பார்வையாளர்களின் எண்ணிக்கை

Search This Blog

Powered by Blogger.

Sunday, 19 September 2021

எனது இயக்க இந்திய அனுபவங்கள் - பகுதி 72

  வெற்றிசெல்வன்       Sunday, 19 September 2021

பகுதி 72 


சங்கிலி கந்தசாமி

செயலதிபர்  உமா மகேஸ்வரன்தனியாக என்னிடம் இந்திய நிலவரங்கள் பற்றிய விபரங்களை கேட்டறிந்தார். மாலைதீவு சம்பந்தமான மாணிக்கம் தாசன் தான் காரணம் என்பதை நான் கூறியதை அவர்கள் இந்தியா நம்பவில்லை, இதற்குப் பின்னால் இலங்கை அரசாங்கம் இருக்கலாம் என அவர்கள் நம்புவதாக நான் கூறினேன். அவர் அங்கு என்னை வரவழைத்த காரணத்தைக் கூறினார். தாங்கள் இப்ப தென்பகுதியில் அரசியல் செய்வதால் பாதுகாப்புக்காகவும் இந்தியாவை இந்திய அமைதிப்படையை எதிர்க்க வேண்டியுள்ளது. அதேநேரம் யாழ் மாவட்டத்தில் எமது அரசியல் கட்சி தேர்தலில் நிற்பதால், எமது அரசியல் கட்சி இந்தியாவுக்கு ஆதரவாக இருப்பது போல் காட்டிக் கொண்டால் தான், எமக்கு ஒரு பாராளுமன்ற உறுப்பினர் பதவி சரி கிடைக்கும். இந்தப் பாராளுமன்றத் தேர்தலில் வடக்கு கிழக்கில் இந்திய உளவுத்துறை யும்,இந்திய அமைதிப் படையும் விரும்பிய ஆட்கள்தான் வரக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.

என்னை தற்காலிகமாக எமது அரசியல் கட்சியின் நிர்வாக சம்பந்தப்பட்ட வேலைகளை ஆனந்தி அண்ணாவிடம் இருந்து பொறுப்பெடுத்து வேலை செய்யும்படியும், அதோடு டெல்லியில், சென்னையில் இருக்கும் இந்திய அதிகாரிகளுக்கு சித்தார்த்தன்தலைமையில் உள்ள எமது அரசியல் கட்சி இந்தியாவுக்கு ஆதரவாகத்தான் இருப்பதாகவும்,எங்களுக்கு யாழ்மாவட்டத்தில் குறைந்தது 2 பராளுமன்ற உறுப்பினர்கள் கிடைத்தால் நாங்கள் பகிரங்கமாக இந்திய ஆதரவு நிலை எடுக்க வசதியாக இருக்கும் என்று கருத்துப்பட அடிக்கடி அவர்களுடன் பேசிக் சொன்னார். நானும் தொலைபேசி மூலம் எலெக்சன் நடக்கும் வரை இந்திய அதிகாரிகளுடன் பேசினேன். செயலதிபர் உமா மகேஸ்வரனும் அவர்களுடன் பேசியதே பற்றிகேட்பார். நானும் அவர்கள் பிடி கொடுத்து பதில் சொல்வதில்லை என்று கூற, நீர் பேசும் பார்ப்போம் என்று கூறினார்.

சந்திரசேகர் - வெற்றிச்செல்வன்

செயலதிபர் உமாமகேஸ்வரனின் காரை பார்க்க, கீழே போய் கதவைத் திறந்து எல்லாம் பார்க்க, உமா மகேஸ்வரனின்  மெய்ப்பாதுகாவலர்,டிரைவர் ராபின் என்னை முறைத்துப் பார்த்து அதட்டினார். சாம் முருகேஷ் தான் என்னை அறிமுகப்படுத்தினார். ஆனால் ராபின் யாரா இருந்தாலும் பெரியய்யா வின் காரை கண்டபடி திறந்து பார்க்க அனுமதிக்க முடியாது என்று கூறினார். சாம் முருகேஷ் என்னிடம் எங்களுக்குதெரியாத பெரியய்யா விசுவாசி என்று நக்கலாக கூறினார்.

மாறன் அங்கு வந்தார்.1982 கடைசி1983 ஆண்டுகளில் நான், கந்தசாமி, மாறன், மாதவன் அண்ணா மிக நெருங்கிய நண்பர்களாக இருந்து வேலை செய்தவர்கள். மாறன் இலங்கை இராணுவத்திடம் பிடிபட்ட பின்பு ஐந்து வருடங்கள் கழித்து அவரைப் பார்த்தது மிகவும் சந்தோசமாக இருந்தது. அவருடன் கந்தசாமியை பற்றி கேட்டேன். கந்தசாமி மலையகத்தின் வேலை செய்வதாகவும், உடனடியாக கந்தசாமிக்கு தொலைபேசி எடுத்து கொடுத்தார். கந்தசாமிக்கு என்னோடு பேசியது ஆச்சரியமாகவும் சந்தோசமாகவும் இருந்தது. தான் தான் வந்து என்னை சந்திப்பதாக கூறினார்.

ராபின்
எனக்கு பெரிய வேலைகள் இருக்கவில்லை. எமது அரசியல் கட்சி போஸ்டர்கள் அடிப்பதை, பத்திரிகைகளுக்கு செய்தி கொடுப்பதை வேடிக்கை பார்ப்பதோடு அது சம்பந்தமான கணக்கு வழக்குகளை எழுதி வைப்பதும் ஆகும். திடீரென வசந்த் இந்தியாவிலிருந்து அங்கு வந்தார். அங்கு வந்த செயலதிபர் உமா மகேஸ்வரன்  வசந்த்தை கூப்பிட்டு கடுமையாக திட்டிக் கொண்டிருந்தார். உடனடியாக என்னை கூப்பிட்டு நடந்த விஷயம் தெரியுமா என்று கேட்டார். நான் தெரியவில்லை என்றேன். வசந்த் தலைமையில் தமிழ்நாட்டில் இயங்கிய உமா மகேஸ்வரனின் ரகசிய படை, மதுரையில் என நினைக்கிறேன், ஒரு பெட்ரோல் பேங்க் ஊழியர் பணத்தை எடுத்துக்கொண்டு வங்கிக்கு கொண்டு போகும் போது அவரை சுட்டுக் கொன்று பணத்தை கொள்ளையடிக்க முயன்றபோது மக்களாலும் பொலிசாரால் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டதாகவும், வசந்த் மட்டும் தப்பி விட்டதாகவும், போலீஸார் உளவறிந்து ரகசிய படையைச் சேர்ந்தவர் எல்லோரையும் கைது செய்து விட்டதாகவும் கூறினார். எமக்கு பெரும் இழப்பு, இலங்கைக்கு கொண்டு போவதற்காக வசந்த் ஒப்படைத்த எமது கழக அவ்வளவு ஆவணங்களும் திருச்சி உறையூர் பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட கொண்டுபோக பட்டதாக அறிந்துதான்  கவலையாக இருந்தது. செயலதிபர் உமாமகேஸ்வரன் வசந்த்தை திட்டிகொண்டே இருந்தார். செய்கிற வேலையை பிடிபடாமல் செய்யத் தெரியவில்லை என்று. பின்பு தேர்தல் வேலையாக வசந்த், எமது யாழ் மாவட்ட பொறுப்பாளர் குகதாசன் என நினைக்கிறேன் இருவரும் ரகசியமாக  யாழ்போய் வந்து கொண்டிருந்தார்கள். எமது அலுவலகத்திஇல்தேர்தலில் நிற்பவர்களின் பாதுகாப்புக்காக ரிப்பீட்டர் டபுள் பேரல் துப்பாக்கிகள் வந்து இறங்கின. தேர்தல் கமிஷன் ஏற்பாடு. ஒரு வேட்பாளருக்கு 2 துப்பாக்கி பாதுகாவலர்கள்.

எனக்குரிய வேலை எமது அரசியல் கட்சி DPLF கடிதத் தலைப்பில் வேட்பாளர் பெயர், பாதுகாப்பாளர் பெயர் அடையாள அட்டை விபரங்களை டைப் செய்து, தலைவர் செயலாளரிடம் கையெழுத்து வாங்கி வேட்பாளர் இடம் ஒப்படைப்பது. கந்தசாமி இரண்டொரு நாளில் நேரில் வந்து என்னை சந்தித்தார். பல கதைகள் பேசினோம். ஆனாலும் கந்தசாமியின் முகப்பில் ஒரு சோகம் இருந்தது. கேட்டதற்கு மழுப்பலான பதிலே கூறினார். மாறன் தான் பெரியவர் உமாமகேஸ்வரன் தன்னை, கந்தசாமி, ஒதுக்கித் தள்ளுவது ஆகவும், அதேநேரம் மாலைதீவு பிரச்சனையின் பின்பு பெரியவருக்கும், மாணிக்கம் தாசன் இருவருக்கும் சில பல இடங்களில் வாய்த்தகராறு ஏற்பட்டதாகவும், எலக்ஷன் முடிஞ்ச பிறகு தான் கழகத்தின் அடுத்த நடவடிக்கை எப்படி என்று தெரியும் என்று கவலையுடன் கூறினார்.

வசந்த்
கந்தசாமியை பார்க்க ஆட்சி ராஜன் வந்தார். கந்தசாமி ஆட்சி ராஜனே எனக்கு அறிமுகப்படுத்த, நான் ஆட்சி ராஜனை பின் தளமாநாட்டில் பார்த்து இருப்பதாக கூறினேன். கந்தசாமி ஆட்சி ராஜனிடம் எனக்கு தனிப்பட்ட முறையில்மேலதிகமாக செலவுக்கு  பணம் கொடுக்கும் படி கூறி பணம் வாங்கி கொடுத்தார். அதோடு எனக்கு இரகசியமாக ஆட்சி ராஜன் ஆட்சி ராஜன் உடன் இருக்கும் தோழர்களுடன் மட்டும் கொழும்பில் கூடப் போக பயணம் செய்ய வேண்டாம் என்று கூறினார். ஏனென காரணம் கேட்டபோது அவர்கள் கொழும்பில் இருக்கும் எங்கள் இயக்க ரகசிய துப்பாக்கி , கொள்ளை படை. கொழும்பில் ஊடுருவியிருக்கும் புலிகளை எதிரி இயக்கங்களை சுட்டு போட்டு போய்விடுவார்கள். அதனால் அவர் களை  தவிர்த்துக் கொள் என்று கூறினர்.

செயலதிபர் உமா மகேஸ்வரன் கந்தசாமி யை உடனடியாக மலையகம் அனுப்பிவிட்டார். மலையகத்திலிருந்து திவாகரன் என்றசிவா சின்னப்பொடி , எமது மலையக தலைமை வேட்பாளர் சந்திரசேகரனும் வந்தார்கள். திவாகரன் என்ற சின்னப்பொடி எமது புளொட் இயக்கத்தில்  முதலில் சேர்ந்துஉள்வாங்கியது நானும், மாதவன் அண்ணாவும் இதற்காக  சந்ததியார் இடம் நன்றாக வாங்கி கட்டிக் கொண்டோம். இருவரும் நல்ல நண்பர்களாகத்தான் என்னோடு இருந்தார்.

நுவரேலியா மாவட்ட முதன்மை வேட்பாளர் சந்திரசேகர்நுக்கு எமது செயற்பாடுகள் பிடிக்கவில்லை. காரணம் எமது வேட்பாளர் பட்டியலில் பல மலையகத் தமிழருக்கு எதிரான சிங்கள இனத்தைச் சேர்ந்த ஜேவிபி ஆட்களையும் போட்டிருந்தது. அதோடு சந்திரசேகரனுக்கு திவாகரன்  தன்னை பொருள் எடுபுடிபோல் நடத்துவதாகவும் ஒரு மனக்கசப்பு. செயலதிபர் உமாமகேஸ்வரனும் சந்திரசேகரனின் மனவருத்தத்தை கண்டு கொள்ளவில்லை. கட்சியின் தலைவர் என்ற முறையில் சித்தார்த்தன் சந்திரசேகர் உடன்நன்றாகக் அழைத்துப் பேசினார். ஆனால் DPLF கட்சியின் தலைவராக சித்தார்த்தன் இருந்தாலும், மலையக தேர்தல் சம்பந்தமான எந்த முடிவையும் திவாகரன், செயலதிபர் உமா மகேஸ்வரன் மட்டுமே எடுத்தார்கள். சித்தார்த்தன் நையோ, தராக்கி சிவராமயோ முக்கியத்துவம் கொடுக்கவில்லை.

ஆட்சி ராஜன் - சுரேஷ்
எமது கட்சி அலுவலகத்திற்கு ஒரு சிறு பையன் அடிக்கடி வந்து உற்சாகமாக வேலை செய்வார். யாழ்ப்பாணத்துக்கு போகவேண்டிய நோட்டீஸ்கள் பேப்பர்கள் போன்றவற்றை அனுப்புவதற்கு எடுத்துப் போவார். நாங்கள் பக்கத்தில் இருந்த ஒரு தமிழ் கடையில் மூன்று நேரமும் சாப்பாடு வாங்கி சாப்பிடுவோம்.அந்தப் பையன் சாப்பாட்டு நேரத்தில் தான் இருந்தால், என்னிடம் காசு வாங்கிப் போய் சாப்பாடு கட்டிக் கொண்டு வருவர். அந்த பார்சலில் ரகசியமாக எக்ஸ்ட்ராவாக முட்டை மீன் பொரியல் இருக்கும். இந்த பையன் பார்சல் வாங்கும்போது அங்கு வேலை செய்பவர்கள் இவரோடு நல்ல பழக்கம் அதனால். பார்சலில் எக்ஸ்ட்ரா ஐட்டங்களை வைத்து கட்டிவிடுவார்கள். அந்தப் பையன் தான் அண்மையில் லண்டனில் மறைந்த எனது உடன்பிறவா தம்பி சுரேஷ்.

ஒருநாள் புளொட் தலைவரும் இராணுவத் தளபதியுமான மாணிக்கம் தாசன் எமது முள்ளிக்குள முகாமில் இருந்து அங்கு வந்தார்.



தொடரும்.










logoblog

Thanks for reading எனது இயக்க இந்திய அனுபவங்கள் - பகுதி 72

Previous
« Prev Post

No comments:

Post a Comment