பகுதி 84
கவரை செயலதிபர் உமாமகேஸ்வரன் இடம் கொடுத்தபோது வெற்றிச்செல்வன் எங்கே என்று கேட்டிருக்கிறார் இவர்கள் எனக்கு உடம்பு சரியில்லை என்று கூறி தாங்கள் இங்கு வந்து விட்டதாக கூறியிருக்கிறார் கள்.
திவாகரன் பல தவறான செய்திகளை தோழர்களிடம் பரப்பிக் கொண்டு இருந்ததால் வசந்தும் அவர் தோழர்களும் திவாகரனுக்குஎதிரான பல பிரச்சாரங்களில் ஈடுபட்டு வந்ததாகவும் அது செயல் அதிபருக்கு பிடிக்கவில்லை. மாணிக்கம் தாசனுக்கும்,செயலதிபர் உமா மகேஸ்வரனுக்கு ம் இடையில் நல்ல உறவு இல்லை. முருகன் போன்றவர்கள் மாணிக்கம் தாசனை பற்றி போட்டுக் கொடுக்கும் வேலையை செய்து கொண்டு இருக்கிறார்கள். கந்தசாமி ஒதுங்கிப் போய் அமைதியாக ஒதுங்கி இருக்கிறார். பார்க்கவே கவலையாய் இருக்கிறது. என்று கூறி மாநாடு முடிந்து வரும்போது நடந்த முக்கிய சம்பவத்தைக் கூறினார்.
ஜெனரல் ரஞ்சன் விஜயவர்தன |
அதற்கிடையில் செயலதிபர் உமா மகேஸ்வரனை அழைத்துப் போக, தாமதமாக ஒரு வானுடன் வந்த சக்திவேல், மதன் ,மற்றுமொரு தோழர் கற்பிட்டி போய் விஷயம் தெரிந்து கொண்டு புத்தளம் போலீஸ் நிலையம் வந்து இருக்கிறார்கள்.
வெளியில் வந்த செயலதிபர் தாமதமாக வந்த சக்திவேல் ,மதனை கடுமையாக திட்டிக்கொண்டே வந்திருக்கிறார். அதேநேரம் தாங்கள் பிடிபட மாணிக்கம் தாசனின் சதி வேலையாக கூட இருந்திருக்கலாம் என்று கூறியிருக்கிறார். செயலதிபர் கைது செய்யப்பட்ட செய்தியறிந்து உடனடியாக மாணிக்கம் தாசன் பதைபதைத்து கொழும்பு வந்திருக்கிறார். ஆனால் இதுவும் மாணிக்கதாசன் இற்கு எதிரான செயலாகவே செயலதிபர் மனதில் வைத்திருக்கிறார்.
முன்பே செயலதிபர் உமாமகேஸ்வரன் இருக்கும் ஜெனரல் ரஞ்சன் விஜயவர்த்தன இருவருக்கும் நெருங்கிய தொடர்பு இருந்திருக்கிறது. பின்பு ஜெனரல் ரஞ்சன் ஜெயவர்தன வீட்டுக்குப்போய் தனக்கு உதவி செய்வதற்காக நன்றி தெரிவித்துள்ளார். ஆட்சி ராஜன் சொல்லிய இந்த செய்தி மூலம், செயலதிபர் எனது விடயத்தை அதாவது மத்திய குழு உறுப்பினர்கள் பெயரை செயலதிபர் சொன்னபடி மாற்றாது விட்டது அன்றிருந்த நிலையில்ஒரு பெரிய விடயமாக தெரியவில்லை என்ற காரணம் தெரிந்தது.
ஆட்சி ராஜன், சபாநாதன் குமாரை டீ வாங்க அனுப்பி விட்டு, தன்னை இந்திய அனுப்பிய விஷயத்தை கூறினார். அதைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்து விட்டேன். அதாவது தில்லி மும்பை கல்கத்தா மூன்று இடங்களிலும் மக்கள் கூடும் இடங்களில் பெருந்தொகையான வெடிமருந்துகளை வைத்து, மக்கள் சாகும்போது இது விடுதலைப்புலிகளின் செயல் என்று இந்தியா நினைக்கும். அதோடு இந்தியாவையும் பழி வாங்கியதாக இருக்கும் என்று கூறினார். வெடிமருந்துகளை ஏற்பாடுசெய்துவிட்டு, தனக்குதொலைபேசி மூலம் கூறினால், தான் உடனடியாக பணமும், உதவிக்கு சில சிங்கள இளைஞர்களையும் அனுப்பி வைப்பதாகவும் கூறியுள்ளார். அப்போதுதான் இந்தத் திட்டம் இலங்கையின் பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத் முதலியின் ஏற்பாடு என்று. அதோடு இந்த விடயம் சென்னையில் வெற்றிச்செல்வன் , அல்லது வேறு யாருக்கோ தெரியக்கூடாது என்று கடுமையாக கூறியுள்ளதாக கூறினார். எல்லாவற்றையும் ஏற்பாடு செய்துவிட்டு முதலில் வெற்றி செல்வனை அழைத்துக்கொண்டு போய் இடங்கள் பார்ப்பதுபோல் சரியான இடங்களை பார்த்து வைத்துவிட்டு பின்பு தனியாக சிங்கள இளைஞர்களை அழைத்துப் போகச் சொல்லி உள்ளார். ஆட்சி ராஜன் செயலதிபர் உமாமகேஸ்வரன் தனக்கு கிறுக்கி கொடுத்த துண்டை காட்டினார் அதில்.
ஆட்சி இந்தியா
1.)press வேலை (வெற்றி)
2).EROS. சங்கர் வேலை
3) குளிசை 47, சக்கை30
4) பணவிரயம்/வசந்த்
5) 6)சக்கை வைப்பதற்கான இடங்கள்
(Bom+ col+ Delhi)
7) தென்மொழி க்கு பணம் கட்டி, கீழே உள்ள முகவரிக்கு அனுப்பி வைக்கவும். ( Sam Kanaga, 204/2, Galle Road,Mount Albania)
8) ஒரு fortable typewriter தமிழ் வெற்றி மூலம் எடுத்து அனுப்பி வைக்கவும்.
9) மார்க்சிய மெய்ஞ்ஞானம்
10) வால்காவிலிருந்து கங்கை வரை
அதன்பின் இரண்டு புத்தகங்கள் எழுதியுள்ளார் தெளிவு இல்லை. சக்கை என்பது, ஜெலட்டின். வெடிகுண்டுகள். ஒவ்வொரு ஊரிலும் பத்து கிலோ வைக்கச் சொல்லி உள்ளார்.
தான் ஆட்சி ராஜனிடம் கேட்டேன் நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள். ஆட்சி ராஜன் இனி செயலதிபர் உமா மகேஸ்வரனுக்கு இனிமேல் எந்தவித சமூகவிரோத செயல்களிலும் ஈடுபட போவதில்லை. இதுவரை செய்த பாவங்கள் போதும். தனக்கு முழங்காலில் துப்பாக்கி கொண்டு இருப்பதால் அதற்கு முதலில் மருத்துவம் பார்ப்பதாக கூறி நாட்களை கடத்தி விடுவோம் என்று கூறினார்.
தொடர்ந்த அவர் கொழும்பில் லண்டன் கிருஷ்ணனையும், முடிந்தால் மாணிக்கம் தாசன் ஐயம் சுட்டுக் கொல்லும் படி தனக்கு உத்தரவிட்டதாகவும் நான் சரி சரி என்று கூறிவிட்டு செய்யாதது அவருக்கு தன் மீது ஒரு கோபம் உள்ளது என்றும். சிலவேளை தன்னை இங்கு அனுப்பிவிட்டு வேறு யாரையும் கொண்டு கிருஷ்ணனையும் மாணிக்கத்தையும் சுட கூட ஏற்பாடு செய்யலாம் என்றார். நான் விபரம் கேட்க கொழும்பில் நடந்த இன்னொரு சுவராசியமான தகவலை கூறினார்.
தொடரும்.
No comments:
Post a Comment