பகுதி 46
பின் பல மாநாட்டு ஏற்பாட்டுக் குழு |
இயக்க மாநாட்டில் கலந்துகொள்ளும் தோழர்களின் பிரதிநிதிகளின் வேண்டுகோளின் அடிப்படையில் பின்தள மாநாட்டுக் குழு அடுத்தநாள் முகாமுக்கு வந்தார்கள்.முகாம் தோழர்களின் ஏகமனதான முடிவின்படி மாநாட்டு ஏற்பாட்டுக் குழுவில் இருந்து செயலதிபர் உமா மகேஸ்வரனும், அரசியல்துறை பொறுப்பாளர் வாசுதேவா இருவரும் பின்தள மாநாடு ஏற்பாட்டுக் குழுவில் இருந்து பதவி விலக வேண்டும். முகாம் தோழர்களால் புதிய ஏற்பாட்டுக் குழு உருவாக்கப்பட்டு, அதோடு பழைய பின்தள ஏற்பாட்டுக் குழுவினர் இணைந்து செயல்பட வேண்டும். புதிய ஏற்பாட்டு குழு
- தோழர் காந்தன்
- தோழர் சிவபாலன்
- தோழர் வரதன்
- தோழர் சுகுனன்
- தோழர் வெற்றிச்செல்வன்
- தோழர் நிலாந்தன்
- தோழர் ஏவி முகுந்தன்.
மாநாட்டில் தோழர்கள் |
இவர்களுடன் தோழர் மாதவன், தோழர் திவாகரன், தோழர் ஆனந்தி, தோழர் சுபாஷ் நாங்கள் பதினோரு பேரும் பின் தள மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற்கு, கழக கட்டுப்பாட்டு குழுவின் சார்பாக செயலதிபர் உமாமகேஸ்வரன் புதிய கட்டுப்பாட்டு குழுவுக்கு அனுமதி கடிதம் கொடுத்து இருந்தார். புதிய மாநாட்டு ஏற்பாட்டுக் குழு 23/07/1986 மாநாடு நடத்த முடிவு எடுத்தது.
மாநாடு நடக்கவிருந்த திருவாரூரிலிருந்து ஒரு பாடசாலைக்கு மாநாட்டில் கலந்து கொள்ளவிருக்கும் அனைத்து தோழர்களையும் அழைத்துச் சென்றார்கள். அதேநேரம் எமது மற்ற முகாம்களின்பாதுகாப்பை பலப்படுத்தி இருந்தார்கள். பின்தள மாநாடு நடக்கவிருந்த இடத்தின் பாதுகாப்பை மாநாட்டில் கலந்து கொண்ட தோழர்களே பொறுப்பெடுத்துக் கொண்டனர். மாநாடு நடக்கவிருந்த தனியார் பள்ளியின் உரிமையாளருக்கு தமிழக கியூ பிராஞ்ச் போலீசார் சில தொல்லைகள் கொடுத்து மாநாடு நடக்க இடைஞ்சலாக இருந்தார்கள். அந்தப் பள்ளியின் உரிமையாளர் திமுக.. வை . கோபாலசாமி யின் நெருங்கிய நண்பர். செயலதிபர் உமாமகேஸ்வரன் என்னை அழைத்துக்கொண்டு போய் அவரிடம் நான் வைகோவின் நெருங்கிய நண்பர் என்றும் டெல்லியில் வைகோவை அடிக்கடி சந்திப்பார் என்றும் கூற, அவர் வைகோவுக்கு தொலைபேசி மூலம் பேசி என்னிடமும் பேச கொடுத்தார். அவருக்கும் மிக சந்தோசம். மாநாடு முடிந்த பின்பு தினமும் என்னோடு வந்து பேசிக் கொண்டிருப்பார்.
பின் தள மாநாடு ஒரு நாள் தள்ளி 24/07/1986 தொடங்கியது முதல் நாளில் முதலாக சீசர் பொன்னுத்துரை செல்வராஜா சார்பாக எழுதப்பட்ட கடிதம் முதன்முறையாக மாநாட்டில் வாசித்துக் காட்டப்பட்டது.
24/07/1986 முதல் 01/08/1986 வரை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் முதல் பின்தள மாநாடு நடைபெற்றது. உண்மையில் அந்த மாநாட்டில் கலந்துகொண்ட முகாம் தோழர்கள் ஒரு கடமைக்காக வே மாநாடு வெற்றி பெற வேண்டும் என்று விரும்பினார்கள். காரணம் மாநாடு ஒழுங்காக முடிந்தால்தான் நிர்வாகம் புதிதாக செயல்பட்டு ஆயுதம் வாங்கவும் எல்லோரையும் இலங்கைக்கு தளத்துக்கு அனுப்பவும் முடியும் என்று நம்பினார்கள். மாநாட்டில் கிட்டத்தட்ட 25 பொதுக்குழு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள். அதில் நானும் ஒருவன். பின்பு மாநாடு முடிந்த பின்புபொதுக்குழு உறுப்பினர்கள் மத்திய குழுவை தெரிவு செய்வார்கள் மத்தியகுழு செயற்குழுவை தெரிவு செய்வார்கள். இதுதான் நடைமுறை.
உமாமகேஸ்வரன் வாசுதேவா |
கிசெயலதிபர் உமாமகேஸ்வரன் கண்ணன் வாசு தேவா, மாணிக்கம் தாசன் போன்ற முன்னணி தோழர்கள் தளத்தில் இருந்து வந்தவர்கள் செய்த துரோகங்கள் என்றும் பரந்தன் ராஜன் கூடa இருந்தவர்கள் செய்த துரோகங்கள் என்றும், பலவித வார்த்தை ஜாலங்களை செய்து, கழக செயலதிபர் உமா மகேஸ்வரன் மேல் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் விவாதிக்க படாமல், கழக ரகசியம் என்ற பெயரில் மழுப்பலான பதில்களையே சொல்லப்பட்டன. முகாம்களில் இருந்த தீவிரமான நல்ல தோழர்களும் செயலதிபர் மேல் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளைப் பற்றி பயத்தின் காரணமாக கதைக்கவில்லை என்பதே உண்மை.தோழர் பரந்தன் ராஜன் அவர்களும் அவர்தம் தோழர்களும் உண்மையில் சேர்ந்து மாநாட்டை நடத்தி இருந்தாள்உமா மகேஸ்வரனின் தலைமை கேள்விக்குறியாகவே இருந்திருக்கும். காரணம் செயலதிபர் மேல் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் வலிமையானவை. எல்லாவற்றுக்கும் ஆதாரம் இருந்தது. நல்ல ஒரு சந்தர்ப்பத்தை அன்று தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் தவறவிட்டது.கொலைக் குற்றஞ்சாட்டப்பட்ட கந்தசாமி மூர்த்தி மற்றும் அவர்களது தோழர்கள் சுதந்திரமாக அங்கு நடமாடினார்கள் எந்த தோழர்களும் அவர்கள் மேல் கோபப்படவில்லை. கந்தசாமியின் பதவி முன்பே பறிக்கப் பட்டாலும், மாநாடு அதை உறுதி செய்தது
மாநாடு முடிந்து தோழர்கள் எல்லாம் அவரவர் முகாம்களுக்கு போனார்கள். பொதுக்குழு உறுப்பினர்கள் மொட்டை மாடியில் கூடி செயற்குழு தெரிவு செய்தோம்.. இது மாதிரியே 1989 இல் வில்பத்து காட்டில் நடந்த இரண்டாவது தளமாநாடு பற்றியும் எழுதுகிறேன் அதில் நானும் கேஎல் ராஜனும் முக்கிய பங்கு வகித்து இருந்தோம். கீழே உள்ள குற்றச்சாட்டுகள்.
பின்தள மாநாட்டுக்கு முன்பு பெரும்பான்மையான கழகத் தோழர்களால் , மத்திய குழு உறுப்பினர்களால் தோழர் ராஜன் ஆல்முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.
1)செயல் குழுவிற்கு தெரியாமல் அச்சகம் ஒன்றுக்கு பங்கு பணம் போட்டது
2)செயல் குழுவிற்கு தெரியாமல் தமிழக அரசியல் பிரமுகர் ஒருவரை கழக பணத்தில் பிறநாட்டு அனுப்பியது
3)செயல் குழுவுக்கு தெரியாமல் தனிநபர் பெயரில் சுவிஸ் வங்கியில் பணம் போட்டது
4)செயல் குழுவுக்கு தெரியாமல் பஸ் கம்பெனி ஒன்றுக்கு முதலீடு செய்தது
5)செயல் குழுவுக்கு தெரியாமல் தனது தம்பியின் பெயரில் பிரான்ஸ் வங்கியில் கணக்கு வைத்தது
6)செயல் குழுவுக்கு தெரியாமல் ஈழத்திலிருந்து அகதிகளாக வந்த பெண்களையும் இந்தியப் பெண்களையும் போதைவஸ்து கடத்துவதற்கு பயன்படுத்தியது
7)செயல் குழுவுக்கு தெரியாமல் கழக பணத்தில் எம்எல்ஏ ஊடாக எஸ்டேட் வாங்கியது
8)LTTE பாலசிங்கத்தின் வீட்டில் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தோழர் அற்புதமும் தோழர் ஜெயபாலனும் தான் செய்தனர் என்று இந்திய போலீசாருக்கு பிழையான தகவல் கொடுத்த மையும் அவர்களை கைது செய்யும்படி போலீசாரை தூண்டியது
9)தோழர் நிரஞ்சனைவிசாரணை செய்த விசாரணை கமிஷன் அவரைநிரபராதி என1984.06. 01 அன்று விடுதலை செய்த பின்னர் சொந்த காரணங்களுக்காக அவரை கொலை செய்த மையம்
10)செயல் குழுவுக்கு தெரியாமல் நிரஞ்சன கொலை செய்துவிட்டு அவர் சிங்கப்பூரில் இருக்கிறார் என்று சொல்லி மொத்த கழகத்தையும் ஏமாற்றியது
11)செயல் குழுவுக்கு தெரியாமல் தோழர் சந்ததியாரை கொலை செய்துவிட்டு அவர் சீன சார்பு என்றும் ,JR உடன்இந்திய அரசு ஏற்படுத்திய திம்புப் பேச்சு வார்த்தையை குழப்புகிறார் என்றும் ரமேஷ் பண்டாரி க்கு தகவல் கொடுத்ததும்
12)தோழர் சந்ததியாரை கொலை செய்துவிட்டு அவர் எமது ஆயுதங்களை காட்டிக் கொடுத்தார் என்றும் பெண்களுடன் தொடர்பு இருந்தது என்றும் அதில் ஒரு பெண்ணுடன் ஓடிவிட்டார் என்று பத்திரிகைக்கு செய்தி கொடுத்ததும்
13)பின் தளத்தில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட தோழர்கள் இருக்கக் கூடியதாக கப்பலில் வந்த கருவிகள் ஏற்பாட்டுக்கு தனது மைத்துனரை நியமித்து கையாள தெரியாமல் கருவிகளை அரசிடம் பறிகொடுத்தது
14)தென்னிலங்கை இடதுசாரி தோழர்களை ஜெயவர்தனா வுக்குகாட்டிக்கொடுத்தது
15)செயல் குழுவுக்கு தெரியாமல் ஜெயவர்த்தனாவின் தூதுவர் ஜெய கொடியை தாஜ் ஓட்டலில் சந்தித்ததும
16)செயல் குழுவுக்கு தெரியாமல் இயக்கத் தோழர்களை பயன்படுத்தி நாம் அடைக்கலம் புகுந்திருக்கும் இந்த மண்ணில் கொள்ளையடிக்க உத்தரவு கொடுத்து கொள்ளை முயற்சி பிடிபட்டாலும் அவர்கள் இயக்கத்தை விட்டு ஓடியவர்கள் என்று அரசுக்கு காட்டிக்கொடுத்தது
17)கழகத்தின் பணம் இல்லை என்று கடற்கொள்ளை ஈடுபடும் படியும் கொள்ளையின் பின்பு பொருட்களின் சொந்தக்கார வை உயிருடன் விட வேண்டாம் என்று கரையில் பணிபுரிந்த தோழர்களுக்கு உத்தரவு கொடுத்ததும் இதனால் இலங்கைத் தமிழர் ,முஸ்லிம்களும் ,இந்திய மீனவர்களும் கொலைசெய்யப்பட்ட தினால் விடுதலை இயக்கங்கள் மீது இந்திய மக்கள் வெறுப்படையச் செய்தது மட்டுமல்லாமல் சர்வதேச ரீதியிலும் இயக்கங்களுக்கு களங்கம் உண்டாக்கியது
18)இலங்கை உளவாளி என இந்திய அரசினால் கைது செய்யப்பட்டு குற்றத்தை ஒப்புக்கொண்டு இருக்கும் இலங்கை ரகசிய போலீஸ் அதிகாரி கந்தசாமி என்பவரை முன்பு இயக்கப் பணத்தில் இயக்க வேலை என்று சொல்லி லண்டனுக்கு அனுப்பியது
19)அழியாத கோலத்தை காணவில்லை என்றதும் அவரை ராஜன் தான் கொலை செய்து இருக்கலாம் என்று பொய்யான தகவல்களை கழகத்துக்கு கொடுத்தது
20)தமிழீழத்தை வென்றெடுக்கும் ஆவலுடன் எமது இயக்கத் தோழர்களின் பிரச்சாரத்தை நம்பி எமது மண்ணைவிட்டு வந்த சக போராளிகளில் 60 பேர் வரை அநாகரீகசித்திரவதைகள் மூலம் கொலை செய்து எரித்த கொடூர செயலை நீண்டகாலமாக இயக்கத்துக்கு மறைத்தது இவைகள் தெரியவரும் பட்சத்தில் முப்பத்தி எட்டு பேர்களின் பெயர்களை மட்டும் வெளியிட்டது
21)தளத்தில் தாக்குதல்மேற்கொள்வதற்காக மணமேல்குடியில் நாம் அமைத்த முகாமிற்கு தோழர்களை கைது செய்து காவலில் வைக்குமாறு எமக்குத் தெரியாமல் ஆயுதங்களுடன் ஆட்களே முகாமுக்கு அனுப்பியது
22)செயல் குழு உறுப்பினர்களை வெடி வைக்கவேண்டும் என்று சொன்னதோடு அல்லாமல் கை நீட்டிஅடித்து விட்டு கந்தசாமி இடம் கைது செய்யுமாறு உத்தரவிட்டதும் தகாத வார்த்தைகளினால் ஏசியதும்.
23)செயல் குழுவுக்கு தெரியாமல் வங்கிகளில் கைப்பற்றிய பணமும் மக்களிடம் இருந்து திரட்டிய பணமும் வெளிநாட்டில் கழக கிளைகளில் இருந்து சேகரித்த பணமும் எப்படி எங்கே செலவிடப்பட்டது என்றும் தெரியாத நிலையிலும் கூட சரியான முறையில் மாநாட்டினை நடத்தி ஜனநாயக பண்புகளை பேணக்கூடிய விடுதலை இயக்கமாக கட்டி எழுப்பலாம் என நம்புகிறோம்.
செயலதிபர் மேல் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் |
தொடரும்.....
No comments:
Post a Comment