பார்வையாளர்களின் எண்ணிக்கை

Search This Blog

Powered by Blogger.

Sunday, 12 September 2021

எனது இயக்க இந்திய அனுபவங்கள் - பகுதி 56

  வெற்றிசெல்வன்       Sunday, 12 September 2021

பகுதி 56 



வெற்றிச்செல்வன்,சைக்கிளில் உலகைச் சுற்றி வந்த கிரி

டெல்லி சித்தார்த்தன் வெற்றிச்செல்வன்
நான் இந்த பதிவுகளை போடுவது, இன்றும் அநியாயம் செய்து தங்கள் பெயர் வந்துவிடுமோ என்று பயப்படும் சிலருக்கு பிடிக்கவில்லை. அதேநேரம் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் கொள்கையில் நம்பி வந்து பாதிக்கப்பட்டு, இன்றும் வறுமைக் கோலத்தில் வன்னிப் பிரதேசத்தில் எமது தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் இருந்து வேலை செய்யும் உண்மையான உறுப்பினர்களுக்கும் எனது பதிவுகள் கஷ்டமாக இருக்கிறது. என்ன காரணம் என்றால் மற்ற இயக்கத்தவர்களும் பொதுமக்களும் இவர்களைப் பார்த்து கொலைகார புளொட் காரர்கள் போகிறார்கள் என்று குற்றம் சாட்டுகிறார்கள் தான். உண்மையில் மற்றைய இயக்கங்களை பற்றி எழுதத் தொடங்கினார் எங்களை விட மோசமாக அந்தந்த இயக்கங்களின் செயல்பாடு இருந்தது என்பது உண்மை. அதில் இருந்தவர்கள் உண்மைகளை எழுதத் தயங்குகிறார்கள். தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் ஒரு தவறான இயக்கமல்ல. அதில் அன்றிலிருந்து இன்றுவரை தலைவர்கள்தான் தவறானவர்கள். அதைத்தான் நான் அம்பல படுத்துகிறேன். உண்மைகளை அம்பலப்படுத்தா விட்டால் நாளைக்கு இவர்கள் பெரிய தியாகிகளாக தெரிவார்கள். எமது இயக்கத்தின் இன்றும் அடிமட்ட தொண்டர்கள் மாற்று உடுப்பு இல்லாமல், செருப்பில்லாமல் உண்மையாகவே வேலை செய்கிறார்கள். ஆனால் தலைமைப் பதவியில் இருப்பவர்கள் எல்லாம் பதவிகளும், கோடிக்கணக்கான பணமும் கோடிகளில் பெறுமதியான கார்களிலும் வலம் வந்து, இந்த அடிமட்ட தொண்டர்களை பார்த்து கையசைத்து விட்டு போகிறார்களாம்.புளொட் இயக்கத்துக்கு அந்த காலத்தில்  தளம் பின் தளம் என்று வேலை செய்து கஷ்டப்பட்ட பலநூறு தோழர்கள் இருக்கும்போது, இயக்கத்துக்கு சம்பந்தமில்லாத தலைவர்களுக்கு தெரிந்த அல்லது உறவினர்களை பதவிகளிலும் வசதி வாய்ப்புகளையும் பெற்றுக்கொடுத்து அழகு பார்க்கிறார்களாம்.ஒரு எம்பி பதவிக்காக மக்களிடம் நல்ல பேரை வாங்க தனது பல கோடி பெறுமதியான சொத்துக்களை தாரை வார்த்து, எம்பி பதவியை பெற்றவுடன் எவ்வளவு கோடி ரூபாய் கொள்ளை அடிப்பார்கள். தங்களை ஏற்றிவிட்ட தோழர்களுக்கு தங்கள் சொத்துக்களை விற்று ஏதாவது செய்தார்களா? இன்றும் பல வழிகளில் பாதிக்கப்பட்ட எமது புளொட் இயக்கத் தோழர்கள் வறுமையில் இருப்பது அவர்களுக்கு தெரியாதா. காலம் தான் பதில் சொல்ல வேண்டும். பதிவை தொடர்கிறேன்.
ஆயுதம் ஒப்படைத்தல் சம்பந்தமான பிரபாகரன் கடிதம்

இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி எம்ஜிஆர் கடும் சுகவீனமுற்று இருந்த போதும் எம்ஜிஆரை வைத்து சென்னையில் மிக பிரம்மாண்டமான வெற்றிவிழா கூட்டத்தை நடத்தி விட்டனர். தேர்தலை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட விழா. இதே நேரம் விடுதலைப்புலிகளுக்கும் இந்திய அமைதி காக்கும் படைக்கும் சண்டை தொடங்கி விட்டது. அதேநேரம் சென்னையிலிருந்த கிட்டு எம்ஜிஆரிடம் போய் உதவி கேக்க அந்த நேரத்திலும் எம்ஜிஆர் பல கோடி ரூபாய் கொடுத்து உதவியுள்ளார். அதே ஆண்டு டிசம்பர் 24 எம்ஜிஆர் மரணம் அடைந்து விட்டார்.

டெல்லி நண்பர்களுடன் நானும் பெரிய செந்திலும்

எனக்கும் சென்னையிலிருந்து பிரச்சாரத்துக்கு உரிய செய்திகள் படங்கள் வந்தன. அதாவது இலங்கை-இந்திய ஒப்பந்தத்தை புளொட் இயக்கம் ஏற்றுக்கொள்ளவில்லை. சந்தர்ப்ப சூழ்நிலையால் இந்திய அரசு ஒப்பந்தத்தில் கலந்து கொண்ட எமது இயக்க, தலைவர்கள் சித்தார்த்தன் வாசுதேவா ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டுவிட்டார்கள். தமிழீழ விடுதலைப் புலிகள் இந்தியப் படைகளை வரவேற்று யாழ்ப்பாணத்துக்கு அழைத்துச்சென்ற பத்திரிகை செய்திகள் படங்கள்,, அமைதிப்படையின் ஆதரவுடன் தமிழில விடுதலை புலிகளின்முக்கிய தலைவர்களின் திருமணங்கள் பற்றிய விபரங்கள் படங்கள் எனக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நான் அதை பிரச்சாரத்துக்காக இவற்றை பயன்படுத்திக் கொண்டேன். அதோடு இலங்கையில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு ஏற்ப எனது பிரச்சாரத்துக்கு ஏற்ப லண்டன் கிளையிலிருந்து அல்லதுசென்னையிலிருந்து செய்திகள்.  வரும் . குமரப்பா புலேந்திரன் தற்கொலை பற்றி பிரச்சாரம் செய்யும்போது, இந்தியப் படைகளுடன் இவர்கள் இருவரும் மிகவும் நெருங்கிப் பழகியதால், அதோடு குமரப்பாவின் திருமணம் இந்திய படைகளின் உதவியுடன் நடந்ததால், பிரபாகரன் இவர்கள் மேல் கடுங்கோபத்தில் இருந்ததாகவும், அந்தக் கோபத்தை மாத்தையா மூலம் சயனைட் கொடுத்தனுப்பி தீர்த்துக் கொண்டதோடு, இந்திய அமைதிப் படையும் இதில் சிக்கவைத்து இரண்டு வெற்றிகளை பெற்றார் என எனது பிரச்சாரங்கள் இருக்கவேண்டும் சொல்லப்பட்டது.
ஞானசேகரன் IAS
டெல்லி வாழ் தமிழர்களும் அங்கு வேலை செய்த பல இளைஞர்களும் எங்களுக்கு பலவித உதவிகள் செய்தார்கள்.குறிப்பாக எல் கணேசனின் எம்பியின்உறவினர் சித்தார்த்தன் தஞ்சாவூர், வெங்கா எம் பி மகன் சம்பத், இப்போது, மதுராந்தகத்தில் அட்வகேட் ஆக இருக்கிறார். சைக்கிளில் உலகின் பல பகுதிகளை சுற்றிய கிரி என்ற சென்னை வாலிபர், வெளிநாட்டுக்குப் போகும் முன்பு ஆலடி அருணா எம்பியின் வீட்டில் எமது ரூமில் இரண்டு மாதம் தங்கியிருந்தார். அடுத்தவர் தஞ்சாவூரை சேர்ந்த எல் கணேசன் எம்பி யின் உறவினர் ஞானசேகரன் டெல்லியில் MSc பிசிக்ஸ் படித்துக்கொண்டிருந்த எனது நண்பரான அவர் L. கணேசன் எம்பியின் பதவிக்காலம் முடிந்து விட்டபிறகு என்னோடு மூன்று நான்கு மாதங்கள் தங்கியிருந்து படித்தார். இவர் இப்போது தமிழ்நாட்டில் IAS அதிகாரி. மாவட்ட கலெக்டராக இருக்கிறார். இந்த நண்பர் ஞானசேகரன் கூடப்பிறந்த அண்ணன் ராமலிங்கம் ஜெயலலிதா முதலமைச்சராக வந்த நாள் தொடக்கம் இறக்கும்வரை அவரின் தனிப்பட்ட முதன்மைச் செயலாளர். IAS அதிகாரி. இப்போதும் தமிழ்நாட்டின் உயர் பொறுப்பில் இருக்கிறார். இவர்களின் உறவினர்கள் தஞ்சாவூர் மாவட்டத்தில் எமது தமிழீழ மக்கள் விடுதலைக் கழக இயக்கத்திற்கு ஆரம்ப காலத்திலிருந்து பெரும் உதவிகள் செய்தவர்கள்.
காலை உணவை எனக்கும் எனது வந்துபோகும் இயக்க தோழர்களுக்கும் கடனாக காலை உணவை தந்துதவிய நோர்த் அவெனு சின்ன பெட்டி கடை வைத்திருந்த கேரளாவைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவருக்கும் நன்றி கடன் பட்டுள்ளேன். அதோடு பகலுணவு இரவு உணவு மாதக் கணக்கில் கடனுக்கு தந்துதவிய சின்னையா மெஸ் நடத்திவந்த தமிழ்நாட்டை சேர்ந்த சின்னையா வுக்கும் கடமைப்பட்டுள்ளேன். அதோடு இந்த சின்னையா நாங்கள் சைவச் சாப்பாடு வாங்கினாலும் அதில் காசு வாங்காமல் மீன், கோழி என அசைவ உணவுகளை மறைத்து வைத்து அனுப்புவார். எங்கள் மேல் மிக பற்று கொண்டவர். அடுத்தவர் கேரளாவைச் சேர்ந்த கே பி ராஜன் இவர் டீ கடை வைத்திருந்தவர் இவரும் ஆலடி அருணா எம்பி வீட்டில் பணியாளர் விடுதியில் தங்கியிருந்தார். இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பின்பு கையில் காசில்லாமல் உணர்ந்தபோது, இவர்தான் காலை உணவு தேநீர் சிலவேளைகளில் இரவு உணவு தேநீர் எல்லாம் ஃப்ரீயாக கொடுப்பார். சிலவேளைகளில் செலவுக்கு பணத்தை எனது சேர்ட் பையில் வைத்து திணிப்பார். சித்தார்த்தன் வந்திருக்கும் போதும் இவர் இலவசமாக உபசரித்துள்ளார். இவர் எனக்கு கொடுத்த பணத்தை திருப்பிக் கொடுக்கும்போது வாங்காமல், நீ நாடு கிடைச்சு அங்கு போய் நல்லா வந்து எனக்கு திருப்பி தா என்று  கூறினார். இப்பொழுது கேரளாவில் இருக்கிறார். இப்போது கனடாவில் இருக்கும் பரதன் டெல்லியில் இருக்கும் போது இவர்களின் சிலரின்உபசரிப்பை பெற்றுள்ளார்.

நினைவுகள் தொடரும்.......
logoblog

Thanks for reading எனது இயக்க இந்திய அனுபவங்கள் - பகுதி 56

Previous
« Prev Post

No comments:

Post a Comment