பகுதி 85
மாணிக்கம் தாசன் |
கடைசியாக நான் போட்ட பதிவுக்கு வந்த முதல் கருத்து ஆட்சி ராஜன் கழக பின் தளத்தின் ஆரம்பகால சித்திரவதைகள் செய்தவர், ஆரம்பகால உளவு அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று இருக்கலாம்.1983 ஆண்டு ஆட்சி ராஜனுக்கு 17 வயது இருக்கும் என்று நினைக்கிறேன். ஒரு சிறுவனை இந்த அளவுக்கு ஒரு கொடூரமான செயல்களை செய்ய ஒரு விடுதலை இயக்கத் தலைவன் அல்லது அவருக்குக் கீழ் இருந்த இரண்டாம் மட்ட தலைவன் எவ்வளவு மோசமானவர்கள் என்று அறியப்பட வேண்டும்.
பின்தள மாநாட்டின்போது ஆட்சி ராஜன் மேல் எந்தவித குற்றச்சாட்டுகளும் கூறப்படவில்லை. அது போல் இந்தியாவில் இருக்கும் போது வரை தோழர்களுடன் முகாம்களில் தான் இருந்திருக்கிறார் 1986 ஆண்டு இயக்கம் உடைந்தபோது, சொந்த நலனை கருத்தில் கொள்ளாது இயக்கத்தை விட்டு போகாமல் தொடர்ந்து முகாம்களில் இருந்து, முகாம் தோழர்களுக்கு சாப்பிட பணம் இல்லாமல் கஷ்டப்பட்ட நேரத்தில், சில தோழர்களுடன் வாகனங்களில் போய் வேறுவேறு புறத்தில் இருக்கும் ஊர்களில் ஆடு மாடுகளை களவு எடுத்துக்கொண்டு வந்து தோழர்களின் பசியைத் தீர்த்த கதைகளும் நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் சில தோழர்களே ஆட்சி ராஜனை திருடன் என குற்றம்சாட்டி இருக்கிறார்கள். ஆட்சி ராஜன் திருடிக் கொண்டு வந்த ஆட்டையும் மாட்டையும் சாப்பிட்டுவிட்டு தான் ஆட்சி ராஜனை திருடன் என்று சொன்னார்கள்.
வெற்றிச்செல்வன் |
இந்த நிலைக்கு இயக்கத்தை கொண்டுவந்த செயலதிபர் உமா மகேஸ்வரனை யாரும் திட்ட வில்லை.ஆட்சி ராஜன் கடைசியில் கந்தசாமிக்கு ஏற்பட்ட நிலையை பார்த்து கவலைப்பட்ட நேரம் வசந்த் எல்லா உண்மைகளையும் ஆட்சி ராஜனுக்கு மட்டுமல்ல பல தோழர்களுக்கு நாங்கள் வந்த நோக்கம் ஆனால் நாங்கள் செய்த வேலைகள் கொலை கொள்ளைகள் போன்ற பல உண்மைகளைபுரிய வைத்தார். நானும், பதவி கிடைக்கும் முன் இருந்த சித்தார்த்தனும் எங்கள் பங்குக்கு தவறுகளை எங்களுடன் நன்றாகப் பேசிப் பழகும் தோழர்களுக்கு புரிய வைத்திருக்கிறோம். இன்று ஒரு நிம்மதி எனக்கு இருக்கிறது. அதேநேரம் கொழும்பில் உமா மகேஸ்வரனுக்கு விசுவாசமாக இருந்த இரண்டு தோழர்கள் சக்திவேல் மற்றும் மதன் இருவரும் கொலை செய்வது கொள்ளையடிப்பது அப்பாவிகளை கடத்துவது போன்ற செயல்களை செயலதிபர் க்கு தெரியக்கூடிய வாரே கண்டித்திருக்கிறார்கள். செயல் அதிபரும் ஆட்சி ராஜன் ஆட்களிடம் சக்திவேலுக்கு மதனுக்கும் தெரியாமல் செய்யும் படி கூறியுள்ளதாகவும் அறிந்து ஆச்சரியப்பட்டேன்.
இனி தொடருக்கு வருவோம். செயலதிபர் இரண்டாவதாக ஆட்சி ராஜனுக்கு கொடுத்த வேலை ஈரோஸ் சங்கர் என்று இருக்கிறது. அது முடிந்தால் வசதி கிடைத்தால் ஈரோஸ் ராஜி சங்கரை சுட்டுக் கொலை செய்யும்படி. ஈரோஸ் ராஜி சங்கர் எனது நல்ல நண்பர். ஆட்சி ராஜன் தவறுகளை உணர்ந்து புதிய மனிதனாக மாறியதால், பல பெரிய அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டன என்பது உண்மை.
ஆட்சி ராஜன் |
மேலும் ஆச்சி ராஜன் கிருஷ்ணனுக்கும் , செயலதிபர் உமா மகேஸ்வரனுக்கு க்கும் ஏற்பட்ட கொலைவெறி பிரச்சினைகளை கூறினார். இது சம்பந்தமான முழு விபரமும் இதில் சம்பந்தப்பட்ட மதன் இடமும் கேட்டு அறிந்து கொண்டேன்.
தராக்கி சிவராம் பலதரப்பட்ட அரசியல் தலைவர்களுடன் நெருக்கமான நட்பை வளர்த்துக் கொண்டவர். அப்படிப்பட்டவர்கள் ஒருவர் இலங்கை சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த திலக் கருணாரத்ன. மிகப்பெரிய வர்த்தகர். வடகொரியா நாட்டுக்கு இவர்தான் இலங்கைப் பிரதிநிதி போல்செய்யப்பட்டவர்.தராக்கி சிவராம் தனது நட்பை வைத்து திலக் கருணாரத்ன இடம் வட கொரியாவில் இருந்து ஆயுதங்கள் வாங்க முடியுமா என்று விளையாட்டாக
கேட்டுள்ளார். திலக்கும் முடியும் என்று சொல்லியுள்ளார். இந்த செய்தி சிவராம் மதனுக்கு சொல்ல, மதன், செயலதிபர் உமா மகேஸ்வரனுக்கு சொல்ல, பின்பு சிவராம் செயலதிபர்ரையும், தோழர் மதனையும் திலக் கருணாரத்ன இடம் அறிமுகப்படுத்தியுள்ளார். சந்திப்புகள் தொடர, தராக்கி சிவராம் ஐ ஒதுக்கிவைத்துவிட்டு செயலதிபர் முழுப்பொறுப்பையும் மதன் இடம் ஒப்படைத்துள்ளார். அதோடு களுத்துறை மாவட்டத்தில் பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற பல உதவிகள்கேட்டு செயலதிபர் செய்து கொடுத்துள்ளார். தேர்தல் முடிவுகளின் பின் திலக் பாராளுமன்ற உறுப்பினராக உள்ளார். அதன்பின் வடகொரியாவின் இருந்து ஆயுதங்கள் இறக்குமதி செய்யும் விடயமாக மதன் வடகொரியா போக ஏற்பாடு நடந்துள்ளது. ஆனால் திடீரென மதனை கழட்டி விட்டுவிட்டு லண்டன் கிருஷ்ணனை வடகொரியா போக ஏற்பாடு செய்து செயலதிபர் ரகசிய ஏற்பாடு செய்துவிட்டார்..
வடகொரியா போய் வந்த லண்டன் கிருஷ்ணன் இலங்கைக்கு வராமல் நேரடியாக லண்டன் போய்விட்டார். கிருஷ்ணன் வடகொரியா போய் விட்டு வந்த பின்பு, திலக் கருணாரத்ன மதனை அழைத்து மிகவும் கோபப்பட்டு இருக்கிறார். வடகொரியா போய் பேச்சுவார்த்தையை வெற்றிகரமாக முடித்த லண்டன் கிருஷ்ணன், லண்டன் போய் அங்கிருந்து அவருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட வடகொரிய அரசு அதிகாரிகளுடன் வேறு ஒரு ஒப்பந்தம் பேசியுள்ளார். அதாவது வெளிநாட்டுத் தீவிரவாத இயக்கங்களுக்கு ஆயுதங்கள் விற்பதற்கு தன்னால் ஒரு சிறந்த ஏஜென்ட் ஆக இருக்க முடியும் என்று கூறி பிசினஸ் பேசியுள்ளார். சந்தேகப்பட்ட வட கொரிய அதிகாரிகள் கிருஷ்ணன் தொடர்புகளை தடை செய்து. ஏற்பாடு செய்த திலக் கருணாரத்ன இவையும் கடுமையாக கண்டித்து, எச்சரிக்கை செய்துள்ளார்கள்.
மாநாடு முடிந்து வந்த செயலதிபர் உமா மகேஸ்வரனுக்கு தொடர்ந்து கெட்ட செய்திகள். மதன் திலக் கூறிய செய்திகளைக் கூறி கவலைப்பட, செயலதிபர் கிருஷ்ணன் அவசரப்பட்டு கொடுத்துவிட்டார் என்று கூறியுள்லார். கிருஷ்ணனை உடன் கொழும்புக்கு வரச்சொல்லி உள்ளார்.1989 ஏப்ரல் மாதம் நடுப்பகுதியில் கொழும்பு வந்த கிருஷ்ணன் கொழும்பு தாஜ் ஹோட்டலில் தங்கியுள்ளார். பின்பு கல்கிசையில் உள்ள கிருஷ்ணனுக்கு விருப்பமான ஒரு ஓட்டலில் பேச்சு நடத்த செயலதிபர் உமாமகேஸ்வரன் மதனையும் அழைத்துக்கொண்டு போய் கிருஷ்ணனே சந்தித்துள்ளார்கள்.
அங்கு செயலதிபர் கிருஷ்ணனிடம் நீ அவசரப்பட்டு விட்டாய். டீலிங் நடந்துகொண்டிருக்கும்போது இந்த முயற்சியை எடுத்திருக்கலாம் என்று கூறியிருக்கிறார். கிருஷ்ணனும் கோபப்பட்டு நீ சொன்ன படி தானே நான் பேசினேன் என்று பதில் கூறியிருக்கிறார். அப்போதுதான் மதனுக்கு தெரிந்திருக்கிறது செயலதிபர் வேறொரு ரூட்டில் கிருஷ்ணனை வைத்து செயல்பட்டிருக்கிறார் என்று. அதன்பின்பு கிருஷ்ணனும் செயலதிபர் உமா மகேஸ்வரனும் மிகவும் தரக்குறைவான வார்த்தைகளால் ஒருவரை ஒருவர் திட்டிக்கொண்டு கட்டிப்புரண்டு அடிபடாத மாதிரி சண்டை செய்துள்ளார்கள். அதில் அவர்கள் பணவிஷயத்தில் சுவிஸ் பேங்க் கணக்கு பற்றி எல்லாம் கதைத்து நீ எத்தனை கோடிஏமாற்றி இருக்கிறாய் என்று மாறி மாறி ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி கடைசியில் செயலதிபர் கிருஷ்ணனைப் பார்த்து உனக்கு ஒரு முடிவு கட்டுகிறேன் என்று சவால் விட்டுள்ளார். அதேநேரம் கிருஷ்ணனும் முடிந்தால் செய்து பார் என்று எதிர் சவால் விட்டுள்ளார். இதுதான் வடகொரியாவில் நாங்கள் ஆயுதம் வாங்க செய்த நிகழ்ச்சியின் முடிவு.
செயலதிபர் உமாமகேஸ்வரன் உடனடியாக ஆட்சி ராஜனை அழைத்து கிருஷ்ணன் லண்டன் போகும் முன்பு உடனடியாக கிருஷ்ணனை எப்படியும் கடத்தி கொலை செய்யும்படி கூறியுள்ளார். நடந்த சண்டைகள் ஒன்றுமறியாத ஆட்சி ராஜன் கிருஷ்ணன் அண்ணையையா என்று ஆச்சரியத்துடன் கேட்டாராம்.அதற்கு செயலதிபர் கிருஷ்ணன் பல கோடி ரூபாய் இயக்கத்துக்கு சேர்ந்த காசுகள் தராமல் ஏமாற்றி விட்டான். இயக்கத்துக்கு எதிராக செயல்படுவதாக அறிய முடிகிறது என்று கூறியுள்ளார்.
வசந்த் |
ஆட்சி ராஜனும் பொறுப்பேற்றுக்கொண்ட மாதிரி நடித்துக்கொண்டு நாட்களே கிளப்பியுள்ளார். கிருஷ்ணன் மாணிக்கம் தாசன் தொடர்பு ஏற்படுத்தி மாணிக்க தாசனை கொழும்பு வரவழைத்து தன்னை பலப்படுத்திக் கொண்டுவிட்டார்.மாணிக்கம் தாசனின் கிருஷ்ணன் தொடர்பு கொழும்பில் பலருக்கு ஆச்சரியமாக இருந்திருக்கிறது. ஆட்சி ராஜனை வரவழைத்த செயலதிபர் கிருஷ்ணனை சுடும்போது மாணிக்கம் தாசன் கிருஷ்ணனுக்கு பாதுகாப்பு கொடுத்தாள் மாணிக்கம் தாசன் ஐயும் சுட்டுக் கொல்லும் படி உத்தரவு போட்டுள்ளார். எல்லாவற்றுக்கும் தான் தலையாட்டிவிட்டு வந்துவிட்டதாக ஆட்சி ராஜன் என்னிடம் கூறினார்.
தொடரும்
No comments:
Post a Comment