பகுதி 80
வெற்றிச்செல்வன் , உமா மகேஸ்வரன் |
மாநாடு பற்றி வசந்தனிடம் செயலதிபர் கொடுத்த கடிதம் |
தோழர் வசந்த்
மாநாடு தொடர்பான ஒழுங்குகள்
1. மாநாட்டு மேடை ஒழுங்கு செய்தல். மேடை பெயர்கள் ( 1) சிவக்குமார் அரங்கு (2) கிருஷ்ணகுமார் அரங்கு (3) பார்த்தன் அரங்கு. 3 நாள் வைத்தால் போதுமானது
2) படம் முடிந்தால் வீடியோ எடுக்க ஒழுங்கு செய்யவும் மாணிக்கம் மூலம்
3) பெயர் இரண்டாம் மாநில மாநாடு
Estd.. தொடக்கம் 18oct 1980
4)PLOT இன் விமர்சனம் இம் மாநாடு முடிந்ததும்
PLOT கான மாநாடு வைத்து commmite தெரிவில் வைக்கலாம்
5) இதில் அரசியல் PLOT,DPLF விமர்சனங்கள் வைத்தல் மட்டும்
6) போகும்போது வங்கம் தந்த பாடம் 10, புதியபாதை 10 அனுப்பவும்
7) அடுத்த கட்ட வேலைத்திட்டம் நடைமுறை ஆய்வு ஆகியன வைத்தல் இதனடிப்படையில் அறிக்கைகளை எழுதும்படி கூறவும்
8) 15ஆம் திகதி வரையில் மாநாடு வைக்கலாம் சரியான திகதி அறிவிக்கிறேன்
க. முகுந்தன் 9/2/89
உண்மையில் முள்ளி குளத்தில் இருக்கும் ஒரு பாடசாலையில் மாநாட்டை நடத்த செயலதிபர் உமாமகேஸ்வரன் விரும்பினார். செயலதிபர் உமாமகேஸ்வரணுக்கும், மாணிக்கம்தாசனுக்கும் இடையில் இருந்த மறைமுக எதிர்ப்பின் காரணமாக, செயலதிபர் உமாமகேஸ்வரன் எதிர்பார்ப்பின் படி மாநாடு நடக்க விடாமல் பாதுகாப்பு காரணங்களை காட்டி இழுத்தடித்து கடைசியில் முள்ளி குளத்துக்கு அருகாமையில் இருந்த வில்பத்து காட்டில் கழுவில் என்ற இடத்தில் மாநாடு நடந்தது.
வசந்த் |
திடீரென்று ஒருநாள் இரவில் 18/03/1989 அன்று என நினைக்கிறேன். மாணிக்கம் தாசன் வந்து இரண்டு நாளில் மாநாடு நடக்கப் போகிறது, மாநாடு நடக்கும் இடத்துக்கு போக எல்லோரும் ரெடியாக இருங்கள் என்று கூறினார். இரவு பத்து மணிக்கு மேல் இருக்கும் சேவல் கொடி ஒரு டிராக்டரை ஒட்டிக் கொண்டு வந்தார்.கடகடவென பத்து பதினைந்து பேரை ஏற்றினார்கள். அதில் நானும் எனக்கு நெருக்கமாக தெரிந்தவர் என்றால் திவாகரன் இருந்தார். கடுமையான இருட்டு சிறு டிராக்டர் வெளிச்சத்தில் ஒற்றையடி காட்டுப்பாதையில் டிராக்டர் போய்க்கொண்டிருந்தது. அமைதியான ஒரு பிரதேசத்தில் டிராக்டர் சத்தமே பயமாக இருந்தது. எனக்கு இப்படி ஒரு அனுபவம் வாழ்க்கையில் ஏற்பட்டதில்லை. ஒரு சந்தோசம் திவாகரநுக்கும் இந்த அனுபவம் இல்லை.
திடீரென டிராக்டரை நிப்பாட்டி நிப்பாட்டி ராணுவ விமானம் சத்தம்வருகிறதா என்று பார்த்து பார்த்து போக எனக்கும் திவாகரணுக்கும் பயம் கூடிக்கொண்டே போகிறது. ஒரு மணி நேர ஒன்றரை மணி நேர பயணத்தின் பின்பு ஒரு பெரியவெளியும், ஒரு கட்டிடமும் இருப்பது இருட்டில் தூரத்தில் தெரிந்தது. சேவல் கொடி வண்டிய நிப்பாட்டி விட்டு, ஆயுதத்துடன் இருந்த ரெண்டு தோழர்களை அழைத்து சத்தம் போடாமல் ரகசியமாய் போய் அந்த கட்டிடத்தில் மனித நடமாட்டம் இருக்கிறதா என பார்த்து வரச் சொன்னார். அந்தக் தோழர்களும் போய் நீண்ட நேரத்தின் பின்பு அங்கிருந்து லைட் சிக்னல் காட்ட, சேவல் கொடி எங்களைஅழைத்து போய் அந்த மண்டபத்தில் விட்டுட்டு ஆயுதத்துடன் இருந்த இரண்டு தோழர்களே எங்களுக்கு காவலுக்கு விட்டுவிட்டு அவரும் மற்ற தோழர்களை அழைத்து வர முள்ளிக்குளம் போய்விட்ட்டார். அந்த கட்டிடம் மரத்தால் கட்டப்பட்ட ஒரு மாடி வீடு போலிருந்தது.
அந்தக் கட்டிடத்திற்கு முன்பு 50 மீட்டர் தூரத்தில் பெரியகுளம் தெரிந்தது. அதைச்சுற்றி பெரிய வெளி. பாதுகாப்புக்கு நின்ற தோழர்கள் எங்களுக்கு சில எச்சரிக்கைகளை விடுத்தார்கள். ஆள்காட்டி குருவி தொடர்ந்து கத்தினாள் எச்சரிக்கையாக இருக்கவும். விமான சத்தம் கேட்டால் நகர வேண்டாம். திடீரென யாராவது தாக்கினால் கட்டத்துக்குப் பின் பக்கம் உள்ள காட்டுக்குள் ஓடி விட வேண்டும். இவைகளைக் கேட்ட பிறகு தூக்கமா வரும். வந்த தோழர்கள் எல்லோரும் சத்தம் போடாமல் அந்த வீட்டை சுற்றி பார்க்க ஒரு சிறு டார்ச்லைட் வெளிச்சத்தை அடிக்க அந்த மர சுவர்கள் முழுக்க ரத்தம் மேலும் கீழும் உறைந்து நாற்றத்தை கொடுத்தது. மாடிக்குப் போக அங்கும் எல்லா இடங்களிலும் ரத்தம்தான். எல்லோரும் ஒருவித திகிலோட ரகசியமாகப் பேசிக் கொண்டோம். அன்பு ஒரு சிறு இலங்கை ராணுவ குழு இருந்ததாகவும் அதை இரண்டு மாதத்துக்கு முன்பு மாணிக்கம் தாசன் தலைமையிலான எங்கள் ராணுவக் குழு ராணுவத்தினரை தாக்கி கொலை செய்து ஆயுதங்கள் கைப்பற்றியதாக கூறிக்கொண்டார்கள்.
வில்பத்து காடு என்பது புத்தளம் முதல் மன்னார் வரை மற்றும் அனுராதபுரம் வரை ஒரு காடு. அதில் பல பல இடங்களில் சிறிய பெரிய குளங்கள் இயற்கையாகவே தோன்றி இருந்தன. சுற்றி காடு அங்கு தண்ணீர் குடிக்க வரும் மிருகங்களை பார்க்க ஒவ்வொரு குளத்தை சுற்றியும் சுற்றுலா வரும் டூரிஸ்ட் கள் தங்கி பார்க்க மரத்தாலான வீடுகள் இருந்தனவாம். சண்டைகள் தொடங்க விடுதலை புலிகள் அனுராதபுரம் புத்தளம் போக இந்த காட்டை பாவித்து உள்ளார்கள்.இதனால் இப்படியான டூரிஸ்ட் வீடுகளில் இலங்கை ராணுவம் தங்கள் சிறுசிறு முகாமாக பாவித்து உள்ளார்கள்.
விடியும் நேரத்தில் தொடர்ந்து தோழர்கள் வரத் தொடங்கினார்கள் எங்களுக்கும் பயம் விட்டது.வெளிச்சம் பெரிய அளவு வெளிச்சம் வர முன்பு எல்லோரும் அந்தக் குளத்தில் கை கால் முகம் கழுவி குளித்து வந்தோம். எல்லா தோழர்களும் மாநாட்டுக்கு வந்து விட்டார்கள். செயலதிபர் உமா மகேஸ்வரனும் காலை எட்டு மணி போல் வந்துவிட்விட்டார். கடைசியாக சமையல் சாமான்களும் சமையல்காரர் வந்தார்கள். அவர்களைப் பார்த்தவுடன் தான் பசி வந்தது. செயலதிபர் எல்லா தோழர்களிடம்கலகலப்பாகப் பேசி, முகம் கழுவி குளிக்க குளத்துக்கு போனார். நாங்கள் சிலரும் அவருடன் பேசிக் கொண்டு போனோம். அதிலேயே குளித்துவிட்டு தான் அந்த குளத்தில் ஒரு நீச்சல் போடப் போவதாக கூறினார். பாதுகாப்புக்காக வந்தவர்கள் அவரை விடவில்லை நன்றாக வெளிச்சம் வந்துவிட்டது ஆள் நடமாட்டம் தெரிந்தால் பிரச்சனை என்று கூட்டிக் கொண்டு வந்து விட்டார்கள்.
ஒருபக்கம் சமையல் நடக்க, எல்லோரும் சுற்றியிருந்து மாநாடு சம்பந்தமாக பேச்சுவார்த்தை போய்க்கொண்டிருந்தது. அடுத்த நாள் மாநாடு ஆரம்பிக்கலாம் என்று. வெயில் கூடக் கூட நாங்கள் அந்த குளத்தை பார்த்தாள் அதிர்ச்சியாக இருந்தது. குளத்தைச் சுற்றி பெரிய பெரிய முதலைகள் வெயில் காய வெளியில் வந்து இருந்தன.வசந்த் ஆட்சி ராஜன் எங்களிடம் நல்ல ஒரு சந்தர்ப்பத்தை தவற விட்டு விட்டோம். பெரியவர் நீச்சலடிக்க ஆசைப்பட்டதை உற்சாகப்படுத்தி இருக்க வேண்டும். தமிழ் மக்களுக்கு ஒரு விடிவு கிடைத்திருக்கும் என்று கூற, நாங்கள் குசு குசு என்று பேசுவதை பார்த்த செயலதிபர் என்ன விஷயம் என்றார். வசந்த்உடனடியாக நல்ல காலம் பெரிய ஐயா நீங்கள் நீந்தி இருந்தாள் பெரிய கஷ்டமாக போயிருந்திருக்கும். செயல் அதிபரும் முதலைகளை பார்த்து ஓம் என்று தலையாட்டினார். அங்கு இருந்த இரண்டு மூன்று நாட்களும் எல்லோரும் எச்சரிக்கையாக குளக்கரையில் குளியல் எல்லாம் முடித்துக்கொண்டோம்.சோறும், பருப்பும் கிழங்கும் இருக்கும் வரை சாப்பாடு. மாலையில் இரண்டு மூன்று பிரிவாக வேட்டைக்கு கிளம்புவார்கள்.மாணிக்கம் தாசன் தடுத்தாலும் செயலதிபர் உமாமகேஸ்வரன் ராபின் ஐயம் அழைத்துக்கொண்டு வேட்டைக்கு கிளம்புவார். கூட என்னையும் திவாகரன் வசந்த் ஆட்சி ராஜன் அழைத்துப் போவார். மாணிக்கம் தாசன் பெரிய ஐயா வெற்றி, திவாகரன் போன்ற சூப்பரா ன தோழர்களே அழைத்துப் போகிறீர்கள் வெற்றிதான் என்றார். எங்களுடன் முருகனும், காண்டீபன் ஆயுதத்துடன் வந்து சேர்ந்து கொள்ளுவார்கள். வேட்டையில் ஒன்றும் கிடைக்கவில்லை. ஆனால் வேறு ஒரு குழு ஒரு நாள் உடும்பு வேட்டையாடிக் கொண்டு வந்து இரவே உரித்து சமைத்து சாப்பிட்டு விட்டோம். கடைசி நாள் மான் வேட்டையாடினார்கள். அதை முள்ளிக்குளம் கொண்டுவந்து இரவு சமைத்து சாப்பிட்டோம்.
அடுத்த நாள் 21/02/1989 தள இரண்டாவது மாநாடு நடக்க இருந்தது. இங்கு ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன். இயக்க தலைவர் என்று இல்லாமல் ஒரு சாதாரண மனிதராக உமாமகேஸ்வரன் பழகும்போது கிடைத்த அன்பும் சந்தோசமும் மிகவும் அதிகம்.1982 கடைசியிலிருந்து இந்த மாநாடு வரை அவருடன் தனியாக பழக கிடைத்த நாட்கள் அதிகம். எனக்கும் அவருக்கும் தனிப்பட்ட எந்த கோபமும் இருக்கவில்லை. அவருக்கும் என்மேல் மிகவும் நம்பிக்கை இருந்தது.ஆனால் விடுதலை இயக்கத் தலைவர் என்ற முறையில் அவரின் மறுபக்கம் மிகவும் மோசமானது. தனிப்பட்ட உமா மகேஸ்வரன் ஏதாவது உமா அண்ணா மேலிருந்த பாசத்தை, இயக்கத் தலைவர் உமா மகேஸ்வரன் மேலிருந்த கோபம் வென்றுவிட்டது. பலருக்கு இந்த நிலை ஏற்பட்டது உண்மை. இந்தப் பதிவை எழுதும் போது செயலதிபர் இந்தக் காட்டில் அன்போடு பேசி பழகியது நினைவில் வந்து கண் கலங்குகிறது.
நான் இந்த பதிவுகளை போடும்போது சிலர் வந்து உமாமகேஸ்வரன் மட்டும்தான் துரோகி அயோக்கியன் கொலைகாரன் என்று எழுதுகிறார்கள். எல்லா ஆயுத இயக்கத் தலைவர்களும் ஒவ்வொரு வழியில் துரோகிகள் அயோக்கியர்கள் கொலைகாரர்கள் தான். யாரும் யோக்கியன் இல்லை. ஒருயோக்கியமான தலைவர் இருந்திருந்தால் தமிழருக்கு இந்த அளவு அழிவு ஏற்பட்டிருக்காது.. தயவுசெய்து கருத்துகள் எழுதும்போது உமாமகேஸ்வரன் மட்டும்தான் அப்படி என்று எழுதாதீர்கள். நான் உண்மைகள் எழுப்புவது தமிழ் இளைஞர்கள் தங்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டிய இயக்கங்கள் எப்படிப்பட்டவை என்று அறிந்து தமிழருக்கு புதிய பாதுகாப்பான நல்ல தலைவர்களாக வருங்காலத்தில் இருக்க வேண்டும் என்பதே எனது ஆசை. உமா மகேஸ்வரனை விட அதற்குப்பின் வந்த எமது தலைவர்கள் எவ்வளவு கொடுங்கோலர்கள் என்று எல்லோருக்கும் தெரியும். அதனால் உமாமகேஸ்வரணை மட்டும் தயவுசெய்துகுற்றம்சாட்ட வேண்டாம்.
தொடரும்.
No comments:
Post a Comment