நான் அவரின் பதிவுகளை போடும்போது அவரின் பெயராக அந்தோணி என்று பெயர் கொடுத்திருந்தேன். இந்த பதிவுகள் முன்பும் முகநூலில் வந்தது இப்போதும் திரும்பவும் போட்டு இருக்கிறேன்.
துணுக்காய் சித்திரவதை முகாம் பொய்யான தகவல் என்று நிரூபிப்பதற்காக பலர் முயற்சி செய்து வருகிறார்கள். ஆனால் முல்லை மதி என்கிற விடுதலைப் புலிகளின் உளவுத்துறையைச் சேர்ந்தவர் லண்டனில் இருந்து வரும் தேசம் நெட் youtube சேனலில் ஏற்றுக் கொண்டுள்ளார்.
அப்படியான சித்திரவதைகளை இலங்கை அரசாங்கம் மட்டுமல்ல தமிழர்களே பாதுகாக்கப் புறப்பட்ட தமிழ் இயக்கங்கள் எல்லாமே செய்துள்ளனர். அதில் தங்கள் தங்கள் வசதிக்கேற்ப விடுதலைப்புலிகள் மிகப்பெரிய அளவில் தமிழர்களையே சித்திரவதை செய்து கொலை செய்துள்ளதை எல்லோருக்கும் தெரியும். முதலில் ஒரு வரியில் துரோகிகளை தான் கொன்றார்கள் என்றார்கள். பின்பு இப்படி முகாமே இல்லை என்றார்கள்.
தமிழர்களை அழித்தது சிங்கள ராணுவம் மட்டுமல்ல. அதற்கு ஈடாக எல்லா தமிழ் விடுதலை இயக்கங்களும் தான் என்பதை மக்கள் உணர்ந்து வருங்காலத்தில் தங்களுக்கு பாதுகாப்பான நல்ல தலைவர்களை உருவாக்கி தங்களை பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவே பழைய இயக்கங்களின் உண்மை முகத்தை காட்ட வேண்டி உளளது.
எனது பதிவுகள் பொய் என்று நிரூபிக்க ஊர் குருவி என்று முகநூல் வைத்துள்ள ஒருவர் எனது பதிவை சரியாக படிக்காமல் நான் இ என் டி எல் எஃப் இயக்கத்தைச் சேர்ந்தவன் என்றும்,, நான் ஏதாவது வெற்றிச்செல்வன் 20 மாதங்கள் புலிகளின் துணுக்காய் சித்திரவதைகள் இருந்து விடுதலை ஆகி வந்து இருப்பதாக பொய்யான பதிவுகள் போட்டுள்ளார் என்று ஊர் குருவி பதிவு போட்டுள்ளார்.
விடுதலைப் புலிகளை ஆதரிப்பது வேறு. அதற்காக சரியாகதமிழில் உள்ள எனது பதிவை படிக்க படிக்காமல் அல்லது படிக்கத் தெரியாமல் பதிவுகளை போடுவது தமிழுக்காக போராடிய விடுதலை புலிகள் இயக்கத் தலைவரையும் விடுதலை புலிகள் அமைப்பையும் அவமானப்படுத்துவதாகும்.
No comments:
Post a Comment