பகுதி 64
இளவழகன் -ராமசாமி |
நான் சொன்ன செய்தியைக் கேட்ட சித்தார்த்தன் அதிர்ச்சியாகி விட்டார். இருவரும் வந்து வசந்தை சந்தித்து, முழு விபரங்களையும் கேட்டோம். இளவழகன் பெயரில் தான் அதாவது செயலதிபர் உமா மகேஸ்வரன் வாங்கிய சிந்தாரிப்பேட்டைபாவாணர் அச்சகம் என்றும், பணத்தை திருப்பித் தராமல் இளவழகன் தன்னை ஏமாற்றி விட்டார் என்றும், அதனால் அவரை கொலை செய்யும்படியும் கூறினார். இலவச இணைப்பாக இளவழகன்அவர்களின் நண்பர் ராமசாமியும் போடும்படி கூறியுள்ளார்.
வெற்றிச்செல்வன் |
இப்போது இளவழகன் ராமசாமியை பற்றி கூற வேண்டிய தேவை உள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். எனக்கு தெரியக் கூடியதாக 1982 கடைசியிலிருந்து உமாமகேஸ்வரன் ஓடு மிக நெருங்கிய தொடர்பில் இருப்பவர்கள். உமா மகேஸ்வரன்தலைமையில் தமிழீழம் கிடைக்குமென்ற அதிஉச்ச நம்பிக்கையில் எங்களுக்கு உதவி செய்தவர்கள். இவர்கள் மூலம் மந்திரி S.D சோமசுந்தரம், புலமைப்பித்தன் போன்ற இன்னும் பலரை உமா மகேஸ்வரனுக்கு அறிமுகப்படுத்தி தஞ்சாவூர் மாவட்டத்தில் நாங்கள் முகாம்கள் போட மூல காரணமாக இருந்தவர்கள். கொஞ்ச ஆர்வக்கோளாறு காரணமாக இயக்க எல்லா விடயங்களிலும் தலை போட்டு, அறிய முற்பட்டு கருத்து கூறுவார் கள். உமாமகேஸ்வரன் இயக்க வேலைகளுக்காக ஒரு அச்சகம் தேவைப்படவே இளவழகன் பெயரில் கழக மத்திய குழுவுக்கு அறிவிக்காமல் ஒரு அச்சகத்தைவாங்கிவிட்டார். அதில்தான் எமக்குத் தேவையான எல்லா பிரசுரங்கள் புத்தகங்கள் அச்சடிக்கப்படும்.
அந்த அச்சகத்தில் கழக முதலீடு கிட்டத்தட்ட ஒரு லட்சம். இளவழகன், ராமசாமி எமது இயக்க வேலைகளால் ஓடித்திரிந்த படியால் அவர்கள் இருவரும் பார்த்த வேலையிலிருந்து அவர்களை வேலை நீக்கம் செய்து விட்டதாக அறிந்தேன். பின்பு இளவழகன் தானும் சிறிது முதலீடு போட்டு அச்சகத்தைவிரிவுபடுத்தி தனது குடும்ப செலவுகளுக்காகவும் பயன்படுத்திக் கொண்டதாக அறிந்தேன். எமது இயக்கத்தில் ஏற்பட்ட பிளவுகள் கொலைகள் பின்னடைவுகள் இளவழகன் உமாமகேஸ்வரன் மேல் வைத்திருந்த கனவுகள் நம்பிக்கைகள் தகர்ந்து போனது உணர்ந்தார்.86 ஆண்டு எமது இயக்கம் இரண்டாக உடைந்தபோது, இளவழகன் பரந்தன் ராஜன் ஆதரித்த படியால் உமா மகேஸ்வரனின் கோபத்துக்கு ஆளானார். அச்சகத்தை திரும்பப் பெற முயற்சி செய்தும் உமாமகேசுவரனார் முடியவில்லை. ஆனால் ஒன்று கூற வேண்டும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் தஞ்சாவூர் மாவட்டத்தில் வளர இளவழகன் பங்கு அதி முக்கியமானது அதை நாங்கள் மறந்துவிடக் கூடாது.
(அந்தக் காலத்து சித்தார்த்தர்) சித்தார்த்தன் வசந்த்திடம்உமா மகேஸ்வரன் முட்டாள்தனமாக இன்று நமக்கு உதவிய இந்தியத் தமிழர்களை கொலை செய்ய சொன்னதுஎவ்வளவு பாரதூரமான விடயம். இதன் விளைவுகள் பாரதூரமாக இருக்கும். என்றுபல அறிவுரைகளைக் கூறினார். வசந்த் உண்மைகளை ஏற்றுக் கொண்டார். இளவழகன் தனக்கு வந்த தந்தியை பார்த்து குழம்பிப்போய் இருந்ததை பின் பின்னொரு காலத்தில் கேள்விப்பட்டேன்.
வசந்த் |
- மோட்டார் சைக்கிளில் போய் சங்கிலி தாலிக்கொடி அறுப்பது
- சென்னையில் இரவில் வீடுகளில் வெளியில் நிற்கும் மோட்டார் மோட்டார் சைக்கிளை திருடி கொண்டுபோய் கேரளாவில் விற்பது. இது சென்னையில் கேகே நகரில் தான் அதிகமாக நடந்துள்ளது.
- கேரளா போய் ஒதுக்குப்புறமாக உள்ள வீடுகளில் கொள்ளையடிப்பது, சிறிய பாதுகாப்பில்லாத கேரளா வங்கிகளை கிராமங்களில் உடைத்து கொள்ளையடிப்பது
- பெட்ரோல் நிலையங்களில் இருந்து வங்கிக்கு பணம் கட்ட போகும்போது இடைவழியில் கொள்ளையடிப்பது
கொள்ளையடித்த பொருட்களை எல்லாம் திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள ஒரு இந்திய தமிழரின் பட்டறையில் வைத்து தான் அடுத்த ஏற்பாடு செய்வார்கலாம். இந்திய பணத்தை தங்கக்கட்டிகள் ஆகவும் போதைப் பொருளாகவும் மாற்றி படகுகள் மூலம் நேரடியாக உமாமகேஸ்வரன் பெற்றுக் கொள்ளக்கூடிய விதத்தில் அனுப்புவார்கலாம். கொழும்பில் இவர்கள் தொடர்பு கொள்ள ஆட்சி ராஜனை தான் உமா மகேஸ்வரன் ஒருத்தருக்கும் தெரியாமல் நியமித்திருந்தார்.
அதெல்லாம் கட்ட சித்தார்த்தர், வசந்த் இடம் உங்கள் அம்மாவின் தாலிக்கொடியை ஒருத்தர் கொள்ளையடித்தால் அவர் மனம் என்ன பாடுபடும். அதோடு தமிழ்நாட்டில் தாலிக்கொடி பெண்களுக்கு மிகவும் முக்கியமானது. அவர்கள் தாலிக்கொடியை தங்க சங்கிலியை போட இவ்வளவு கஷ்டப் படுகிறார்கள். ஒரு புரட்சிகர விடுதலை இயக்கம் என்று கூறிக்கொண்டு எந்த அளவுக்கு கீழ்த்தரமான செயல்களை எங்களுக்கு அடைக்கலம் கொடுத்த நாட்டில் செய்கிறீர்கள். நாங்கள் தமிழ்நாட்டு மக்களுக்கு செய்யும் நன்றிக்கடனா இது என்று பலவித புத்திமதிகளை கூறினார். வசந்தனும் மிகவும் கவலைப்பட்டு தான் செய்யும் வேலைகளை தனது அப்பா அம்மா கேள்விப்பட்டால் உடனடியாக செத்து விடுவார்கள். நாங்கள் இப்படி செய்யும் வேலைகள் கீழ்த்தரமானது என்று எங்களுக்கு புரிந்தாலும், செயலதிபர் உமா மகேஸ்வரனின் கட்டளையை தங்களால் மீற முடியவில்லை என்று கூறி, தான் இந்த மாதிரி செயல்களை தொடர்ந்து செய்ய மாட்டேன் என்று கூறினார்.
சித்தார்த்தர் |
ஆனால் வசந்தன் கொஞ்சம் கொஞ்சமாக ஒதுங்கினாலும் அவரோடு இருந்த மற்றவர்கள் பாவ புண்ணியம் பார்க்கவில்லை. செயலதிபர் இன் கட்டளை முக்கியம் என்று தங்கள்சமூகவிரோத செயல்களை தொடர்ந்து செய்து வந்தார்கள்.1989 ஆண்டு முற்பகுதியில் மதுரையில் என நினைக்கிறேன் பெட்ரோல் பங்கிலிருந்து வங்கிக்கு பணம் கொண்டு போன வங்கி ஊழியரை சுட்டு கொலை செய்துவிட்டு, தப்ப முடியாமல் பொதுமக்களிடமும் போலீசாரிடமும் பிடிபட்டுதிருச்சியில் பல வருடங்கள் ஜெயிலில் இருந்தார்கள். வசந்த் பிடிபடாமல் இலங்கைக்கு தப்பி வந்துவிட்டார்.
சித்தார்த்தனும் கொழும்புக்கு போய் விட்டார். வசந்தன் இலங்கைக்குப் போகும் முன்பு செய்த கடைசி சம்பவம். சிங்கப்பூரில் கப்பல் வாங்கி தருவதாக உமா மகேஸ்வரனை ஏமாற்றிய சிங்கப்பூர் வாசி, சென்னை துணிக்கடை மேனேஜரை1988 ஆண்டு தீபாவளிக்கு முதல்நாள் கொலை செய்தது ஆகும்.
தொடரும் .
No comments:
Post a Comment