பகுதி 55
வெற்றிச்செல்வன் |
இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பின்பு, அடுத்த நாள் சென்னையில் லண்டன் கிருஷ்ணன் தன்னிச்சையாக முடிவெடுத்து டுமால், ராஜா என்ற இரு இயக்க உறுப்பினர்களிடம் இயந்திரதுப்பாக்கியை கொடுத்து, நுங்கம்பாக்கத்தில் இருந்த இலங்கை தூதுவராலயத்தில் போய் சுடச் சொல்லியிருக்கிறார். அவர்களும் முட்டாள்தனமாக போய், வெளியிலிருந்து இலங்கை தூதுவராலயத்தை நோக்கி சுட்டு இருக்கிறார்கள். அங்கு காவலுக்கு இருந்த தமிழ்நாடு காவல்துறையினர் அவர்களை கைது செய்து உள்ளார் கள். கிட்டத்தட்ட ஒரு வருடம் ஜெயிலில் இருந்தார்கள்.
ராபின் வத்ஸலா |
லண்டன் கிருஷ்ணன் இதற்கு சொன்ன காரணம், ராஜீவ் காந்தியை கொழும்பில் கடற்படை வீரர் தாக்கியது அறிந்து புளொட் இயக்கம் கோபம் கொண்டதாகவும், அதனால் இந்த இருவரும் தன்னிச்சையாக போய் இலங்கை தூதுவர் ஆலயத்தை தாக்கியதாகவும், இந்த செய்தி அறிந்தால் இந்திய மக்களும் இந்திய அரசும் சந்தோஷப்படுவார்கள். எங்களுக்கும் கூடுதலாக உதவி கிடைக்கும் என்று தான் நம்புவதாக கூறினார். இந்த டுமாள் பிற்காலத்தில் வவுனியாவில் செய்த அநியாயங்கள் பற்றி பல கதைகள் உண்டு. இந்த டுமல் உமாமகேஸ்வரன் கொலை பற்றிய உண்மைகளை மறைக்க சுவிஸில் இருந்த ராபின் மற்றும் அவரின் மனைவியோடு ஆறு மாதத்துக்கு மேல் ஒரு சகோதரன் போல் பழகி அவர்கள் வீட்டில் சமைத்து சாப்பிட்டு நன்றாக பழகி ஒரு நாள் ராபின் வேலைக்கு போய் இருக்கும்போது, ராபின்கர்ப்பிணி மனைவியை சமைக்கச் சொல்லி சாப்பிட்டுவிட்டு, அவரை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்து பின்பு ராபின் வர அவரையும் கொலை செய்து விட்டு, இலங்கை வவுனியா போய் சேர்ந்து இவரின் இந்த வீர செயலுக்காக வவுனியா இராணுவ பொறுப்பாளர் பதவியை பெற்றுக் இருக்கிறார். வவுனியாவில் தான் செய்த பாலியல் பலாத்காரம் கொலை பற்றி பெருமையாக பேசியது சில நல்ல தோழர்களால் எங்களுக்குச் சொல்லப்பட்டது. சுவிஸில் நடந்த கொலைகள் பாலியல் பலாத்காரங்கள் அப்போது சுவிஸ் புளொட் பொறுப்பாளரும் இன்னொருவரும் சேர்ந்துதான் செய்திருக்கிறார்கள்.
டுமால் |
ஒப்பந்தத்திற்குப் பின்பு, எல்லாத் தலைவர்களும் டெல்லியை விட்டு போய்விட்டார்கள். சென்னையிலும் மாதவன் அண்ணா இயக்கத்தை விட்டு விலகி விட்டதாக அறிந்தேன். எமது சென்னை அலுவலக வேலைகள் எல்லாம் நிறுத்தப்பட்டு, அங்கிருக்கும் தோழர்களின் நலன் காக்க சித்தார்த் தரும், பொறுப்பாளராக ஆனந்தி அண்ணா அதாவது சதானந்தன் இருந்தார்கள். அவர்களுக்கும் செயலதிபர் உமாமகேஸ்வரன் இடம் இருந்து எந்தத் தொடர்பும் இருக்கவில்லை.. எனக்கும் எந்த தொடர்பும் எந்த வேலையும் இருக்கவில்லை. இலங்கையில் நடக்கும் செய்திகளை பத்திரிகைகள் மூலமும், பத்திரிகையாளர்கள் மூலமும் அறியக்கூடியதாக தான் மட்டும் இருந்தது. எந்தவிதமானபிரச்சாரத்தை நான் மேற்கொள்வது என தெரியாமல் நான் பேசாமல் இருந்தேன். அக்கால கட்டங்களில் டெல்லி ஊடாக பல ஏஜென்சிகள் மூலம் பல இலங்கைத் தமிழர்கள் பெண்கள் குழந்தைகள் வெளிநாட்டுக்குப் போக வந்து விமான நிலையத்தில் பிடிபட்டு, டெல்லி திகார் ஜெயிலில் கைதியாக இருந்தார்கள். சில ஏஜென்சிகள் பெரும் பணம் கொடுத்து இந்திக்கார வக்கீல்கள் மூலம் தங்கள் ஆட்களை எடுத்துவிடுவார்கள். சில ஏஜென்சிகள் சென்னைக்கு ஓடிவிடுவார்கள் வரமாட்டார்கள்.
தற்செயலாக ஜெயிலில் இருந்து விடுதலையாகி வந்த ஒரு இலங்கைத் தமிழரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர்தான் ஜெயிலில் இருக்கும் தமிழர்களின் நிலை, பெண்கள் சிறையில் இருக்கும் இலங்கை தமிழ் பெண்கள் குழந்தைகளின் நீ ரொம்ப பரிதாபமாக இருப்பதாக கூறி, அவர்களை வெளியில் எடுக்க முடியுமா என்று கேட்டார். ஒரு ஆள் சிறையிலிருந்து வெளியில் எடுக்க பிணை தொகை அட்வகேட் ஃபீஸ் எல்லாம் சேர்த்து கிட்டத்தட்ட 11 ஆயிரம் ரூபாய் ஆகும். நான் ஜெயிலில் இருக்கும் சிலரின் பெயர்களை வாங்கிக்கொண்டு போய் மனு போட்டு பார்த்தேன். தங்களை வெளியில் எடுத்து விடும்படி அழுகிறார்கள். தாங்கள் வெளியில் வந்து பணம் அப்படியும் தருவதாக கூறினார்கள். என்னிடம் பணம் இல்லாத காரணத்தால் அவர்களது ஏஜென்ட், அவர்களது சென்னையில் இருக்கும் உறவினர்கள் விலாசம் தொலைபேசி இலக்கங்களை வாங்கி கொண்டு வந்தேன்.
பின்பு ஏஜெண்டுகளை, தொடர்புகொண்டு, சில பேரை பயமுறுத்தி அவர்களை பணம் கொண்டு வரச்செய்து, திகார் ஜெயிலில் இருந்து வெளியில் கொண்டு வந்திருக்கிறேன். பெண்கள் குழந்தைகள் அவர்கள் முகத்தில் இருக்கும் சந்தோசத்தை பார்க்கவே சந்தோசமாக இருக்கும். டிராவல் ஏஜெண்டுகள் இடம் நான் முதலிலேயே சொல்லி விடுவேன், ஒரு ஆளுக்கு ஆயிரம் ரூபாய் தரவேண்டுமென்று,ஆனால் அவர்கள் 2000 ,3000 கூட தரத் தயாராக இருந்தார்கள். எனக்கும் டெல்லி செலவுக்கு சென்னையிலிருந்து பணம் வராததால், இந்த பணம் எனக்கு மிக உதவியாக இருந்தது. சென்னை அலுவலகத்திலும் பணம் அப்போது இல்லை 1987 ஆண்டு ஒப்பந்தத்திற்குப் பின்பு 1988 ஆண்டுகிட்டத்தட்ட எட்டாம் மாதம் வரை சென்னை அலுவலகம் நான்பொறுப்பேற்கும் வரை கிட்டத்தட்ட 60 இலங்கை தமிழர் பெண்களை சிறையிலிருந்து வர உதவி செய்துள்ளேன்.
தொடரும்.......
No comments:
Post a Comment