கண்ணன் போயிருந்தபோது, கண்ணனே அங்கு வைத்து கொலை செய்வதற்கு ஏற்பாடு நடப்பதாக அறிந்த தனது உளவுத்துறை மூலம் அறிந்த கந்தசாமி, பவனை தனிப் படகு மூலம் உடனடியாக கண்ணனின் பாதுகாப்புக்கு அனுப்பி வைத்துள்ளார். கண்ணன் திரும்ப இந்தியா வரும்போது விடுதலை புலிகள் teloஇயக்க மோதலின் பின் தப்பிய பாபி, சுபாஷ், இன்னும் ஒருவர் பெயரை மறந்துவிட்டேன் மூவரையும் எமது கழக முக்கிய ஆரம்பகால உறுப்பினர் ஒருவர் ராணுவச் செயலர் மென்டிஸ் இடம் ஒப்படைத்திருக்கிறார்கள். இவர்களை கண்ணன்இயக்க தள குழுவினரோடு இந்தியாவரும்போது, இவர்களையும் சேர்த்து அழைத்துக்கொண்டு, கொழும்புத்துறையில் இருந்து படகு மூலம் மன்னார் வந்து தமிழ்நாடு வந்துள்ளார்கள். கண்ணன் ,தள குழுவினரை கரையில் எதிர்பார்த்திருந்த பெரிய மெண்டீஸ் telo மூவரையும் சுட போயிருக்கிறார். கண்ணனும் பவனும் அதைத் தடுத்து, அவர்களே உச்சிப்புளியில் இருந்த telo இயக்கத்திடம் கொண்டு போய் சேர்த்து இருக்கிறார்கள். ஆனால் உச்சிப்புளியில் இருந்து telo உறுப்பினர்கள் இவர்களை அடிக்க பாய்ந்து இருக்கிறார்கள். பின்பு பவன் இவர்களை அழைத்துக்கொண்டு வந்து சென்னை சாலிகிராமத்தில் இருந்த telo அலுவலகத்தில் செல்வத்திடம் ஒப்படைத்திருக்கிறார். இந்த நட்பை வைத்துதான் பிந்தள மாநாட்டின் போது telo விடம் பவன் ஆயுதங்கள் கடனாக வாங்கி எமது தோழர்களை ஆயுதங்கள் வந்துவிட்டது என்று கூறி சமாளிக்க முடிந்தது.
லண்டன் கிருஷ்ணன் பாலஸ்தீன யஸர் அரபாத்இயக்கத்திற்கு ஆயுதம் விக்கும் ஒரு ஒரு ஆயுத வியாபாரியிடம் பேசி, பெருந்தொகையான பணம் அட்வான்ஸாக கொடுக்கப்பட்டுள்ளது என்றும் ஆயுதம் விரைவில் கப்பலில் ஏற்றப்படும் என்றும் கூறியுள்ளார்.
சித்தார்த்தன் |
நாங்களும் கிருஷ்ணனின் தொலைபேசி வரும் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறோம். ஒரு மாதம் ஆகிவிட்டது. சென்னையிலிருந்து அடிக்கடி மாதவன் அண்ணா எடுத்து நிர்வாக வேலைகளை சொல்லும்போது, ரகசியமாக பவன் எப்ப வருகிறார், என விசாரிப்பார். நானும் பவன் டில்லியில் இருப்பதை சொல்லாமல் எனக்கு இன்னும் தகவல் வரவில்லை என கூறுவேன். திடீரென ஒரு நாள் செயலதிபர் உமாமகேஸ்வரன் தொலைபேசி எடுத்து பவன் டெல்லியில் இருப்பது யாருக்கும் தெரிய வேண்டாம் பவனை வெளியில் விட வேண்டாம். லண்டன் கிருஷ்ணன் ஏதோ குழப்பம் செய்து விட்டார் போல் தெரிகிறது, ஆயுதம் வராது போல் தெரிகிறது. பி எல் ஓ இயக்கதலைவர் யசீர் அரபாத் நெருக்கமான ஈரோஸ் தலைவரான சங்கர் ராஜி ஏதோ போட்டு கொடுத்து ஆயுத வியாபாரி பணத்துடன் ஏமாற்றி விட்டான் என்று கூறியுள்ளார். இந்த விடயம் இயக்கத் தோழர்களுக்கு தெரிந்தால் பெரிய குழப்பமாகி பெரிய பிரச்சினைகள் நடக்கும்., யாரும் கேட்டால் எல்லோருக்கும் பவன் கப்பலில் ஆயுதத்துடன் வந்து கொண்டிருக்கிறார் கால நிலை சரியில்லாததால் கப்பல் வருவது தாமதமாகிறது என்று சொல்லச் சொன்னார்.
இந்த விடயம் நான் பவனுக்கும் சொல்லவில்லை. பவனுக்கும் சலித்துப் போய்விட்டது, கொஞ்சம் கொஞ்சமாக அவரிடம் உண்மையைச் சொன்னேன். அதிர்ச்சியாகி விட்டார். நடேசன் அவர்களாலும் மற்ற தோழர்களும் இந்த செய்தியை அறிந்தால் தாங்கவே மாட்டார்கள். இந்த ஆயுதக் கப்பலை தான் தங்கள் போராட்டவாழ்வுக்காக கடைசியாக நம்பியிருந்த தோழர்கள் பெரிய அதிர்ச்சி ஆகி விடுவார்கள் என்று கூறி அழுதார். தான் சென்னை போய் உண்மையை கூறி விடுவதாக கூறினார். நான் செயலதிபர் உமாமகேஸ்வரன் ஏதாவது மாற்று திட்டம் வைத்திருப்பர் கொஞ்சம் பொறுமையாக இருப்போம் என கூறினேன். ஓரளவு சமாதானமாகி இருந்தார்..
அங்கு என்னிடம் இருந்த பழைய நாட்டுத் துப்பாக்கி ஒன்றை காட்டுப்பகுதியில் போட்டுவிட்டு, நானும் , பவனும் கடையில் சாப்பிட்டுவிட்டு வெளியில் வரும்போது அங்கு நமது இயக்கத் தோழர்கள் சிவராஜ் உம், மண்டபம் தோழர் அத்தான் இருவரும் எம்மை எதிர்பாராதவிதமா சந்தித்து ஆச்சரியப்பட்டு சந்தோஷப்பட்டார்கள். அவர்களையும் அழைத்துக்கொண்டு எமது ரூமுக்கு வந்தோம். அவர்கள் இருவரும் சில்லறையாக ஆயுதம் வாங்க ஒவ்வொரு ஊராக போய் வருவதாக கூறினார்கள். இவர்களை அனுப்பிய தலைவர்களுக்கு எந்த அளவு புத்தி இருந்திருக்கும் என்று எனக்கு தெரியவில்லை.
அவர்களும் எங்களிடம் எல்லா விசயங்களையும் தெரிந்துகொண்டு எங்களை விட கவலைப்பட்டு போனார்கள். அவர்கள் இரண்டு நாள் எங்களோடு தங்கியிருந்துவிட்டு தங்கள் வேலைகளை கவனிக்க புறப்பட்டுப் போனார்கள். இந்தியாவிடம் தான் கடைசி தஞ்சம் என்று நினைத்தோம். நாங்கள் நினைத்த மாதிரியே சென்னையிலிருந்து செயலதிபர் உமாமகேஸ்வரன் ரா உளவுத்துறையின் உயர் அதிகாரிகளுடன் பேசி கொஞ்சம் சரி ஆயுதங்கள் வாங்க முயற்சிக்க சொன்னார்.
நானும் இலங்கை தொடர்பான விவகாரங்களைக் கவனிக்கும் ரா உளவுத்துறையின் இணைச் செயலாளலரைக் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நேரில் சந்திக்க வேண்டும் என்று கூறினேன். தான் நாளை ஒரு வேலையாக எமது அலுவலகம் இருக்கும் பகுதிக்கு வருவதாகவும் அப்படியே எமது அலுவலகத்திற்கு வருவதாகவும் கூறினார். அடுத்தநாள் அவர் எமது அலுவலகத்துக்கு வந்தபோது பவனைஅவருக்கு அறிமுகப்படுத்தினேன். நான் அவரிடம் மிகவும் தாழ்மையாக இல்லை கெஞ்சி எமக்கு ஆயுதம் தரும்படி கேட்டேன்.பவணும் மிகவும் உருக்கமாக முகாம் தோழர்களின் நிலையை, அவர்கள் சொந்த நாட்டுக்குத் திரும்ப ஆசைப்படுவது பற்றி எல்லாம் கூறி, அவர்கள் இப்போது முகாம்களில் தோழர்களின் சாப்பாட்டுப் பிரச்சனை கஷ்டங்கள் எல்லாம் கூறி உதவி செய்யும்படி கேட்டார். ஆயுதங்கள் இல்லாமல் போனால் தமிழீழ விடுதலைப் புலிகளும், இலங்கை அரசாங்கமும் இலகுவாக எங்கள் தோழர்களை கொலை செய்து விடுவார்கள் என்று பவன் அடுக்கடுக்காக காரணங்களை எல்லாம் கூறினார்.
நான் கடந்த நான்கு வருடங்களாக நமது இயக்க சார்பாக இவர்களுடன் தொடர்பில் உள்ளதால் நான் அவரிடம் கேட்டேன் எனக்குத் தெரியக் கூடியதாக இன்றுவரை மற்ற இயக்கங்களுக்கு பயிற்சிகளும் பெருந்தொகையான ஆயுதங்களும் கொடுத்திருக்கிறீர்கள் ஆனால் எங்களுக்கு ஆரம்பத்தில் மட்டும் பயிற்சி மற்றும் ஆயுதங்கள் கொஞ்சமாக கொடுத்துள்ளீர்கள் என்ன காரணம்.நாங்கள் இந்தியாவுக்கு விசுவாசமாக தானே இருக்கிறோம் என்று கேட்டேன். அவரும் சிரித்துவிட்டு உண்மையான காரணத்தை கூறினால் நீங்கள் தாங்க மாட்டீர்கள் என்று கூறினார். எதுவாக இருந்தாலும் கூறும்படி கேட்டோம்.
அவர் கூறிய விடயங்கள் பவனுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும், இந்த விடயங்கள் நாம் முன்பே கேள்விப்பட்டது தான். செயலதிபர் உமா மகேஸ்வரன் இலங்கை அரசாங்கத்தின் உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத்முதலி உதவி செய்வது, இந்தியா விடுதலை இயக்கங்களுக்கு செய்யும் உதவிகள் பயிற்சியில் போன்றவற்றை உடனுக்குடன் லலித் அத்துலத் முறையுடன் பகிர்ந்து கொள்வதையும், அதற்கு ஷெர்லி கந்தப்பா உதவியாக இருப்பதாகவும், தாங்கள் ஆரம்பத்தில் கொடுத்த ஆயுதங்களின் ஒரு பகுதி இந்தியாவின் அரசாங்கங்களுக்கு எதிராக போராடும் நக்சலைட் போன்ற தீவிரவாத இயக்கங்களுக்கு ரகசியமாக கொடுக்கப்பட்டதாகவும் கூறினார். அதோடு பயிற்சி பெற்ற போராளிகளே இலங்கைக்கு அனுப்பி போராட எந்த முயற்சியும் மேற்கொள்ளாது இருந்தார். அதோடு லெபனானில் பயிற்சி பெற்றதோழர்களை கூட இலங்கைக்கு அனுப்பாமல் இந்தியாவில் சமூக விரோத செயல்களில் ஈடுபடுத்தப்பட்டார்கள். அதோடு பல உங்கள் இயக்கத் தோழர்களே பம்பாயில் போதைப்பொருள் கடத்துவதற்கு உங்கள் தலைவர் பயன்படுத்துகிறார். உங்கள் இயக்கம் ஒரு விடுதலை இயக்கம் போல் நடத்தவில்லை என்பது உங்கள் எல்லோருக்குமே தெரிந்திருக்கவேண்டும். நாங்கள் ஆயுதம் கொடுக்க அந்த ஆயுதங்கள் இந்தியாவுக்கு எதிராக நீங்கள் பயன்படுத்திக்கொண்டு எங்களை குறை சொல்லக்கூடாது. அவர் ஒரு விடயம் எனக்கு நினைவு ஊட்டினார். ஆறு மாதத்துக்கு முன்பு உமா மகேஸ்வரனும் நானும் டெல்லியில் அவரை சந்தித்தபோது இப்போது நாங்கள் கேட்பது மாதிரியே அன்றும் உமா மகேஸ்வரன் ஆயுதங்கள் கேட்ட போது, தான் நீங்கள்தான் இலங்கையில் எந்த ஒரு தாக்குதலையும் நடத்தவில்லை உங்கள் செயற்பாடுகள் அங்கு எதுவும் இல்லை போல் தெரிகிறது என்று கூற, உமாமகேஸ்வரன் மறுத்து தாங்கள்பல தாக்குதல்கள் நடத்தி உள்ளதாகவும் அது எதுவும் பத்திரிகைகளில்வெளிவரவில்லை என்று கூறினார்.இனி பெரிய தாக்குதல் நடத்தப் போவதாகவும் அதற்கு பின்பு சரி ஆயுதங்கள் தரவேண்டும் என்றும் கேட்டார்.
சரி என்று கூறியதாகவும், ஒரு வாரத்தின் பின்பு நான் அதாவது வெற்றி செல்வன் புளொட் இயக்கம் போலீஸ் நிலையங்கள் சில ராணுவ முகாம்கள் தாக்கப்பட்டதாக ஐலண்ட் பேப்பர் கட்டிங் கொடுத்ததையும் நினைவுபடுத்தினார். நான் ஒத்துக்கொண்டேன்.
உண்மையில் அப்படி ஒரு தாக்குதல் நடக்கவில்லை என்றும் நாங்கள் நடத்தியதாக அத்துலத்முதலி தனது ஏற்பாட்டில் தனக்கு வேண்டிய பத்திரிகைகளுக்கு ரேடியோ செய்திகளுக்கு ஏற்பாடு செய்துள்ளார் என்றும், தங்கள் உளவு அமைப்புக்கும் இலங்கையில் அரசாங்கத்திலும் ராணுவத்திலும் தொடர்புகள் இருப்பதாகவும் கூறி , செயலதிபர் உமாமகேஸ்வரன் இருக்கும் லலித் அத்துலத்முதலி உள்ள தொடர்பின் நெருக்கத்தை எங்களுக்கு சுட்டிக்காட்டினார். இதனால்தான் இந்திய அரசு உங்களுக்கு கொடுக்க வேண்டிய ஆயுதங்கள் பயிற்சியில் கொடுக்கவில்லை என்ற உண்மையை போட்டு உடைத்தார்.
நாங்களும் அவரிடம் மன்னிப்பு கேட்டு முகாமிலுள்ள தோழர்களின் எதிர்காலத்தை நினைத்து உதவி செய்யும்படி கெஞ்சிக் கேட்டோம். அவரும் தாங்கள் திரும்ப உதவி செய்தால், அந்த உதவிகள் சரியானபடி போராளிகளுக்கு போய் சேர்ந்து போராளிகள் இலங்கை திரும்ப உங்களில் ஒரு தலைவர் பொறுப்பு ஏற்க வேண்டும். வாசுதேவ கண்ணன் பொறுப்பாகச் செயல்படக் கூடியவர்கள் இல்லை என்று கூறினார். நாங்கள் சித்தார்த்தர் இன் பொறுப்பில் கொடுக்கும்படி கூறினோம்.. சித்தாத்தர் லண்டனில் இருந்து வந்து உமாமகேஸ்வரனோடு கதைத்து பொறுப்பு எடுத்தால் இந்திய அரசாங்கத்தால் திரும்ப உங்களுக்கு உதவி செய்ய முடியும் என்று கூறினார்.
தொடரும்......
No comments:
Post a Comment