பகுதி 83
வெற்றிச்செல்வன் |
முதல்முறையாக ஒருவித மன பயத்தோடு விமானம் ஏறி சென்னை வந்தேன். எங்கு போவது எங்கு தங்குவது என்று மனக் குழப்பத்தோடு சென்னை விமான நிலையம் வந்து இறங்கும்போது. விமான நிலையத்தில் உளவு பார்க்கும் தமிழ்நாடு கியூ பிரான்ச் அதிகாரிகளும், மத்திய உளவுத்துறை (IB) அதிகாரிகளும் என்னை பார்த்து விட்டார்கள். எனது சுக செய்திகளையும், மேலோட்டமாக இலங்கையில் நிலைமைகளையும் விசாரித்துவிட்டு, எங்க வடபழனி வீட்டுக்கு தானே என்றார்கள் . நானும் ஆமாம் என்று சொல்லிவிட்டு, சரி என்ன நடந்தாலும் பரவாயில்லை என்று வடபழனி வீட்டுக்குப்போய், பழைய வாடகை பாக்கி கொஞ்சமும் கொடுத்துவிட்டு, சாவியை வாங்கினேன். அந்த வீட்டுக்காரர்களும் எங்கள் செயலதிபர் இருந்து எல்லோரையும் தனிப்பட்ட முறையில் சுகம் விசாரித்தார்கள். இந்த வீடு 1983இல் முதன்முறையாக சந்ததியார் வாடகைக்கு அடுத்து மிக நீண்டகாலமாக எங்கள் பாவனையில் இருந்தது.1990 கடைசிவரை இருந்தது என நினைக்கிறேன்.
நான் என்ன செய்வதென்று தெரியாமல் இருந்தேன். இயக்கத்தை விட்டு போவதா, கொஞ்ச காலம் காத்திருந்து செயலதிபர் முடிவைப் பொறுத்து அடுத்த நடவடிக்கை எடுக்கலாம் என நினைத்தேன். அங்கு இருக்கும் சூழலில் அப்போது ஆட்களை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கக் கூடிய நிலை அங்கு இல்லை என்பது எனக்கு மன நிம்மதியை கொடுத்தது. இங்கும் அவரது ரகசிய ஆட்கள் ஜெயிலில் இருந்தார் கள். நானும் என்னோடு படித்த நண்பர்களுக்கு வெளிநாடு வர பண உதவி செய்யும்படி கேட்டேன். அவர்களும் கிட்டத்தட்ட 50,000 ரூபா கிட்ட அனுப்பினார்கள். என்னோடு இருந்து இயக்கம் சரியில்லை உமா மகேஸ்வரன்சரியில்லை என்று கூறி எனது உதவியோடு வெளிநாட்டுக்கு போன இயக்க தோழர்கள் யாரும் பணம் அனுப்பவில்லை என்னோடு பேசுவதையே தவிர்த்தார்கள்.
சில நாளில் எப்படியோ நான் வந்திருப்பதை மோப்பம் பிடித்து விட்ட சபாநாதன் குமார் சந்தோஷத்தோடு வந்து இணைந்து கொண்டார்.
சபா நாதன் இலங்கையில் நடந்த விடயங்கள் குறிப்பாக கந்தசாமியை செயலதிபர் நடத்திய விதம் குறித்து கேட்டு, மிகக்கடுமையான துசன வார்த்தைகளால் செயலதிபர் ஐ ஏசினார்.
சபா திருச்சி ஜெயிலில் இருக்கும் தோழர்கள் தான் பாவம்., அவர்களை எடுக்கஏன் இயக்கம் முயற்சி செய்யவில்லை. வசந்த் கூட முயற்சி செய்யவில்லை என கவலைப்பட்டார்.
நான் இந்தியா வந்து ஐந்து அல்லது ஆறு நாட்களின் பின் நான் இருந்த வீட்டுக்கு செயலதிபர் உமாமகேஸ்வரன் தொலைபேசி எடுத்தார்.ஒருவித பயத்துடன் என்ன பேசுவது எப்படிப் பேசுவது என்ற தயக்கத்துடன் தொலைபேசியை எடுத்தபோது, செயலதிபர் சர்வ சாதாரணமாக சுகத்தை விசாரித்துவிட்டு, இந்திய அதிகாரிகளை சந்தித்துப் கதைத் தீரா
என்று கேட்டார். அவர்களை சந்திக்கும் படியும் என்ன சொல்கிறார்கள் என்று கேட்கும் படியும் கூறினார். பின்பு என்னை கொழும்பு அலுவலக நிர்வாகப் பொறுப்பாளராக போட்டு இருப்பதாகவும், சென்னை அலுவலகத்தை மூடும் படியும் கூறி எல்லாவற்றையும் முடித்துவிட்டு என்னை கொழும்பு வர சொன்னார். திருச்சி ஜெயிலில் இருக்கும் தோழர்களைப் பற்றியும் , வேலூர் ஆஸ்பத்திரியில் இருக்கும் பத்தன் பற்றியம்இங்கு சில தோழர்கள் இருக்கிறார்கள் அவர்களை என்ன செய்வது என்று கேட்டேன். திருச்சி ஜெயிலில் இருக்கும் தோழர்களே பிறகு பார்த்துக் கொள்ளலாம். சென்னையில் இருக்கும் தோழர்களே இலங்கைக்கு அனுப்பும் படியும் கூறினார். பத்தன் தொடர்ந்து சிகிச்சை எடுக்க வேண்டுமாயின் வேறு ஏற்பாடு செய்யலாம் என்று கூறினார்.
செயலதிபர் என்னிடம் அமைதியாக பேசியதற்கு என்ன காரணம் என்று தலையை குழம்பி கொண்டேன். ஆனால் அடுத்த மாதம் ஆச்சி ராஜன் சென்னை வந்தபோது முழு காரணத்தையும் அறிந்துகொண்டேன். நான் வந்த பின்பு அங்கு செயலதிபர் உமா மகேஸ்வரனுக்கு பல பிரச்சினைகள் ஏற்பட்டதாகவும், அதனால் எனது மத்தியக் குழு விஷயம் பின்னுக்குத் தள்ளப்பட்டு விட்டது என்று அறிந்தேன்.
நான் சித்தார்த்தர் இடம் தொலைபேசி மூலம் போன் பண்ணி கேட்டேன் அவர் என்னை இயக்கத்தை விட்டு போக வேண்டாம் என்றும், திருச்சி சிறை தோழர்களை வெளியில் எடுக்க ஆனந்தி மூலம் பணம் ஏற்பாடு செய்வதாகவும், முதலில் அட்வகேட் நடராஜன் அவர்களை போய்ப் பார்க்கும் படியும் கூறினார். அத்தோடு இலங்கை அவசரப்பட வேண்டாம். அங்கும் நிலமகள் குழப்பமாக இருப்பதாக கூறினர்.
நான் அட்வகேட் நடராஜனை சந்தித்தபோது, வழக்கு விபரங்கள் பற்றி கேட்க, எனக்கு ஒரு விபரங்களும் தெரியாதபடியால், தனது ஜூனியர் வழக்கறிஞர்களை அனுப்பி விபரங்கள் எடுத்து அதன்பின்பு வழக்கை நடத்துவதாகவும் திருச்சிக்கு அடிக்கடி வழக்கறிஞர்கள் போய் வர வேண்டியது இருக்குமாதலால் கிட்டத்தட்ட 40 ஆயிரம் ரூபாய் முடியுமென்றும், பணத்தை கட்டியவுடன் தாங்கள் வழக்கு நடத்துவதாகவும் கூறினார்கள் நானும் ஒரு வாரம் தவணை கேட்டு வந்தேன்.
சென்னையில் இருந்த தோழர்கள் யாரும் இலங்கை போக விரும்பவில்லை. குறிப்பாக மார்க்கோ அவரின் தம்பி போன்றவர்கள். சித்தார்த்தன் எப்படியும் பணம் ஏற்பாடு செய்து தருவார் என்ற நம்பிக்கையில், எனக்கு என்னோடு படித்த நண்பர்கள் அனுப்பிய பணத்தில் 30 ஆயிரம் ரூபாவை அட்வகேட் நடராஜனிடம் கட்டிவிட்டு மீதி 10 ஆயிரத்தை பின்பு தருவதாக கூறினேன். .
பத்தன் |
வேலூரில் சிகிச்சை பெறும் மட்டக்களப்பைச் சேர்ந்த பத்தன் தோழர் மட்டக்களப்பில் வைத்து முக்கிய தோழர்கள் வாசு கண்ணன் சுபாஷ் போன்றவர்கள் நயவஞ்சகமாக விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்ட போது, நடந்த சம்பவத்தை வயிற்றில், கால்களில் பலத்த காயங்களுடன் மருத்துவ சிகிச்சைக்காக 88 ஆம் ஆண்டு கடைசியில் சென்னை அழைத்து வரப்பட்டு, ஒரு கிறிஸ்தவNGO அமைப்பாளர்கள் உதவி மூலம் வேலூர் கிறிஸ்தவ மிஷினரி ஆஸ்பத்திரியில் வைத்து இலவசமாக மருத்துவ சிகிச்சை பெற்றார்.அவரை பார்த்துக்கொள்ள பியந்தன் என்ற மட்டக்களப்பு தோழரும் உடன் இருந்தார். இவர்களோடு வேலூரில் ஒரு வீடு எடுத்து பத்தனை பார்த்துக்கொள்ளும் சாட்டில், மார்க் கோவும் அவரின் தம்பியும் , சபாநாதன் குமாரரும் இருந்து தியேட்டரில் படம் பார்ப்பதையே வேலையாக செய்து கொண்டிருந்தார் கள். நானும் வேலூர் ஆஸ்பத்திரியில் பக்தனுக்காக இரண்டு தரம் ரத்தம் கொடுத்துள்ளேன். ஆஸ்பத்திரி டாக்டர்கள் அடிக்கடி என்னை அங்கு வரச் சொல்லி பக்தன் மேல் புகார் கொடுப்பார்கள். வயிற்றில் பெரிய ஆபரேஷன் செய்து இருந்தும் இரண்டு மூன்று நாட்களில் இரவில் ரகசியமாக தோழர்களுடன் போய் படம் பார்ப்பாராம். பெரிய அதிசயம். என்னை வைத்துக்கொண்டு டாக்டர்கள் அவரை கண்டிக்கும் போது அவர் சிரித்துக் கொண்டு சும்மா காத்து வாங்க போனதாக கூறுவார். தற்சமயம் பத்தன் உடல் நிலை பாதிக்கப்பட்டு பேசமுடியாமல் மட்டக்களப்பில் இருக்கிறார். அண்மையில் அவரின் தொலைபேசி இலக்கம் கிடைத்து நான் தொலைபேசி எடுக்க அவரின் மகன்தான் பேசினார். மகன் அப்பாவின் உடல்நிலை பற்றி கூறி, கவலைப்பட்டார். யார் பேசுவது என்று எனது பெயரைக் கேட்டு மிகவும் சந்தோஷத்தில் அழுதார் என்று மகன் கூறினார். கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு பின்பு தொடர்பு கிடைத்தது.
பக்தனுக்கு ரத்தம் கொடுத்த அட்டை |
என்னிடமிருந்த நண்பர்கள் அனுப்பிய பணத்தை எப்படியும் சித்தார்த்தர் மூலம் இயக்கத்திடம் இருந்து பெறலாம் என்ற நம்பிக்கையில் வேலூர் ஆஸ்பத்திரி, வேலூர் வீட்டு வாடகை செலவுகளுக்கும் சென்னையில் எனது செலவுகள் வீட்டு வாடகைக்கும் செலவழித்துவிட்டு திரும்பவும் வெறும் கையுடன் என்றேன்.
பிற்காலத்தில் உண்மையிலேயே வெளிநாடு போகலாம் என்று முயற்சி செய்தபோது என்னை நம்பி நண்பர்கள் யாரும் பண உதவி செய்யவில்லை. திரும்பவும் செயலதிபர் உமாமகேஸ்வரன் தொலைபேசி எடுத்து, ஆட்சி ராஜன் சென்னை வருவதாகவும் அவர் சம்பந்தப்பட்ட வேலைகளை செய்து கொடுக்கும்படியும், அதன்பின் இலங்கை வரவும் கூறினார்.
தொடரும்.
I
No comments:
Post a Comment