பார்வையாளர்களின் எண்ணிக்கை

Search This Blog

Powered by Blogger.

Wednesday, 15 September 2021

எனது இயக்க இந்திய அனுபவங்கள் - பகுதி 63

  வெற்றிசெல்வன்       Wednesday, 15 September 2021

பகுதி 63 


A. நடராஜன் அட்வகேட்

நான் எனது நேரடி அனுபவங்களை எழுதும் போது, புளொட் இயக்கமும், அதன் தலைவர்களும் தான் மோசமானவர்கள் என்று நினைக்க வேண்டாம். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்று கூறுவதைப் போல், எமது தமிழ் விடுதலை இயக்கங்களின் கடந்தகால நடவடிக்கைகளுக்கு , எனது அனுபவம் ஒரு சிறு பகுதியே. மற்ற இயக்கங்களின் இருந்த தவறான நடவடிக்கைகளை அந்தந்த இயக்கங்களில் இருந்தவர்கள் எழுதினால் மட்டுமே, எமது தமிழ் மக்கள் இனியும் கடந்த காலத் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள உதவியாக இருக்கும். இதில் ஒரு சொல்லிக்கொள்ள கூடிய நல்ல விடயம் எமது தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் மட்டுமே ஆரம்ப காலத்திலிருந்து உட்கட்சி தவறுகளை சுட்டிக்காட்டினார்கள். சுட்டி காட்டியவர்கள் கொல்லப்பட்டாலும், உட்கட்சி விமர்சனங்கள் வந்துகொண்டே இருந்தன. ஆனால் மற்ற இயக்கங்களில் இன்றுவரை யாரும் தங்கள் இயக்க தவறுகளை எழுத தயங்குகிறார்கள். நாங்கள் எமது இலங்கை தமிழ் மக்களுக்கு செய்யக்கூடிய கடைசி நன்மை உண்மைகளைக் கூறி, கடந்த காலத் தவறுகளில் இருந்து அவர்களை காப்பாற்றுவது தான்.


வசந்த்

விடுதலைப் போராட்டம் என்ற பெயரில் இலங்கை தமிழ் விடுதலை இயக்கங்கள் கடைசியில் பலி கொடுத்தது இந்தியாவில் இருக்கும் அப்பாவி வறுமை மிகுந்த ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட அகதிகளை தான். நான் முன்பே குறிப்பிட்டேன். எண்பத்தி மூன்றாம் ஆண்டில் எல்லா இயக்கங்களும் போட்டிபோட்டுக்கொண்டு ரகசியமாக இலங்கையிலிருந்து தமிழ் மக்களை இந்தியா படை எடுக்கப் போகிறது மூன்று மாதத்தில் திரும்ப வந்துவிடலாம் என்று பல ஆசை வார்த்தைகள் கூறி, பணம் சம்பாதிக்கவும் இயக்க படகுகளையும், படகுகளை வாடகைக்கு எடுத்தும் தமிழ் மக்களை பணம் வாங்கி கொண்டு வந்து தமிழ்நாட்டில் அகதியாக விட்டார்கள். அகதிகள் கூடுதலாக வந்தாள் பங்களாதேஷ் போல் இந்தியா கடும் நடவடிக்கை இலங்கை மேல் எடுக்கும் என்று கணக்கு போட்டார்கள். ஒரு சிலர் வவுனியாவில் குடியேறிய அதிக அளவு இந்திய மலையகத் தமிழரை இந்தியா போனால் உங்கள் மூதாதையர் சொந்த இடத்தை பார்க்கலாம் நடிகர் நடிகைகளை பார்க்கலாம் என்று ஆசை வார்த்தைகள் கூறி, இந்தியாவில் அகதியாக கொண்டு கொண்டு வந்து விட்ட சம்பவங்களும் உண்டு. இதற்கு சிலபேர் ஆதாரம் இருக்கா என்று கேட்டு வருவார்கள். அந்தக் காலக்கட்டங்களில் இப்படியான சம்பவங்களை பற்றி வந்த செய்திகளை நாங்கள எங்களுக்குள் கலந்துரையாடி இருக்கிறோம்.

இன்று மேற்கு நாடுகளில் பெரும்பான்மை பொருளாதார அகதிகளாக வசதியாக இருக்கும் இலங்கைத் தமிழர்கள், இந்தியாவுக்கு கோவிலுக்கு வந்து பெரும் பணம் நன்கொடையாக கொடுப்பார்கள். நடிகர் நடிகைகளை பார்க்க பெருமளவு செலவழிப்பார்கள். தமிழ் சீரியல்கள் தொடர்ந்து பார்ப்பார்கள், டாப் இந்திய தமிழ் படங்கள் ஆர்வமாக பார்ப்பார்கள். சூப்பர் சிங்கர், பிக் பாஸ் ஆர்வமாகப் பார்ப்பார்கள். ஆனால் இங்கிருக்கும் இலங்கைத் தமிழ் அகதிகளை பற்றி ஒரு வார்த்தை கூட பேச மாட்டார்கள். பேசாவிட்டாலும் பரவாயில்லை முகநூலில் இந்தியாவைப் பற்றியும், தமிழ்நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் தலைவர்களைப் பற்றியும் மிகவும் காரசாரமாக கேவலமாக எழுதுவார்கள். எல்லாம் கடைசியில் இலங்கை தமிழ் அகதிகளை தான் பாதிக்கும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். இலங்கையில் இருக்கும் தமிழ் தலைவர்கள், தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழருக்காக உயிரைக் கொடுப்பேன் என்று மிகவும் உணர்ச்சிகரமாக போராட்டங்கள் நடத்தி,வெளிநாடுகளில் இருக்கும் இலங்கைத் தமிழர்களின் நன்மதிப்பைப் பெற விழையும் தமிழ்நாட்டுத் தலைவர்கள் யாரும், இங்கு அகதியாக வாழும் தமிழர்களைப் பற்றி பேசுவதும் இல்லை கவலைப்படுவதும் இல்லை. காரணம் இங்கிருக்கும் அகதித் தமிழர்கள் வறுமையில் இருப்பதால் அவர்களை பற்றி பேசுவதால் பலன் கிடையாது., என்ற காரணம் தான்.

நானும் சித்தார்த்தர் அவர்களும் சேர்ந்து பல இடங்களில் இருந்த சில தோழர்களை இலங்கைக்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டோம் . விமானம் மூலம் கொழும்புக்கும், இந்திய அமைதிப் படை விமானம் மூலம் சிலரையும் இலங்கைக்கு அனுப்பினோம். அதோடு இலங்கை எம்பஸ்ஸி துப்பாக்கிச்சூடு நடத்திய ராஜா, டு மால் இருவரையும் சிறையில் இருந்து வெளியில் எடுக்க நடராஜன் என்னும் பிரபல வக்கீலை பெருமளவு பணம் கொடுத்து வாதாடஅமர்தினோம்.

சென்னையில் எமது இயக்க சார்பில் இந்திய உளவு அதிகாரிகளை சந்தித்துக் கொண்டிருந்த ரமேஷ் என்னும் திருஞான த்தை செயலதிபர் உமாமகேஸ்வரன் 

உடனடியாக கொழும்புக்கு அனுப்பச் சொன்னார். அதோடு ரமேஷ் உடன் புரசைவாக்கத்தில் தங்கியிருந்து ஒன்றாக படித்து ஒன்றாக கழகத்தில் வெளி வேலைகள் செய்த தோழர்களையும் முடியுமானால் இலங்கைக்கு அனுப்பச் சொன்னார. இந்தத் தோழர்கள் 1982 ஆரம்ப காலத்திலிருந்து செயலதிபர் உமாமகேஸ்வரன், மாறன், கந்தசாமி போன்றவர்களுக்கு மிக நெருக்கமானவர்கள். இவர்கள் யாரும் புத்திசாலித்தனமாக இலங்கைக்குப் போக விரும்பாமல், கனடா போக ஆயத்தம் செய்து விட்டார்கள்.எமது இயக்க முக்கிய நபரான ரமேஷ், செயலதிபர் உமாமகேஸ்வரன் இடம் தன்னை சந்திக்க முடியவில்லை என்றும் இயக்கத்தை விட்டு போய்விட்டார் போல் தெரிகிறது என்றும் கூறச் சொல்லிவிட்டு கனடா போய்விட்டார்.

திரும்பவும் சென்னையில் இந்திய அதிகாரிகளை நானும் சித்தரும் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. நமது சந்திப்பில் இந்திய இலங்கை ஒப்பந்தத்திற்கு பின்பு தமிழ்நாட்டு கியூ பிராஞ்ச் அதிகாரிகள்தான் முதலிடத்தில் இருந்தார்கள். அதன்பின்பு IB அதிகாரிகள், இவர்களை தினசரி சந்திக்க வேண்டிய தேவைகள் இருந்தன. ரா அதிகாரிகளை எப்போதாவதுதான் சந்திக்க வேண்டிய தேவை இருந்தது. புதிதாக இந்திய ராணுவ உளவுப் படையின்(MI) தமிழ்நாட்டு பொறுப்பாளர் மேஜர் தரத்தில் உள்ள தமிழர் மதுரைக்காரர் சந்தித்தார். நடிகர் விஜயகாந்துக்கு நெருக்கமானவர். அதேநேரம் இந்திய கடற்படை உளவுத்துறை அதிகாரிகளும் சந்தித்தார்கள். ராணுவஉளவுத்துறை அதிகாரி மூலம் இலங்கை வடகிழக்கில் அச்சமயம் நடக்கும் பல நிகழ்ச்சிகளை அறியக்கூடியதாக இருந்தது. அதோடு அவர்தமிழர் என்பதால் மனம் வருந்தி கூறிய பல செய்திகளை தனிப் பதிவாக போடுகிறேன்.

வெற்றிச்செல்வன் 

எங்களோடு இலங்கைக்குப் போக விரும்பாமல் மண்டபம் மார்க்கோ, அவரின் தம்பி, சுழிபுரம் நிக்கிற வெட்டியா புகழ் சபாநாதன், எமது வாகன சாரதியாக இருந்த அருளர் போன்றவர்களும் தங்கியிருந்தார்கள். கே எல், ராஜன் மணி போன்றவர்களை இலங்கைக்கு அனுப்பி விட்டோம். நானும் , சித்தார்த்தனும் கொழும்புக்கு தொலைபேசி எடுக்க வடபழனி கோயிலுக்கு பக்கத்தில் இருக்கும் தொலைபேசி நிலையத்துக்குப் போய் இரவு பதினொரு மணிக்கு போனாள் இரவு ஒரு மணி இரண்டு மணி ஆகும் லைன் கிடைக்க. சில நாட்களில் கிடைக்கவே கிடைக்காது.இரவில் பெரும் வரிசையாக மக்கள் நிற்பார்கள். சில நேரங்களில் இ என் டி எல் எஃப் தோழர்களும் வந்து இருப்பார்கள். ஒரு நாள் நானும் சித்தரும் போகும்போது இரவு 12 மணி போல் அங்கிருந்த குடிசை வாசலில் மறைவில் செயலதிபர் உமா மகேஸ்வரனின் ரகசியப் படையை சேர்ந்த வசந்தை யும், அவரது தோழர்களையும் பார்த்தோம். எங்களுக்கு திகைப்பாக இருந்தது . நாங்கள் வசந்த் தனியாக கூப்பிட்டு விசாரித்தால், செயலதிபர் உமாமகேஸ்வரன் இ என் டி எல் எப் தலைவர் ராஜனையும் முக்கிய தோழர்களையும் சுட்டும் கொள்ளும்படி உத்தரவிட்டுள்ளதாகவும் அதனால் தொலைபேசி பேச வரும்போது சுட்டுக் கொல்லப் பல நாட்கள் இங்கு காத்திருப்பதாகவும் கூறினார். நானும் சித்தரும் அதிர்ச்சி ஆகி விட்டோம். சித்தார்த்தர் வசந்த் இடம் இது என்ன முட்டாள் தனமான வேலை. உமா மகேஸ்வரன் கொழும்பில் இருந்து கொண்டு கொலை செய்யச் சொன்னால் செய்வீர்களா.? ராஜனை இயக்கத்திலிருந்து ஒதுங்க செய்தது உமாமகேஸ்வரன். நீங்கள் அவர்களை சுட அவர்கள் திரும்ப எங்களை சுட இங்கு நாங்கள் யாரும் உயிருடன் இருக்க முடியாது. வேண்டும் என்றால் நாங்கள் எமது அலுவலகத்தை மூடிவிட்டு எங்கேயாவது போய் விடுகிறோம் நீங்கள் விரும்பியபடி செய்யுங்கள் என்று கூறினார். வசந்த் சிந்திக்கத் தொடங்கினார். ஏற்றுக்கொண்டார். தான் செயலதிபர் உமாமகேஸ்வரன் இடம் முயற்சி செய்து கொண்டிருக்கிறோம் இன்னும் சரிவரவில்லை என்று கூறி விடுவதாக கூறினார். செயலதிபர் உமாமகேஸ்வரன் வயர்லெஸ் மூலம் வசந்த்திடம் எனக்கு எனக்கு தகவல் அனுப்புவார். நான் செய்ய வேண்டிய வேலைகளையும் வசந்த் மூலம் தான் வரும்.

அருளர்

வசந்தை நான் ரகசியமாக தெருவோர கடைகளில் தான் சந்திப்பேன். அப்போது வசந்த் ஒரு செய்தியைக் கூறினார் இரண்டொரு நாளில் ஒரத்தநாட்டில் சென்னையிலும் எமக்கு ஆரம்ப காலம் முதல் உதவி செய்த இந்தியத் தமிழர்இளவழகன் என்பவரை கொலை செய்ய செயலதிபர் உமாமகேஸ்வரன் உத்தரவிட்டுள்ளதாகவும், இளவழகன் ஐ கொலைசெய்ய முன்பு இளவலகனுக்கு முன்பு அவரின் நெருங்கிய நண்பரும் எங்களுக்கும் பல வழிகளில் உதவி செய்த ராமசாமி என்பவரை போடும்படி செயலதிபர் கூறியுள்ளார். ராமசாமியை போட்டுத் தள்ளிவிட்டு, சரியாக அடுத்த நாள் இளவழகனுக்கு கிடைக்கும்படி கொழும்பில் இருந்து ஒரு தந்தி அனுப்புவதாகவும் கூறியுள்ளார். தந்தியில் உள்ள வாசகம் next you என்று மட்டும்தான்.

நான் வசந்தை நிக்கசொல்லிவிட்டு உடனடியாக போய் விஷயத்தை கூறி சித்தார்த்தனை கூட்டி வந்தேன்.


தொடரும்.







logoblog

Thanks for reading எனது இயக்க இந்திய அனுபவங்கள் - பகுதி 63

Previous
« Prev Post

No comments:

Post a Comment