பகுதி 58
வெற்றிச்செல்வன் - வாழப்பாடி ராமமூர்த்தி எம்பி - டக்ளஸ் தேவானந்தா |
கடந்த 57வது பதிவில் எழுத்தாளர் வாசந்தி அவர்களை சந்தித்து இலங்கை பிரச்சினை பற்றி எழுத கேட்டது பற்றி குறிப்பிட்டு இருந்தேன். அவரும் சில உண்மைகள் கலந்த கற்பனைக் கதையை நாவலாக நிக்க நிழல் வேண்டும் பெயரில்எழுதினார். பல நண்பர்கள் வாசந்தி அவர்கள் எழுதிய இந்த கதை எழுத எப்படி உருவானது என்ற என்ற செய்தியை, என்னை சந்தித்தது பற்றி பல இடங்களில் பல மாதிரி பொய்ச் செய்திகளை எழுதியுள்ளார். நான் அவரை இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பின்புதான் 1987 கடைசியில் தான் சந்தித்தேன். ஆனால் அவர் 1985 சந்தித்ததாகவும் நான் 200 பேரை கொலை செய்து இருக்கிறேன் என்று கூறியதாகவும் பல பொய்களை எழுதி, தான் ஒரு சிறந்த உண்மை கலந்த கற்பனை நாவல் எழுத்தாளர் என்பதை நிரூபித்துள்ளார். இப்படி எழுதுவதால் இவர் ஒரு பயங்கரவாதிகளை சந்தித்து மிக ஆபத்தான நிலையில் இக்கதையே எழுதியுள்ளதாக வாசகர்கள் நினைத்து விடுவார்கள் என்று தனது இமேஜை உயர்த்த பல பொய்களை எழுதியுள்ளார் என நினைக்கிறேன். அனிதா பிரதாப்புக்கு நிகராக தன்னை நினைத்துள்ளார். வருந்துகிறேன்.1983 ஆண்டு நடந்த கலவரத்தின் போது தமிழ்நாட்டின் தினத்தந்தி பேப்பர் போட்ட செய்திகளால இலங்கை தமிழர்களுக்கு மிக ஆதரவு சாதாரண மக்களிடம் இருந்து பெருகியது. எப்படி என்றால் இலங்கையில் சிங்கள ராணுவம் சிங்கள மக்கள் தமிழர்களை கொலை செய்யும் கற்பழிப்பு செய்திகள் உண்மையில் ஒன்று அல்லது 2செய்திகள்தான் வந்து கொண்டிருக்கும், ஆனால் தந்தி பேப்பர் தினசரி 20, 30, 100 என்று முன்பக்கத்தில் செய்தியாக போடுவார்கள்.எல்லா இடங்களிலும் தந்தி பேப்பரை வைத்துக்கொண்டு தான் சாதாரண ரிக்ஷாக்காரன் முதல் எல்லோரும் மிகவும் கவலையோடு பேசிக்கொண்டிருப்பார்கள். ஒரு நாள் இடதுசாரி சிந்தனை உள்ள பெரும் புகழ்பெற்ற வழக்கறிஞர் N.T வானமாமலை, இவர்தான் எம்ஜிஆர் எம் ஆர் ராதா சுடப்பட்ட வழக்கில் ராதாவுக்கு ஆஜராகிய வர். பாண்டி பஜார் சம்பவத்தில் உமா மகேஸ்வரன், பிரபாகரனுக்கு ஆதரவாக ஒரு சதம் கூட வாங்காமல் இலவசமாக வாதாடியவர், இவரிடம் ஈழவிடுதலை பெரும்ஆதரவாளரான கவிஞர் புலமைப்பித்தன் வானமாமலை சந்திக்க நேர்ந்தபோது ஐயா இலங்கையில் தமிழ்ப் பெண்களை நூற்றுக்கணக்கில் கற்பழித்து கொலை செய்கிறார்கள் நெஞ்சு கொதிக்கிறது என்று கூறி வருத்தப்பட்டிருக்கிறார். அதற்கு வானமாமலை அவர்கள் உண்மைதான் ஐயா ஆனால் தமிழ்நாட்டில் தமிழர்களே தமிழ் பெண்களை கற்பழிக்கும் கொடுமைகள் தினசரி பத்திரிகைகள் வருகிறது அதற்கு உங்கள் நெஞ்சுகொதிக்க வில்லையா என்று கேட்டிருக்கிறார். கவிஞரும் விதண்டாவாதம் பேச வேண்டாம் என்று கூறி விட்டு போய் விட்டார். இந்த சம்பவம் பற்றி அன்று எங்களுக்குள் ஒரு சிரிப்பான விடயமாக பேசப்பட்டது.
பத்திரிகைச் செய்தி |
இந்திய இலங்கை ஒப்பந்தத்திற்கு பின்பு டக்ளஸ் தேவானந்தா அவர்கள் டெல்லியில் வாழப்பாடி ராமமூர்த்தி M.P வீட்டில்தங்கியிருந்தார். அவர் நான் இருந்த ஆலடி அருணா எம்பியின் வீட்டில் வந்து என்னோடு பேசிக் கொண்டிருப்பர். அப்போது அவர் தேவானந்தா புளொட் இயக்கத்தைப் பற்றி தான் கவலையோடு கோபமாக பேசினார். ஒரு காலத்தில் புளொட் இயக்கம் இலங்கையில் மற்ற எல்லா இயக்கங்களையும் விட கூடிய பொதுமக்கள் ஆதரவு கிடைத்தும், கூடிய அளவு இளைஞர்கள் சேர்ந்தும் ஏன் உங்களால் வெற்றி பெற முடியவில்லை. கடைசியில் ஈழப் போராட்டத்தில் இருந்து அந்நியப்பட்டுப் போகிறீர்கள் என்று அன்று கூறினார்.
ரங்கராஜன் குமாரமங்கலம் எம்பியை சந்தித்து இலங்கைத் தமிழர்கள் டெல்லி திஹார் ஜெயிலில் இருக்கும் இலங்கை தமிழர்களை, பெண்களை விடுதலை செய்ய உதவும்படி கேட்டேன். அவர் என்னிடம் எல்லா விபரங்களையும் வாங்கிக்கொண்டு போய் இந்தியப் பாராளுமன்றத்தில் பேசினார். அதோடு இந்திய பிரதமர் ராஜீவ் காந்திக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் ன் N.T திவாரிஅவர்களுக்கும் ,ஒரு கடிதம் போடச் சொல்லி நகலையும் பெற்றுக் கொண்டதோடு,தனிப்பட்ட முறையில் வெளிவிவகார அமைச்சரிடம் பேசி உள்ளார். ரங்கராஜன் குமாரமங்கலத்தின் மனைவி சுப்ரீம் கோர்ட் அட்வகேட் அவரும் கொஞ்சம் குறைந்த செலவில் இலங்கைத் தமிழர்களை ஜாமீன் எடுக்க உதவி செய்தார். ஜெயிலில் இருக்கும் இலங்கைத் தமிழர்கள் பற்றிய செய்திகளை பத்திரிகைகளிலும் கட்டுரையாக வரச் செய்தேன்.
எனது பிரஸ் ரிலீஸ் |
நான் ரங்கராஜன் குமாரமங்கலம் எம் பி யின் உதவியோடு டெல்லி விமான நிலைய பொலீஸ் அதிகாரிகளை சந்தித்தேன். அவர்களும் டில்லி பாராளுமன்றத்தில் விமான நிலையத்தில் பிடிபடும் இலங்கைத் தமிழர்கள் பற்றிய ரங்கராஜன் குமாரமங்கலத்தின் பேச்சை பத்திரிகைகளில் படித்து உள்ளார்கள். அதன்பின்பு அவர்கள் பிடிபடும் இலங்கைத் தமிழர்களை அடிப்பதில்லை. யாரும் பிடிபட்டால் எனக்கு உடனடியாக தொலைபேசி மூலம் அறிவித்து அவர்களை சந்திக்க வைப்பார்கள். போலீஸ் அதிகாரிகள் வைக்கும் கோரிக்கை ஒன்று இவர்களை அனுப்பும் ஏஜெண்டுகளை பிடித்து தரவேண்டுமென்று, இல்லாவிட்டால் அவர்கள் இருக்கும் இடங்களை சொல்ல வேண்டுமென்று, நாங்களும் சரி என்றோம். பிடி படுபவர்கள் ரகசியமாக ஏஜென்ட் தொடர்புகொள்ள நம்பர் களையும், இல்லாவிட்டால் சென்னையில் இருக்கும் அவர்கள் உறவினர்களின் தொலைபேசி நம்பர் களையும் தருவார்கள். இதனால் பல பேரை ஜெயிலுக்குப் போகாமலேயே அடுத்தநாள் மாலையே ஜாமீனில் எடுத்து விடக் கூடியதாக இருந்தது.
பல பேரு ஒரிஜினல் பாஸ்போர்ட் ஓடும் வந்து கள்ள பாஸ்போர்ட் என்ன பிடிபட்டு இருக்கிறார்கள். அதே மாதிரி ஒரிஜினல் சிங்கப்பூர் மலேசியா மொரிசியஸ் பாஸ்போர்ட்டில் வந்த அந்தந்த நாட்டு காரர்களும் பிடிபட்டு இருக்கிறார்கள். அவர்களை அந்தந்த நாட்டு தூதுவ அதிகாரிகள் வந்து பாஸ்போர்ட் சரிபார்த்து கூட்டிச் செல்வார்கள். ஆனால் இலங்கை தூதுவ அதிகாரிகள் ஒரிஜினல் பாஸ்போர்ட் இருந்தாலும் அது சந்தேகமாக இருக்கிறது கள்ள பாஸ்போர்ட் என்று குறிப்பிட்டு போய்விடுவார்கள். அவர்களுக்கு ஜெயில் தான்.
ரங்கராஜன் குமாரமங்கலம் இந்திய பாராளுமன்றத்தில் ஜெயிலில் இருக்கும் தமிழர்களை விடுதலை செய்ய கோரி பேசிய பேச்சு |
1988 ஆண்டு அக்டோபர் மாதம் சென்னை வரும்வரை டெல்லியில் எனக்கு முக்கிய வேலைகள் இருக்கவில்லை. அதேநேரம் இலங்கையில் நடக்கும் செய்திகளும் உண்மை நிலவரங்கள் எனக்கு தெரிய வரவில்லை. இந்திய அதிகாரிகள் டெல்லியில் சந்திப்பது இல்லை. விடுதலைப்புலிகளால் கொலை செய்யப்பட்ட எமது ஒரு முக்கிய தோழரின் மனைவியை கள்ள மலேசியன் பாஸ்போர்ட்டில் வெளிநாட்டுக்கு அனுப்ப சித்தார்த்தன் கேட்டுக்கொண்டனர். அதன்படி சித்தார்த்தனும், இறந்த தோழரின் மெய்ப்பாதுகாவலர் உம் அந்த சகோதரியை டெல்லி கூட்டி வந்தார்கள். டெல்லி அதிகாரிகளின் உதவியுடன் அவரை வெளிநாட்டுக்கு அனுப்பியது தான் நான் டெல்லியில் செய்த கடைசி வேலை.
உடனடியாக என்னை சென்னை வந்து சென்னை அலுவலகத்தை பொறுப்பை ஏற்கும்படி செயலதிபர் கூறியுள்ளதாக சென்னையில் பொறுப்பிலிருந்த ஆனந்தி அண்ணா (சதானந்தன்) கேட்டுக்கொண்டார். அவர்தான் சென்னையில் பொறுப்பில் இருந்தார்.
நானும் ஆறு வருட புதுடில்லி வாழ்க்கையை விட்டு சென்னை போக ஏற்பாடுகள் செய்யத் தொடங்கினேன்.
தொடரும்
No comments:
Post a Comment