1983 ஆம் ஆண்டு நடந்த இன கலவரம், அதற்கு முன்பு நடந்த 1981 நடந்த இனக்கலவரம், அதற்கு முன்பு நடந்த 1977 நடந்த இனக் கலவரங்களுக்கு ஐக்கிய தேசியக் கட்சி UNP அதன் தலைவர் ஜே ஆர் ஜெயவர்த்தனா மற்றும் மற்றும் அதன் முக்கிய தலைவர்கள் சிறில் மெத்தியூ, புஞ்சி நிலமே, லலித் அதுல முதலி, காமினிசநாயக்கா போன்றவர்களின் பெயர்கள் தான் முக்கியமாக அடிபட்டன.
1958,1961 காலக் கலவரங்களுக்கு பண்டாரநாயக்கா, ஸ்ரீ மாவோ பண்டாரநாயக்கா பெயர்கள் அடிபட்டன. ஆனாலும் கலவரங்களை தூண்டிவிட்டதில்
ஐக்கிய தேசியக் கட்சியும் ஜே ஆர் ஜவர்தனாகவும் முக்கிய பங்காற்றினார்கள். இனக் கலவரத்தை தூண்டி ஆட்சியைப் பிடிப்பதற்காக.
83 ஆம் ஆண்டு கலவரங்கள் நடந்த போது இயக்கங்கள் வளர்ச்சி அடைந்தன. அப்போது விடுதலைப்புலிகள் உட்பட எந்த ஒரு இயக்கமும் இலங்கையில் நடந்த இனக் கலவரங்கள் சம்பந்தமாக ஜேவிபி அமைப்பை சம்பந்தப்படுத்தி எந்த ஒரு பிரச்சாரங்களும் செய்ததில்லை. நாங்கள் அதாவது விடுதலை இயக்கங்கள் வெளியிட்ட இனக் கலவரம் சம்பந்தப்பட்ட பிரச்சார மேடைகளில் துண்டு பிரசுரங்களில் கூட ஜே ஆர் ஜெயவர்த்தன அவையும் சம்பந்தப்பட்ட மந்திரிமார்களின் பெயர்களையும் மட்டும் தான் பயன்படுத்தியுள்ளோம். எனக்கு தெரிந்த வகையில் ஜேவிபி இயக்கம் பற்றி எந்த ஒரு இயக்கமும் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக பிரச்சாரங்கள் செய்ததில்லை. இப்பொழுது இந்த வருடம் 83 இனக் கலவரம் பற்றி பேசுவோர் ஜேவிபி இயக்கத்தைப் பற்றி அதன் இனக் கலவரம் பற்றி எந்த ஒரு இயக்கமும் ஏன் 1983 ஆம் ஆண்டு பிரச்சாரங்கள் செய்யவில்லை.
இந்த வருடம் மட்டும் செய்யும் காரணம் என்ன? 1987 இந்தியா இலங்கை ஒப்பந்தத்தை எதிர்த்து வடக்கு கிழக்கு பிரிப்பதற்கு வழக்கு போட்டதற்கு பின்பு தான் ஜேவிபி இயக்கம் தமிழருக்கு எதிராக இருப்பதாக பிரச்சாரங்கள் தொடங்கின. அந்த வழக்கில் ஏன் ஏன் தமிழ் அரசியல்வாதிகள் சிறந்த வழக்கறிஞர்கள் அதற்கு எதிராக ஏதாவது சட்ட வழக்குகள் போட்டார்கள் என்பது தெரியுமா எனக்கு அதைப் பற்றி ஒன்றும் தெரியாது அதனால் கேட்கிறேன். ஏன் அவர்கள் இந்திய அரசாங்கத்திடம் கூட கடுமையாக போராடவில்லை. விடுதலைப் புலிகள் இயக்கம் ஒப்பந்தத்தை எதிர்த்தபடியால் அவர்களுக்கு அதைப் பற்றி எந்த கவலையும் இருக்கவில்லை.
இந்த இனக் கலவரங்களுக்கு காரணமான சிங்கள அரசாங்கங்களுடன் இதுவரை எல்லா தமிழ் விடுதலை இயக்கங்களும், விடுதலைப்புலிகள் UNP அரசாங்கத்துடன் கூடிக் குழவி தங்களுக்குத் தேவையான ஆயுதங்கள் பண வசதிகளை பதவிகளை கொண்டு சிங்கள அரசாங்கங்கள் அந்த காலத்தில் செய்த தமிழருக்கு எதிரான கொலைகளை சிங்கள அரசாங்கங்கள் சார்பில் தமிழ் இயக்கங்களே செய்து வந்தனர். அதுவரை கடந்த கால சிங்கள அரசாங்கங்கள் செய்த இனக் கலவரங்கள் இவர்கள் நினைவில் வரவில்லை.
ஆனால் இப்போது புதிய அனுரா திசநாயக்கா தலைமையிலான அரசாங்கம் வந்த பின்பு கடந்த கால ஊழலில் நிலைத்த பதவி பணம் பெற்றுக்கொண்டு தமிழர்களுக்கு தலைவர்களாக வலம் வந்தவர்கள் புதிய அனுரா திசாநாயக்க கடந்த காலத்தில் போல் நெருங்க முடியாததால் இவர்களுக்கு எதிரான பிரச்சாரங்களை அதுவும் ஆரம்ப கால தமிழிலவிடுதலை பற்றி எழுத்தில் வாசித்து அறிந்த 1990க்கு பிறந்த இளைஞர்களை குழந்தைகளை குழப்பி உண்மையான வரலாறுகளை மறைத்து ஏன் இருட்டடிப்பு செய்ய வேண்டும்.
கடந்த சிங்கள அரசாங்கம் இடம் நட்புகளோடு இருந்த காலங்களில் ஏன் இவர்கள் வெளிக்கடை சிறைச்சாலை படுகொலை யாழ்ப்பாண நூலகரிப்புக்கு அரசாங்கத்துக்கு நெருக்கடி கொடுத்து அது பற்றி அரசாங்கத்தை ஏன் தர்ம சங்கடப்படுத்தவில்லை.
அனுரத் திச நாயக்கா அரசாங்கம் பெரிய அளவில் தமிழர்களுக்கு நன்மை செய்யப்போவதில்லை ஆனால் இனக் கலவரத்தை தூண்டி கலந்த கால அரசாங்கங்கள் போல் அதில் சிங்களர்களை ஏமாற்றி பதவி பெறவும் போவதில்லை. கடந்த காலத்தை போல் சிங்கள மக்களும் ஏமாறப்போவதில்லை. ஆனால் சிங்கள தீவிரவாதத்தை ஏற்றி ஆட்சிக்கு வரவும் அது போல் தமிழர்களின் தேசிய உணர்ச்சியை தூண்டி தமிழ் தேசியம் பேசி பதவிகளை பெற தமிழ் தலைவர்களும் முயல்கிறார்கள் என்பது உண்மையே.
இனியாவது சரி 1983 ஆம் ஆண்டு அதற்கு முந்திய ஆண்டுகளில் நடந்த கலவரங்களுக்கு ஏன் தமிழ் இயக்கங்கள் ஜேவிபி இயக்கத்தை குற்றஞ்சாட்டி எந்த வெளியீடுகளும் வெளியிடவில்லை. விடுதலைப் புலிகள் உட்பட. அன்றைய காலகட்டங்களில் எல்லா பிரச்சார வெளியீடுகளும் எனது இயக்க பிரச்சார வெளியீடுகளும் புத்தகங்களும் எமது பிரச்சாரத்துக்காக நான் வைத்திருந்தேன். அதோடு எல்லா விடுதலை இயக்கங்களும் அரசியல்வாதிகளை பத்திரிகை ஆசிரியர்களே சந்திக்கும் போது எந்த ஒரு தருணத்திலும் ஜேவிபி இயக்கத்தை இனக் கலவரத்தோடு சம்பந்தப்படுத்தி பேசியதாக அறியவில்லை.
அப்படி இருக்க இப்போது மட்டும் எப்படி 1983 கலவரத்துக்கு ஜேவிபி தான் காரணம் என்று பிரச்சாரம் செய்யப்படுகிறது காரணத்தை அறிந்தவர்கள் கூறுவார்களா?
No comments:
Post a Comment