டெல்லி அடையாள அட்டை - வெற்றிச்செல்வன் |
உமா மகேஸ்வரன் |
பின்பு தேர்தலை நடத்தும் இரண்டு தோழர்களை தெரிவுசெய்ய ஏற்பாடு நடந்தது. திட்டமிட்டபடி செயலதிபர் உமா மகேஸ்வரனுக்கு நெருக்கமான சிலர் வெற்றிச்செல்வன் ஐயும், KL ராஜனையும் தெரிவு செய்வதாக கூறினார்கள். செயலதிபர் உமாமகேஸ்வரன் எழுந்து வேறு யாரும் வேறு பெயர் கூறுகிறீர்களா என்று சும்மா கேட்டுவிட்டு உடனடியாக, வெற்றிச்செல்வன் ஐயும், KL ராஜனையும் தேர்தல் நடத்தும் அதிகாரிகளாக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தார்.
என்ன காரணமோ தெரியவில்லை மாணிக்கம் தாசன் எழுந்து கழகத்தின் மூத்த உறுப்பினர்களான வெற்றிசெல்வன் ஐயும் KLராஜனையும் தேர்தலை நடத்தும் அதிகாரிகளாகப் போட்டாள் அவர்கள் மத்திய குழுவில் போட்டியிட முடியாது. நாங்கள் அவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும். இந்த திருப்பத்தை செயலதிபர் எதிர்பார்க்கவில்லை.
இந்த பதவியை ஏற்பதும் ஏற்காததும் அவர்கள் விருப்பம். அவர்கள் தங்கள் கருத்தை சொல்லட்டும் என்று எங்களைப் பார்த்தார். நானும் KL ராஜனும், நாங்கள் மத்திய குழு தேர்வுக்கு போட்டியிட விரும்பவில்லை. அதனால் தேர்தல் அதிகாரிகளாக இருக்க முழு மனதுடன் சம் மதிக்கிறோம் என்று கூறினோம். திரும்ப சம்பந்தமாக யாரும் ஒன்றும் பேசவில்லை. மாணிக்கம் தாசன் எழும்பி தான் மத்தியகுழு உறுப்பினராக போட்டியிட விரும்பவில்லை என்றும் அதனால் தனது பெயரை யாரும் எழுத வேண்டாம் என்றும் எல்லோரையும் பார்த்து கும்பிட்டு கேட்டுக்கொண்டார். அதேபோல் கந்தசாமியும் எழுந்து தானும் போட்டியிட விரும்பவில்லை, தனது பெயரையும் யாரும் எழுத வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.
உடனடியாக செயலதிபர் உமாமகேஸ்வரன் எழுந்து என்னை பற்றியும், KL ராஜன் பற்றியும் எங்கள் நிர்வாகத்திறன், ஒழுக்கம், இதுவரை இவர்கள் மீது எந்தவித குற்றச்சாட்டும் இல்லை. இயக்கத்திற்கு மிகவும் நம்பிக்கையாளர்கள் என்று பலவாறு புகழ்ந்தார். இந்த மாநாடு ஆடியோ வீடியோ எடுக்கப்பட்டது. அவர்கள் மாநாடு முடிந்த பின்பு ஆடியோ வீடியோ கொழும்பு கொண்டு வந்ததாக அறிந்தேன். தேடி எடுத்தால் கட்டாயம் கிடைக்கும். அதில் எங்களைபுகழ்ந்து பாராட்டி செயலதிபர் பேசியது இருக்கும்.
மாலை நேரம் இருட்டிக் கொண்டு வந்தது. வெளிச்சம் போகும்முன் தேர்தலை நடத்த அவசரம் பட்டோம். இருந்த தோழர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப சிறு பேப்பர் துண்டுகள் செய்து அதில் எங்கள் கையெழுத்தையும் வைத்து தோழர்களிடம் கொடுத்தோம். அரை மணி நேரத்தில் தேர்தல் முடிந்து சிறு வெளிச்சத்தில் ஒதுக்குப்புறமாக இருந்து ஒரு பேப்பரில் அவசரம் அவசரமாக எல்லோரும் பெற்ற வாக்குகள் விபரம் பதிவு செய்தோம். அதில்உண்மையாகவே எல்லா தோழர்களும் செயலதிபர் உமா மகேஸ்வரனை தெரிவு செய்து இருந்தார்கள். சட்ட திட்டத்தின் படி எமது இயக்கத்தின் புதிய செயல் அதிபராக உமாமகேஸ்வரன் தெரிவு செய்யப்பட்டதை அறிவித்தோம்.
K.L. ராஜன் |
செயலதிபர் உமாமகேஸ்வரன் என்னையும், KL ராஜனையும் அழைத்து, சொன்ன மாதிரி மாற்றி விட்டீர்களா என்று கேட்டார். நான் சொன்னேன் இருட்டில் ஒன்றும் செய்யமுடியவில்லை . நாளை காலை வெளிச்சத்தில் மாற்றி விடுகிறோம் என்று. செயலதிபர் வேண்டாம் மாணிக்கம் தாசன் முதல் தோழர்கள் சந்தேகப்படுவார்கள். முள்ளி குளத்தில் வைத்தும் செய்ய வேண்டாம். முக்கியமான வேலை என்று என்னை கொழும்பு அனுப்புவதாகவும், அங்கு போய் அதை நல்ல விதமாக மாற்றி திரும்ப சீலிடப்பட்ட கவரில் வைத்து கொண்டு வரும்படியும் கூறினார். எனக்கு கடவுளே நேரில் வந்து சொல்வது போல் இருந்தது. மாநாட்டுக்கும் ரெண்டு நாள் ஓய்வு என்றும், கூறினார்.
தொடர்ந்து மாநாடு முள்ளி குளத்தில் நடக்கும் என்றும் கூறினார்.
அங்கு சுட்ட மானையும் எடுத்துக்கொண்டு சமையல்காரர்கள் சமையல் சாமான்கள் முதலில் ஒரு தரம் டிராக்டர் போய்விட்டது. அடுத்த தரம் வந்தபோது நான் கந்தசாமி ஆட்சி ராஜன் முருகேசன் எல்லோரும் ஏறிவிட்டோம். நாங்கள் முள்ளிக்குளம் வந்து சேர இரவு 11 மணி இருக்கும் என நினைக்கிறேன். வந்தவுடன் மான் இறைச்சியைதேடிப் போனாள் எங்களுக்கு சிறு துண்டுதான்கிடைத்தது. இரவிரவாக கழுவில் காட்டிலிருந்து எல்லோரும் வந்து விட்டார்கள்.
காலையிலேயே சென்னை கொழும்பு போக சொல்லிவிட்டு எனக்கு பாதுகாப்பாக ஆட்சி ராஜன் அவர்களையும், (பாதுகாப்புக்காக வா?அல்லது என்னை கண்காணிக்க வா என்று தெரியாது) தோழர்கள் சந்தேகப்படாமல் இருக்க வசந்துக்கும் ஒரு வேலை கொடுத்து மூவரையும் கொழும்புஅனுப்பினார். செயலதிபர் என்னிடம் யாருக்கும் எந்த விஷயமும் தெரியக்கூடாது. விஷயம் வெளியில் தெரிந்தால் கடும் நடவடிக்கை எடுப்பேன் என்று கூறினார். அடுத்த நாள் 26 ஆம் தேதி இங்கே நிற்க வேண்டும் என்றும் கூறினார். தோழர்களிடம் நான் கொழும்பு போவது பற்றி, இந்திய அதிகாரிகளிடம் தொலைபேசியில் கைது செய்யப்பட்ட எமது தோழர்கள் பற்றி கடைசியாக பேசி பார்க்கட்டும் என்று அனுப்புகிறேன் என்று கூறிவிட்டார். நான் கந்தசாமி இடம் பயணம் பயணம் பற்றி கூறி விடை அதுதான் கடைசி சந்திப்பு என ஆனால் மாணிக்கம் தாசன் இடம் விடைபெறும்போது ஒரு சந்தேகப் பார்வையுடன் விடை கொடுத்தார். முள்ளிகுளத்துக்கு முதலில் வந்த வழியே போய் காலையில் கடற்கரையில் வியாபாரிகள் வந்துபோகும் பெரிய படகில் நாங்கள் மூவரும் கற்பிட்டி நோக்கி பயணமானோம். வியாபாரிகள் பொதுமக்கள் என பலரும் படகில் இருந்தார்கள். போகும் வழியில் வசந்தும்,ஆட்சி ராஜனும் பெரியவரைப் பற்றி எங்களுக்கு தெரியும் உங்கள் கொழும்பு பயணம்பற்றி உண்மையைச் சொல்லுங்கள் அண்ணா என்று கேட்டார்கள்.
நான் உண்மையை கூறினேன். அவர்கள் இருவரும் தோழர்களின் தெரிவை மாற்ற வேண்டாம். செயலதிபர் இப்போ கூட தனது நரித்தனத்தை காட்டுகிறார் பாருங்கள் என்றார்கள். என்னிடம் நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள் என்றார்கள். நான் கூறினேன் எனக்கு மாற்றி கொடுக்க விருப்பமில்லை. ஆனால் மாற்றிகொடுக்காவிட்டால் என் உயிருக்கு உத்தரவாதம் இல்லை. அவர்கள் இருவரின் ஆலோசனைப்படி, சித்தார்த்தனின் ஆலோசனையும் கேட்டு, தேர்தல் விபரங்களை கவரில் போட்டு ஆனந்தி அண்ணாவிடம் கொடுங்கள், நாங்கள் அதை வாங்கிக்கொண்டு முள்ளிக்குளம் போகிறோம். நீங்கள் உடனடியாக இந்தியா போய் விடுங்கள். வெற்றிச்செல்வனை ஏன் கூட்டி வரவில்லை என்று கேட்டாள் ஆட்சி ராஜன் எனக்கு உடம்பு சரியில்லை என்று கூறுவதாகவும் கூறினார்.
நாங்கள் பேசியபடி தேர்தல் முடிவு ஒரிஜினல் ஐயம், தெரிந்தெடுக்கப்பட்ட ஏழு பேரையும் எழுதி கவரில் போட்டு ஆனந்தியுடன் கொடுத்துவிட்டேன். நான் சித்தார்த்தரின் உதவியோடு இலங்கை பாஸ்போர்ட் எடுத்துக்கொண்டு, ஆனந்தி அண்ணாவிடம் பெரியவர் என்னை உடன் இந்தியா போகச் சொன்னார் என்று பொய் கூறி விமான டிக்கெட் காசு வாங்கினேன். சித்தார்த்திடம் கொஞ்சம் பணம் கொடுத்து உதவினார். அதற்கிடையில் செயலதிபர் உமாமகேஸ்வரன் செய்தி அனுப்பி என்னை உடன் வரச் சொல்லி இருக்கிறார். நான் கொழும்பில்தலைமறைவாகி 29/03/1989 சென்னைக்கு விமானம் ஏறி விட்டேன். நான் சென்னை போய் இயக்கத்தை விட்டு விலகி வெளிநாட்டுக்கு போய்விட வேண்டும் என்ற முடிவுடன் தான் இருந்தேன்.
எமது கழக தள மாநாட்டு தேர்தல் முடிவுகள்
உமா மகேஸ்வரன். 75
சித்தார்த்தன். 55
காண்டீபன். 42
சுரேஷ். . 22
மாணிக்கம் பிள்ளை 13
குமுதன். 16
ஆனந்தி. … .09
திவாகரன். … 10
சங்கரி. . 12
சேவல் கொடி. . 03
முருகன். 07
மாக்ஸ். 03
வசந்த். 17
வரதன். 02
மாதவன். 05
யோகன். 01
சிவபாலன். 01
ஜீவா. ….03
சசி. .. .01
ரகு. 01
கிரிஷ். 01
பிரபு. … 01
சாம். . ….01
அத்தான். . 01
இரண்டாவது தள மாநாட்டின் ரகசிய தேர்தல் விபரங்கள் |
இதுதான் உண்மையான தேர்தல் முடிவுகள். மத்திய குழுவுக்கு தெரிவு செய்யப்பட்டவர்கள்
உமாமகேஸ்வரன்
சித்தார்த்தன்
காண்டீபன்
சுரேஷ்
வசந்த்
குமுதன்
மாணிக்கம் பிள்ளை
இதுதான் எமது தளம் மாநாட்டில் தெரிவுசெய்யப்பட்ட உண்மையான மத்தியகுழு உறுப்பினர்கள். இதன் பின்பு என்ன நடந்தது என்ன மாற்றம் செய்தார் என்று என்னால் அறிய முடியவில்லை. இனி சென்னையில் இருந்து தொடரும்.
தொடரும்.
.
No comments:
Post a Comment