பார்வையாளர்களின் எண்ணிக்கை

Search This Blog

Powered by Blogger.

Monday, 20 September 2021

எனது இயக்க இந்திய அனுபவங்கள் - பகுதி 73

  வெற்றிசெல்வன்       Monday, 20 September 2021

பகுதி 73  


வெற்றிச்செல்வன்
நண்பன் மாணிக்கம் தாசன் வந்தபோது செயலதிபர் அங்கு இருக்கவில்லை. தாசன் அந்த தனது ஸ்டைலான கண்ணாடியை இறக்கி வைத்து ஒரு பார்வை பார்த்துவிட்டு, கைகொடுத்த படி, எப்ப வந்தாய் என்று கேட்டார். கந்தசாமி, மாறனை பார்த்தாயா என்று கேட்டார். பின்பு தன் கூட வந்த தோழர்களோடு குளித்துவிட்டு வந்து, சாப்பிட்டாயா எனக் கேட்டு எனக்கும் சேர்த்து பார்சல் வாங்கி வரச்சொல்லி சாப்பிட்டோம். சாப்பிட்ட பின்பு தன்னுடன் வந்த தோழர்களே வெளியில் இருக்கச் சொல்லிவிட்டு, என்னிடம் இந்தியன் நிலைமைகளைக் கேட்டறிந்தார்.
மாணிக்கம் தாசன்

தாங்கள் இந்தியாவிலிருந்து இலங்கை வந்த போது பட்ட கஷ்டங்களையும்,மன்னாரிலிருந்து கடும் எதிர்ப்பை காட்டிய விடுதலைப்புலிகளை எதிர்த்து அழித்துக்கொண்டு தாங்கள் காடுகளில் முகாம்கள் புதிதாக போட்டதையும், அதேநேரம்  இயக்கத்திலிருந்து பல தோழர்கள் கொல்லப்பட்டதையும்  கவலையுடன் கூறினார். வவுனியாவில் பல தோழர்கள் இந்திய அமைதிப்படை கைதுசெய்து வைத்திருப்பதையும் கூறினார். அதோடுகூட பேச்சோடு பேச்சாக பல முக்கிய ஆரம்பகால தோழர்கள் எல்லாம் இப்போது மாலைதீவில் தேவையில்லாமல் பலி கொடுத்திருக்கிறோம், இப்போதிருக்கும் சூழ்நிலையில் நாங்கள் பல எதிரிகளை வைத்துக் கொண்டு நமது படை பலத்தை இழந்து வருகிறோம் என்று கூறி கவலைப்பட்டார். அவரின் பேச்சில் இருந்து அவருக்கு மாலைதீவ புரட்சி பிடிக்கவில்லை என தெரிந்தது.

நான் கேட்டேன் ஏன் உங்களுக்கு சம்பந்தமில்லாத நுவரேலியாமாவட்டத்தில் தேர்தலில் போட்டியிடுகிறார் கள் என. அதை நீ சித்தார்த்தன் இடம் போய் கேள், என்று கண் சிமிட்டி ஒரு நக்கல் சிரிப்பு சிரித்தார். தாசன் வவுனியாவில் சிறைப்பட்ட தோழர்களே விடுவிப்பதில் கூடிய கவனம் செலுத்தினர். தாசன் என்னிடம் நீ இந்திய அதிகாரிகளிடம் பலகாலம் தொடர்பில் இருந்ததால், நீ தொலைபேசி மூலம் அவர்களுடன் பேச முடியாதா என்ரார். எல்லா அதிகாரிகளும் யாழ்ப்பாணம் வவுனியா திருகோணமலையில் தான் இருக்கிறார்கள். வவுனியா போனால் இந்திய அமைதிப்படை அதிகாரிகள் மூலம் இந்திய ராணுவ புலனாய்வு அதிகாரிகளை சந்தித்தாள் பேசலாம் என கூறினேன். இந்திய ராணுவ உளவுத்துறை தென்னிந்திய பொறுப்பாளர் தமிழர் என்னோட நெருங்கிய தொடர்பில் இருந்தார். அவர் மூலம் நானும் சித்தார்த்தனும் இந்திய அமைதிப் படையின் உளவுத்துறை பொறுப்பாளர் கேணல் ஹரிகரன் ஐயும் பலமுறைசந்தித்திருக்கிறோம். எனக்கும் வவுனியா எல்லாம் போய் ஒரு பந்தா காட்டி வரலாம் என்று ஒரு சந்தோஷமான எண்ணம் வந்தது. தாசனும் பெருசு வந்தவுடன் (செயலதிபர் உமாமகேஸ்வரன்) தான் கேட்பதாக கூறினர். செயலதிபர் உமாமகேஸ்வரன் வந்தவுடன் மாணிக்கம் தாசன் செயலதிபர் மகேஸ்வரன் இருவரும் தனியாக மிக நீண்ட நேரம் பேசினார்கள். மாணிக்கம் தாசனை முட்டாள் மடையா திட்டுவதும் கேட்டது. சிறிது நேரத்தில் செயலதிபர் என்னை கூப்பிட்டார். நீரா மாணிக்கத்துக்கு வவுனியா போய் இந்திய அமைதிப் படையால் கைது செய்யப்பட்ட எமது தோழர்களை விடுதலை செய்ய முடியும் என்று கூறியது என்று கேட்டார். நான் உடனடியாக தாசன் கேட்ட படியால், பேசிப் பார்க்கலாம் என்று தான் கூறினேன்,என்றேன். இடையில் குறுக்கிட்ட மாணிக்கம் தாசன் ஏன் நாங்கள் பேசிப் பார்த்தால் என்ன என்று கேட்க செயலதிபர் உமாமகேஸ்வரன் கடுமையான கோபம் கொண்டார். அதோடு அவர் கூறினார் இந்தியஅமைதிப்படை எங்கள் இயக்கத் தோழர்களை கைது செய்து வைத்திருப்பதால் தான், நாங்கள் இந்திய அமைதிப்படைக்கு எதிராக இருப்பதாக இலங்கை அரசும் சிங்கள இடதுசாரி அமைப்புகளும் நம்புகின்றன. அதனால்தான் நாங்கள் கொழும்பிலிருந்து பாதுகாப்பாக இருக்க முடிகிறது என்று கூறினார். அதோடு இந்தியா அமைதிப் படையிடம் கைது செய்யப்பட்ட எமது தோழர்கள் பாதுகாப்பாக இருப்பார்கள். இல்லாவிட்டால் விடுதலைப்புலிகளிடம் இருந்து அவர்களைப் பாதுகாப்பது எமக்கு ஒரு வேலையா இருக்கும் என்றார்.

பின்பு தாசன்இடம் முள்ளிக்குள முகம் பற்றி பேசிக்கொண்டிருந்தார். பின்பு தாசன் என்னிடமும் பெரிதாக ஒன்றும் பேசவில்லை.

தராக்கி சிவராம்
மாலை நேரத்தில் சித்தார்த்தன், தராக்கி சிவராம், நான், சித்தார்த்தனின் மெய்ப்பாதுகாவலர் அய்யும் சேர்ந்து பக்கத்தில்  ஒரு சிங்கள தேனீர் கடையில் இருந்து பேசிக்கொண்டு இருப்போம். எமது வெற்றி வாய்ப்புகள் பற்றியும், மாலைதீவு விடயம் பற்றியும் பேசும்போது, எனக்கும் , சித்தார்த்தன் ஆகும் ஒரு நம்பிக்கை இருந்தது யாழ்மாவட்டத்தில் ஒரு எம்பி சீட் கிடைக்கும் என்று, ஆனால் தராக்கி சிவராமுக்கு நம்பிக்கை இருக்கவில்லை. நுவரேலியா மாவட்டத்தில் போட்டியிடுவதை பற்றி வற்புறுத்திக் கேட்டபோது, தராக்கி சிவராம் பல உண்மைகளை கூறினார். கூறிய பின்பு அவருக்கு ஒரு பயம் வந்துவிட்டது நான் சொன்ன கதையை யாரிடமும் சொல்லி விடாதே. பெரிய பிரச்சினையில் முடியும். நானும் பயப்பட வேண்டாம் கூற மாட்டேன் என்று கூறினேன். சித்தார்த்தானும் மௌன சாட்சியாக தராக்கி சிவராம் சொன்னதை ஆமோதித்துகேட்டுக்கொண்டிருந்தார்..

நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்ட அதன் உண்மை காரணத்தை ஒரு பதிவாக முன்பு போட்டிருந்தேன் அதையே கீழே தருகிறேன்.

1989 ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் அரசியல் பிரிவான DPLF யாழ் மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்ட தோடு, தனக்கு சம்பந்தமே இல்லாத நுவரெலியா மாவட்டத்திலும் போட்டியிட்டது. இது பல தோழர்களுக்கு கோபத்தை வெறுப்பையும் வரவழைத்தது. நாங்கள் தமிழர் பகுதியான வவுனியா மாவட்டம் திருகோணமலை மாவட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு இருக்கலாம் தானே என தோழர்கள் செயலதிபர்உமாமகேஸ்வரனிடம் கேட்டபோது, அவர் கோபப்பட்டு நீங்கள் எல்லாம் அரசியல் தெரியாத மடையர்கள் நாங்கள் எங்கள் போராட்டத்தை மலையகத்திலும் விஸ்தரிக்க வேண்டும் அதனூடாக சிங்கள முற்போக்கு சக்திகள் சக்திகளையும் எம்மோடு இணைக்க வேண்டும் அதன் ஒரு படி தான் நுவரெலியாவில் போட்டியிடுவது என கூறினார்.

சில நாட்களின் பின் அப்போதும் இப்போதும் கழகத்தின் முக்கிய தலைவர் உண்மையைப் போட்டுடைத்தார் அதாவது அப்போதைய ஜனாதிபதி பிரேமதாஸ அவர்கள்ஐக்கிய தேசிய கட்சி வெற்றி பெற்றால் அதில் ஆகக்கூடிய தனிப்பட்ட வாக்குகளைப் பெருபவரையேபிரதம மந்திரியாக நியமிக்க முடிவு செய்துள்ளதாக கூறி உள்ளார்.இதில் அத்துலத்முதலி க்கும் , நுவரெலியாவில் போட்டியிட்ட காமினி திசநாயக்கா  இதில் இவ்விருவருக்கும் தான் போட்டி இருந்தது. இது தொண்டமானின் ஆதரவோடு மலையகத்தில் போட்டியிட்ட காமினி திசநாயக்கா வாய்ப்பு அதிகம்.

 இதை உடைக்க அத்துலத்முதலி தனது மிக நெருங்கிய நண்பனான உமாமகேஸ்வரன் இடம் உதவி கேட்டார். உமா மகேஸ்வரனும் தனது நண்பர் அத்துலத்முதலி கேஉதவி செய்வதாக வாக்குக் கொடுத்தார்

சித்தார்த்தன்
  அதன்படியே தொண்டைமானிடம் கருத்து வேறுபாடு கொண்டிருந்த பெரியசாமி சந்திரசேகரன் ஏ வளைத்துப் பிடித்து சந்திரச சேகரை ஏமாற்றி DPLF சார்பில் போட்டியிட வைத்ததோடுமலையகத் தமிழருக்கு எதிரான சில ஜேவிபி ஆட்களையும் போட்டியிட வைத்தார் இதற்கு சந்திரசேகர் எதிர்ப்பு தெரிவித்தும் அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை இந்த ஏற்பாடு DPLF வெற்றி பெற வேண்டும் என்று இல்லை. காமினி திசநாயக்க கிடைக்கும் மலையகத் தமிழர்களின் வாக்குகளை பிரிக்க வேண்டும் என்பதே. இதைவைத்து இன்றும் கூட உமாமகேஸ்வரனின் தீர்க்கதரிசனம் என்று புகழ் பாடுகிறார்கள். எங்களுக்கு உண்மையைவிஷயத்தைப் போட்டுக்கொடுத்த தலைவர் கூட பதவிக்காக உமா மகேஸ்வரனை புகழ்ந்து வருகிறார்.


தொடரும்.






logoblog

Thanks for reading எனது இயக்க இந்திய அனுபவங்கள் - பகுதி 73

Previous
« Prev Post

No comments:

Post a Comment