பார்வையாளர்களின் எண்ணிக்கை

Search This Blog

Powered by Blogger.

Tuesday, 29 July 2025

எனது அனைத்து நண்பர்களுக்கும் பதிவு வாசிப்பவர்களுக்கும்

  வெற்றிசெல்வன்       Tuesday, 29 July 2025
எனது முகநூல் நண்பர்களுக்கும், எனது முகநூல் பதிவுகளை வாசிப்பவர்களுக்கும். 

நான் எனது சொந்த பதிவுகளில் எனக்கு  நேரடியாக தெரிந்த கடந்த கால ஆயுதம் தூக்கிய அரசியல் கட்சிகளின் எனக்குத் தெரிந்த அனுபவப்பட்ட விடயங்களை பதிவுகளாக போட்டு வந்தேன்.  குறிப்பாக நான் இருந்த தமிழீழ மக்கள் விடுதலை கழகம் (புளொட்) நான் அறிந்த உண்மைகள். அதுபோல் வேறு சில போட்ட பதிவுகளில் இருந்த போராட்டம் பற்றிய உண்மைகளை கூட எனது முகநூலில் பகிர்ந்து இருந்தேன். 
காரணம் இன்று பலர் வியாபாரத்துக்காகவும், youtube மூலம் பணம் சம்பாதிப்பதற்காகவும் , உண்மை இல்லாத வரலாறுகளையும் உண்மை போல் பேசி பணம் சம்பாதிக்க முயல்கிறார்கள். ஏன் தமிழ்நாட்டில் கூட பிரபல அரசியல்வாதிகள் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகள் வக்கீல்கள் இந்தியாவில் நடந்த சம்பவங்கள் யாருக்கு யாருக்கு தெரியப் போகிறது, சம்பந்தப்பட்டவர்கள் இறந்து விட்டார்கள் என்று நினைத்துக் கொண்டு பணம் ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு யூடியூப் மூலம் பல பொய்யான தகவல்களை பரப்பி வருகிறார்கள். அதுவும் அவர்கள் பரப்பும் தவறுகள் பிரபாகரனையும் அவரது விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் மிகவும் உயர்வாக மட்டுமே குறித்து பேசுவார்கள் அப்போதுதான் வெளிநாடுகளில் அதை பார்த்து கூடுதல் பணம் வரும் என்ற நம்பிக்கையில். 
உண்மைகள் தெரிந்த பழைய  தோழர்கள் இன்னும் இருக்கிறார்கள் ஆனால் பெருமளவு தோழர்கள் மற்றும் இயக்கங்களில் இருந்தவர்கள் தங்கள் இயக்கத்தை பற்றிய உண்மையான செய்திகளை வெளியிட தயங்குகிறார்கள் . காரணம் மற்றவர்கள் தங்களை துரோகிகள் என்று கூறி விடுவார்கள் என்று. நான் எழுத துவங்கும் போது நேரடியாக  கொலை மிரட்டல்கள், சில அறிவிஜீவிகள் நான் இந்திய உளவுத்துறை சொல்லி எழுதுவதாகவும், நான் இந்தியாவில் இந்திய உளவுத்துறையின் ஆதரவுடன் பெரிய மாளிகை போன்ற வீடு, கார் , மற்றும் பணத்தில் இருப்பதாக தாங்கள் நேரில் பார்த்தது போல் எழுதி தள்ள அதையும் சில பேர் நம்பினார்கள். சிலர் நான் இயக்கத்திலேயேஇருக்கவில்லை என்றும் எழுதினார்கள். 
அண்மையில் கூட லண்டனில் இருக்கும் ஒரு அறிவு ஜீவி தனது youtube மூலம் பொய்களைக் கூறி சம்பாதிக்கும் முட்டாள் என்னால் தான் அவர் லண்டனையே பார்க்க முடிந்தது, அவர் எழுதுகிறார் நான் டெல்லியில் இருந்து கொண்டு சிலர் நண்பர்களே வைத்துக்கொண்டு போதை பொருள் வியாபாரம் செய்வதாக. இனி என்ன எழுத போகிறார் என்று தெரியவில்லை.
நான் எனது இயக்கத்தை பற்றி எழுதும் போது மற்ற இயக்கத்தவர்கள் சந்தோஷமாக வந்து மட்டமான கருத்துக்களை கூறுவார்கள். ஏதோ தாங்கள் இருந்த இயக்கங்கள் மட்டும் மிகவும் உத்தமர்கள் போல அவர்கள் கருத்திருக்கும். மற்ற இயக்கங்கள் பற்றியும் அதன் தலைவர்கள் பற்றியும் அந்த காலத்தில் அவர்களின் சமூக விரோத செயல்கள எல்லாம் எங்களுக்கும் எனக்கும் தெரியும். அதை நான் எழுதினால் வேண்டுமென்றே எழுதுவதாக கூறுவார்கள். 
 நான் விடுதலை இயக்கத்தில் உண்மையாக அதை பயன்படுத்தி பணம் சம்பாதிக்காமல் இருந்தபடியால் நடந்த உண்மைகளை பதிவு செய்கிறேன். அதேபோல் மற்ற இயக்கங்களிலும் இருந்தவர்கள் தங்கள் இயக்கங்கள் பற்றிய சமூக விரோத செயல்கள் உட்பட இந்த இயக்கங்கள் செய்த அதாவது தமிழ் மக்களுக்கு செய்த நன்மைகள் பற்றிய உண்மையான விபரங்களை பதிவுகளாக செய்ய வேண்டும். 
        வருங்காலத்தில் எமது கடந்த கால விடுதலை இயக்கங்கள் பற்றிய உண்மையான வரலாறுகள் யாராவது எழுதுவார்கள். அப்பொழுது இயக்கங்கள் பற்றிய எமது குறிப்புகள் பயன்பட வேண்டும் என்பதே எனது நோக்கம்.
ஒரே ஒரு கவலை. சில முகநூல் நண்பர்கள் எனது பதிவுகளை எடுத்து தங்கள் அனுபவமாக கூட போடுகிறார்கள் என்பது. அவர்கள் கொஞ்சம் கூட கூச்சப்படுவதில்லை. 
சில புதிய முகநூல் நண்பர்களின் வேண்டுகோளுக்கணங்க எனது பழைய எனது அனுபவத் தொடரை கிட்டத்தட்ட 120 பகுதிகள் உள்ளன. அவற்றை திரும்பவும் முதலில் இருந்து போட போகிறேன். 
அதில் கூடுதலாக எழுத்துப் பிழைகள் வசன பிழைகள் இருக்கின்றன தயவுசெய்து மன்னிக்கவும்.
logoblog

Thanks for reading எனது அனைத்து நண்பர்களுக்கும் பதிவு வாசிப்பவர்களுக்கும்

Previous
« Prev Post

No comments:

Post a Comment